Thursday, November 02, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா...( 4 )


கண்டோ ம் கண்டோ ம் கண்டோ ம் கண்ணுக் கினியன கண்டோ ம், தொண்டீர். எல்லீரும் வாரீர் ழுது தொழுதுநின் றார்த்தும், வண்டார் தண்ணந்து ழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல், பண்டான் பாடிநின் றாடிப் பரந்து திரிகின் றனவே.

காண்பதற்கு அரிய சேவை.இதோ வந்து விட்டார் ஆதிவராகஸ்வாமி கருட வாகனத்தில் ஏறிக்கொண்டு தன் பக்தர்களை பார்ப்பதற்கு. கடவுளைப் பார்த்தது எல்லோருக்கும் ஏதவது வேண்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும். எல்லாவற்றையும் துறந்த நம் தியாகராஜஸ்வாமிகளுக்கும் அந்த எண்ணம் வந்ததும் இப்படி வேண்டிக்கொண்டார்: "ஞனமு சகராதா கருட கமன ராதா ஞானமு சகராதா'" கருடனின் மீது எழுந்தருளியிருக்கும் பெருமாளே எனக்கு உன்னைத் தவிர வேறொன்றையும் நினைக்காத ஞானத்தை அருள்வாய்". நாமும் அதையே வேண்டிகொள்ளுவோம். இதோ மல்லாரி மிக அருகில் துல்லியமாகக் கேட்கிறது. திருப்பாதம் தாங்கிகள் அந்த இசைக்கு ஏற்ப ஆடிகொண்டு வருகிறார்கள். அவர்கள் ஆட்டுவிப்பதால் ஆண்டவனும் அதற்கேட்ப ஆடுகிறான். ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். ந்ம்மையெல்லாம் சம்சாரசாகரத்தில் இந்த ஆட்டம் ஆடுவிகின்ற ஆண்டவனயே ஆட்டுவிக்கிறார்கள் என்றால் அவர்கள் என்ன பாக்கியம் செய்தவர்கள். மல்லாரிக்கு ஒரு தனி குணம் உண்டு.அதைகேட்க்கும்போது இசை தெரியாதவர்கள் உடலிலும் தானே வரும் ஆட்டம், அதனால் தானே வரும் இறைவனின் மீது நாட்டம். நாமும் மிக அருகில் சென்று அவனைக் கண்ணாரக் காண்போம் நாளை.

12 comments:

துளசி கோபால் said...

ஹைய்யோ..........

கொன்னுட்டீங்க.மல்லாரிக்கு ஆடாதவர் உண்டோ?

அப்படியே புல்லரிச்சுப் போச்சு (நியூஸி குளிர்?)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கருடவாகன மாசீனம்
ததசாயே ஜகத்பதிம்!
பெரிய திருவடியான கருடன் மேல், கம்பீரமாக ஆரோகனித்து வரும் எம்பெருமான் அழகோ அழகு!

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக்கிளரும்
பொன் ஆழி(சக்கரம்) கண்டேன் புரி சங்கம்(சங்கு) கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று!

குடை அழகோ, நடை அழகோ என்று, இதோ கம்பீரமாக வரும் எம்பெருமானுக்கு, கம்பீர நாட்டை ராகத்தில்,
மல்லாரி...


கேட்டு மகிழ
http://giritrading.com/Music%20samples/Instru3.mp3

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இது கணேஷின் அண்ணன் "அம்பிக்கு" ஸ்பெஷலாக: :-))))
(சென்ற பதிவில் சுட்டி கேட்டாரே, மல்லாரிக்கு..)

சுவாமிப் புறப்பாட்டின் போது வாசிக்கப்படும் மல்லரி பொதுவாக கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்த தில்லானாவாக இருக்கும். தவிலும் நாதஸ்வரமும் சேர்ந்து ஒரு என்செம்பிள் போல மனதை உருக்கி விடும். நாட்டுப் பாடல்களும் உண்டு.

ஒவ்வொரு உற்சவத்துக்கும் ஒவ்வொரு மல்லரி உண்டு. தீர்த்த மல்லரி, தேர் மல்லரி, கும்ப மல்லரி, ஊஞ்சல் மல்லரி என்று பலவிதம்.

கந்த சஷ்டி கவசத்தில், "டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு" என்றெல்லாம் மல்லரியின் ஜாலத்தை வார்த்தையிலே வடித்து, முந்து முந்து என்று முருகவேள் முந்துவதை படம் பிடித்துக் காட்டுவார் தேவராய சுவாமிகள்.

மல்லரி கேட்க எளிதான வழி, திருமலை எம்பெருமான் மாலையில் தினமும் ஆடும் ஊஞ்சல் உற்சவம். யார் வேண்டுமானாலும் வெளியில் இருந்தே கேட்கலாம், காணலாம்...அடுத்த முறை கண்டு வாருங்கள்!!

umagopu said...

நான் முதலில் கண்டேன்,கருட‌ சேவை தரிசனத்தை,அழஹோ அழகு,தி ர ச சாருக்கு நன்றிகள் பல.பிரசாதம் எனக்கு கிடையாதா???

ambi said...

//மல்லாரிக்கு ஒரு தனி குணம் உண்டு.அதைகேட்க்கும்போது இசை தெரியாதவர்கள் உடலிலும் தானே வரும் ஆட்டம்//

Very true, நீங்க ஆடினேளா சார்? :)

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க டீச்சர் எப்படியும் நீங்க கருடசேவைக்கு வந்திடுவீங்கன்னு தெரியும்.கண்ணபிரான் அளித்த மல்லாரியுடன் கண்ணபிரானையும்,கருடனையும் களியுங்கள்.இன்றைக்கும் கருடசேவை மிக அருகில் படம் உண்டு வந்து ஆசி பெற்றுச் செல்லுங்கள்

தி. ரா. ச.(T.R.C.) said...

வாருங்கள் உமாகோபு. தரிசனம் ஆயிடுச்சா? இன்றும் வந்து சேவித்து அம்பி வீட்டில் பிரசாதம் வாங்கிச் செல்லுங்கள்.மறுநாள் பொதிகை மலையையும் அருவியையும் பார்த்துச்செல்லுங்கள் தமிழ் பதிவு நன்றாக வரும்.அகத்தியர் இருந்த இடம் அல்லவா.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கே.ஆர்.ஸ் வாப்பா. நான் சிறிய கோடு போட்டதற்கு நீ வந்து நல்ல நான்கு தளம் ரோடே போட்டுவிட்டாய். உனக்கு நான் நன்றி தெரிவிக்கமாட்டேன் ஏனென்றால் நீ எங்க வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவனாகி விட்டாய்.எங்க வீட்டு பையன் மாதிரி.நான் திருபத்தூரைச் சேர்ந்தவன்.மல்லாரியை கொண்டுவந்துவிட்டாய்.நல்ல இரு அமோகமா.

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி கேட்டாயா மல்லாரி.இன்று பெருமாளை மிக அருகில் வந்து தரிசி.என்ன கேட்டே "நீங்கள் ஆடினீர்களா" என்றுதானே. இதோ பதில்.ஊத்துக்காடு கவியில்

" ஆரென்ன சொன்னாலும் அஞ்சாதே மனமே ஐய்யன் கருணையைப் பாடு, முடிந்தால் அடவோடும் ஜதியோடும் ஆடு.அருமைஎன வந்த பிறவியோ ஆயிரம் பல தந்தாலும் வருமோ அந்த ஐய்யன் கருணையைப் பாடு"

உனக்குத் தெரிந்த பாடல் என்றால் "ஆடாத மனமும் உண்டோ, ஐய்யன் அலங்காரமும் கருடனின் நடையலங்கரமும் கண்டு.... ஆடாத மனமும் உண்டோ..." (தங்கப் பதுமை பாட்டை கொஞ்சம் மாற்றி)

ambi said...

நன்றி என்று சொன்னால் அது மிகவும் சின்ன சொல்லாகி விடுமே கண்ணன்!
மல்லாரி பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். Tonns of thanks. :)

//ஆரென்ன சொன்னாலும் அஞ்சாதே மனமே ஐய்யன் கருணையைப் பாடு, முடிந்தால் அடவோடும் ஜதியோடும் ஆடு//
சார், எனக்கு விஜி உதவியால் இந்த பாடலும் தெரியுமாக்கும். :)

கீதா சாம்பசிவம் said...

மல்லாரி பத்தின ஆராய்ச்சியும், பாட்டும், பதிவும் நேத்திக்கே வந்து விட்டது. ஆனால் எனக்கு இன்னிக்குத் தான் வர முடிஞ்சது. நேத்திக்கு முடியலை. இன்னிக்குப் பதிவுக்கும் சேர்த்துப் பார்க்கலாம்னு வந்தேன். இந்த மல்லாரி ராகத்தைப் பத்தி இன்னும் நிறையத் தெரியணும்னா "கொத்தமங்கலம் சுப்பு" "தில்லானா மோகனாம்பாள்" ஒரிஜினல் கதையில் நிறைய எழுதி இருக்கிறார். எனக்கு முந்தாநாளே அது தான் நினைவு வந்தது. ஞானம் இல்லாமல் எழுதக் கூடாதுன்னு எழுதலை. இங்கே எல்லாரும் ஞானம் ஜாஸ்தி உள்ளவங்க. "கொல்லன் பட்டறையில் ஊசிக்கு என்ன வேலை"ம்பாங்க. அது மாதிரி ஏதோ எழுதி விட்டேன்.

வேதா said...

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ராகங்கள் பற்றி தெரியாவிட்டாலும், குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா எனக் கூறி தரிசனம் செய்தேன்:) எனக்கும் ஒரு ப்ரசாத பொட்டலம் ப்ளீஸ்:)