Friday, January 19, 2007

பாபநாசம் சிவன் தமிழ்த்தியாகய்யா(5)

Papanasam Sivan: The Tamil Tyagarajar (5)




பாபநாசம் சிவனின் வாழ்க்கையே மிகவும் எளிமையானது. மயிலை மாடவீதிகளில் 75 வயதிலும் மார்கழிமாத குளிரில்
கபாலியைப்பற்றியும் கற்பகாம்பாள் பேரிலும் படல்களை பாடிக்கொண்டு பஜனை செய்வார்.
அவருடன் அந்தகாலத்து பெரிய வித்வான்களும் கூடவே பாடிக்கொண்டு வருவார்கள்.
அவருக்கு சதாபிஷேக விழா நடந்தது.சென்னையில் கிருஷ்ணகான சபாவின் சார்பில் அது 1971வில் நடைபெற்றது.
எனக்கும் அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்து. பிரபல வித்துவான்களும், நீதிபதிகளும் அதில் கலந்து கொண்டார்கள்.
விழா மாலை 6.. மணிக்கு ஆரம்பித்து இரவு 10.00 வரை சென்றது. அன்று நல்ல மழை. விழாமுடிந்ததும் எல்லோரும் அவரவர்
வாகனங்களில் ஏறிக்கொண்டு சென்று விட்டார்கள்,ஆனால் சிவனுக்கு வண்டி வரவில்லை. நான்தான் அவருடன் அவரை
வழிஅனுப்புவதற்காக இருந்தேன்.
"என்ன மாமா வண்டி வருமா இல்லை நான்வேனா வேறூ கார் ஏற்பாடு செய்யட்டுமா" என்றேன்
"இல்லை அம்பி வண்டி வந்துவிடும் கொஞ்சம் இரு" என்றார்.
மழையும் விடவில்லை. அந்த கொட்டும் மழையிலும் ஒரு சைக்கிள்ரிக்ஷாக்காரன் வண்டியை ஓட்டிகொண்டு வந்துகொண்டிருந்தான்.
கிட்டே வந்தவுடன் "ஐய்யா போலாமுங்களா" என்றான்.எனக்கு ஒன்றும் புரியவில்லை
"என்ன மாமா கார்வரவில்லயா" என்றேன்.
"இல்லை அம்பி இவன்தான் எனக்கு எங்கே போனாலும் வந்து இருந்து பத்திரமாக கூட்டிக்கொண்டு போகிறான்.
காருக்கு 50ரூபாய் குடுத்தால் 5 நிமிஷத்தில் மயிலை கொண்டு விட்டுவிடுவான்.
ஆனால் அதே 50 ரூபாயை இவனுக்குக் கொடுத்தால் அரைமணியாகும்.
இவன் குடும்பமே ஒரு வாரத்துக்கு வயிறாறச்சாப்பிடும்" என்றார்.அந்த அளவுக்கு கருணையும்.எளிமையும் கொண்டவர்.

இந்த பகுதியில் சிவனின் இரண்டு பாடல்களைப் பார்க்கலாம்/கேட்கலாம்.
ஒன்று திருவாரூர் கோவிலில் உள்ள வாதாபி கணபதியின் மீது படப்பெற்ற பாடல்.
திருவாரூர் கோவிலின் அமைப்பே வானவெளியிலிருந்து பார்த்தால் ஸ்ரீ சக்ர மேரு வடிவில் இருக்கும்.
40 வேலி கோவில் 40 வேலி குளம்.பார்ப்பதற்கு மிக கம்பீரமாக இருக்கும்
ஸ்ரீசக்ரத்தின் மத்யபாகத்தில் கமலாம்பாள் வலதுபக்கத்தில் வாதாபி கணபதி.
சஹானா ரகத்தில் அமைந்தது இந்தப்பாடல்.
இரக்ககுணத்தை பிரதிபலிக்கும் ராகம் சஹனா.
மிகவும் அழகாக அமைந்த பாடல் இது
இதில் காவேரி வருவதற்கு காரணமாக இருந்த அகஸ்தியரையும் முருகப்பெருமானையும் புகழ்கிறார்.

ராகம்:- சஹானா தாளம் :- ஆதி.

பல்லவி

ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம் ஓம் (ஸ்ரீ)

அனுபல்லவி

தேவாதி தேவன் தியாகேசன் திருவிளயாடல் செய் திருவாரூர் வளர் (ஸ்ரீ)

சரணம்

நம்பினபேர்க் கிஹபரமிரண்டிலும் நல் வாழ்வும் பேரின்பமும் நல்கும்

தும்பிமுகப் பெருமானே அடி தொழும் தொண்டர்கள் வேண்டும் வரம்தருவோனே

சம்புவுடன் கமலாம்பிகை மகிழும் தனயனே தயாகரனே ஜகம் புகழும்

கும்ப முனிக் கருள் குமரன் முன்தோன்றிய கோமானே ராமதாசன் உளம் வளர் (ஸ்ரீ}

இத்துடன் மீரா படத்தில் எம்.ஸ். அம்மா படியபாடலும் நந்தனார் என்ற படத்தில் எம். எம் தண்டபாணி தேசிகர் பாடிய என்னப்பனல்லவா என்தாயுமல்லாவா பொன்னம்பலத்தவா பாட்டும் உள்ளது

30 comments:

EarthlyTraveler said...

மிக அருமையானப் பாடல்கள்.மீரா,நந்தனார் படங்கள் பார்த்ததே இல்லை.இந்த சந்தர்ப்பம் அளித்தமைக்கு மிக்க நன்றி.--SKM

இலவசக்கொத்தனார் said...

நான் கர்நாடக சங்கீதம் கேட்க ஆரம்பித்த புதிதில் என்னை மேலும் உற்சாகத்துடன் கேட்க வைத்த பாடல் இந்த சஹானா. அலுவலகத்தில் கேட்க முடியவில்லை. வீட்டுக்குச் சென்று கேட்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

// அதே 50 ரூபாயை இவனுக்குக் கொடுத்தால் அரைமணியாகும்.
இவன் குடும்பமே ஒரு வாரத்துக்கு வயிறாறச்சாப்பிடும்" என்றார்.அந்த அளவுக்கு கருணையும்.எளிமையும் கொண்டவர்.//



Wonderful human being. Well said, like his songs, he is also soo simple. Thanx for sharing a nice anectode.



ambi's comment

தி. ரா. ச.(T.R.C.) said...

Thank you skm

EarthlyTraveler said...

When I saw my comment here before even I commented actually, I got scared.Dec 21st potta comment , indha postukku ippo yeppdi vandhadhu?puriyala.India la dhan ippdi yellam nadakkum.--SKM

தி. ரா. ச.(T.R.C.) said...

@skm that post would not have posted at that time. this post suites for that comment. For computer mitakes i will be blamed by you.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, எஸ்.கே.எம். என்ன புரிஞ்சுதா? நான் சொல்றது? கணினி பத்தி?

@தி.ரா.ச. சார் இன்னிக்குத் தான் உங்க ப்ளாக் திறந்தது, கமெண்ட் எல்லாம் நல்லா இருக்கு.. பதிவு பத்தி அப்புறம் எழுதறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மேடம். வாங்க.இடத்தை கண்டுபிடிக்கறதுக்கு ரொம்ப அலைஞ்சிட்டங்களோ.உன்னும் ஆப்பூ மட்டும் குறையலே. கமெண்ட் நல்லா இருக்கா? அப்ப பதிவு மோசமா?அம்பி மேலே இருக்கற கோபத்தை என்மேலே காமிக்கிறங்க போல இருக்கு.ஏதோ வசிஷ்டர் வாயாலே பிரும்மரிஷின்னு வரலைன்னாலும் ஆண்டிப்பண்டாரம்னு வந்தாலும் போதும்.எல்லாம் இந்த அம்பியால் வந்த கஷ்டம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கொத்ஸ் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ ஆபீஸ் டையத்தில் சொந்த வேலை பார்க்காமல் இருப்பது.இங்கே இந்த் பேங்க்லேயும் இந்த மாதிரி இருந்திருந்தேன்னா எனக்கு எவ்வளவு உபகாரமா இருந்து இருக்கும்.சஹானா ராகமோ சீரியலோ எல்லாருக்கும் பிடிக்கும்.

Porkodi (பொற்கொடி) said...

super sir. idhu pola manidhargal irundadu nenachale silirkudhu, ethanai manidhabimaanam. paatu kekka mudiala inga, piragu ketutu solren :)

EarthlyTraveler said...

இப்போ நினைவிற்கு வந்தது.நீங்கள் இதே போஸ்ட் போட்டுட்டு உடனே எடுத்து விட்டீர்கள் அப்போ. திரும்பவும் இப்போதுதான் அதை மீண்டும் வெளியிட்டுள்ளீர்கள்.பாட்டைக் கேட்கும் போது நினைவு வந்தது.கணிணித் தவறு ஏதுமில்லை. உங்கள் தவறும் இல்லை.--SKM

தி. ரா. ச.(T.R.C.) said...

திருவாரூர் குளமும் கோயிலும் 40 ஏக்கர் என்பதற்கு பதிலாக 40 வேலி என்று தவறுதலாக போட்டுவிட்டென்.திருத்திக்கொள்கிறேன். தவறைச் சுற்றிக்காட்டிய கீதா மேடத்திற்கு நன்றி.என்னுடைய பதிவுகளில் தவறுகள் இருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஸ்.கே.ம் நன்றி. தவறுக்குள் தவறான தவறை புரிந்து விட்டு தவறென்று சொல்லாதடி ஞானத்தங்கமே என்ற பாட்டு எனக்காகத்தானோ.

தி. ரா. ச.(T.R.C.) said...

@பொற்கொடி. பாட்டுகேட்க முடியலையா? அதேதான் ரங்கமணியும் சொல்லறார். அவராலேயும் பாட்டுகேட்க முடியலையாம் உங்கட்டேஇருந்து.

செல்லி said...

"ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம் ஓம்" சஹானா ராகத்தில் ரொம்ப அருமை ஐயா.
பாபநாசம் சிவன் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தந்ததிற்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

வணக்கம் செல்லி. ஆம் சஹானா ராகம் மனத்தை உருக்கும்தான் அதேமாதிரி சிவனின் பாடல்களும் எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.

G.Ragavan said...

நல்ல உள்ளம். எளிமைதான் சிறப்பு என்று சொல்லாமல் சொல்லி வாழ்ந்துகாட்டியிருக்கிறார்.

திருவாரூர் சென்றதில்லை. இன்னொரு முறை அந்தப் பக்கம் போனால் கண்டிப்பாகச் செல்ல வேண்டும்.

SKM said...
This comment has been removed by a blog administrator.
மு.கார்த்திகேயன் said...

அருமையான வீடியோ தி.ரா.சா சார்.. ரொம்ப நாளா இந்த பக்கம் வராததற்கு மன்னிக்கவும்..

Ms Congeniality said...

//50 ரூபாயை இவனுக்குக் கொடுத்தால் அரைமணியாகும்.
இவன் குடும்பமே ஒரு வாரத்துக்கு வயிறாறச்சாப்பிடும்" என்றார்.அந்த அளவுக்கு கருணையும்.எளிமையும் கொண்டவர்//
he is great!!!enga thaatha rickshaw la pogave maataaru. Avaroda karuthu ennanaa paavan avan nambala sumandhutu ponume nu avar solluvaar.But of course that is how he earns his living.Naa edhuku sonnenaa ivar romba elimaiyaa vaazhndhaar nu sonnona enaku en thaatha nyaabagam vandhuduthu. He was also like that

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஜிராகவன், கார்த்திக் மற்றும்MS.C க்கு நன்றி.முடியும்போது பதிவுக்கு வருகை தாருங்கள்

Geetha Sambasivam said...

எவ்வளவோ முயன்றும் உங்களோட புதுப் பதிவுக்குப் போக முடியலை. முதல் பின்னூட்டம் கொடுக்க நினைச்சேன். அதுவும் முடியலை. இனிமேல் அடுத்த வாரம் தான். அதான் இன்னிக்கே பார்த்துட நினைச்சேன். முடியலை. மன்னிக்கவும்.

Geetha Sambasivam said...

ம்ஹும், வரவே இல்லை.

rnatesan said...

அற்புதமான பதிவை தந்த உங்களை சஹானா ராகத்தில்தான் பாராட்ட வேண்டும்!வாழ்த்துக்கள்!

Geetha Sambasivam said...

refresh கொடுத்துக் கூட வரலை. ரவியின் கடிதம் பார்த்து மறு முறை முயன்றேன். வரலை. என்ன ரகசியமா எழுதினீங்களோ தெரியலை. அடுத்த வாரம் வரேன், இணையம் இருக்கணும், ஊரிலே இருந்து வந்ததும், அதுவும் நான் இல்லைன்னா லீவ் எடுத்துக்கும். :D

SKM said...

For me too,I couldn't see your new post even after giving refresh.:(
Will come and try later.

SKM said...

Sorry. I tried to read your new post from various links and also from the email you have sent, but just coming to this page only. I just don't know why?

Priya said...

Sir, எப்படி இருக்கேள், எப்ப Atlanta பயணம்? உங்க வீட்டுக்கு வந்தா தான் ராசினு இல்ல, வரேன்னு சொன்னாலே நல்லது நடக்குது. அவ்ளோ ராசி :)

Geetha Sambasivam said...

என்ன முயன்றும் புதிய பதிவைப் பார்க்க முடியலை. மன்னிக்கவும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

பிரியா நீ வந்துட்டுபோனாலும்இல்லை
வராமப்போனாலும்
இல்லை வந்துட்டு வராமப்போனாலும்
CONGARTES