Sunday, December 23, 2007

தில்லை நடராஜனின் தரிசனமே....


இன்று ஆருத்ரா தரிசனம். அம்பலகூத்தன் நடராஜனுக்கு மிகவும் உகந்த நாள். மார்கழிப் பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில் நடைபெறும் திருவாதிரை விழாவை `ஆருத்ரா தரிசனம் என்பர். `ஆருத்ரா' என்ற சொல் `ஆதிரை' என்று மாறியதுவீட்டில் திருவாதிரைக் களியும் கதம்பகூட்டும் தயார் செய்து சாப்பிடுவார்கள்.

ஒருமுறை சேந்தனார் அளித்த களியை சிவன் ஏற்றுகொண்டார். அன்றிலிருந்து திருவாதிரைக்கு களியும் ஏழுவகைக்கூட்டும் அவித்த வள்ளிக்கிழங்கும் நைவேத்யமாகக் கொள்ளப்பட்டது. களி' என்றால் `ஆனந்தம்' என்பது பொருள். இறைவன் சச்சிதானந்த வடிவினன். அவனுக்கு ஆனந்த நடனப் பிரகாசம், ஆனந்த நடராஜன் என்ற ஒரு பெயரும் உண்டு. களி நடனம் புரியும் அவனுக்குக் களியைப் படைத்து நாமும் களிப்படைவதும் பொருத்தமே.

நாட்டில் நடராஜருக்கு முக்கியமாக ஐந்து நடனசபைகள் உண்டு.திருவாலங்காடு(ரத்தின சபை),சிதம்பரம்(கனக சபை),திருநெல்வேலி(தாமிர சபை),மதுரை(வெள்ளி சபை),குற்றாலம்(சித்ர சபை) ஆகும்.சிதம்பரத்துக்கு கனகசபை என்று பெயர்வரக் காரணம் அங்கே நடராஜர் எழுந்தருளியிருக்கும் மண்டபம் பராந்தக சோழனால் பொன்னால் வேயப்பட்டது.நடராஜர் எட்டுகைகளுடன் இடது பதம் தூக்கி ஆடுவார் மதுரையைத்தவிர மற்ற இடங்களில். மதுரையிலோ வலது பாதம் தூக்கி ஆடுகின்றார் பத்து கைகளுடன்.

கோபலகிருஷ்ண பாரதியார் தனது நந்தானார் சரித்திரத்தில் பல அருமையான பாடல்களில் தில்லை நடராஜனின் குணங்களையும் நந்தனாரது எளிமையான திட பக்தியையும் போற்றிப் பாடியுள்ளார். இவர் தியாராஜஸ்வாமிகளின் சமகாலத்தவர்.நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்.நடராஜனை ஆருத்ராதரிசனத்தன்று பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக காத்திருப்பவர்.அவருடைய எஜமான் உத்தரவு தரவில்லை.அப்படிப்பட்ட வரை நடராஜன் தன் கருணையால் இந்த ஆருத்ரா அன்று ஆட்கொண்டு தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்கிறான். தில்லைவாழ் அந்தணர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை வழங்குகிறான்.உண்மையான பக்தி ஒன்றுக்கு மட்டும்தான் அவன் வசப்படுவான் என்ற உண்மையையும் நமக்கு புலப்படுத்துகிறான்

நந்தன் கனவில் கனகசபேசன்வந்து நான் உன்னை பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன் என்று உறுதி மொழிகொடுத்தும் நந்தனுக்கு சந்தேகம் தீரவில்லை.ஏனென்றால் இத்தனை நாள் தன்னை கோவிலுக்குள் நுழையவிடாத சமூகமும் எஜாமனரும் அனுமதிபார்களா என்ற பயம். அதைப் பாட்டாக வெளிப்படுத்துகிறான்.ராகம்:சாமா தாளம்: ஆதி

பல்லவி

வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே எப்போது.....(வருவாரோ)

அனுபல்லவி

திருவருந் தென்புலியூர் திருச்சிற்றம்பலவாணர்குருநாதனாக வந்து குறைதீர்க்கக் கனவு கண்டேன்

இருவினை பிணிகளைக் கருவறுத்திடுகிறேன்பயப்படாதே என்று சொல்ல.....(வாருவாரோ)

சரணம்

மறையாலும் வழுத்தறியா மகிமை பெறு ந்டராஜன்நறியூறுஞ்சேவடியை நம்பினவனல்லவா

அனுதினஞ்சிவ சிதம்பரமென்ற அடிமையென்றருள் புரிந்திடவிங்கே......(வாருவாரோ)தனக்கு வாக்கு கொடுத்தபடி தில்லை பொன்னம்பலவாணன் வருவனோ மாட்டானோ. அப்படியே வந்தாலும் தன்னோடு ஐக்கியமாக்கிக்கொள்கிறேன் என்று வாக்களித்தபடி வரம் தந்து தன்னைச் சேர்த்துக்கொள்வானோ அல்லது தான் தாழ்ந்த குலத்தவன் என்று எண்ணி தவிர்த்துவிடுவானோ என்றெல்லாம் நினைத்து அவரது மனம் சஞ்சலப்படுகிறது. குருநாதனாக வந்து எனது இந்தப்பிறவி மற்றும் முற்பிறவிகளில் உண்டான பிணிகளான பாவங்களைத் போக்கி இனி எனக்கு பிறவியே இல்லாத ஸாஸ்வதநிலையை அளிப்பேன் பயப்படாதே என்று கனவிலுறுதி மொழி அளித்த பொன்னம்பலவாணன் வருவானோ மாட்டானோ...?ஆனாலும் என்மனம் அப்படி வராமல் இருக்கமாட்டான் என்று கூறுகிறது. ஏன் தெரியுமா கனவில் சொன்னவன் யாரோ அல்ல. நான்கு வேதங்களாலும் அறுதியிட்டு உறுதியாக விளக்கமுடியாதவுனுமாகிய அந்த கனகசபாபதியின் பாதங்களை நம்பினவன் நான்.அதுவும் எப்பேர்ப்பட்ட பாதம் அது.தில்லை மூவாயிரம் முனிவர்கள் தினமும் பூசித்திடும் பாதம்,சிற்சபையில் திந்திமிதிமிதோம் என்று ஆடியபாதம்,பார்க்கப் பார்க்க திகட்டாத பாதம், எல்லையில்லாத இன்பம் அருள் செய்திடும் பாதம்.நான் தினந்தோறும் சிவ சிதம்பரம் என்றுஎப்போதும் கூறி வணங்கின அவன் அடிமை என்று என்மேல் கருணை கொண்டு அருள் புரிந்திட வராமல் இருக்கமாட்டான் என்று தன்னை தனே சமாதான்ப்படுத்திக்கொண்டு இரக்கம் குணத்தை வெளிப்படுத்தும் ராகமான சாமாவில்இந்தகீர்த்தனையை போட்டு இருப்பது கேட்பவர் மனத்தை உருகச் செய்யும்.
கீழே சென்று பாடலை கேட்டு பார்த்து மகிழுங்கள்
.


திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம்

14 comments:

ambi said...

அருமையான பாடல்.
"சபாபதிக்கு வேறு தெய்வம் "
- மஹாராஜபுரம் சந்தானம் மாமா பாடிய பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பத்து நாளைக்கு முன்னாடியே எழுதி வெச்சு போஸ்ட் போட்ட மாதிரி இருக்கே. :p

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி இது எழுதியது நேற்று இரவு 10மணிக்குமேல் 12மணிக்குள்தான்..
வருகைக்கு நன்றி

மதுரையம்பதி said...

என்ன திராச சார், நலமா?.....

நேயர் விருப்பத்தில் எனக்கு அடுத்ததாக, "இடது பதம் தூக்கி ஆடும்.." பாடலை பதிவிடுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

ஆகா, எனக்குப் பிடித்த பாடல் - முன்பொருமுறை இசை இன்பத்தில் பதிவிட்டிருந்த்தேன் - அதில் பாம்பே ஜெயஸ்ரீ இந்தப் பாடலைப் பாடுவதைக் கேட்கலாம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பத்து நாளைக்கு முன்னாடியே எழுதி வெச்சு போஸ்ட் போட்ட மாதிரி இருக்கே.//

அம்பீ...எப்படிங்க இதை எல்லாம் கண்டு பிடிக்கறீங்க? மூக்குல வாசம் புடிப்பீங்களா? :-)
அட, களி வாசத்தைச் சொன்னேன்-பா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சாமா ராகப் பாடல் அருமை திராச!
மானச சஞ்சரரேவும் அதே சாமா ராகம் தானே?

//இருவினை பிணிகளைக் கருவறுத் திடுகிறேன் பயப்படாதே என்று சொல்ல.....//

மிகவும் பயம் தணிக்க வல்ல வரிகள்!

//நடராஜர் எட்டுகைகளுடன் இடது பதம் தூக்கி ஆடுவார் //

எட்டா? நான்கா?

தி. ரா. ச.(T.R.C.) said...

@கேஆர்ஸ் ஆமாம் சதாசிவ பிரும்மேந்திரரின் "மானச சஞ்சரரே பிரும்மனி மானச சஞ்சரரே" பாடலும் சாமா ராகம்தான்.தியாகராஜரின் "சாந்தமுலேகா சௌக்கியமுலேது" வும் சாமாதான்.தீக்ஷதரின் "அன்னபூர்னே விசாலாக்ஷி அகில லோக சாக்ஷி"யும் சாமாதான்.நன்றி நினைவுபடுத்திவிட்டதற்கு, அடுத்தப்பதிவு இசையின்பத்தில் சாமாராகம்தான். எட்டுகைகளுடன் உள்ள நடராஜரும் உண்டு.ஆனாலும் அம்பியின்யின் மோப்ப சக்தியை குறைவாக மதிப்பிட வேண்டாம்.கிண்டி சமயலை பாங்களூரிலிருந்தே கண்டுபிடிக்கும் வல்லமை உண்டு.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க மௌளி சார்.நீங்கள் வந்ததே எனக்கு பெருமை. அதுவும் நீங்க ஒருபாட்டைவேறு கேட்டுவிட்டீர்கள் நிச்சியம் போடுவேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஜீவா வாங்க. நீங்கள் சொல்வது சரி. நானும் அந்தப் பாட்டை நேரில்லும் தகடுக்களிலும் கேட்டு இருக்கிறேன்.எனக்கு ஜெயா டிவி நிகழ்ச்சியில் அளித்த 20 பரிசு சீடிக்களில் இந்தபாட்டும் இருக்கிறது
ஏனக்கு கோபாலகிருஷ்ணபாரதியின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்

குமரன் (Kumaran) said...

வெள்ளியம்பலவாணனை, பாண்டியன் வேண்டுகோளுக்கிணங்க கால் மாற்றி ஆடிய பாதனைக் கண்டு மகிழ்ந்தேன் திராச.

பாடலை படித்தும் கேட்டும் மகிழ்ந்தேன். நந்தனார் சரித்திரத்தில் இன்னும் எத்தனை எத்தனை அழகான பாட்டுகள் இருக்கின்றனவோ? ஒவ்வொன்றாக நீங்கள் கொடுக்க நான் கேட்டு மகிழ்கிறேன்.

மதுரையம்பதி said...

//வாங்க மௌளி சார்.நீங்கள் வந்ததே எனக்கு பெருமை. //

பெருமை அப்படி-இப்படின்னு ஏங்க என்னை இப்படி ஓட்டுறீங்க....

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹா என்னைப்போலவே உங்களுக்கும் நந்தன் சரிதம் பிடிக்குமா? யாராவது கேட்கமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டு இருந்தேன்..அதைக்கேட்டால்""அரிய பிரமன் எழுத்தைத் தள்ளுமாம். தனை அடைந்தவர்களை ஆனந்த முழுக்காட்டிக் கொள்ளுமாம்.போய்தரிசித்தவர் புண்ணியசாலியாம் அது தருமா ராஜன் புரம்புகாமல் தடுத்த வேலியாம்". சரி தனி பதிவு நந்தனார் தொடங்கலாமா?

கீதா சாம்பசிவம் said...

"கிண்டி சமயலை பாங்களூரிலிருந்தே கண்டுபிடிக்கும் வல்லமை உண்டு."

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏ

கீதா சாம்பசிவம் said...

பாட்டு இன்னும் கேட்கலை சார், கேட்டுட்டுச் சொல்றேன்.