இன்றைக்கு எடுத்துக் கொள்ளும் நாமங்கள்
ரதிதேவியின் பிரியத்துக்கு உரியவள். அப்படி என்ன ரதிதேவிக்கு பிரியம் லலிதா தேவியின் மீது?.சிவனால் ஸ்ம்கரிகப்பட்டு ரதியின் கணவரான மன்மதன் சாம்பலாகிவிட்டான். ரதிதேவி அம்பாளை வேண்டி அவனை மறுபடியும் உயிர்ப்பித்து தருமாறு வேண்டினாள். அம்பாள் மன்மதனை எங்கு எந்த உருவத்தில் ஆவாஹானம் செய்யலாம் என்று தேடி சரியான இடம் கிடைக்காமல் தன்னுடைய முகத்திலேயே அவனுக்கு இடம் கொடுத்து ரதிதேவியை திருப்த்திப் படுத்தி அவளின் பிரியத்துக்கு பாத்திரமானாள். இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹிரியில் "தவமுகமிதம் மன்மத ரதம் "என்று புகழ்கிறார்
அபிராமபட்டரும் "அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதிபதி சயமானது" என்று அதிசயப் படுகிறார்.
இன்றைய சுண்டல் சிகப்பு அவல்
நாளை சந்திப்போம்
1 comment:
பதிவும் படிச்சாச்சு, உமா மாமி கையால பண்ணின சுண்டலையும் ஸ்வீகரணம் பண்ணிண்டாச்சு!!..:)
Post a Comment