அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என் மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்.
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே
பெருமாளை அருகில் சென்று களியுங்கள்.வண்ணமலர்மாலைகளின் நடுவே மதுர மதுர வேணுகீத மதன சுகுமார நாயகனாக வீற்று இருக்கிறான் நாராயணன்.வெள்ளை மல்லிகை மலர்க்கூட்டத்தின் நடுவே தங்கமென ஜ்வலிக்கும் கருடாழ்வாரைப் பாருங்கள்.இருகைகளாலும் பெருமாளைத் தாங்கிக்கொண்டு முகத்தில் பரிபூரண ஆனாந்தம் பொங்க காட்சிஅளிக்கிறார்.
இந்த ஆனந்தத்திற்கு காரணம் என்னவாக இருக்கலாம் என்பதற்கு ஒரு பட்டி மண்டப தலைப்பு கொடுத்து திரு ஜி.ரா,திரு.ராமநாதன் ஆகிய இருவரையும் ஒரு அணியிலும் ,மற்றொரு அணியில் திரு ஸ்.கெ,மற்றும் கே.ஆர் ஸ் அவர்களையும் வாதிடுமாறு அழைக்கிறேன். தலைப்பு இதுதான். கருடன் முகத்தில் ஆனந்ததிற்கு காரணம் "அகில உலகங்களையும் தங்கி நிற்க்கும் பெருமாளையே நாம் தங்கிக்கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்காகவா" அல்லது" ஈசனும், பிரும்மாவும், மற்ற தேவர்களும் வணங்கும் பாதத்தை தன் தலை மீது வைத்துக்கொண்டு சேவைசாதிக்கும் பாக்கியம் கிடைத்ததினாலா". நானே நடுவராக இருந்து கடைசியில் தீர்ப்பு வழங்குகிறேன்.
கண்ணனை கண்ணார கண்டுவிட்டீர்களா.போதுமா முடிந்தால் கண்ணிமைக்காமல் பாருங்கள்.கண்ணிமைத்து காண்பார்தாம் கண் என்ன கண்ணே.........தொடரும்
சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
Friday, November 03, 2006
இங்கே... போயிருக்கிறீர்களா...( 5 )
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
தி.ரா.ச,
எந்த ஊர்ப் பெருமாள் இவர்?
கல்லிடைகுறிச்சியா?
கருடசேவை பிரமாதம்.
அண்டங்களைத் தன்னூள்
அடக்கும் கண்ணனைக்
காதலோடு தாங்கும் பெருமைதான்.
நம்போன்ற அடியார்கள் கண்களுக்குக் கூட்டி வரும் பெருமை வேறு.
கருடனுக்கு நிகர் உண்டோ?
கண்ணிமைக்காமல் காண முயன்று கொண்டே இருக்கிறேன் திராச!
மிக்க நன்றி வைபவத்துக்கும் தரிசனத்துக்கும்!
பெருமானைக் காட்டிலும் பக்தனுக்குத் தான் பூமாலைகள் கூடுதல் போல :-))
ஈசனார் வணங்கும் பாதம் கருடன் தலை மீதென்றால்,
ஈசனார் ஆடும் நடனம், இறைவன் மனத்துள் தானே!
ஈசனை நெஞ்சுள் சுமக்கும் இறைவனைச் சேர்த்தே சுமக்கும்
மூர்த்தியர் இருவரின் சுமப்பால், கருடனும் முறுவல் கெண்டான்! :-))))
உங்க கேள்விக்குக் கண்ணனே வந்து பதில் சொல்லிட்டார். இதைவிட அருமையான விளக்கம் கிடைக்காது. "கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே!" என்று இளங்கோவடிகள் அந்தக் காலத்திலேயே பாடி இருக்கிறார்னா அவரும் கருடசேவையைப் பார்த்திருப்பார்.
அப்புறம் நானும் சில படங்கள் போட்டிருக்கேன். முடிஞ்சா வந்து பாருங்க.
அருமையான கருட சேவைக்கு நன்றி !
கண்ணைத் தான் இமைக்க முடியுமா என்ன ???
எந்த ஊர் ?
எனது திவ்ய தேசப் பதிவுகளை வாசித்ததுண்டா தாங்கள் ?
சபாஷ், சரியான போட்டி. :)
//ஈசனை நெஞ்சுள் சுமக்கும் இறைவனைச் சேர்த்தே சுமக்கும்
மூர்த்தியர் இருவரின் சுமப்பால், கருடனும் முறுவல் கெண்டான்!//
@kannan, superrrrrrrr. :)
இப்படியும் சொல்லலாமே!
அந்த பரந்தாமன் நெஞ்சில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். என்வே எம்பிராட்டியையும் சேர்த்து சுமக்கும் பாக்யம் அடைந்தேன், யார் தருவார் இந்த அரியாசனம்?னு பாடிக் கொண்டே புன்முறுவல் போக்கிறாரோ அந்த கருடன்?
அந்த பரந்தாமன் நெஞ்சில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். என்வே எம்பிராட்டியையும் சேர்த்து சுமக்கும் பாக்யம் அடைந்தேன், யார் தருவார் இந்த அரியாசனம்?னு பாடிக் கொண்டே புன்முறுவல் பூக்கிறாரோ அந்த கருடன்?
That is புன்முறுவல் பூக்கிறாரோ? sorry, a typo!
அட, பட்டி மன்றமா? அதுவும் நானா?
//ஈசனும், பிரும்மாவும், மற்ற தேவர்களும் வணங்கும் பாதத்தை தன் தலை மீது வைத்துக்கொண்டு சேவைசாதிக்கும் பாக்கியம் கிடைத்ததினாலா//
ஆனாலும் இது ஓவர்க்குசும்பு தி.இரா.ச.
"வெறும் உலகளந்த உத்தமன் சகலர்க்கும் படியளக்கும் ஈசனை அளப்பதும் இயலுமோ?" என்ற நக்கலால் விளைந்த புன்முறுவலாகக்கூட இருக்கலாம் அல்லவா? sorry, cudnt resist. :))
@ராமனாதன் ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற எம். டி.ஆரின் பாடலைக் கேட்டு இருக்கிறீர்களா
என்னேரமும் அன்புடன். இது கல்லிடைக்குறிச்சி ஆதி வராஹசுவாமி கருடசேவை. தங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. போய் படித்து விட்டு பதில் கூறுகிறேன். நன்றி வருகைக்கு.
Post a Comment