
புத்தாண்டு சபதம் போடவேண்டுமாம் அம்பத்தூரிலிருந்து ஆர்டர். தலைவி பேச்சைத் தட்டவாமுடியும்.சரி முதலில் நான் என்ன சபதம் எடுக்கவேண்டும் என்று தங்கமனியின் ஆசையைச் சொல்லிவிடலாம்.
இதில் எல்லாமேஎன்நலம் கருதித்தான்
தினமும் காலை 5 30 மணிக்கு எழுந்து எதிரே இருக்கும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வாக்கிங் போகவேண்டும்..
லேப் அடியில் எப்பொழுதும் அதுவும் ராத்திரி 12 மணிவரை உட்க்காரக்கூடாது.
ஆபீஸ்க்கு ஸ்கூட்டரில் செல்லக்கூடாது..
ஆபீஸிலிருந்து 7 மணிக்குள் வந்து விடவேண்டும்.
டூர் செல்லுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
மாத்திரையை தினமும் மறக்காமல் சாப்பிடவேண்டும்
இதில் ஒன்றைக்கூட நான் சரிவரசெய்வதில்லை. இவை எல்லாம் என்நன்மைக்காக என்றாலும் இனிமேலும் செய்வேனா என்பதும் சந்தேகமே.
நான் எடுக்க நினைக்கும்/செய்யாமல் இருக்கப் போகும் சபதங்கள்.
தினமும் டைரி எழுதவேண்டும்
உள் குத்து இல்லாமல் பின்னுட்டம் இடவேண்டும்.
மகன் மருமகள் அன்பு அழைப்பை ஏற்று சிங்கை சென்று இருக்கவேண்டும்.
தணிக்கை சம்பந்தமாக நல்ல ஆங்கில பதிவுகள் இடவேண்டும்.
பண்டரிபுரமும்,ஷிர்டியும் போகவேண்டும்
பாங்களூர் போகும்போது நிச்சியம் அம்பி வீட்டுக்கு போக வேண்டும்
போதுமா சபதங்கள் .இதையெல்லாம் செய்யவைக்கும்படி இன்று பிறந்தநாள் கொண்ட்டாடும்
ஆஞ்சநேயர்தான் நடத்திக் கொடுக்க வேண்டும்..

புத்திர்பலம் யசோதைர்யம்
நிர்பையத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரணாத்பவேத்
ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான்
கோமகனாக வாழ்ந்திடும் சீலன் கோயில் நாம் அடைவோம்
கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்
வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை

19 comments:
அமெரிக்கா வரும் பொழுது எங்கள் வீட்டுக்கும் வாருங்கள்!!
hihihi எதுக்கோ மூக்கிலே வேர்க்குமாமே, அப்படி எனக்கும் வேர்த்துச்சா, உடனே வந்துட்டோமுல்ல? :P
சார், உங்கள் ஆசைகள் நிறைவேற இறை அருள் துணை நிற்கும்.
//மகன் மருமகள் அன்பு அழைப்பை ஏற்று சிங்கை சென்று இருக்கவேண்டும்.//
இது கட்டாயம் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
//உள் குத்து இல்லாமல் பின்னுட்டம் இடவேண்டும்.//
வேண்டாம் சார், அப்புறம் பின்னூட்டத்தில் சுவாரசியமே இல்லாமல் போயிடும், இதை மட்டும் விட்டுக் கொடுத்திடுங்களேன், ப்ளீஸ்! :)))))))
ஹலோ சார்,
ஹாஹாஹாஹா.... தங்கமணியோட சபதம் சூப்பர்னா உங்களோட சபதம் அதைவிட சூப்பர் போங்க. எனக்கு என்னன்னா மொத்தத்துல போட்ட சபதலாம் நிறைவேறினா சரி.
ஹலோ சார்,
//பாங்களூர் போகும்போது நிச்சியம் அம்பி வீட்டுக்கு போக வேண்டும்.//
ஏன் எங்களையெல்லாம் பாக்க வர மாட்டீங்களா? அம்பிய மட்டும் தான் பாப்பீங்களா?
கழுக்குத்தான் மூக்கில் வேர்க்கும். ஆமாம் நிச்சியம் சிங்கபூர் செல்ல வேண்டும் சொன்னபடி அவர்கள் வ்ந்து போய் விட்டார்கள். நீங்க பின்னூட்டம் இடு என்று சொல்லுகிறீர்கள். சிலர் பின்னூட்டமே இடாதீர்கள் என்று பின்னூட்ட அனுமதியையே மூடி விட்டார்கள்.
@இலவசம் பெரிய லிஸ்டே இருக்கு அங்கு வந்தால். ஆகவே நிச்சியம் வருவேன் உங்கள் ஊருக்கும்.யாராவது கூப்பிடும்போதே நாம் செல்லுவது நல்லது அப்பொழுதுதான் நாம் செல்ல விரும்பும்போது அவர்கள் நம்மை வரவேற்பார்கள்
சுமதி அம்பி வீட்டு விலாசம் போன் நெம்பர் எல்லாத்தையும் கொடுத்து அப்பப்போ போன் போட்டு கணேசனும் அம்பியும் கூப்பிடுகிறார்கள்.உன்னை எங்கே தேடுவேன் பாங்களூர்லே. ஒரு மெயில் கொடுத்தாலும் பரவாயில்லை.
@சுமதி கவலையே வேண்டாம் ஒன்னு அல்லது இரண்டு சபதத்தை தவிர ஒன்னும் நிறைவேறப்போவதில்லை. எதுக்கும் சேஷத்திரி புரம் ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்ளலாம்
நீங்கள் எழுதிய ஹனுமத் ஸ்தோத்திரத்தில் இரு அழகான வரிகள் உள்ளன .
"அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்ய தவ கிம் வத..
ராம தூத க்ருபா சிந்தோ மத் கார்யம் சாதய பிரபோ.."
இதன் பொருள் (உங்களுக்குத் தெரியாததல்ல)
"முடியாததையும் முடித்து வைக்கும் ஸ்வாமி, உனக்கு எது முடியாதது என்று சொல்லேன்.
ராமனது தூதனே ! என் கார்யத்தினை முடித்திட என் மேல் உங்கள் க்ருபை வையுங்கள்."
உங்கள் சபதங்கள்
//மகன் மருமகள் அன்பு அழைப்பை ஏற்று சிங்கை சென்று இருக்கவேண்டும்.//
இது நடந்தால் காலை 5.30 க்கு எழுந்து வாகிங் போகவேண்டாம். வீட்டுக்கு
7 மணிக்கே வரவேண்டாம். ஆபீசுக்கே செல்லவேண்டாம். ஸ்கூட்டருக்கு
பதிலாக காரில் சிங்கப்பூரில் போகலாம். ஆஞ்சனேயன் உங்களுக்கு
அருளட்டும்.
//தணிக்கை சம்பந்தமாக நல்ல ஆங்கில பதிவுகள் இடவேண்டும்//.
பதிவுகள் இப்போதே ஏராளம். ஆனால் நல்ல பதிவு அரிதாக இருக்கிறது. இருப்பதெல்லாம்
அறைத்த மாவையே அறைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
//பண்டரிபுரமும்,ஷிர்டியும் போகவேண்டும் //
ஷிர்டி பாபா கருணை உங்கள் மேல் படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஹனுமத் ஸ்தோத்திரம் பாடினால் மட்டும் போதாது. அனுமாருக்கு 1008 வடை மாலை
சாத்துவதாக வேண்டிக்கொள்ளுங்கள். எதற்கு 1008 எனக் கேட்கமாட்டீர்கள். உங்கள்
வலைப்பதிவுக்கு வருகை தரும் எல்லோருக்கும் தலா 108 தருவீர்கள். எனக்கும் ஒன்றே
ஒன்று தாருங்கள்.
ஆமாம். எந்த அனுமார் கோவிலில் வடை மாலை சாத்துவீர்கள்.?
என்றைக்கு சாத்துவீர்கள்.
"எங்கெலாம் ராமன் பெயர் உச்சரிக்கப்படுகிறதோ அங்கெலாம் அனுமன் தவக்கோலத்தில்
ராமனையே நினைத்து அமர்ந்திருக்கிறான்."
ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே
ஸஹஸ்ர நாம தஸ்துல்யம் ராம நாம......
அனுமனை ப்பிரார்த்திக்க நமக்கு உறுதியும் அவன் அருளும் தேவை.
2008ம் வருடம் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருள ஆண்டவனைப் ப்ரார்த்திக்கிறேன்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பிரார்த்தனைகள் செய்யும் இடம்:
http://sachboloyaar.blogspot.com
http://thesilentzonewithin.spaces.live.com
http://pureaanmeekam.blogspot.com
சீரடி பாபாவின் கோவிலை வலம் வந்து
பூஜ்ய சீரடி பாபாவின் ஆசியும் அருளும் பெற
திரு. தி ரா ச சீரடி வந்திருக்கிறார்.
நீங்களும் உடன் வந்து பாபாவின்
அருள் பெற க்ளிக் செய்வீர்.
http://pureaanmeekam.blogspot.com
சுப்புரத்தினம்.
தஞ்சை.
சூரி அண்ணா வரணும் ..ரொம்ப சந்தோஷம். உங்கள் ஆசிகளுக்கு. முடிந்தவரை நீங்கள் சொன்னது மாதிரியே நடக்க முயற்சி செய்கிறென்.
மற்றதெல்லாம் இவர் வழி
துன்பமே தரும் சூனியம் வம்பு பகை
புன் பேய் பல பூத கணங்கள் எல்லாம்
நின் பேர் சொல நீறு படும் படுமே
அன்பே புரி அஞ்சனை அம் அதனே
//பாங்களூர் போகும்போது நிச்சியம் அம்பி வீட்டுக்கு போக வேண்டும் //
Anjaneyar arulaal idhu nadaka vendum :)
Paavam uma maami, avanga sollradhellaam nalladhuku nu therinjum follow panna maaten nu sollradhu nyaayam illai..take care
@திருமதி அம்பி. நீங்கள் சொல்லுவது எல்லாம் சரிதான். ஆனால் எல்லோரும் தங்கமணி பக்கமே சாயாதீர்கள்.
"நியாய அந்நியாமு தெலிசின வாரெவரோ....
சங்கீத ஞனமு பக்திவினா
சன்மார்கமு கலதே"
என்றுதான் நான் பாடவேண்டும்.
பங்களூரில் நாலு நாள் சாப்பாட்டிற்கு ஏற்பாடு அம்பி, சுமதி,மௌளி,டுபுக்குசிஷ்யை,எல்லோரும் முதல்லே மெனு அனுப்புங்கள்
விடுமுறை முடிந்து இன்றுதான் பிளாக் பக்கம் வந்தேன். இன்னும் பிற பதிவுகளை படிக்கவேண்டும்.
திராச, நீங்க சொல்லும் மெனுவினை தயார் செய்துவிடச் சொல்கிறேன்...பெங்களுர் வந்து வேலைகளை முடித்துப் பிதிரும்பிச் செல்லும் சமயத்தில் ஸ்டேஷனிலிருந்து [போன் செய்யாது, முதலில் வந்து இறங்கியவுடன் போன் பண்ண முயற்சி செய்யுங்க..... :-)
இப்பதான் இந்த பதிவை படிச்சேன்.சும்மா சொல்லக் கூடாது இரண்டுபேருடய சபதங்களுமே சூப்பர்தான்!
//Paavam uma maami, avanga sollradhellaam nalladhuku nu therinjum follow panna maaten nu sollradhu nyaayam illai..take care//
யாருங்க அந்த உமா மாமி?
@செல்லீ என்ன கேள்வி கேட்டீர்கள். அது வேறு யாரும் இல்லை யாமனுடன் போராடி 2003க்கு பிறகு எனக்கு extention of Lifeவாங்கிக் கொடுத்து எனக்காக 32 வருஷங்களாக
என்னுடைய சுகத்துக்காக கஷ்டங்களை
அனுபவித்து வரும் என் தங்கமணி.
@செல்லீ என்ன கேள்வி கேட்டீர்கள். அது வேறு யாரும் இல்லை யாமனுடன் போராடி 2003க்கு பிறகு எனக்கு extention of Lifeவாங்கிக் கொடுத்து எனக்காக 32 வருஷங்களாக
என்னுடைய சுகத்துக்காக கஷ்டங்களை
அனுபவித்து வரும் என் தங்கமணி.
மன்னிக்கணும் சார் , அப்போ தங்கமணி அம்மாவுக்கு பேர் உமாதேவியா? அல்லது உமா மட்டுந்தானா?
எனக்கும் உமா என்ற பேருக்கும் நிறைய தொடர்பிருக்கு அதுதாங்கேக்கிறேன்.
@செல்லி பேரூ உமாவதிஆனால் கூப்பிடுவது உமா.கொழும்புவில்இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ரங்கநாதாநந்தா மூலமாக நெறைய நண்பர்கள் உண்டு.முக்கியமாக சுப்ரமணிய ஐய்யர் & கம்பெனி ஆடிட்டர் குடும்பம். உங்களுக்கு இதில் யாரையாவது தெரியுமா?
Post a Comment