Friday, December 14, 2007

விட்டல..... விட்டல.....

கடந்த ஒருமாதமாக நல்ல கச்சேரிகளுக்கு தங்கமணியுடன் போகும் வாய்ப்பு கிட்டியது. அதிலும் முக்கியமாக திரு. ஓ ஸ் அருண் அவர்களுடைய பஜன் எங்கு நடந்தாலும் சென்றோம். ஆண்டவனைத் தொழுவதில் நாமசங்கீர்த்தனத்துக்கு ஈடு இணைகிடையாது. ராமனையே தெய்வமாக வழிப்பட்ட திரு. தியாகராஜஸ்வாமிகளே கடைசியில் மங்களம் பாடும்போது ' "நீ நாம ரூபமுலகு நித்ய ஜெய மங்களம்" 'என்றுதான் முடித்தார் . அதிலும் திரு அருண் அவர்கள் அபங்கங்கள் பாடும்போது அனைவரையும் பக்தியின் எல்லைக்கே கூட்டிச்சென்று விடுகிறார்.இந்த சீசனில் எல்லோரும் ஒரு அபங்கமாவது பாடுகிறார்கள்.


யார் வேண்டுமானாலும் எந்த ஊருக்கும் வேண்டுமானாலும் போங்கள். ஆனால் தப்பித் தவறிகூட பணடர்பூர் போய்விடாதீர்கள்.அப்படியே போனாலும் சந்திராபாகா நதிக்கரையில் இருக்கின்ற விட்டோபா பாண்டுரங்கணை மாத்திரம் பார்த்துவிடாதீர்கள். இடுப்பில் இரண்டு கையையும் வைத்துக்கொண்டு நிற்கிறானே யார் தெரியுமா அவன். "படா சித்தச் சோர மனமோஹன்' அவன் தொழிலே மனங்களை கொள்ளையடிப்பதுதான். அவனை நீங்கள் பார்த்துவிட்டால் அவ்வளவுதான்
"மேரா சித்தசோர விரஜமோஹன்" உங்களுடைய மனத்தையும் அபஹரித்துவிடுவான். ஓ.ஸ் அருணின் இந்த அபங்கம் "விட்டல.... விட்டல...'மிக அருமையானது.பாண்டுரங்கனின் கோவிலில் 24 மணிநேரமும் விட்டல விட்டல என்று நாமசங்கீர்த்தனம்தான்.கேட்டுத்தான்,பார்த்துத்தான் ரசியுங்களேன்.

20 comments:

Srikanth said...

தங்கள் விட்டல அனுபவத்தை எனக்கும் தந்ததற்கு நன்றி. வீடியோவில் காமிரா ரொம்ப அலைகிறது. எனக்கு பாட்டுடன் சேர்ந்த ஒ.எஸ்.அருணின் சேட்டைகள் பார்க்க பிடிக்கும் :))

மதுரையம்பதி said...

ஒற்றைச் செங்கலின் மேல் நின்று கொண்டு விட்டலா என்றழைத்தால் என்ன என்று கேட்காது, செயலுக்கு காத்திருக்கும் அவன் நாமம் கேட்க இனிக்கிறது. 6 மாதங்கள் முன் 2 அபங் சிடி வாங்கினேன். எனக்கும் பிடித்திருந்தது.

கீதா சாம்பசிவம் said...

ஹரிதாஸ் பாடும்போது நேரில் பலமுறையும், இப்போ அடிக்கடி பொதிகையிலும் கேட்டுக் கொண்டிருந்தாலும், எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத "அபங்க்" பாடல்கள் பங்கம் இல்லாமல் முழுதும் கேட்க முடிந்தது. பின்னணியில் ஞானானந்தகிரி ஸ்வாமிகள் படமும், ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் படமும் பார்த்தப்போ அவங்க சம்மந்தமான ஏதோ விழாவோன்னு நினைக்கிறேன். நினைவுகள் திரும்பிப் பார்க்க வைத்தது. நன்றி.

ஜீவா (Jeeva Venkataraman) said...

ஆம், தி.ரா.ச சார், மராத்தி அபங்கள் விட்டலின் புகழ் பாடும் அழகுப் பதுமைகள்.

துக்காராம், நாமதேவர் போன்றவர்களின் சங்கீர்த்தனங்கள் ஆலிலைக் கண்ணனை அப்படியே அருகே கொண்டு வந்து நிறுத்தும்!

கீதா சாம்பசிவம் said...

என்னோட பின்னூட்டம் என்ன ஆச்சு? போடவே இல்லையே? :(((((((

ambi said...

பகிர்ந்தமைக்கு நன்றி ஹை!

டிசம்பர் 20 2007 இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஜெயா டிவியில் அருணின் பாடல் மற்றும் கேள்வி கணைகளை தொடுத்த திராசாவின் திருவுவம் எல்லாம் வரும்! மக்களே காண தவறாதீர்.
(குடுத்த காசுக்கு கூவிட்டேன் சார்!)
:))

கீதா சாம்பசிவம் said...

அட, இதைச் சொல்லவே இல்லையே? சிஷ்யனுக்கு மட்டும் தனியாக் காசு கொடுத்துக் கூவச் சொல்லி இருக்கீங்க? :P

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம் ஒரு 30 சிடி பரிசா கொடுத்தாங்க எனக்கு. அதை விடுங்க நேத்திக்கி தங்கமணிக்கு பரிசு கிடைத்தது. விஜய் சிவாவின் கச்சேரியில். ஒரு கோல்ட் காயின்
F M ரேடியோ, ஒரு நல்ல திருக்குறள் புக் ஒரு டூர் பேக். புகை வரலை கவலை வேண்டாம்

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி சங்கை ஊதிட்டு போயச்சு. இனிமே எம்பாடு அவ்வளவுதான்.எனக்கு இந்த விளம்பரமே பிடிக்காது

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க ஸ்ரீகாந்த். கமிரா எடுத்தவர் செல்போனில் எடுத்திருப்பார் போலிருக்கு அதான் ஆட்டம்ஜாஸ்தி.அருண் பஜன் அற்புதம்

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க மௌளி சார். நானும் ஆபீச்வேலையாக பூனா சென்றிருந்தேன்.அங்கே இருந்து நிறைய அபங்க CD கேஸட் எல்லாம் வாங்கி வந்தேன்(தங்கமணி கிட்டே திட்டு). அருமையா இருக்கு கேட்க கேட்க.அதுவும் கணபதி துக்கராம் ஸ்வாமிகளின் தமிழ் அர்த்தத்துடன்

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம் நீங்கள் சொல்லுவது கரெக்ட்தான். இது நடந்தது குருஜியின் ஆரதனையில் தான். குருஜிஹரிதாஸ் ஸ்வமிகளுடன் கூடவே தென்னாகூரில் தங்கி இருந்து அவருடைய அபங்கங்களை கேட்டு இருக்கிறேன்.நாரத கான சபாவில் அவருடைய பஜனுக்கு காலை பத்துமணிக்கே Q வில் நிற்பார்கள், கார்கள் ரோடு முழுவாதும் நிற்கும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஜீவா மராத்தி அபங்கங்கள் கண்ணன்னுடன் நடந்த சம்பாஷ்னைகள்
உண்மையான் பக்தி அங்குதான் இருக்கிறது

கீதா சாம்பசிவம் said...

வாழ்த்துக்கள் சார், உங்க தங்கமணிக்கு. என் சார்பில் சொல்லிடுங்க. உங்களுக்கும் சிடி கிடைச்சிருக்கே? பத்தாது? அருணா சாயிராமின் "அபங்க்" மட்டுமே தனியாக் கேட்டுப் பாருங்க, ஒரு முறை.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் தாங்ஸ். இன்னிக்கி ஜயா டி வி 6 மணிக்கு பாருங்க.அம்பி பேச்சுக்கு மதிப்பு கொடுங்க?தங்கமணி கிட்டே சொல்லியாச்சு.நன்றி சொல்லச் சொன்னாங்க.

குமரன் (Kumaran) said...

அடியேன் சென்னையில் இருந்த இரண்டு வருடங்களில் பல முறை பஜனா சம்ப்ரதாய பஜனைகளிலும் ராதா கல்யாணம், தீப ப்ரதக்ஷிணம் போன்றவற்றிலும் கலந்து கொண்டிருக்கிறேன் தி.ரா.ச. குருஜி ஹரிதாஸ்கிரி சுவாமிகளைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் நாரதகானசபாவிற்குச் செல்லும் போது அவருடைய சீடரின் தலைமையில் பஜனை நடக்கத் தொடங்கிவிட்டது. அவற்றில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு நண்பரின் வீட்டில் அவரைப் பார்த்த போது நடன கோபால நாயகி சுவாமிகளின் கீர்த்தனைகள் புத்தகத்தைக் கேட்டார். அடுத்த முறை மதுரைக்குச் சென்ற போது வாங்கி வந்து கொடுத்தேன். நாரத கான சபாவில் சில நேரம் நாயகி சுவாமிகளின் சௌராஷ்ட்ர கீர்த்தனைகளையும் அவர் பாடி கேட்டிருக்கிறேன்.

அபங்கங்கள் எனக்குப் புரியாவிட்டாலும் அவற்றைப் பாடும் போது மனம் உருகுவதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

கீதா சாம்பசிவம் said...

பார்த்தாச்சு, சார், கடைசி வரை ஒரே சஸ்பென்ஸ், என்னோட மறுபாதி, கிட்டத் தட்ட "எப்போ வருவாரோ?" பாடாத குறைதான், கடைசியிலே, நிஜமாவே கடைசியிலே உங்களைப் பார்த்ததும், ஒரு குதி குதிச்சு, எங்க பையன் கிட்டே உங்களைக் காட்டினதும் தான், சாயங்கால ஜபமே செய்ய முடிஞ்சது அவருக்கு, அதுவரை உங்க நாம ஜபம் தான்! :)))))))))))))

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் இதுக்கே இப்படின்னா விஜய் சிவா கச்சேரியும் விடாம பாருங்க. நம்ம தங்கமணிக்கு அன்னிக்கு பரிசு கிடைச்சது.அவுங்களும் வந்து பரிசு வாங்கி பேசிட்ட்டு போவாங்க.
சாம்பு சார் நல்லவ்ர்.அதான் அத்தனை பாசம்..திட்டமாட்டார்.)P

தி. ரா. ச.(T.R.C.) said...

@குமரன் வாங்க வாங்க.. இப்பொழுது பாடுபவர்கள் அபங்கங்களைஅர்த்தம் சொல்லி பாடுகிறார்கள்.நன்றாக புரிகிறது.கதையில் மும்முரம் போல இருக்கு. சத்தமில்லாமல் வந்து படித்துக்கொண்டு இருக்கிறேன்.

கீதா சாம்பசிவம் said...

சத்தமில்லாமல் வந்து படித்துக்கொண்டு இருக்கிறேன்.

By தி. ரா. ச.(T.R.C.), at Wednesday
சத்தம் போட்டுட்டே வந்து படிக்கலாமே, குமரன் என்ன சொல்லப் போறார்? :P