Monday, November 06, 2006

கார்த்திகேய... காங்கேய... கௌரி...தனயா...


ஷண்முகச்செல்வர் நண்பர் திரு.இராகவன் விருப்பத்திற்கு இணங்க முருகனுக்குகந்த கிருத்திகை தினமான இன்று திரு பாபநாசம் சிவன் அவர்களின் இந்தப்பாடலை இடுகிறேன். தமிழ் கொஞ்சும் இந்தப்பாடலை பிரபலப் படுதியவர் திரு. மதுரை மணி ஐய்யர் அவர்கள். அவர் இந்தப்பாடலை பாடத கச்சேரியே கிடையாது. அதுபோல ரசிகர்கள் மறுமுறையும் அவர்களை இந்தப் பாடலை பாடச்சொல்லாத கச்சேரியே கிடையாது. முருகனை குழந்தையாக பாவித்து திரு சிவன் அவர்கள் அனுபவித்து பாடியது. நாமும் அனுபவிக்கலாமா:-


ராகம்:- தோடி தாளம்- ஆதி

கார்த்திகேய காங்கேய கௌரி தனய
கருணாலய அருள் திருக்....... (கார்த்திகேய)

கீர்த்திமேய தென்பரங்குன்று திருச்
செந்தில் பழனி ஸ்வாமிமலை மேலும் வளர் (கார்த்திகேய)

குன்றுதோரும் அழகர் கோயில் தனிலும்
குஞ்சரியும் குறக்கொடியும் தழுவுதிண்
குன்றம் அனைய ஈராறு தோள்களோடு
குஞ்சரமென உலவும் சரவன்பவ (கார்த்திகேய)

மால்மருக ஷண்முக முருக குஹா
மகபதியும் விதியும் தொழும்
மாதங்க வதன ஸஹோதர அழகா
வேல் மருவும் அமல கரகமலா
குறுநகை தவழ் ஆறுமுகா
விரைவுகொள் மயூரபரி
மேல்வரு குமரா சூரனை ஸமருக்கொள் (கார்த்திகேய)


ஆறு படை வீடுகளயும் ஒரே பாட்டில் கொண்டு வந்து விட்டார்.மகபதியும் விதியும் தொழக்கூடியவன்,மாதங்கனின் சகோதரன்,கையில் வேல்வைத்திருக்கும் அழகன்,குறுநகை தவழும் குழந்தை முகம் கொண்டவன், பக்தர்களைக் காப்பதற்காக மயிலின்மீது விரைவாகக் வரக்கூடியவன் என்றெல்லாம் புகழ்கிறார். அருமையான மனதைக் கவரும் பாட்டு என்பதில் சந்தேகமே கிடையாது இதை ராகவனும் ஒத்துகொள்வார்.

இனி நெய்வேலி திரு சந்தான கோபலன் பாடிய பாட்டைக் கேட்க கிளிக் செயவும்
">

20 comments:

ஜீவா (Jeeva Venkataraman) said...

சந்தேகமில்லாமல்...மனங்கவர் பாடல் -எனக்குப் பிடித்த வரிகள்:

"மால்மருக ஷண்முக முருக குஹா"

முதல் மூன்று சொற்களும் 'க' வில் முடிந்து, அடுத்த சொல் அதே 'க'வில் தொடங்குவதால்...

மேலும்: "குறுநகைதவழ் ஆறுமுகா"
என்ற சொற்றொடர்.

பாடலை வழங்கியதற்கு நன்றி!

இலவசக்கொத்தனார் said...

இப்போதான் கேட்டேன். நம்ம கிருஷ்ணா பாடி! அருமையான பாடல். அமோகமான ராகம்.

கொஞ்சம் எளிய தமிழில் விளக்கமும் சொல்லுங்களேன்.

ambi said...

//ஆறு படை வீடுகளயும் ஒரே பாட்டில் கொண்டு வந்து விட்டார்.//

அருமை, அருமை, காலை பொழுதில் என் முருகனின் பாடல்! உள்ளமெல்லாம் இனிக்கிறது. மிக்க நன்றி ஹை! :)

Cogito said...

Wonderful song. But I have a special liking for Murugan songs in the "Shanmugapriya" raaga.The favorite one being " Vilayada idhu nerama" .

Btw, If you had asked me , I would have sent you a really nice picture of the huge 140 foot murugan statue at Batu Caves,Malaysia.

Will mail it to you today.

மு.கார்த்திகேயன் said...

திராசா சார்,
இப்படி ஒரு அருமையான என்னப்பன் முருகன் பாடலை போட்டு என் உள்ளத்தையெல்லம் இனிக்க வைத்தீர்கள்.. நன்றிங்க சார்..

நாகை சிவா said...

நல்ல பாடல்... நன்றி ஐயா. அப்படியே கொத்துஸ் கூறியது போல விளக்கம் கொடுத்தால் சிரமம் இல்லாமல் டக்குனு புடிச்சுப்போம்....

கீதா சாம்பசிவம் said...

Battu Malai" முருகன் படம் நானும் பார்த்திருக்கேன். படம் மட்டும் தான். உங்களுக்கு வந்தா உங்க போஸ்ட்லே போடுங்க. அப்புறம் பாட்டு இன்னும் கேட்கலை. கேட்டுட்டுச் சொல்றேன். எனக்குப் பிடித்த மணி ஐயர் பாடல் "கந்தா வா, வா" தான். ஜான் ஹிக்கின்ஸ் அவர்களும் இந்தப் பாட்டை நல்லாப் பாடுவார்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தோடியில் நல்ல பாடல் திராச ஐயா!

மயூரபரி = மயில் ஆகிய குதிரை! நல்ல சிந்தனை!
முருகனின் உறவுகள் எல்லாரும் பாடலில் வருகின்றனரே!

அறுபடை வீடு கொண்ட திருமுருகனைப் போலவே பாடலும் இனிமை!

ஆடியன்ஸ் எல்லாரும் பொருள் கேட்டு நிற்கிறார்களே ஐயா! நீங்க கொஞ்சம் மனசு வைக்க வேண்டும்!

தி. ரா. ச.(T.R.C.) said...

ஜீவா வின் வருகைக்கு நன்றி.தோடி ராகத்துக்கு ஜீவனைத்தரும் க என்ற கமகத்தை அவர் கையாண்டவிதமே அலாதி.சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்.நேரம் கிடைக்கும் போது வாருங்கள். என் வாசகம் என் வாசகன் ஆனதுக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கொத்ஸ்,@ சிவ, சிவன் அப்படியொன்றும் கடினினமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டார்.அடுத்தமுறை விளக்கம் கொடுக்கிறென்

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி உன் முருகனின் பாடல் என்றால் பிடிக்கும் சரி. அவன் அண்ணன் கணேஷ்(நம் விஷயத்தில் தம்பி) என்றால் பிடிக்காதா?

தி. ரா. ச.(T.R.C.) said...

@ cogito நீ சொல்வது சரிதான். முருகனுக்காகவே ஏற்ப்பட்ட ராகம் ஷ்ண்முகப்பிரியா. சிவன் 4 பாடல்கள் சரணவபவா என்ற அடியுடன் எழுத்தியிருக்கிறார் விளையாட இது நேரமா.இந்தப் பாடலை நான் 5 மாதங்களுக்கு முன் ஒரு 3 வயது பெண் குழந்தை மிக அழகாகப் பாடக்கேட்டேன்.நீ படத்தைஅனுப்பு நான் பாட்டை வேறு பதிவில் போடுகிறேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

@கார்த்தி பாட்டே உன் பெயர்லேதான் இருக்கு அப்பறம் நீ வரலைன்னே எப்படி.அப்பப்போ வந்து போயிகிட்டு இருங்க புரியும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் எனக்கும் அந்தப் பாடல்தான் பிடிக்கும் . ஆனால் பாடல் வரிகள் உடனே கிடைக்கவில்லை. அதான் இந்தப் பாட்டை போட்டுவிட்டேன். பையன் படம் அனுப்பினவுடன் பதிவில் போட்டு கா வா வா பாடல் போடுகிறேன்

G.Ragavan said...

நன்றி நன்றி நன்றி

கந்தவேள் புகழைப் பேசுவதும் நினைப்பதும் இன்பமென்றால் பாட்டாகப் பாடுவதும் பேரின்பம். அருமையான இன்னிசைப் பாடலை அறிமுகம் செய்த தி.ரா.சவிற்கு நன்றி பல.

பாடலின் ஒவ்வொரு வரியும் சொல்லும் எழுத்தும் ரசித்து ருசித்துப் படித்தேன். நீங்கள் குறிப்பிட்ட படி ஆறுபடை வீடுகளையும் ஒரு பாட்டில் கொண்டு வந்த திறம் சிறப்பு.

மயூரபரி என்ற புகழ்ச்சொல்லிற்கு வந்ததும்...சட்டென்று அநுபூதி நினைவிற்கு வந்தது. ஆடும்பரி என்றுதானே அநுபூதியே தொடங்குகிறது.

எந்தவேளையும் நினைக்காவிடினும் கந்தவேளை அவன் நினைவு தந்தவேளைகளில் எல்லாம் நினைத்து மகிழ்வது உண்மைதான். ஷண்முகச் செல்வர் என்று மரியாதை ஏன்? ஷண்முகச் செல்வன் என்றே சொல்லுங்கள். கந்தன் பெயரோடு எந்தன் பெயரும் சொல்லப்படுமானால் எனக்குப் பேரின்பமே. அது முருகன் அருளே.

குமரன் (Kumaran) said...

மிக அருமையான பாடல் தி.ரா.ச. அறிமுகத்திற்கு நன்றி. பாடலை கேட்டு மனமகிழ்ந்தேன்.

கீதா சாம்பசிவம் said...

வணக்கம் சார், நாங்களும் ஆன்மீகம் பத்தி எழுதறோம். கொஞ்சம் நினைவு வச்சுக்குங்க. :D

வேதா said...

ரொம்ப லேட்டா வந்துட்டேனோ:) சரி பரவாயில்லை அருமையான பாடல் கேட்ட திருப்தி கிடைத்தது நன்றி:)

Priya said...

thi raa saa

chance illa.. bakthi thadhumbudhu unga postla.. kalakunga

Priya said...

hey
tell me how can u give link just to a particular song alone from music india or raaga??
i mean to ask " when i click the link, it goes the box from which music comes instead of getting to the page where we usually click to get to a box"