Monday, July 17, 2006

சங்கீத.... ஜாதி....முல்லை(2)

தனிவழி
மஹாவித்துவான்...... கச்சேரி.அன்று. நிர்பந்தத்தின் காரணமாக புதுப்பையனை ம்ருதங்க வாசிக்க ஏற்பாடு. பாகவதருக்கு ஒன்றும் சொல்லமுடியவில்லை. கச்சேரி ஆரம்பித்ததலிருந்து மிருதங்கம் தகறார்தான்.எப்படியோ ராகம் தானம் பல்லவி வரை வந்துவிட்டார். பல்லவி ஸ்வரம் பாடி முடித்தவுடன் பையன் கேட்டான்"அண்ணா நான் தனி வாசிக்கட்டுமா' என்று. எரிச்சலுடன் இருந்த பாகவதர் சொன்னார்"நீ இதுவரைக்கும் என்ன சேர்ந்தா வாசிச்சே, தனியா தானே வாசிச்சுண்டு இருந்தே. நீ என்பாட்டுக்கு எங்கே வாசிச்சே ஏதோ நீ உம்பாட்டுக்கு வாசிச்சே அப்படியே வாசி"என்றாரே பார்க்கலாம்.
சண்டையும்.... சமாதானமும்.
பாகவதர் நன்றாகப்பாடிக்கொண்டிருந்தார்.ஆனால் பக்க வாத்யம் பக்கா வாத்தியமாக இல்லை.மிருதங்கம் தகராறு.மிருதங்கத்தில் தோலை இழுத்து பிடித்து (வார் பிடித்தல்) சரி செய்தால்தான் சுருதி சரியாக இருக்கும் செய்யாமல் விட்டுவிட்டு கச்சேரியின் போது நடுவில் அவ்வப்போது செய்துகொண்டு இருந்தார்.பாகவதர் பொறுமை இழந்து இரண்டாவது முறை சரி செய்யும்போது சொன்னார்"என்ன அண்ணா போன வார்லே வார் பிடிச்சதா அடுத்த வார் வந்தா தான் சமாதானம் ஆகும்' என்றவுடன் அரங்கமே அதிர்ந்தது.
வேஸ்டாதானே....போரது...
50 வருடங்களுக்கு முன்பு மாஹாவித்துவான் தலைநகர் டெல்லிக்கு கச்சேரிக்கு சென்றிருந்தார். நன்றாக 41/2 மனி நேரம் பாடினார்.கச்சேரி முடிந்ததும் அவருடன் வந்திருந்த பிரபல சங்கீத விமர்சகரைக் கூப்பிட்டார் "அம்பி இங்கே தடுக்கு (மறைவிடம்) எவ்விடே"என்றாரெ 'எதுக்கு மாமா' 'நீர் பிரியனும்" 'மாமா இது கோவில் வீட்டுக்கு போயிடலாம் "இல்லைடா அம்பி இதோ இப்படி தெருஓராமா இருந்தேருன்." மாமா அந்தமாதிரி பண்ணா இந்த ஊர்லே போலீஸ்காரன் பிடிச்சுண்டு போயிடுவான்" போட்டாமேடா வேஸ்டாதனே போறது .பிடிச்சுண்டு போகட்டுமே"கேட்டவுடன் நம்ப ஆள் ஆடிப்போய்விட்டார்.

19 comments:

நன்மனம் said...

//பாகவதர் பொறுமை இழந்து இரண்டாவது முறை சரி செய்யும்போது சொன்னார்"என்ன அண்ணா போன வார்லே வார் பிடிச்சதா அடுத்த வார் வந்தா தான் சமாதானம் ஆகும்' என்றவுடன் அரங்கமே அதிர்ந்தது.//

சபைல இப்படி வாரிட்டாரே!!! :-)

ILA (a) இளா said...

அட அடடா, நகைச்சுவை பொங்குதுங்கோ. நல்ல இசை சிரிப்பு. விவசாயி உங்களுக்கு "இசை சிரிப்பு மகான்" அப்படின்னு பட்டம் குடுக்கிறார். மக்களே என்ன சொல்றீங்க?

ambi said...

//ஆனால் பக்க வாத்யம் பக்கா வாத்தியமாக இல்லை.//

ரொம்ப தேறிட்டீங்க சார். :)

இது உங்க மலரும் நினைவுகளா? he hee,உங்களுக்கு மிருதங்கம் (தனியா)வாசிக்க தெரியும் போலிருக்கே! :)

வல்லிசிம்ஹன் said...

ப்ரமாதமான கச்சேரி கேட்ட மாதிரி இருக்கு டி.ஆர்.சி சார்.
பஞ்ச ரத்தினமா?

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி நன்மனம்

இதெல்லாம் சங்கீதத்திலே சகஜம்ப்பா....

தி. ரா. ச.(T.R.C.) said...

என்ன விவசாயி சங்கீதத்துக்கும் விவசாயிக்கும் நிறைய பொருத்தம் உண்டு. இரண்டு பேரும் நம்பி இருக்கிறது "தண்ணி" யத்தான். எப்போ பட்டமளிப்பு? ஆனால் நான் பட்டம் பதவி பெற பாடவில்லை.நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

.அம்பி வருகைக்கு நன்றி. தேறாமல் இருக்கமுடியுமா? யாரோட இப்ப பழக்கம்? அம்பிலெவலுக்கு இல்லை என்றாலும் ஏதோ முடிந்தவரை.....

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லி அம்மா இது பஞ்ச ரத்னம் இல்லை பஞ்ச் ரத்தினம்.நன்றி

நாகை சிவா said...

//"இசை சிரிப்பு மகான்" அப்படின்னு பட்டம் குடுக்கிறார். மக்களே என்ன சொல்றீங்க? //
விவசாயி, சொன்னதுக்கு அப்புறம், அதுல மறுப்பு ஏது?
இசை சிரிப்பு மகான் வாழ்க
இசை சிரிப்பு மகான் வாழ்க

நாகை சிவா said...

//அண்ணா நான் தனி வாசிக்கட்டுமா'//
யாரும் இதுவரை வாசிக்காததை பிடித்து, நீங்களும் நல்லாவே தனியா வாசிக்கிறீங்க... ஹி. ஹி.....

இலவசக்கொத்தனார் said...

ஹாஹாஹாஹா!

Chinnakutti said...

எத்துனை முறை கேட்டாலும் சிரிக்க தோன்றும் நகைச்சுவை.........
ஹாஹாஹாஹாஹாஹா.....................

குமரன் (Kumaran) said...

நல்ல நகைச்சுவைத் தொடர் தி.ரா.ச. தொடர்ந்து எழுதுங்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வணக்கம்,சின்னகுட்டி வருகைக்கு நன்றி.சின்னப்பொண்ணுக்கு போட்டியா நீங்கள்.நீங்கள் சந்திக்க(தரிசனம்) விரும்பும் நபர்களில் என் பெயரையும் உங்கள் பதிவில் பார்த்தேன்.அந்தளவுக்கு நான் பாதிரமான்வனா என்று தெரியவில்லை.முடிந்தவரை சிரித்து வாழலாம்.நேரம்கிடைக்கும்பொது பதிவுக்கு வாருங்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

குமரனனின் வருகைக்கு நன்றி. வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி பட்டம் வாங்கினா மாதிரி இருக்கு.இளா கவனிங்க.உங்க பட்டம்வேற இருக்கு. பரவாயில்லைஇது ஆடி மாதம்தான்.நிறைய பட்டம் விடலாம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

நாகை சிவா, " பட்டம் பதவி பெற பாடவில்லை, தங்கப்பதக்கங்களும் தேவையில்லை."நீங்கள் வந்ததே பட்டம்தான். வாய்விட்டுச்சிரித்தால் நோய்விட்டுப்போகும்

தி. ரா. ச.(T.R.C.) said...

கலாய்த்தல் திலகமே,இலவசம்,எங்கே இந்தபக்கம்,ஏதோ அந்தபக்கம் சுற்றுலா போனதாக கேள்வி.சிரித்து சிரித்து என்னை மெயிலில் மயக்கியவரை நானும் கொஞ்சம் சிரிக்கவைத்து விட்டேன்.வெற்றி.

Viji said...

hehe. :)

தி. ரா. ச.(T.R.C.) said...

Thank you for u r visit.I know that u r expert in music.