நடராஜனது ஐந்து சபைகள்தான் மேலேயுள்ளது. மதுரையில் பாருங்கள் வலது பாதம் தூக்கி ஆடுகிறார். அதான் ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் மதுரைக்காரர்களுக்கு மட்டும் தனி வழி.
திரு. மௌளி அவர்கள் போனபதிவுக்கு போட்ட பின்னுட்டத்தில் "இடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி பணிவோமே"என்ற பாட்டை தருமாறு கேட்டிருந்தார். இதோ படமும் கருத்தும் முன்னே பாடல் பின்னே.
சென்னைக்கு அருகில் உள்ளது திருவாலங்காடு திருத்தலம். கரைக்கால் அம்மையாருக்கு சிவபதவி அளித்த இடம். நடராஜர் எட்டு கரங்களுடன் நடனம் ஆடும் தலம் ( ரவி எட்டுகைகள் இருக்கிறதா இல்லையா எண்ணிப்பார்த்து சொல்லுங்கள்)அபய கரம்,அருள் கரம்,அதிரமுழங்கும் உடுக்கை ஒரு கரம், திரிசூலம் ஒரு கரம், மான் ஒரு கரம் அக்னி ஒரு கரம், நாகபாசம் ஒரு கரம் மற்றும் நாட்டிய முத்திரையுடன் ஒர் கரம் ஆக எட்டு கரம்
உலகத்தின் சுழற்சிதான் நடராஜரின் நடனம்.அஜபா நடனம் என்றும் கூறுவார்கள். ஐயனின் வலக்கரத்திலுள்ள உடுக்கை படைத்தல் தொழிலையும், அபய கரம் காத்தல் தொழிலையும், இடக்கரத்தில் உள்ள அக்னி அழித்தல் தொழிலையும், முயலகனின் மேல் ஊன்றிய பாதம் திரேதம் எனப்படும் மறைத்தல் தொழிலையும் , தூக்கிய குஞ்சிதபாதம் முக்திக்கு காரணமாகி அருளல் தொழிலை குறிக்கின்றது. நம் பாபநாசம் சிவன் அவர்கள்
அவனது நடனத்தை இப்படி வர்ணிக்கிறார்:-
செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி
ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையை திங்களை கருத்த சடையில் தூக்கி
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத........(காலைத்தூக்கி)
நந்தி மத்தளம் கூட்ட நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்று என் தாளம் சுருதியோடு தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேல் கரம் தூக்க
முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க"
மேலும் கூறுகிறார்
கஞ்ஜ மலரிதழின் விழியாள்-ஓயாக்காதலுடன் சிவகாமி மணாளநின்
சரணம்கொஞ்சும் சதங்கை கலீர் கலீரென
குழவி இளம் பிறை பளீர் பளீரென
நஞ்சம் தவழும் நீல கண்டமும் மின்ன
ஒருநங்கை கங்கை சடையில் குலுங்க-நடமாடும் ஆடல் அரசே.
இந்தப்பின்னனியில் மேலே உள்ள ஆடலரசனின் படத்தை இந்த பாடலுடன்/<"இங்கே">"> கேட்டுப் பாருங்கள். மனதில்அவனது ஆனந்த நடனம் தெரியும்.
திருவாலங்காட்டில்தான் தன்காதிலிருந்த குண்டலம் கீழே விழுந்ததாக
பாவனையுடன் சிவன்அதை இடது காலால் எடுத்து அணிய அதுபோன்று செய்ய முடியாமல் சிவகாமி தோல்வியோடு தலை குனிந்தாளாம். ஆனால் நம் சிவனின் பார்வையோ வேறு மாதிரி இருக்கிறது.காளியுடன் ஆடும்போது தோற்றுவிடும் நிலையை அடையும் தருணத்தில் எங்கே நாம் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தினால் காதிலிருக்கும் குண்டலம் கீழே விழுவதுபோல விழவைத்து (அழுகுணி ஆட்டம் ஆடி) இடது காலால் எடுத்து பின்பு உயரத்தூக்கி அதை காதில் அணிந்ததாக இப்படி கூறுகிறார்
"சுபஞ்சேர் காளியுடனாடிப் படு தோல்வி யஞ்சி திருச்செவியிலணிந்த-மணித்தோடு விழுந்ததாக மாயங்காட்டியும் தொழும்பதம் உயரத்தூக்கியும்-விரிப்ரபஞ்சம் முழுதும் ஆட்டும் நின்திருப் பதம்தஞ்சமென உனை அடைந்தேன் பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும்துரையே சபை நடுவில் தத்திமி என்று ஆடும்
சரி இனி திரு. மௌளி கேட்ட பாடலுக்கு வருவோம்.திரு. சிவன் அவர்களின் அருமையான பாடல்களுள் ஒன்று.கமாஸ் ராகத்தில் அமைந்த இடது பதம் தூக்கி என்ற பாடல்.
இறைவன் எப்படி ஆடுகின்றான் என்பதை எவ்வளவு விவரமாக வர்ணிக்கின்றார். புன்னகையோடு இடது காலை தூக்கி தில்லையிலே ஆடுகிறானாம். அவன் மட்டும் ஆடவில்லை அவனுடன் இந்தப் பூமியும் ஆடியது(சுழற்சி), தலைமேல் இருந்த கார்க்கோடகன் என்ற கொடிய பாம்பும் ஆட,பக்தர்கள்ஜெயஜெயவெனகோஷிக்க,புலிப்பாதமுனிவர்கண்குளிர்ந்து
கொண்டாட ஆடினார். ஆடியபோது ஆண்டவனின் கால் சிலம்புகள் கலீர் கலீர்என்று முழக்கமிட,தலையில் இருக்கும் பிறைச் சந்திரன் தலை இந்த பக்கமும் அந்தபக்கமும் ஆடும் போது பளீர் பளீர் என்று மின்ன, மைத்துனாரன திருமால் மத்தளம் வாசிக்க, சிவகாமி மணாளன் திருசிற்றம்பலத்தில் மகிழ்ச்சியோடு ஆடுகின்றான்
ராகம் கமாஸ தாளம் ஆதி 1 களை
பல்லவி
இடது பதம் தூக்கி ஆடும்
நடராஜனடி பணிவையே நெஞ்சே (இடது)
அனுபல்லவி
பட அரவாட புவியத ளாட
பக்தர்கள் ஜய ஜய எனவே
புலி பதஞ்ஜலி இரு கண் குளிர தில்லையிலே (இடது)
சரணம்
திருவடிச் சிலம்புகள் கலீர் கலீரென
திருமுடி இளமதியொளி பளீர் பளீரென
திமிதக தரிகிடதோம் என திருமால் மத்தளம் அதிர
சிவகாமி மணாளன் திருச்சிற்றம் பலந்தனில் புன்னகையோ (இடது
திரு வி ஆர் கிருஷ்ணன் அவர்களின் பாடலைகேட்க /<"இங்கே"> செல்லவும்
திருமதி. சுதா ரகுநாதன் படிய பாடலைக் கேட்க/<"இங்கே">"> செல்லவும்.
13 comments:
//திருவடிச் சிலம்புகள் கலீர் கலீரென//
பரதத்திற்கு ஏற்ற அருமையான கீதம்!
க மா ஸ பிரயோகத்தினால் இந்த ராகத்திற்கு கமாஸ் என பெயர் வந்ததாக திரு.T.N.சேஷகோபாலன் சொல்லக் கேட்டிருக்கிறேன், சரியா?
அருமையான பாடல்கள் மற்றும் விளக்கங்கள் உங்களுக்கே உரிய தனி முத்ரையுடன். ( நான் உங்க புதிய லோகோவை(logo)சொல்ல வில்லை) :))
//அதான் ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் மதுரைக்காரர்களுக்கு மட்டும் தனி வழி.
//
ஹிஹி, மதுரைகாரங்க, சென்னைல இருந்து இருபது கிலோமீட்டர்(குறைச்சு சொல்லிட்டேனோ?)தள்ளி இருக்கும் அம்பத்தூர்ல இருந்தாலும் அப்படி தான் இருப்பாங்க!னு சொல்ல வரீங்க இல்லையா? :p
ரவி அண்ணாவுக்கு களி கிண்டவே நேரம் சரியா இருக்கு. இதுல கைய எங்க எண்ண போறார்? :))
சொல்ல மறந்துட்டேன், பதஞ்சலி ஸ்லோகம் கேட்டு இருக்கீங்களா? நடராஜர் நர்த்தனம் மாதிரியே சொற்கட்டு இருக்கும்.
"சிதஞ்சித முதஞ்சித பதம்
ஜலம் ஜலித மஞ்சு கடகம்!
அகம்ஜன மனம்ஜன...." என்று நீண்டு கொண்டே போகும்.
உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமே..?
வாங்க ஜீவா.நடன்ம் எப்படி என்று தெரியவேண்டாமா அதான் ஜதி போட்டுவிட்டேன்.
நீங்கள் சொல்வது சரிதான் க ம ஸ பிரோயோகம் அதிகம் உண்டு. கொஞ்சம் பிரண்டு ம க ஸ என்று மாற்றினால் நாட்டை குறிஞ்சி வந்து விடும்
அம்பிபதஞ்சலி லோகம் படிச்சி இருக்கேன். பற்கட்டு நல்லா இருந்தான் அந்த சொற்கட்டு நல்லா வரும்.அதென்ன உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமேன்னு நக்கல். நானென்ன உடனே பதஞ்சலி சொல்லும்போது கூட இருந்து எழுதினேன்னு யார் மாதிரியாவது சொல்வேன்னு நினைச்சியா?
நினச்சேன் மதுரையிலிருந்து பதி வரும்ன்னு.நேயர் விருப்பம் கேட்ட அவர் எங்கே நாயர் கடையில் டீ சாப்பிடபோயிருக்காரா. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான் ஊர்லே இல்லேன்னு தெரியும்
ரவி அண்னா ஆழ்வார் பேட்டை வரை போயிருக்கார், எல்லா ஆழ்வர்களையும் பார்த்துட்டு வந்து எண்ணி கணக்கை சரி பண்ணி விடுவார்.
ஹலோ சார்,
கொஞ்சநாள் ஊருக்கு பொயிருந்தேன். அதான் சரியா வர முசியல.
//ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் மதுரைக்காரர்களுக்கு மட்டும் தனி வழி.//
ஒன்னு சொன்னாலும் சும்மா நச்சுன்னு நறுக்குன்னு சொன்னீங்க.
வாம்மா மின்னல் நீயும் மதுரையா?.
ரொம்ப டாங்ஸ்ம்மா. நீயாவது எம் பக்கம் இருக்கியே. இன்னும் எவ்வளவு கல்லு வரப்போகுதோ?
பொறுமையா உக்காந்து அருமையா எழுதியிருக்கீங்க திராச. நானும் பொறுமையா (அவசரம் அவசரமா படிக்கலைன்னு சொல்றேன்) உக்காந்து படிச்சு ரசிச்சேன்.
அஜபா நடனம்
மன்னிக்கணும், அஜபா நடனம் என்பது தனி! இது திருவாரூரில் மட்டுமே ஆடியது, தாளத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டு ஆடுவதைக் குறிக்கும், மற்றபடி திருவாலங்காட்டில் ஆடியது ஊர்த்துவ தாண்டவம், சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம், மதுரையில் பாண்டியனுக்காகக் கால் மாறி ஆடியது.
"அதான் ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் மதுரைக்காரர்களுக்கு மட்டும் தனி வழி."
ரொம்பச் சரி, அதான் தனிவழின்னு நான் அடிக்கடி சொல்லிட்டுத் தானே இருக்கேன், இதிலே என்ன வெளிக்குத்து வேறே?:P எல்லாம் இந்த அம்பியைத் தூண்டிவிடத்தானே?
ஒண்ணு சொன்னாலும் நல்லா "நச்"னு சொல்லுவாங்க மதுரைக்காரங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
திராச
ஆழ்வார்பேட்டையில் இருந்து ரவி பேசறேன்! :-)
திருவாலங்காட்டு சபேசனைத் தங்கள் தயவால் எண்ணிப் பார்த்தேன்!
எண்ணிக்கையால் வணங்கவில்லை!
எண்ணிக் கையால் வணங்கினேன்!
எட்டாத எட்டும் எட்டியது!
அழகான திருவாலங்காட்டு நடனத்தைப் படத்துடன் தந்தமைக்கு நன்றி!
சீர்சிறக்கு மேனி பசேல் பசேல் என
நூபுரத்தின் ஓசை கலீர் கலீர் என
சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவேல் என
என்ற அருணகிரியின் புகழை நினைவுபடுத்தியது, சிவன் அவர்களின் பாட்டு! கமாஸ் கேட்க கேட்க இனிமை!
This is in response to Ambi Sir.
பதஞ்சலி முனிவர் இயற்றிய சம்பு நடனம்
இதை நடேச அஷ்டகம் என்றும் சொல்லுவர்.
இதைப் படிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
ஸ்வாமினி ஸத்யவ்ரதானந்தா அவர்கள் மூலமாக
எனக்கு இந்த ஸ்லோகம் படிக்க ஆர்வம் வந்தது.
இந்த நடனத்தை
Dance of Creation and sustenance
என்று சொல்வார்கள்.
The dance of Ardhanariswara is significantly the dance of creation because the hermorphodite
form symbolises the coming together the parents of the Universe for creation.
அஜபா நடனத்தினைப் பற்றி திருமதி கீதா சாம்பசிவம்
அவர்கள் கூறியது சரியே.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
இந்த ஸ்லோகத்தை கேட்க,
http://pureaanmeekam.blogspot.com
அல்லது
www.youtube.com
ல் கேட்கவும்.
Post a Comment