Tuesday, September 26, 2006

அவனிடம் இல்லாதது... நம்மால் அவனுக்கு தரமுடிந்தது...

ஓர் அடியார் ஆண்டவனைப் பார்க்க வருகிறார்.பெரிய மனிதர்களை பார்க்கப் போகும்போது ஏதாவது கொடுக்க வேண்டுமே! என்ன கொடுக்கலாம் என்று யோஜனை. கோவிந்தா நீ இருப்பதோ பாற்கடல் என்னும் ரத்னாகரம் அதிலில்லாத மாணிக்கமே கிடையாது. சரி பக்கத்தில் பார்த்தால் சாட்சாத் மஹாலக்ஷிமி அமர்ந்து இருக்கிறாள் அப்படி இருக்கும் போது வேறு செல்வம் எது வேண்டுமுனக்கு. யோஜித்து கடைசியில் சொல்லுகிறார்அப்பா உன்னிடத்தில் இல்லாதது ஒன்று இருக்கிறது.என்ன தெரியுமா ? உன்னுடைய மனசு இருக்கு பாரு அது தான் உன்னிடத்தில் கிடையாது. ஏன் தெரியுமா அதைத்தான் நீ அடியார்கள் மனத்தில் வைத்துவிட்டாயே. நீயே சொல்லியிருக்கிறாய் நான் வைகுண்டத்தில் வசிப்பதில்லை. நான் வசிப்பது யோகிகளின் ஹிருதயத்தில்தான் என்று.ஆகவே அங்கே ஒரு காலி இடமும் உனக்கு தேவையும் இருக்கிறது.ஆகையால் இதோ என் ஹிருதயத்தை உனக்கு அர்பணிக்கிறேன் எடுத்துக்கொண்டு என்னை உன்னுடையவனாக்கு.இதை ஒரு நண்பரின் பதிவில் பின்னுட்டமாக இட்டிருந்தேன். பிறகு ஏன் அதையேபதிவாகப் போட்டு உங்களிடமிருந்து (புண்ணியத்தை) வாங்கிக்கட்டிக்கொண்டால் என்ன என்று தோன்றியது

24 comments:

rv said...

அருமை தி. இரா. ச.

//ஏன் அதையேபதிவாகப் போட்டு உங்களிடமிருந்து (புண்ணியத்தை) வாங்கிக்கட்டிக்கொண்டால் என்ன என்று தோன்றியது//
வாங்கிக்கட்டிக்கொள்ள அவ்வளவு ஆசையா. வந்ததுக்கு நன்றாக ஒன்று போட்டேன் என்று வைத்துக்கொள்ளவும். கொள்ளவும் என்ன, போட்டே விட்டேன். :)

குமரன் (Kumaran) said...

ந அஹம் வசாமி வைகுண்டே ந யோகி ஹ்ருதயே ரவௌ
மத் பக்த யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத

நாராயண நாராயண

Priya said...

// இதோ என் ஹிருதயத்தை உனக்கு அர்பணிக்கிறேன் எடுத்துக்கொண்டு என்னை உன்னுடையவனாக்கு.//

அருமையான கருத்து..
சின்ன வயசுல பெரியவங்க கிட்ட கதை கேட்ட மாதிரி இருக்கு உங்க posts படிக்கறது. இன்னும் நிறைய எழுதுங்க..

Priya said...

// இதோ என் ஹிருதயத்தை உனக்கு அர்பணிக்கிறேன் எடுத்துக்கொண்டு என்னை உன்னுடையவனாக்கு.//

அருமையான கருத்து..
சின்ன வயசுல பெரியவங்க கிட்ட கதை கேட்ட மாதிரி இருக்கு உங்க posts படிக்கறது. இன்னும் நிறைய எழுதுங்க..

SP.VR. SUBBIAH said...

பதிவு எதற்கு ஸ்வாமி - பொழுது போக்கிற்குத்தான் என்று பல பதிவர்களுக்கு எண்ணம்
ஆக்வே கீழே உள்ள பாடலைத் தினமும் சொல்லுங்கள் ஸ்வாமி
அந்த வாசகன் என் உள்ளத்தில் வந்து அமர்ந்ததைப்போல உங்கள் உள்ளத்திற்கும் வந்து விடுவார்!

ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நம!
தேவர் போற்ற முனிவர் போற்ற
யோக மாயையிற் கலந்த
தேவதேவனை பாடுவோம்
திருமடந்தை நில மடந்தை
இரு மணங்கு மகிழ வந்த
சீனிவாசனைப் பணிந்து பாடுவோம்!

ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நம!

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச,
எண்ணங்கள் வந்தாலும் பகிர்ந்து கொள்ள இதயம் வேண்டும் அல்லவா.
அவனிடம் கொடுத்துவிட்டதால் உங்களுக்கு மற்ற பாகவதர்களிடம் சொல்ல மனம் வந்து விட்டது.
நிறைய எழுதுங்கள்.
நன்றியுடன்.

Prasanna Parameswaran said...

aaga! edho karuthu solla vareengannu paartha, engayo potta padhiva thiruppi inga pottutennu sappaiya mudichuteengale sir! irundhaalum ennoda tube light mandaikku konjam purnijudhu, nalla padhivu!

(ennoda manasum enkitta illa, thamizh naatula irukkura aayiram - aayiram azhagana pengala yaaro oruthar thirudittu poitaangannu nennakaren! konjam thedi kandu pdicchu kudukkareengala :)?)

ambi said...

ஹிருதய கமல வாசா!னு பெருமாளை சொல்ல்வார்கள்.

திரொபதியை பார்த்து கண்ணன் சொல்கிறார், "அன்பு தங்கையே! நீ அந்த சபையில் கஷ்டபடும் போது, என்னை துவாரகாபுரி வாசா! கோவிந்தா!னு அழைத்தாய்! ஒரு தடவை ஹே! ஹிருதய கமல வாசா!னு கூப்பிட்டு இருந்தால் இன்னும் விரைவாக வந்திருப்பேனே!"

உங்களை மாதிரி மாஹனுபாவர்கள் மனதில் அந்த கேசவன், தனது துணைவியுடன் என்றும் குடி இருக்கிறான்! என்பதை நான் நேரில் பார்த்தவன் ஆச்சே! :)

nice writing sir. Now my heart is filled with that song Giri thara gopalaa! which we enjoyed on that day.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திராச-வின் இந்தப் பின்னூட்டத்துக்கு நான் என் பதிவில் இட்ட பதிலையே, இங்கும் பின்னூட்டமாக இடுகிறேன். :-)
ராமநாதன் என்னையும் சேர்த்து அடிக்க வராப்புலேயே இருக்கே :-)

//சூப்பர் திராச அவர்களே. முற்றிலும் சரி. அவன் கிட்ட இல்லாத ஒண்ண தந்தா தானே பொருத்தமா இருக்கும். சுவையான சுகமான கருத்து! அடுத்த முறை உங்க கருத்தை மறக்காமல் எடுத்தாள வேண்டும் :-)//

தி. ரா. ச.(T.R.C.) said...

ice commented like this
"I appreciate the titles u choose for ur posts..Really nice! Kosuru
ilaia???"

தி. ரா. ச.(T.R.C.) said...

@ramanathanஒருத்தரை போடுவதிலும்,வாங்குவதிலும் உங்களை மிஞ்சமுடியுமா? நன்றி வருகைக்கு

தி. ரா. ச.(T.R.C.) said...
This comment has been removed by a blog administrator.
Porkodi (பொற்கொடி) said...

hummmm.. enaku kanna kudutha kannappa nayanar ninaivu varudu :) inda maadiri bhakti yen indha kaalathula illainum kuzhapama iruku :(

nalla irundha ambiyum keduthutingala..

தி. ரா. ச.(T.R.C.) said...

@குமரன் நீங்கள் சொல்லுவது நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை உணர்த்துவதற்குச் சொன்னது.ஆனால் உள்ளமெனும் கோவிலிலே உறைகின்றாய் முருகா என்ற பாடலும் உண்டு.கம்பரும் சோழனால் ஏவப்பட்ட புலி தன்னைக் கொல்ல வரும்போது சொல்லுகிறார்.வெங்கண் சிவந்து வடிவால் முறுக்கி என் அங்கம் பிளக்க வரும் புலியே நில்.என் உள்ளத்தில் யார் இருக்கிறான் தெரியுமா?செகட்சீயம் என்னும் நரசிம்ஹன் இருக்கிறான் என்று பாடியுள்ளார்.சதசிவபிரும்மேந்திடரும் மானஸ சஞ்சரரே ப்ரும்மணி மானச என்கிறார்.மேலும் இந்தப்பாடல் நாராயண பட்டத்ரி சொன்னது.அவர் சொன்னதை கல்லாக இருந்த குருவாயுரப்பனே தலயை ஆட்டி அமோதித்தாக வரலாறு உண்டு.தங்கள் வருகைக்கும் விளக்கத்திற்கும் நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@பிரியா. நன்றி. இப்பவும் நான் பெரியவன் தான் நீ சின்னவள்தான்.கீதா மேடம் கவனிக்க எங்களுக்கு எவ்வளவு பரந்த மனப்பான்மை.
@சுப்பையாண்ணே நீங்கள் சொல்வது சரி.அப்படியே கடைபிடிக்கிறேன்
@வல்லியம்மா உங்களுக்குத்தான் முதலில் நன்றி சொல்லவேண்டும் உங்கள் பதிவின் தாக்கம்தான் இது

ambi said...

neenga enna postu potta intha indian angel enna commentu podaraan? itha ellam keekarathu illayaa? Grrrrr.

parungo, poovoda serntha naarum manakkum! nu solra maathiri naan unga veetula just 2 days thangi evlooo chamathu aayitten(already chamathu thaan!). :D

@indianangel, nenaapu thaan pozhappa kedukkumaam! *ukkum*

ambi said...

//இப்பவும் நான் பெரியவன் தான் நீ சின்னவள்தான்.கீதா மேடம் கவனிக்க எங்களுக்கு எவ்வளவு பரந்த மனப்பான்மை.
//

nanna oraikkara maathiri sollungoo! periyavaa periyavaa thaan!
*ahem* Keshavaa! antha Geetha paatikku inimelaavathu buthiya kudu! :)

தி. ரா. ச.(T.R.C.) said...

@இந்தியதேவதையே வாருங்கள்.உங்கள் மனத்தை திருடியவளைப் பற்றி கொஞ்சம் அடயாளம் சொல்லுங்கள் அந்த கள்வனின் காதலியை கண்டு பிடிக்கிறேன்
@அம்பி அன்றையப் பொழுது மிக நல்ல படியாக போனதற்கு உனக்கு நன்றி.கண்ணாரக்காண்
பதுவும் பொய் காதரக்கேட்பதுவும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய். நீ பாத்தது எல்லாம் பொய்.அந்த 3 பேரைத் தவிர.
@கே.ஆர்.ஸ்.திட்டாதீங்க பின்னுட்டத்தையே பதிவா போட்டானேன்னு.நம்ப பதிவெல்லாம் சூர்யதேவனுக்கு தீபராதனை காட்டறாமதிரி உங்களுடைய பதிவைப் பார்த்தால்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஐஸ் தலைப்பை நான் வெக்கறதே இல்லை சுடறத்தான்.ஒரு பிளாக் ஆரம்பிக்கலாமே.உங்கள் குடும்பத்தில் எல்லோரும் சக்கைபோடுபோடுபோடுகிறார்களே.

சிவமுருகன் said...

அவன் எல்லாரிடத்திலும் இருக்கிறார் என்பது அறிந்தும் அவனிடத்தில் அவனே இல்லை என்பது அறிய தவரவிட்டு விட்டேன். அருமையான பதிவு, சிரிய பதிவானாலும் விளக்கமாக இருக்கிறது

Syam said...

அந்த அடியார் மாதிரியே நீங்களும் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சிட்டீங்களே :-)

Sasiprabha said...

Sir, unga blogukku varumbodhu edho kovilukkulla varradhu pola oru paravasam.. Ennoda manasu thaana negilndhu pogudhu.. Last time "Maal maruga.. Shanmuga" padichappavum ippidithaan aachu.
"Brindhaavana Sanchaari, Govardhana Giridhaari, Hrudhaya vihaari hari naarayana.."

Sasiprabha said...

Krishna thathuvame paripoorana samarpanam thaan illa.. Paripooranama samarpanam pannitta manasula endha thunbamum, dhukkamum vara vaapie illa.. Ellam avan seyal appidinnu ninnutomna vaalkaiyila ellaathaium ehdirthu ninnu samaalikkalaam. Aanaalum andha samarpanathula manasu nikkanum, edhu vandhaalum avana sandhega padaama nikkanum.. Indha paalum manasu, korangu manasaala adhu mudiya maatengudhu..
"Unnarulaale naan Uirodu irukkindren, Ullum puramum oru muruganaiye kaanben" Solli solli thaan paakuren.. "Manadhai adakka vazhi ondrum arindhilen" appidinnu polambi theekuren. Avan arul irukkunnu therinjum manasu thavippai nirutha maatengudhu.

Prasanna Parameswaran said...

@ ambi: umakku edhanal en meedhu kaattam ena theriyavillai, irundhaalum kadavulidam naan prarthikkaren, umadhu manam saanthi adaiya! :) oru vishayam - engo illadha kadavulin perula ithanai sandaigal nadakarthe, adukku badhila namma kan edhirla kashtapadra uyirgalidam anbu kaatudhal evvalvo mel! :) TRC sir solra maadhiri kadavulngravaru idhayathil dhaan irukkaru - idhula oru chinna thirutham ithayam illa ennangalil - nambikkaiyay avvalavudhaan! :)