Thursday, September 28, 2006

சங்கீத... ஞானமும்... பக்தியும்...



சங்கீத உலகத்தில் திரு. தியாகராஜஸ்வாமிகளைத் தெரியாதவர் இருக்கமுடியாது.ராமபிரான்மீதும் சீதாதேவியின்மீதும் அளவற்றபக்திகொண்டு அதன் பயனாக எளிமையான பாடல்களை சுந்தரத்தெலுங்கில் பாடியவர்.நமக்கு அவை பாடல்களாகத் தோன்றினாலும் அவை உண்மையில் அவருக்கும் ராமருக்கும் இடையே நடந்த உரையாடல்கள்.காசியில் மரிப்பவர்களின் காதில் சிவபெருமான் ராம நாமத்தைச் சொல்லி அவர்களை சொர்கத்திற்கு அழைத்துச்செல்வதாக புராணங்கள் கூறுகின்றன.
அதேபோல், நமது தியாகராஜரும் திருவய்யாற்றில் உள்ள ஐய்யாறாப்பன் என்கிற பிரணதார்த்திஹரன்,அறம்வளர்த்த நாயகி என்கிற தர்மஸம்வர்த்தனி ஆலயத்தில் சிவன் சந்நிதியில் ஒரு கோடி ராமஜபம் செய்து சித்தி பெற்றவர்.
பல வருடங்களக சங்கீதத்தை கேட்டு அதனால் விளைந்த கேள்வி ஞானத்தினால் சில பாடல்களுக்கு விளக்கம் சொல்லாம் என்று முயற்சிக்கிறேன்.இடைஇடையே பத்திராசல ராமதாசர்,அருணாசலக்கவிராயார்,அருணகிரியார் போன்றவர்களும் ராமனை எப்படி அனுபவித்தார்கள் என்ற ஒப்பு நோக்குதலையும் அளிக்கப்படும்.
நண்பர்கள் தங்களது கருத்துக்களையும்,குறைகளையும்,கிண்டல்களையும்,ஆப்புகளையும் வழக்கம் போல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முழுமுதற்க்கடவுளாம்,விநாயகனை தொழுது, வணங்கி ஆரம்பம்.

ராகம்; சௌராஷ்டிரம் ஸ்ரி கணபதினி

ஸ்ரி கணபதினி ஸேவிம்பராரே
ச்ரித மான்வுலாரா (ஸ்ரி)

வக்கதிபதி ஸுபூஜல் ஜேகொனி
பாக நடிம்புசுகொனு வெடலின் (ஸ்ரி)

பனஸ நாரிகேளாதி ஜம்பூ
பலமுலனாரகிஞ்சி
கனதரம்புகனு மஹிபை பதமுலு
கல்லு கல்லன நுஞ்சி
அனயமு ச்ரி ஹரி சரண்யுகமுலனு
ஹிருதயாம்புஜமுன நுஞ்சி
வினயமுனனு த்யாகராஜ வினுதுடு
விவதகதுல தித்தளங்குமனி வெடலின (ஸ்ரி)

இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல மனிதர்களே வரங்களை அள்ளித்தரும்
கணபதியை வணங்கிச்செல்ல வாருங்கள்

வாக்குக்கு அதிபதியான ஸரஸ்வதியின் கணவரான பிரும்மாவினாலும் மற்ற தேவர்களாலும் மிக நேர்த்தியகச் செய்யப்பட்ட பூஜையை ஏற்றுக்கொண்டு அதனால் உண்டாகிய சந்தோஷத்தால் மனமுவந்து தானே அழகாக நடனம் ஆடிக்கொண்டுவரும் நர்தன கணபதியை வணங்குவோம் வாருங்கள்


எளியதகவும் எங்கும் சிரமமில்லாமலும் கிடைக்ககூடிய பலாக்காய், தேங்காய்,நாகப்பழம் போன்றவற்றை அமுதமான உணவாகக்கொண்டும்,இந்தப்புண்ணிய பூமியின் மீது கால்களில் உள்ள சலங்கைகள் "ஜல் ஜல்" என்று ஸ்ப்தம் செய்ய நடனமாடிக்கொண்டும் அல்லும் பகலும் அனவரதமும் சரணாகதவத்சலனான மால்மருகனான முருகனின் மாமனாகிய மஹா விஷ்ணுவின் பதாரவிந்தங்களை தன்னுடைய ஹிருதயத்தில் வைத்துக்கொண்டும்,மிக விநயமுள்ள இந்த தியாகராஜனால் வணங்கப்படிகின்றவரும்,விதவிதமான தாளகதிகளுக்கு ஏற்ப "தித்தளாங்கு" என மலர்ந்தமுகத்துடன் ஆடிக்கொண்டு வரும்
அந்த கண்பதியை ஸேவிப்போம் வாருங்கள் நல்ல மனிதர்களே.


தியாகராஜரின் அழைப்பை ஏற்று வாருங்கள்! வணங்குவோம் கணபதியை! .


பாடலைக் கேட்க இங்கே செல்லவும்

20 comments:

Prasanna Parameswaran said...

romba nalla vilakkam sir! aana andha paatu padikkardhukkudhaan konjam kashtapattutaen!

sangeetha gnanam enakku suthama kedayadhu. சௌராஷ்டிரம் appadingara raagatha naan kelvipattadhe illa! pagirdhukondadharku mikka nandri! :)

தி. ரா. ச.(T.R.C.) said...

பாடல் சுட்டி சரியாக வரவில்லை.மன்னிக்கவும்.அம்பி கொஞ்சம் உதவி செய்.

துளசி கோபால் said...

புள்ளையார் அழகா வலம்புரியா இருக்கார்.

பண்டிகைகால வாழ்த்து(க்)கள்.

நம்ம வீட்டிலும் கொலு வச்சுருக்கு. முடிஞ்சா ஒரு நடை வந்துட்டுப் போங்க.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திராச
ராமனிடம் லயித்த தியாகராஜரைக் கூட நம்ம தும்பிக்கையான் விட்டு வைக்கல பாருங்க! அவர் கிட்ட இருந்து ஒரு பாட்டை வாங்கிட்டாரு!

பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடுமுன், திருவையாற்றில், இந்தக் கீர்த்தனையையும் "குருலேக யதவுண்டி" பாடலையும் பாடுவது வழக்கம்! சுட்டியில் பாடல் கேட்டேன். நல்ல வேகமாக அழகாகப் பாடியுள்ளார் மணி கிருஷ்ணசாமி.

//பனஸ நாரிகேளாதி ஜம்பூ//
பலா-தேங்காய்-நாவல்
வடமொழிப் பெயர்களை அறிந்து கொண்டேன்! நன்றி திராச.

//இடைஇடையே பத்திராசல ராமதாசர்,அருணாசலக்கவிராயார்,அருணகிரியார் போன்றவர்களும் ராமனை எப்படி அனுபவித்தார்கள் என்ற ஒப்பு நோக்குதலையும் அளிக்கப்படும்//

காத்து இருக்கிறோம், பெரிய விருந்து இருக்குன்னு சொல்லுங்க!

ராகவனும், குமரனும் தியாகராஜ கீர்த்தனைகளுக்குப் பொருள் சொல்லலாமே என்று என்னிடம் கேட்டனர். ஆகா 'குருவியின் தலையில் பனங்காயா? முடியுமா??' என்று நினைத்தேன். ஆனால் தக்க சமயத்தில் வந்து சிஷ்யனைக் காப்பாற்றிய குரு ஆகி விட்டீர்கள் :-)

ambi said...

nice write up. etha maathiri niraya ezhuthungo! thiyagarajar romba pidikkum. ulaga vishayangalil naattam illamal saintaave vaazhnthavar. atha vida his madam is simply a gem. evloo adjustment illa, unga Uma madam pola! :D

btw, surprisingly, i could manage to get the M-online link and hearing the song now! It seems U rectified that HTML code. :D

ambi said...

i'm also hearing the name of this raaga now only. thanks sir. :)

Porkodi (பொற்கொடி) said...

thondhi ganesa ellarayum kaapaathu :) sasi solra madri, edo kovilukulla entry tara madri feel pana vekringa :))

mela enna oru kaali padhicu, pinnuttamum ida mudiala?!

ambi said...

//நானும் கொஞ்ச நாள் பாட்டு கத்துண்டேன்//

@TRC sir, nalla velai, anniki naan paadi kaatren!nu veda nammai sothikalai. :) LOL
aprom ummachi kaapaathu!nu naanum en thangaiyum azhuthirupoom. illa sir..?

Sasiprabha said...

//மால்மருகனான மஹா விஷ்ணுவின்// Maal marugan Murugan thaane..

Karimugan paadham saranam adaiya isaiyaal azhaikkum thiygayyan paadal ethanai alagu.. Tamilila porul podalainaa enakku edhuvum purinjirukkaadhu.. Nalla paadal.

தி. ரா. ச.(T.R.C.) said...

ice has made the following comments "Good initiative and wonderful description!!Well done!!

Porkodi (பொற்கொடி) said...

@அம்பி:
அழுகையா?? ஓட்டம் இல்ல பிடிச்சுருப்போம் :)

Cogito said...

Wonderful initiative. Looking fwd to more such posts..

Geetha Sambasivam said...

அம்பிக்கெல்லாம் இந்தப் பாட்டுக்கு உதவி செய்யறதுன்னா என்னன்னே தெரியாது! பார்த்து சார், பாட்டோட ராகம் ஏதாவது மாறிப் போயிடப் போகுது. இதுக்கு சங்கீதம் தெரிஞ்சவங்களை உதவி கேளுங்க.

அப்புறம் தியாகராஜர் ஐயாறப்பன் கோவிலில் கரிகால் சோழனால் எழுப்பப்பட்ட "செம்பியன் மண்டபத்தில்" தான் இருந்து தியானம் செய்து பாடல்கள் இயற்றியதாகக் கூறினார்கள். கணபதியை வணங்குவதற்குத் தடை என்ன?

rnatesan said...

நல்ல மனிதர்களே என்று அழைத்து விட்டீர்கள் !!!பிறகு நான் வராமல் இருக்கமுடியுமா!!நல்ல முயற்சி!!ஜமாயுங்க!! எழுதியவுடன் மறக்காமல் ஒரு கார்ட் போட்டுடுங்க!!!
ஆமா இந்த அம்பி இன்னா கம்ண்ட் இங்லிசிலே வுடுராப்பல.ஒண்ணும் பிரியிலயே!!தமிழ் வராதா!!

rnatesan said...

நல்ல மனிதர்களே என்று அழைத்து விட்டீர்கள் !!!பிறகு நான் வராமல் இருக்கமுடியுமா!!நல்ல முயற்சி!!ஜமாயுங்க!! எழுதியவுடன் மறக்காமல் ஒரு கார்ட் போட்டுடுங்க!!!
ஆமா இந்த அம்பி இன்னா கம்ண்ட் இங்லிசிலே வுடுராப்பல.ஒண்ணும் பிரியிலயே!!தமிழ் வராதா!!

Syam said...

அண்ணே நானும் சங்கீதத்துல ஞான சூனியம்...இருந்தாலும் உங்க பதிவுகள படிச்சு நானும் பாக்கியராஜ் ரேஞ்சுல பாட்டு பாட ஆரம்பிச்சாலும் சந்தேகம் இல்ல :-)

குமரன் (Kumaran) said...

பேஷ். பேஷ். ரொம்ப நல்லா இருக்கு. :-) தியாகராஜ கிருதிகளுக்குப் பொருள் சொல்லுங்கள் என்று உங்களிடம் கேட்காமல் விட்டுவிட்டேனே. நீங்களே எங்கள் விருப்பத்தினை அறிந்து கொண்டு தொடங்கியதற்கு நன்றி தி.ரா.ச.

கணபதியையும் சேவித்தேன். நன்றி.

மு.கார்த்திகேயன் said...

எப்படி ஐயா இப்படி எல்லாம் கலக்குறீங்க.. நிறைய விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன்.. ரொம்ப நாளா வர முடியல.. மன்னிச்சுக்கோங்க

ambi said...

//அழுகையா?? ஓட்டம் இல்ல பிடிச்சுருப்போம் :)
//
@porkodi, apdi sollumaa en pasamalare! :D

//அம்பிக்கெல்லாம் இந்தப் பாட்டுக்கு உதவி செய்யறதுன்னா என்னன்னே தெரியாது! பார்த்து சார், பாட்டோட ராகம் ஏதாவது மாறிப் போயிடப் போகுது.//
@geetha paati, hello, he asked for the HTML linking. paarunga, en pera sonnavudane, he got the idea without my help. :D
raagam maarinaalum, naala than irukkum. :D

//இதுக்கு சங்கீதம் தெரிஞ்சவங்களை உதவி கேளுங்க.//
Athunaala thaan unga kitta uthavi kekkalai. :D

//ஆமா இந்த அம்பி இன்னா கம்ண்ட் இங்லிசிலே வுடுராப்பல.ஒண்ணும் பிரியிலயே!!தமிழ் வராதா!! //
@rnateshan, ahaa, vanga anna vanga! ellam varum, aapichla work jaasthi. :D

VSK said...

பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக்கூடம் நானறியேன் என்ற அளவில் இருக்கும் எனக்கு மிகவும் உதவியான பதிவு இது!

தொடருங்கள், தி.ரா.ச.