Thursday, July 20, 2006

நினைத்ததெல்லாம்..... நடந்துவிட்டால்.....

இது நடந்தது 1963_64.அவனுக்கு வயது 15 இருக்கலாம்.ஸ் ஸ் ல் சி பாஸ் செய்து அன்றுதான் கல்லூரி சேர்ந்திருந்தான்.அந்தக் குடும்பத்தில் அவன் கடைசிப்பையன்.மிகவும் நடுத்தரகுடும்பம்.செற்ப வருமானத்தில் ஐந்து பேர் வாழ்க்கை நடத்தவேண்டும்.அந்த குடும்பத்திலேயே அவன் தான் முதல் முதலில் கல்லுரியை எட்டிப்பார்க்கிறான். அவனைவிட அவன் அம்மாவுக்கு.மிகவும் பெருமை.பையனும் மிகவும் சந்தோஷத்துடன் கல்லூரிக்குச்செல்கிறான். மாலை தனது முதல் நாள் அனுபவத்தை தாயுடன் பகிர்ந்துகொள்ள ஆசையோடு ஓடி வருகிறான். வீட்டில் நுழைந்தவுடனே அவனுக்கு அதிர்ச்சி.அவன் தாய் தரையில் படுத்துக்கொண்டு இருக்கிறாள் சுற்றி அவன் அண்ணி,மாமி, எல்லோரும் ஏதோ சிந்தனையில் இருந்தார்கள்.இவன் பதற்றத்துடன் என்னவென்றூ கேட்டான். அம்மாவுக்கு திடீரென்று உடம்பு சரியில்லை உதிரப்போக்கு எற்பட்டு இருக்கிறது என்ற தகவல் தான் அவனுக்குகிடைக்கிறது.உடனே தாயாருடன் அரசாங்க இலவச மருத்துவ மனைக்கு செல்கிறார்கள்.
அங்கே மருத்துவர்களின் பரிசோதனைக்குப்பிறகு மறுநாள் வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்யவேண்டும் என்று உறுதியாக கூறி விட்டார்கள்.அந்தப்பையன் மிகுந்த குழப்பத்துடன் வீட்டிற்கு சென்றான். இரவில் அவன் சகோதரனும்,அண்ணியும்,மாமியும் ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டுடிருந்தார்கள்.அதில் எதுவும் இவனுக்கு கேட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் குறியாக இருந்ததால் எதுவுமே கேட்கவில்லை. நாளையப்பொழுது நல்லபடியாக புலரவேண்டுமென்று வேண்டிக்கொண்டு படுத்தான். தூக்கம் வரவில்லை.நாளையப்பொழுது எப்படி விடிந்தது,நினைத்தது நடந்ததா? யார்நினைத்தது? நாளை பார்ப்போம்.......

8 comments:

ambi said...

achoo! choo! enna sir, ipdi suspense ellam vechuteenga..?
pls post the next episode.

நாகை சிவா said...

நீங்களும் கதை எழுத ஆரம்பித்து வீட்டீர்களா? மகிழ்ச்சி :)))

தலைப்பு சரி தான, நினைப்பதா, அல்லது நினைத்ததா?

அப்படியே எழுத்துப் பிழைகளை கொஞ்சம் சரி பார்க்கவும்.

Chinnakutti said...

என்ன சார் உண்மை சம்பவமா........... ஆரம்பமே உருக்கமா இருக்கு........

நன்மனம் said...

அந்த இளைஞ்சனின் அனுபவ சிதரல்களை எதிர் நோக்குகிறேன்.

Geetha Sambasivam said...

சொந்த அனுபவமா? சிங்கப்பூர் அனுபவங்களை எதிர்பார்த்தேன். இதுவும் நல்லா இருக்கு. இந்த மாதிரி சின்னதா எழுத வரலை எனக்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

சிவா கதைதான், ஆமாம் நடந்த கதை...truth is stranger than fiction

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம் சீக்கிரமே சிங்கப்பூர் அனுபவங்கள் தொடரும். அப்படிஎல்லாம் உங்களை ஜாலியாக இருக்கவிடமாட்டேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி,சின்னகுட்டி,நன்மனம் நன்றி. பொறுமை.... பொறுமை.... அதில்தான் ... பெருமை...பெருமை