Wednesday, November 08, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா...( 6 )

அகத்தியர் அருவி குளியளோடு இந்தப் பதிவுக்கு ஒரு முழுக்கு போட்டுவிடலாம். மறுநாள் காலை 6.00 மணிக்கெல்லாம் எழுந்து நம் கைடு சொல்படி கிளம்பியாகி விட்டது. பஸ் ஸ்டாப்ப்புக்குப் போய் பாபநாசம் பஸ்சைப் பிடித்து அங்கே இறங்கினோம்.மணி 6.30 என்பதால் மலை அருவிக்குப் போக பஸ் வசதி இல்லை. எட்டு மணிக்குத்தான் அடுத்த பஸ் என்றார்கள்.

" சார் நடந்தே போய் விடலாம் ஒரு 1 கி.மீ தான் இருக்கும்'இது கணேஷ்.எனக்கு உடனே மனத்திரையில் வீட்டில் சொல்லி அனுப்பிய அறிவுறைகள் ஞாபகத்துக்கு வந்தது.இதயக்கோளாறு உள்ளதால் மாடி முக்கியமாக மலை ஏறக்கூடாது. சரி வந்தது வரட்டும் என்று அவனுடன் மலை ஏறத்துடங்கினேன். 2 கி. மீ தூரம் அதுவும் ஏற்றம். பாதி தூரம் போவதற்குள் அடைபட்ட ரத்தக்குழாய் வேலையை காட்டத்துடங்கி விட்டது.கணேஷ்க்குத் தெரியாமல் ஒருவாறு பேசாமல் சமாளித்தேன்.

அருவிக்கு போன பிறகுதான் உயிர் வந்தது.பாருங்கள் அருவியின் அழகை.ரம்யமான சுழ்நிலை.அருவியின் அட்டகாசமான ஓசை, குளிர்ச்சி, குரங்குகளின் ஆட்டபாட்டம்."வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும் , மந்தி சிந்தும்கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்" என்ற ராசப்ப கவிராயரின் பாடல்தான் நினைவுக்கு வந்தது. அருமையாக ஒர் மணிநேரக் குளியல்.அருவித்தண்ணீர் மேலே விழும்போது என்ன சுகம் .உடம்பு வலியெல்லாம் போய்விட்டது.கஷ்டப்பட்டு ஏறி வந்ததற்கு நல்ல பலன்.


மற்றொரு படம் ஒரு அதிசயமான படம் ஒரு மரத்தை வெட்டி கருக்கியிருந்தார்கள். அதில் நடுவில் பார்த்தால் பெரிய கல் நடுவில் இருந்தது. எப்படி இந்தக் கல் உள்ளே போயிற்று,எப்படி மரத்துடன் வளர்ந்து மேலே சென்றது . எல்லாமே அதிசியம்தான்.இதுதான் கல்லிடைக்குறுச்சியோ?

தமிரபரணியை இப்போது பாருங்கள். இதுவா பேரிரைச்சலுடன் விழுந்த அருவி,எப்படி இப்பொழுது சமர்த்தாக ஓடுகிறது.இது பாபநாசத்தில் எடுத்தது.

ஊருக்கு வந்து அம்பியின் குடும்பத்திலிருந்து பிரியா விடைபெற்று திரும்பினேன்.என்ன அன்பு என்ன உபசரிப்பு. இத்தனைக்கும் நான் அவர்களுக்கு நன்கு பரிச்சியம் இல்லாதவன்.

திருநெல்வேலி வந்து கணேஷிடம் விடைபெற்று ஊர் திரும்பினேன்.அப்பா கணேஷா நீ நல்லா அமோகமா இருக்கணம். ரயிலிருந்து இறங்கியதிலிருந்து மறுபடி ஏறும் வரை என்னை என் மகனைப்போல் பார்த்துகொண்டான்.

கடைசியாக ஒரு வார்த்தை திருநெல்வேலிகாரர்கள் முதலில் அறிவோடுதான் சமாதானமாகப் பேசுகிறார்கள். அதற்கு சரிபடவில்லை என்றால்தான் அரிவாளோடு பேசுவார்கள் போலும்.அவர்களுடைய உபசரிப்புக்கு நிகரே கிடையாது. முடிந்தவர்கள் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடம். போய்வாருங்கள்.

10 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நல்ல தொடர் திராச ஐயா!
இயற்கை, இறைவன், இசை, என்று எல்லாமே இனிமை!

கடைசியில் "நச்" சுனு முடிச்சிருக்கீங்க!
அறிவால் இல்லை என்றால் அரிவாள்!:-))

//கணேஷ்க்குத் தெரியாமல் ஒருவாறு பேசாமல் சமாளித்தேன்//
அச்சோ! இனி இப்படி செய்யாதீங்க! அவரிடம் லேசா சொன்னா புரிஞ்சுக்க மாட்டாரா என்ன? ஆட்டோ மாதிரி வேற ஏற்பாடுகள் செய்திருப்பாரே! என் பாட்டியைக் கூட நான் கோபித்துக் கொள்வேன்! ஏன் எங்களிடம் சொல்லாமல், உங்களுக்கு உள்ளேயே வைத்துக் கொள்கிறீர்கள் என்று! உடனே அவங்களும் ஒரு ரவா லட்டு எடுத்து நைசாக வாயை அடைத்து விடுவார்கள்! :-))

Sandai-Kozhi said...

//திருநெல்வேலிகாரர்கள் முதலில் அறிவொடுதான் சமாதானமாகப் பேசுகிறார்கள். அதற்கு சரிபடவில்லை என்றால்தான் அறிவாளோடு பேசுவார்கள் போலும்.அவர்களுடைய உபசரிப்புக்கு நிகரே கிடையாது//
That is so true.உங்கள் அனைத்து பதிவுகளையும் படித்தேன்.மிக மிக அருமையாக பாடல் வரிகளும் போட்டு,பாட்டும் போட்டு,படங்களும் போட்டு,நாங்களும் கல்லிடைக்குறிச்சி சுற்றியது போலவே இருந்தது.நன்றி.
--SKM

இலவசக்கொத்தனார் said...

என் கிட்ட சொன்னது எல்லாம் வரலையே...

G.Ragavan said...

அகத்தியர் அருவி நானும் போயிருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச இடங்களில் இதுவும் ஒன்று. சின்ன அருவிதான். ஆனால் சுகமான அருவி. இப்பத் தட்டியெல்லாம் போட்டிருக்காங்க. ஆனா முந்தி கெடையாது.

அங்க மலையில படியாப் போய் ஒரு கோயில் வருமே...கோயில் பக்கத்துல சுத்தி மலை. மலைக்கும் கோயிலுக்கும் நடுவுல ஒரு மடு. அந்த ஃபோட்டோ எடுக்கலையா?

கீதா சாம்பசிவம் said...

கைலாசத்துக்குப் போறதை விடக் கஷ்டமாப் போச்சு உங்க பதிவுக்கு வரதுக்கு. அது சரி, உங்களுக்கு இதயக் கோளாறுன்னு சொல்றீங்க அப்புறம் எப்படிக் கைலை யாத்திரை எல்லாம் செய்ய முடியும்?
படங்கள் எல்லாம் நல்லாவும் வந்திருக்கு, நல்லாவும் போட்டிருக்கீங்க. நம்மளை மாதிரி சிரசாசனம் எல்லாம் செய்ய வேண்டாம். :D

வேதா said...

இனி நேரிலும் போயும் பார்க்க வேண்டுமா? அதான் உங்க பதிவுலேயே ரொம்ப அழகா பார்த்துட்டோமே:) படங்கள் ரொம்ப அருமையா வந்துருக்கு:)

Priya said...

enga amma appa poyirukaanga.. naan poganumnnu asai patten... chance kedacha nalla irukum...

Priya said...

thi raa sa

unga font size koncham chinadhu panna nalla irukumnnu nenakaren. sila post vegamaa padika koncham kastamaa irukku!!

பொற்கொடி said...

trc sir unga blog open panna mattum seriyave open agama paduthithu blogger itana naala :( ipo than poen panren. seekrame padichutu comment podren.
(nan ena un commentka wait panren nu ellam keka kudadu!)

பொற்கொடி said...

trc sir, romba nalaiku apram unga blog enaku open agudu :) illana dinamum edavadu prachanai pannum :(

seekrame padichutu commentaren.. (amam un commentku than nanga wait panroma nu ellam keka kudadu!)