அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 10 10 10
இன்றைய பெயர்கள்
நித்யதிருப்தா
எப்பொழுதும் திருப்தி அடைந்து சந்தோஷமாக இருப்பவள். ஆன்மாக்களாகிய தன் பக்தர்களிடத்தில் குறைகள் இருந்தாலும் அதை மனதில் கொள்ளாது அவர் செய்யும் வழிபாடுகளால் சாஸ்வதமாக திருப்தி அடைபவள்.அவளுக்கென்று எந்த ஆசைகளும் இல்லாததால் மட்டும் நித்ய திருப்தாவாக இருப்பவள்.அது மட்டுமல்ல அவளது அடியார்களின் ஆசைகளையும் தீர்த்து வைத்து அவர்களையும் நித்யதிருப்தாவாகச் செய்பவள்.அவள் அதற்குமேலும் அடியயார்களுக்கு ஆசையே வரதாவண்ணம் அவர்களை வழிப்படுத்தி அவர்களையும் வசப்படுத்துபவள். ஆசையை தீர்த்து வைப்பதைவிட ஆசையே ஏற்படமல் செய்வது மிகவும் உத்தமம். திருமூலர் அதனால்தான் அடித்து கூறினார்" ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடுயாயினும் ஆசை அறுமின்" இன்றைய காலகட்டத்தில் அப்படி நித்யதிருப்தாவாக ஒரு மனிதன் இருக்க முடியுமா?
ஆம் இருந்தார் ஒருவர் நம்முடைய காலகட்டத்திலேயே. அவர்தான் மஹாகவி பாரதியார்.நாம் இன்றைக்கு எந்த விஷயங்கள் எல்லாம் சந்தோஷம் என்று நினைத்து திருப்தி அடைவது போல் நினைக்கிறோமோ அவைகள் ஒன்றுமே இல்லாமல் இருந்தும் நித்யதிருப்தாவாக இருந்தார் . வீடு வாசல் கிடையாது, உனவுக்கு வசதி கிடையாது உடுக்க துணிவகைகள் கிடையாது ஆங்கிலேயன் தொல்லை தாங்காமல் பாண்டிச் சேரிக்கும் சென்னைக்கும் அலைந்துகொண்டிருந்தார் . . இருந்தாலும் அவர் என்ன சொன்னார் தெரியுமா" எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" நாமாக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்போம்.அம்பிகையை முழுவதும் நம்பிவிட்டாவர்களுக்குத்தான் இது சாத்தியம்
பக்தநிதி
பக்தர்களுக்கு மிகப்பெரிய நிதியாக விளங்குபவள். அடியவர்கள் எதை கேட்டாலும் அதை அவர்களுக்கு அளித்து என்றும் குறையாத நிதியாக விளங்குபவள்.மற்ற நிதிகள் எல்லாம் ஒருகாலத்தில் அழிந்துவிடும் திருப்தியளிக்காமல் போனாலும் போகலாம் ஆனால் பக்தர்களுக்கு அவள் அளிக்கும் பக்தி என்ற நிதி இருக்கிறதே அது அள்ள அள்ள குறையாது திருப்தியளிக்காமலும் போகாது.
நிகிலேஸ்வரி
இந்த அண்ட சராசரத்துக்கும் ஈஸ்வரியாக இருப்பவள். அகிலமென்றால் உலகம். நிகிலம் என்றால் இந்த உலகத்தையும் சேர்த்து உள்ள ஈரேழு பதிநான்கு உலகத்திற்கும் ஈஸ்வரியாகவும் தலைவியாகவும் இருந்து காப்பவள்.மனித வர்கம்மட்டுமல்லாமல் புல், பூண்டு,புழு,மரம்,செடி, கொடி,பறவைகள்,பாம்பு,கல்,கணங்கள்,அசுரர்கள்,முனிவர்கள் மற்றும் ஒரு செல் உள்ள தாவரங்கள் ஆகிய எல்லாப் பதிநான்கு பிறப்புக்களுக்கும் அவள்தான் தாயாக இருந்து காக்கும் நிகிலேஸ்வரி.
சரி இன்றைய சுண்டலான கடலைபருப்பு சுண்டலை எடுத்த்க்கொண்டு நாளை சந்திக்கலாம்
No comments:
Post a Comment