Sunday, January 13, 2008

நிஜம் நிழலாகுமா?

சாதரணமாக சினிமாவில் டாக்டராகவும், வக்கீலாகவும், இன்ஜினயராகவும்,ஆடிட்டராகவும் நடிகர்கள் நடிப்பார்கள். ஆனால்ஒருநிஜ ஆடிட்டரே ஆடிட்டராக நடிக்க சந்தர்ப்பம் வருமா? வரும். வந்தது.

இந்த கணினி உலகத்தில் எல்லாமே கணினிதான். அதுவும் வங்கித்துறையில் கேட்கவே வேண்டாம். ஏடிம், ஆன்லைன்பேங்கிங், மொபைல் பேங்கிங், ஈ' பேங்கிங், சி பிஸ் என்று கணினியுடன்வங்கித்துறையும் பிரிக்க முடியாதது ஒன்றாய் ஆகிவிட்டது.

வங்கித் தணிக்கைத்துறையும் இதற்கு விதி விலக்கு அல்ல கணினிப் பொறி உதவியுடன் கணினிமயமாக்கபட்ட வங்கியை எப்படி தணிக்கை செய்வது என்று விளக்கும் வகையில் ஒரு ஈ புத்தகம் சி டி வடிவில் எல்லா வங்கிகளுக்கும், தணிக்கையாளர்களுக்கும் அதுவும் கணினியை அதிகம் பயன்படுத்தாத தணிக்கையாளர்களுக்கு பயன் படும் வகையில் தயாரிக்கப்படுகிறது.

சரி அதுக்கு என்ன என்று கேட்கிறீர்களா. ஒன்றுமில்லை அதில் அடியேன்தான் ஆடிட்டராக நடிக்கிறேன்.வங்கி தணிக்கைச் செல்லும் ஆடிட்டர் எவ்விதம் வங்கி அதிகாரிகளிடம் கேள்வி கேட்கவேண்டும்,
எவ்வாறு கணினியை உபயோகித்து தணிக்கையை சுலபமாகவும் சீக்கிரமாகவும்,அகில உலகில் உள்ள தணிக்கை நடைமுறைக்கும் வரைமுறைக்கும் உட்பட்டு தணிக்கையை முடிக்க முடியும் என்பது போன்ற விஷயங்கள ஒளி ஒலி அமைப்பில் சி டியாக வெளி வர இருக்கிறது.

இரண்டு நாள் ஷூட்டிங் முடிந்து விட்டது.

புது வருடத்தில் போட்ட சபதம் நினைவுக்கு வருகிறது"தணிக்கை சம்பந்தமாக நல்ல ஆங்கில பதிவுகள் இடவேண்டும்" . ஆஞ்சநேயர் அருள்தான்.

வாங்க எல்லோரும் வரிசையாக வந்து உள் குத்து வெளிக்குத்து எல்லாம் வைத்து குத்துங்க


31 comments:

வேதா said...

வெரிகுட் நீங்களும் நடிகராகிட்டீங்களா? :) இந்த படத்துக்கு திருட்டு விசிடி எங்க கிடைக்கும்? :D

sury said...

ஆடிட்டிங் அரிச்சுவடி ஆரம்பிக்கும்போதே
அந்தக்காலத்து எங்க ப்ரொபஸர் சொன்னது ஞாபகம் வரது;

"டேய், பசங்களா ! ஆடிட்டர்ன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா" என்று ஆரம்பித்தார்.
As usual,
நாங்க பேந்தப்பேந்த முழித்தோம்.
"ஆடிட்டர்ன்னா அவன் ஆதி எத்தன் டா. அவனை யாரும் எத்த முடியாது.
தான் சொன்னதுதான் சரின்னு கடோசி வரைக்கும் நின்னு எவன் ஜயிக்கிறானோ
அவன் தாண்டா ஆடிட்டர் " அப்படின்னு சொன்னார்.

கேட்டு நாங்க எல்லாருமே ஆடிப்போயிட்டோம்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

குமரன் (Kumaran) said...

ஆடிட்டரே ஆடிட்டரா நடிப்பது என்று சொல்லும் போதே தெரிந்து விட்டது நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று. வாழ்த்துகள் தி.ரா.ச.

இலவசக்கொத்தனார் said...

அசின், ஷ்ரேயான்னு ரெண்டு பேர் ஜோடியாமே அப்படியா? சில தணிக்கைகள் க்ரைம் த்ரில்லராக முடிவதென்னவோ நிஜம்.

Sumathi. said...

ஹலோ சார்,

// இந்த படத்துக்கு திருட்டு விசிடி எங்க கிடைக்கும்? ://

ஹா ஹா ஹா ஹா..நானும் இத தான் கேக்கறேன்..ஹி ஹி ஹி...

கீதா சாம்பசிவம் said...

ஜோடி யாருன்னு சொல்லலை! சரி, போகுது, அந்த சிடியை இப்படித் தள்ளி விடுங்க, பார்க்கலாம், எப்படி நடிச்சிருக்கீங்கன்னு! வசனம் யாரு? உங்க குருவா? :P

தி. ரா. ச.(T.R.C.) said...

@வேதா நாடாகமே உலகம்.நாம் எல்லோரும் நடிகர்கள்.
என்னையோர் வேடமிட்டு உலகநாடகா அரங்கிலாட வைத்தாய். ஆடினது போதுமென்றுஓய்வளிக்க உன்னைஅல்லால் வேறேகதி இல்லை உமா

manipayal said...

congratulations. முதல் நாள் முதல் ஷோ ஒரு பாஸ் அனுப்பிடுங்க அண்ணா

கீதா சாம்பசிவம் said...

//போதுமென்றுஓய்வளிக்க உன்னைஅல்லால் வேறேகதி இல்லை உமா//

அது என்ன வேதாவுக்கு மட்டும் தனியா பதில் கொடுக்கிறீங்க? ம்ம்ம்ம்ம்., வேறே கதி இல்லைனு எழுதி இருக்கிறதை மேடம் பார்த்தாங்க இல்லை? இல்லைனா தொலைபேசித் தெரிவிக்கிறேன்! :D

தி. ரா. ச.(T.R.C.) said...

வேதா திருட்டு வி சி டி எல்லாம் கிடையாது. காசு கொடுத்துதான் வாங்கி பாக்கனும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

. சூரி அண்ணா வணக்கம்.ஆடிட்டர் என்ற வார்த்தை அந்த காலத்தில் கணக்கு வழக்குகளை படிப்பார்கள் அதை காதால் கேட்டு (ஆஉடிஒ) ஒப்புதல் வழங்குவார்கள்
அதனால் தான் ஆடிட்டர் என்பதாக கூறுவார்கள். நீங்கள் சொல்ல்வதும் சில ஆடிட்டர்களுக்கு பொருந்தும். கிட்டதட்ட 2000 த்துக்கும் மேற்பட்ட ஆடிட்டர்களை சந்தித்து இருக்கிறேன் வங்கிப் பணியில் இருந்த போது. இப்போதுகூட மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் இரவு வரவு செலவு கணக்கை படிப்பார்கள் போது மக்கள் ஒப்புதல் அளிப்பார்கள்

தி. ரா. ச.(T.R.C.) said...

@குமரன் வணக்கம். நன்றி. நானும் எதிர்பார்க்கவில்லை இதை. திடிரென்று வந்ததுதான்.உங்கள் வேலை ஒன்று பாக்கியுள்ளது விரைவில் முடிக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@குமரன் வணக்கம். நன்றி. நானும் எதிர்பார்க்கவில்லை இதை. திடிரென்று வந்ததுதான்.உங்கள் வேலை ஒன்று பாக்கியுள்ளது விரைவில் முடிக்கிறேன்.

sury said...

நான் சும்மா அந்த ஆடிட்டர் என்ற வார்த்தையை பன் pun
செய்தேன். நீங்கள் சொல்வதுதான் சரி.
நான் மதுரையில் 1960, 1961 ல் இருந்தபோது
நீங்கள் சொல்லிய மதுரை மீனாக்ஷி அம்மன்
கோவில் கணக்கு வாசிக்கப்படுவது நானும்
கேட்டிருக்கிறேன்.
(அது சரி. அம்பத்தூரா நீங்கள் ? நான் அங்கு ஒரு
public sector training college லே
வைஸ் ( not virus ) ப்ரின்சிபாலாக
8 வருடம் குப்பை கொட்டியிருக்கிறேன்.)


சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com

தி. ரா. ச.(T.R.C.) said...

@இலவசம் நீ சொல்லுவது ஓரளவு உண்மைதான். இரண்டு பெண் ஆடிட்டர்களும் உண்டு இதில். என்ரான் நினைவு படுத்துகிறது உன் கிரைம் திரில்லர் வாசகம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

சுமதி அம்பியோடு சேர்ந்து ரொம்ப கெட்டு போயிட்டே. திருட்டு விசிடி எல்லாம் பார்க்கக்கூடாது. சென்னை வந்தால்தான் பார்க்கலாம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் யார் ரெண்டு பேருன்னு அப்பறம் சொல்லறேன்.. கதை வசன்ம் எல்லாம் என்சீன்களுக்கு நான் தான். இங்கே குருவுக்கு வேலை கிடையாது. இது ஒன்னும் ஆணி புடுங்கற வேலை இல்லை.

தி. ரா. ச.(T.R.C.) said...

.@மணிப்பயல் கவலையே வேணாமேடாம் துபாயிலும் ரீலீல்ஸ் ஆகும். அங்கேயே பார்க்காலாமே.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மணிப்பயல் கவலையே வேணாமேடாம் துபாயிலும் ரீலீல்ஸ் ஆகும். அங்கேயே பார்க்காலாமே.

தி. ரா. ச.(T.R.C.) said...

@@கீதா மேடம் காலையில் ராசிபலன் பார்த்தேன். அதில் எனக்கு வடக்கு திசையில் இருக்கும் ஒருவரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என்று போட்டிருந்தது.
அது தாங்கள்தனோ என்று பயம்மாக இருக்கிறது. ஏற்கனவே மாட்டுப் பொங்கல் அன்று வரப்போகிற என் அன்பு தங்கை ஸ் கே எம் என்ன போட்டு குடுக்கப் போறாங்களோன்னு நடுங்கிகிட்டு இருக்கேன் நீங்க வேறு தங்கமணிக்கு தெரியுமான்னு கேட்டு கிட்டு. உங்களுக்கும் பதி போட்டாச்சு திருப்தியா/:)

தி. ரா. ச.(T.R.C.) said...

@சூரி அண்ணா அதே மாதிரி திருப்பதியிலும் இரவு கணக்கை முடித்து கதவை சாத்தி சீல் வைத்து விடும்போது கூட்டத்திலிருந்து 2 பேரை அழைத்து சாட்சி கை எழுத்து போடச் சொல்லுவார்கள் . அவர்களுக்கு சிறப்பு தரிசனமும் உணடு.அடியேனுக்கு அந்த பாக்கியம் 3 முறை கிட்டியுள்ல்
அது. நான் அப்பொழுதெல்லாம் சொல்லுவேன் பார் நான் ஆடிட்டர் என்பதை வேங்கடவனே அங்கீகாரம் பண்ணி விட்டான் என்று.
அம்பத்தூரில் குப்பை கொட்டினீர்களா. அது என்ன குப்பை கொட்டும் இடமா? நான் இருப்பது கிண்டியில். ஆனால் மிகவும் மரியாதைக்குகந்த ஒருவர் (நீங்கள்) குப்பை கொட்டிய அம்பத்தூரில் உள்ளார்கள்.பேரைச் சொனாலே அம்பத்தூரே கிர்ர்ர்ர்ர்ர் கீர்ர்ர்ன்னு அதிரும்மில்லே

மதுரையம்பதி said...

அப்படியே அந்த படத்தை வலையேற்றீடுங்க சார். :-)

sury said...

//அம்பத்தூரில் குப்பை கொட்டினீர்களா. அது என்ன குப்பை கொட்டும் இடமா? //

சீனத்து அறிஞன் ஒருவன் சொன்னாராம்:
One has to unlearn whatever one has already learnt if one wants to learn anew
என . எங்கள் கல்லூரியும் என்பது இது போன்ற இடம்தான். போகிப் பண்டிகை அன்று பழசை எல்லாம்
கொளுத்துவது போல. நமக்குத் தெரிந்த (தெரிவதாக நினைத்திருக்கும்) பலவற்றையும்
கொட்டும்போதுதான், தெரிந்ததெல்லாம் குப்பை எனத் தெரிகிறது. குப்பை விலகும்போது, குப்பைக்கு குட்பை
சொல்லும்போது,
தெளிவு உண்டாகிறது. ஆணவம் (some sort of intellectual arrogance )
அகன்று, " எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"
எனும் வள்ளுவனின் வாக்கின் உண்மை புலப்படுகிறது. ஒரு 25 ஆயிரம் நபர்களிடையே உரையாற்றி
இருப்பினும் அவர்களிடம் நான் கற்றது தான் அதிகம் என்பது உண்மை நிலை.
நிற்க. Humour
உங்கள் வலைப்பதிவு நண்பர் ( நண்பி) களிடையே இயற்கையாகவே உள்ளது.
ரசிக்கும்படியாக உள்ளது.
நிற்க.
சீரடி பாபாவை தரிசித்தீர்களா?
http://pureaanmeekam.blogspot.com
வரவும்.
இன்னொரு நிற்க.
உங்கள் சி.டியின் ஆடியோ ரிலீஸ் எப்போது? எங்கு?
ஓரமாக நான் அங்கு வந்து உட்கார்ந்து கொள்ளவா?
சுப்பு ரத்தினம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@@மௌளி அதெல்லாம் முடியாது..only for CAs and Bankers

கபீரன்பன் said...

வாழ்த்துகள் தி.ரா.ச சார்,

//...காசு கொடுத்துதான் வாங்கி பாக்கனும்//

அப்படீன்னு நீங்க நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. அது சரி தயாரிப்பாளர் யாரு??

கீதா சாம்பசிவம் said...

//ஆனால் மிகவும் மரியாதைக்குகந்த ஒருவர் (நீங்கள்) குப்பை கொட்டிய அம்பத்தூரில் உள்ளார்கள்.பேரைச் சொனாலே அம்பத்தூரே கிர்ர்ர்ர்ர்ர் கீர்ர்ர்ன்னு அதிரும்மில்லே//

என்ன சார், நேத்துத் தான் தொலைபேசும்போது, "தங்கை" தங்கைனு உருகினீங்கனு பார்த்தால் இங்கே இந்த மாதிரிப் போட்டுக் கொடுக்கிறீங்களா? :))))))) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அது சரி, "சாதனை" பண்ணி இருப்பீங்கனு பார்த்தால் ஒண்ணுமே காணோமே????????????

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாங்க ஈரடிகபீரன்பன் நேரடியா வந்ததற்கு நன்றி. தயாரிப்பாளர் ஒரு தனியார் வங்கி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதாமேடம் தம்பியுடையான் படைக்கஞ்சான் தங்கையுடையான் ஆப்புக்கஞ்சான்.சாதனையா? வந்து பாருங்க உங்களை உயர்த்தி வைத்துள்ளேன்.என்ன இருந்தாலும் காணும் பொங்கலுக்கு அண்ணனை நேரில் வந்து பார்த்த தங்கை மாதிரி ஆகுமா!

கீதா சாம்பசிவம் said...

//காணும் பொங்கலுக்கு அண்ணனை நேரில் வந்து பார்த்த தங்கை மாதிரி ஆகுமா!//

ஆமாம், ஆமாம், அவங்க வந்துட்டுப் போறவரைக்கும் மூச்சுவிடாமல் இருந்துட்டு, அப்புறமாத் தொலைபேசிச் சொன்ன அண்ணன் போல் வராது தான்! :P

செல்லி said...

ஓகோ! கதை இப்பிடிப் போகுதா?அதுசரி கீரோயின் ரஜனி சாரோட நடிச்ச நயந்தாராவா? ஷ்ரேயாவா?
தங்கமணியம்மா சம்மதிச்சிட்டாங்களா?.:-))

தி. ரா. ச.(T.R.C.) said...

@செல்லி வாங்க. இரண்டு பெண் கணக்காயர்களுமுடன் நடிக்கிறார்கள்