இன்று எடுத்துகொள்ள இருக்கும் நாமங்கள்
நாமபாராயணப் பீரிதா
லலிதா பரமேஸ்வரிக்கு மிகவும் பிடித்தது நாம பாராயணம்தான். அவளைவிட அவளது நாமப் பெருமையை நமக்கு உணர்த்துவதற்காகவே ஏற்பட்டது இது.கடவுளைவிட அவரது நாமம்தான் பெரியது என்பதற்கு சிறந்த உதாரணம் ராமரும் ஹனுமானும்தான்.சேது சமுத்ரத்தைக் கடப்பதற்கு ராமருக்கு தேவைபட்டது பெரிய வானரசேனை, கல் போன்றவைகள். ஆனால் ஹனுமானுக்கோ இவை ஒன்றும் தேவைப் படவில்லை.அவருக்கு கடலை சுலபமாக கடக்க உதவிசெய்தது அந்த ராம நாமம் மட்டும்தான்.அதுபோல்தான் எங்கெல்லாம் அம்பிகையின் நாமம் உச்சரிக்கப் படுகிறதோ அம்பிகை அந்த இடங்களிலெல்லாம் ஆனந்தமாக அமர்ந்திருப்பாள்.
இச்சாசக்தி ஞானசக்தி கிரியாசக்தி ஸ்வரூபிணி
ஆசைப்படும் சக்தியாகவும் அதற்கு வேண்டிய ஞானத்தைத் தரும் சக்தியாகவும் பின்பு அந்த ஆசையை பூர்த்தி செய்ய அவசியமான ஒன்றான செயப்பாடு சக்தியாகவும் விளங்குபவள்.மூன்று சக்திகளுக்கும் அவள்தான் தலைவி.வள்ளியை இச்சாசக்தியாகவும், தெயவயாணையை கிரியாசக்தியாகவும் குறிப்பிடுவார்கள். இந்த இரண்டு சக்திகளும் சேர்ந்தால் அது ஞானத்தில் சென்று முடியும். அந்த சக்திதான் முருகன் என்ற ஞனபண்டிதன்
சர்வாதாரா
எல்லாவற்றுக்கும் அவள்தான் ஆதாரமாகவும் இருக்கிறாள். இந்த பூமிதான் நமக்கெல்லாம் ஆதாரம் ஆனால் அந்த பூமியை உற்பத்தி செய்தவள் அம்பிகைதான் எனவே அதற்கும் ஆதாரமாக இருப்பதால் அவள் ஸர்வாதராவாக இருக்கிறாள். இந்த உலகத்தை படைக்கும் நான்முகனுக்கும் அவளே ஆதாரம். மற்றும் அழிக்கும் தொழில் செய்யும் சிவனுக்கும் காக்கும் தொழில் செய்யும் மாதவனுக்கும் அவளேதான் ஆதாரம் அதனாலும் அவள் சர்வாதாரா என்று அழைக்கப் படுகிறாள்.இதயே அபிராம பட்டர் வாயிலாகப் பார்த்தால் நன்கு புரியும்.
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும்நாரணனும்,அயனும் பரவும் அபிராமவல்லிஅடியிணையைப் பயன் என்று கொண்டவர். முத்தொழில் புரியும் மூவரும் தங்களது தொழில் சிறப்பாக நடைபெற உனது அடியயைத்தான் பற்றி இருக்கிறார்கள்
நாளை சந்திக்கலாம், இன்றைய சுண்டல் காரமணி
No comments:
Post a Comment