Thursday, January 17, 2008

படைத்ததில் பிடித்தவை

சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுத்தவர் வல்லியம்மா. நான் பாட்டுக்கு ஏதோ எனக்கு தெரியாத விஷயங்களைத் தெரிந்த மாதிரி எழுதிக்கொண்டு இருக்கிறேன், இருந்தாலும் ஏதோ பிளாக் உலகினர் பெரிய மனது செய்து படித்து வருகின்றனர். இதிலே எழுதினதிலே நல்லதா மூன்று தேர்ந்து செய்து போடனுமாம்.


இதைவிட நான் போட்டதிலேயே மோசமான பதிவு போடச்சொல்லியிருந்தால் மொத்தப் பதிவையும் ஒட்டு மொத்தமா போட்டிருப்பேன். போடம இருந்தலும் நம்மளை போட்டுருவாங்க போல இருக்கு. சரி போட்டு விடுகிறேன்.


முதல் பதிவு இரு குருவிகளைப் பார்த்ததும் மனதில் எழுந்த எண்ணங்களைபதிவாக பதித்தேன். சுமராக வந்தது. வலை உலகில் எனக்கு ஒரு நுழைவைத் தந்தது. ஆகவே இதுதான் முதல் தேர்வு.நம்ப முடியவில்லை ஆனால் உண்மை அதற்குப் பிறகு நான் சென்னையில் குருவிகளையே பார்க்கமுடியவில்லை. செல்போன்களின் எண்ணிக்கை அதிகமானதால் அதனுடைய கதிர் வீச்சில் பாதிக்கப்பட்டு பறக்க முடியாமல் அழிந்து விட்டன என்கிறார்கள்.

1) http://trc108umablogspotcom.blogspot.com/2006/07/blog-post_04.html#comments

இரண்டாவது பதிவு மணநாளன்று போட்டது. தங்கமணியின் அருமை தெரிந்த பதிவு. உண்மையை உணர்த்திய பதிவு

(2)http://trc108umablogspotcom.blogspot.com/2006/11/blog-post_16.html

கீதாமேடத்தின் அழைப்பின்பேரில் எட்டு போடப்போய் அதுவே நகைச்சுவையுடன் அமைந்தது அதிசயம்தான்.கீதாமேடமே தேவலைன்னு சொன்ன பதிவு மூன்றாவதாக அமைகிறது

(3)http://trc108umablogspotcom.blogspot.com/2007/06/blog-post_28.html

அமாம்அம்பிநீசொன்னதும்தான் ஞாபகத்துக்க்கு வந்தது. சங்கீத
ஜாதி முல்லை என்ற தலைப்பில் சங்கீத காமெடியும் நல்ல வரவேற்பை ஏற்றது.

(4)http://trc108umablogspotcom.blogspot.com/2006/09/3.html

14 comments:

ambi said...

ஆமா! நீங்க சொன்ன மூணுமே ரொம்ப நல்லா இருந்தது. சில சங்கீத விமர்சனங்களும் தான். :D

அது என்ன கீதா மேடமே...? :p

Geetha Sambasivam said...

//அதற்குப் பிறகு நான் சென்னையில் குருவிகளையே பார்க்கமுடியவில்லை. செல்போன்களின் எண்ணிக்கை அதிகமா//

அதுக்கு முன்னாலேயும் குருவிகள் நான் பார்த்து இல்லை! :((((((((((( உண்மையிலேயே வருந்த வேண்டிய ஒன்று!

Geetha Sambasivam said...

//தங்கமணியின் அருமை தெரிந்த பதிவு. உண்மையை உணர்த்திய பதிவு//

ஹிஹிஹி, ரொம்பவே "ஐஸ்,ஐஸ்"னு தொலைபேசும்போது கூடச் சொன்னாங்களே, அதானே? :P

Geetha Sambasivam said...

//கீதாமேடமே தேவலைன்னு சொன்ன பதிவு மூன்றாவதாக அமைகிறது//

அப்படிங்கறீங்க? உ.கு., வெ.கு. ஒண்ணும் இல்லையே இதிலே? சந்தேகமா இருக்கே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மெளலி (மதுரையம்பதி) said...

முதல் இரண்டும் அருமையான பதிவுகள், எனக்கு இப்போது படிக்க வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

ஆமாம், மூன்றாம் பதிவு லின்க் தப்புன்னு நினைக்கிறேன், சற்று செக் பண்ணுறீங்களா?

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதாமேடமே தேவலைன்னு சொன்ன பதிவு மூன்றாவதாக அமைகிறது//
அப்படிங்கறீங்க? உ.கு., வெ.கு. ஒண்ணும் இல்லையே இதிலே? சந்தேகமா இருக்கே

இங்கே இருக்கு உள் குத்து

அது என்ன கீதா மேடமே...? :p

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி நீ சொன்னதையும் போட்டாச்சு.

கீதாமேடம் சங்கப்பலகை மாதிரி.நல்லவை அல்லவற்றை தள்ளிவிடுவார்கள் அதான் அப்படிச்சொன்னேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ கீதாமேடம் நேற்று பம்பாயில் மிட் டே என்ற பத்திரிக்கையில் படித்தேன். 70% வரை பறவை இனங்கள் அழிந்துவிட்டதாம்.புறா ஒன்றுதான் எப்படியோ சமாளித்து வாழ்கிறது

தி. ரா. ச.(T.R.C.) said...

மதுரையம்பதி. மூன்றாவது பதிவை சரி செய்து போட்டு நாலாவதும் சேர்த்தாச்சு. நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆமாம் மாட்டிவிட்ட வல்லியம்மா எங்கே போயிட்டாங்க?சீக்கரம் வந்து திட்டுங்க

மெளலி (மதுரையம்பதி) said...

ஏதேது தப்புத்திருத்துவதை விட பின்னூட்டத்துக்கு பதில் ரொம்ப வேகமா வருதே?......

தி. ரா. ச.(T.R.C.) said...

மௌளி நேரமிருந்தால் வேலையைத்தள்ளிப்போடமாட்டேன்

வல்லிசிம்ஹன் said...

திட்ட எல்லாம் முடியாது..
அதுவும் இப்பதான் பொங்கல் எல்லாம் முடிஞ்சு இருக்கு.
அடுத்த கனுவுக்கு உங்க வீட்டுக்கு சசப்பிட வர வேண்டாமா:))

நாலு பதிவுமே நல்லா இருக்கு. எனக்குப் பிடித்தது தங்கமணியும்
ஜாதிமுல்லையும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@வல்லியம்மா இன்னும் வல்லையாம்மான்னு பயந்து போயிட்டேன் நல்ல வேளை வந்து
சாப்பாட்டுக்கு வரேன்னு சொல்லிட்டாங்க. நன்றி.
எனக்குபிடித்ததும் தங்கமணிதான்.இல்லைன்னா சாப்பாடு கட்டு ஆயிடும்.. வர்ரவங்க எல்லாம் அவுங்க பக்கம் அப்படியே சான்சுடுறாங்க....