Thursday, November 16, 2006

நினைத்துப் பார்க்கிறேன்......

இன்றோடு 31 வருடங்கள் முடிவடைந்து விட்டது. இந்த மாதிரியான தினத்தை கொண்டாடும் வழக்கம் இல்லை என்றாலும் நினைத்துப் பார்ப்பதில் சில உண்மைகள் தெரியவருகிறது.
நாம் இதுவரை ஒரு பணம் முதலீடு செய்த பங்குதாரராக மட்டும்தான் இருந்தோம் என்பது.அது மட்டும் இல்லை கூட்டு வியாபாரத்தில் சேர்த்துக் கொண்ட "மைனர்" பங்குதாரர் மாதிரிதான் இருந்தோம் என்பதும் தெரியவருகிறது.அதில்"மைனருக்கு' லாபத்தில் மட்டுமே பங்கு உண்டு,நஷ்டம் வந்தால் அதை மற்ற "மேஜர்' பார்ட்னர்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுதான் சட்டம்.
அது என்னவோ என்வரை உண்மைதான்.எனக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது இந்த குடும்ப வியாபாரத்தில்.வீட்டை கவனிப்பது,குழந்தைகளை வளர்ப்பது,படிக்க வைப்பது,காலேஜில் சேர்ப்பது எல்லாம் "மேஜர்" பார்ட்னர் வேலைதான். வேலைக்கும் போய்க்கொண்டு, வீட்டயும் கவனித்துக் கொள்வது மிகவும் சிரமமான வேலை.இதில் என் உபஹாரமாக எனக்கு ஐந்துஆக்சிடென்ட்,இரண்டு தடவை இதயக்கோளாறு ஹாஸ்பிடலுக்கும் வீட்டிற்கும் அலைச்சல்,கவலை,எல்லாம் போனஸாகக் கொடுத்ததுதான்.

இதையெல்லாம் பார்க்கும்போது நினைவுக்கு வருவது நம் பாரதியின் கவிதை வரிகள்தான் சில மாற்றங்களுடன்.
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன் வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்; தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்; மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய் ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப் பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்.
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்! கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்! கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்! கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!
இதில் கண்ணனுக்குப் பதிலாக நம்ப 'மேஜர் பார்ட்னர்" பெயரைபோட்டுவிட்டால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்
இந்த நாள் இனிய நாள்தானே.

இந்த நாளுக்காக என்மகனும் மருமகளும் சிங்கப்பூரிலிருந்து வாழ்த்தி அனுப்பித்த விநாயகரைப் பார்த்ததும் எழுந்த நினைவு அலைகள்.......

46 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திராச அம்மா மற்றும் ஐயா,
இனிய மணநாள் வாழ்த்துக்கள்!

இதோ பரிசு/வணக்கம் from New York!
"ஆராசை அமுதன் அருளினால் பொலியும்நல்
திராச ஐயனை வாழ்த்து"!

"மேஜர் பங்கு தாரனை
அருள் பொங்கு தாரனை
இன்பம் தங்கு தாரனை
சக்ர சங்கு தாரனை"
வேண்டி, நலமெலாம் பெருக, வாழ்த்தி வணங்குகிறோம் ஐயா!

ambi said...

திராச அம்மா மற்றும் ஐயா,
இனிய மணநாள் வாழ்த்துக்கள்! i'm soooo happy, That's why i mentioned her as best women i met in my blog post. :D

myself and Ganesh will call U tonite. :)
*ahem* ட்ரீட் எல்லாம் கிடையாதா? பாவம் குழந்தை!(me only) :)

தி. ரா. ச.(T.R.C.) said...

கண்ணனை பற்றிய பாட்டை போட்டவுடனே அங்கு கண்ணபிரான் வந்துவிட்டான்.காலையில் சிங்கப்பூரிலிருந்து மகனும் மருமகளும் வாழ்த்துக்களை வழங்கினர்,தொடர்ந்து,இங்கே உள்ள மகனும் ,மகளும்,மற்றும் உறவினர்களும்,நண்பர்களும் பகிர்ந்துகொண்டனர்.வலையைத் திறந்து பார்த்தால் எனது மகன்போல் என் மீது பாசம் வைத்துள்ள கண்ணபிரான் நியுயார்க்கிலிருந்து கவிதையிலே மிக அருமையான வாழ்த்தை வழங்கி அன்புப் பரிசாக அளித்துவிட்டான். கே.ஆர்.ஸ் க்கு எங்களின் ஆசிகள். சதமானம் பவதி.

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி அன்ட் கணேஷ் நன்றிகள்,அதான் ராத்திரி இரண்டுபேரும் வரேன்னு சொல்லி இருக்கீங்களே! அப்போ நேரா "கன்ட்ரி கிளப்புக்கு" வந்துவிடுங்கள் அங்கேதான் டின்னெர்.கேசரி,அல்வா,மற்றும் இதுவரை நீ தரேன்னு சொல்லி ஏமாத்தின எல்லா ஐட்டங்களையும் வாங்கிண்டு வந்துடு,ஏன்னா கீதாமேடம்.பொற்கொடி(சேர்ந்தே இருப்பது செல் போனும் பொற்கொடியும்)வேதா(ளம்)எல்லாரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க வேதா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.கவிதை ஜன்னலை கொஞ்சம் அப்பப்போது திறவுங்கள் காற்று வரட்டும்

தி. ரா. ச.(T.R.C.) said...

Ishu raj: Thirumana nal vazhutukal..Good post on ur wedg day!!Dinner ku enakku invitation kadaiatha??Minor's share is liable for the acts of the firm but the minor himself..adanala dan unga role minor a ??

தி. ரா. ச.(T.R.C.) said...

@ice enakkuthaan share kitaiyaathe apparam enkey minor/major. ippave utane kilampi irantu perum "contry club" vanthutunko wait pannarom.

Cogito said...

Happy wedding anniv !

தி. ரா. ச.(T.R.C.) said...

Thank you very much cogito

நாகை சிவா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தி.ரா.ச.

ஒரு நாள் லேட்டா வந்ததால் Country Club மிஸ் ஆகிடுச்சு. பரவாயில்லை. அது இல்லாட்டி என்ன வேற எதாச்சும் இடத்தில் விருந்து கொடுக்க மாட்டீர்களா என்ன?

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க புலி. புலி எப்போதுமே பதுங்கித்தானே மெதுவாக வரும். அதான் நல்ல டின்னரை மிஸ் பண்ணிடீங்க.அடுத்த தடவை நல்லா கவனிச்சா போச்சு.

G3 said...

Belated thirumana naal vaazhthukkal.. Konjam latea vandhutten pola :) Unga major partnerukkaaga neenga pottirukkara kavidhai kalakkal :)

Maayaa said...

thi ra sa avargale...

vaazthukal.

neenga vayasula ivlo periyavarnnu naan kanavulayum nenachu paakave illa...ariyaamal endraavadu mariyaadhaillaamal koopitirundhaal mannikavum!!!

and btw, neenga en next 'therindhukolvome'la kaanum? aela seeta eduka neengalum varla om tat satum varala paaa..

Maayaa said...

thi ra sa avaragale..

innoru murai padidhen..kalakiteenga.. indha oru postlaye avanga agam mahizndhu ella kavalayum marandhiruppaanga...

துளசி கோபால் said...

என்னங்க திராச,

இன்றுபோல் என்றும் மகிழ்வோடு வாழணுமுன்னு வாழ்த்துகின்றோம்.

31 வருசம்? நாங்க சீனியர்ஸ். 32 முடிஞ்சது:-))))

கண்ணபிரான் பதிவுலேயே (நிகழ்வு என்னன்னு தெரியாட்டியும்) என்னவா
இருந்தாலும் வாழ்த்துகள்னு சொல்லிட்டுவந்தேன்.

இங்கே அங்கேன்னு போய்ப் பார்க்கமுடியாம இந்த வாரம் ஒரு
ஸ்பெஷல் கால்கட்டு.

உங்க வீட்டம்மாவுக்கு ஸ்பெஷல் வாழ்த்து(க்)கள். இந்த அடுத்தபாதிகளைக்
கட்டி மேய்க்கறது லேடீஸ்க்கு கொஞ்சம் கஷ்டமான வேலைதான். ஆனால்
ஜெயிச்சுருவோம் இல்லெ? :-)))))

இலவசக்கொத்தனார் said...

மிக லேட்டாய் என் வாழ்த்துக்கள். உங்க ரெண்டு பேருக்குமே. (பின்ன மேஜர் பார்ட்னருக்கு மட்டும் சொன்னா நல்லாவா இருக்கும்?!)

Porkodi (பொற்கொடி) said...

suppper! wishes to you n mami! nallavanagluku nalladu than nadakkum :)

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி பொற்கொடி. தேவலாமே போனும் நெட்டும் இல்லாத டைமாப் பாத்து பதில் போட்டுடயே. உன்னுடைய நல்லெண்ணத்தை மாமிக்கு சொல்லியாச்சு.

தி. ரா. ச.(T.R.C.) said...

@உமா கோபு தங்களுடைய பரிவுக்கும் பிரார்த்தனைக்கும் எங்களது நன்றிகள். உங்கள் குடும்பத்தாருக்கும்,உங்களுக்கும் எங்கள் ஆசிகள்

தி. ரா. ச.(T.R.C.) said...

@G3 உங்கள் முதல் வருகைக்கும் வாழ்துக்களுக்கும் நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் நீங்கள் அனுப்பிய வாழ்த்துக்கள் "வேதாகுரியர் செர்விஸ்' மூலமாக வந்து சேர்ந்தது. நன்றி.வேதாளத்தையே வேலை வாங்கும் நீங்கள் பெரிய தலைவிதான் என்பதில் சந்தேகமே இல்லை.D;

Geetha Sambasivam said...

தாமதமான மணநாள் வாழ்த்துக்கள், உங்களுக்கும், உங்கள் மறுபாதிக்கும். உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள்.

My days(Gops) said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்:)

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் என்னை மறு படியும் மறு படியும் பாதிக்கும் அவர்களிடம் சொல்லிவிட்டேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

@கோப்ஸ் தங்கலின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஸெல்போனில் எடுத்த போட்டோவில் உள்ள உங்கள் ஷர்ட் டாப்பாக உள்ளது.

தி. ரா. ச.(T.R.C.) said...

@பிரியா உங்களுடைய மெயிலுக்கு அனுப்பிய பதில் திரும்பி வந்துவிட்டது.ஏது இவ்வளவுதூரம் வந்துட்டீங்க.நன்றி. வயதை காலண்டருடன் சம்பந்தப்படுத்தும் வழக்கத்திற்குப் பதிலாக மனிதனின் மனத்துடனும், அவன் தன் நண்பர்களையும் உறவினர்களையும் அணுகும் முறையையும் வைத்துப் பார்க்கவேண்டும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@இலவசம் வருகைக்கு நன்றி. திரு.ஸ்.கே கிட்டே என்னைப்பத்தி எக்கசக்கமா சொல்லி இருக்கே போல இருக்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

டீச்சர் வணக்கம் சீனியர் ஜுனியருக்கு ஆசிகள் வழங்கினத்துக்கு நன்றி.
நீங்க சொன்னதை அப்படியே வீட்டிலே சொல்லிட்டேன்
அது என்ன "ஸெபஷல்' கால்கட்டு.
நீங்கலேல்லாம் ஜெயிச்சு 32/31 வருஷம் ஆச்சுல்லே அப்பறம் என்ன.திரு.கோபல் சொல்லுங்க

EarthlyTraveler said...

very belated Happy Anniversary Day.
--SKM

EarthlyTraveler said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள்."மேஜர் பார்ட்னர் மற்றும் மைனர் பார்ட்னர் இருவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.உங்கள் மனைவியிடம் உங்களுக்கு உள்ள
அன்பை அழகாக எடுத்து உரைத்துள்ளீர்கள்.உங்கள் மறுபாதியான உமா மேடமிடமும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.
--SKM

Maayaa said...

thi raa sa avargale,

en email id adhu dhaan.it works..anniku edhavadhu problem irundhirukalaam..

neengal solvadhu romba sariye..adhu unga nalla manadhai kaatudhu..

but irundhalum ...nammai vida vayadhil periyavargalai 'per' solli koopiduvadhu thavarunnu naan nenakaren.
previously, ungalai thi raa sa nu naan mariyaadhai illamal azhaithirupeno apdinra bayathula dhaan apdi sonnen...

G.Ragavan said...

தி.ரா.ச, தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்கவும். :-)

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். முருகன் திருவருளால் எங்கும் இன்பம் நிறைந்தேலோர் எம் தி.ரா.ச :-)

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

இன்றுதான் உங்கள் வலையில் நுழைந்தேன.தங்கள் தாயின் மரனம் குறித்து படித்த போது மனம் அழுதது,ஏனென்றால்,நான் மகனை பறி கொடுத்த தாய்.ponniyinselvi_kartik@yahoo.co.in மற்றும் http://vijayanagar.blogspot.com.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க ஸ்.கே.எம்.முதன்முதலா வந்து இருக்கீங்க. நன்றி.உங்களுடைய நல்வாழ்த்துக்கும் நன்றி.என்பேரும் உமாபதி தான் உமாவின் பதி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@வேதா சுனாமியிடமிருந்து ஒரு சுகந்த காற்று வீசியது. நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஜி.ரா. எப்பொழுது வந்தால் என்ன அன்பு போதும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@பொன்னியின்செல்வன். வருகைக்கு நன்றி. புத்திர சோகத்தை மாற்றுவாருமில்லை ஆற்றுவாறுமில்லை

EarthlyTraveler said...

I remember reading one more post.Today it is not here.yennai polavae pottu pottu edukira valakkama ungalukkum.Illai AM I Facing any blog problem?--SKM

தி. ரா. ச.(T.R.C.) said...

@SKM you are correct madame."vennai thirutith thinnum kannan perai sollas solla.." oothukkatu songs pottu oru post potten.blog seytha mayam enna kanamal poi vittathu.thiruppi muthalle irunthu poatnum. muyarsi pannaren

EarthlyTraveler said...

oh!I see!It is ok.Nidhanama podunga.Ambi vera varar bajji sojji sapda.yeppo pathalum yenna miratitu irukkar.so konjam kurachalavae bajji kodunga.yennai
palagaram kozhuppu adhigamakidum.
--SKM

EarthlyTraveler said...

oh!I see!It is ok.Nidhanama podunga.Ambi vera varar bajji sojji sapda.yeppo pathalum yenna miratitu irukkar.so konjam kurachalavae bajji kodunga.yennai
palagaram kozhuppu adhigamakidum.
--SKM

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஸ்.கே.எம் 30 வயது வரை பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் சாப்பிடலாம்.தாங்கும்.பஜ்ஜிக்கு ஆசைப்பட்டுத்தான் எலி கூண்டுக்குள் மாட்டிக்கொள்ளும்.மாட்டிக்கொண்டான் அம்பி.

EarthlyTraveler said...

//மாட்டிக்கொண்டான் அம்பி. //
edho something special news pola thonudhe?appdithana?--SKM

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஸ்.கே.எம் உங்கள் ஊகம் மிகச்சரி.இதற்குமேல் இப்போது எதுவும் சொல்லமுடியாது.11ஆம் தேதி வரை பொறுங்கள். 10 ஆம் தேதி மதுரையே ஸ்தம்பிக்கப் போகிறது.உங்கள் மெயில் ஐ டி எனக்கு அனுப்புங்கள் தனி விவரம் அனுப்பிவைக்கிறேன்..

தி. ரா. ச.(T.R.C.) said...

@வேதா அடுத்தப் பதிவு ஒன்று போட்டு மயமாய் மறைந்து விட்டது. இப்பொது உங்கள் படத்துடன் அடுத்தபதிவு போட்டாச்சு

குமரன் (Kumaran) said...

பந்திக்கு மட்டுமே முந்தும் அடியேனை மன்னிக்க வேண்டும் திராச. ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு பின்னர் தான் இந்தப் பதிவைப் பார்த்தேன். அடியேனும் தங்கள் ஆசிகளை வேண்டி நிற்கிறேன்.

சேந்தன் அருள் எப்போதும் சேரட்டும்.