விதியை.... மதியால்..வெல்லலாம்
காளிதாசனுக்கு அறிமுகம் தேவையில்லை.உபமான..உபமேயத்திற்கு அவன் தான் சக்ரவர்த்தி.உபமான--உபமேயம் என்பது தெரியாத விஷயத்தை தெரிந்த விஷயத்தின் மூலமாக தெரிந்து கொள்வது. காளிதாசன் மீதும் அவனது புலமைமீதும் எல்லா கவிகளுக்கும் பொறாமை,அவனைபழிவாங்குவதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருந்தனர். மகாராஜாவிற்கு குழந்தை பிறந்.தது. எல்லோரும் குழ்ந்தயையும் ராஜனையும் பாடி பரிசுபெற்றுச் செல்வது வழக்கம். எல்லாக்கவிகளும் ஒன்றுகூடி சதி செய்து காளிதாசனை பழிவாங்க முடிவு செய்தனர்.
மன்னருடைய குழந்தை மன்னரைவிட புத்திசாலியா என்று கேட்கவேண்டும்.காளிதசன் ஆம் என்ற முறையில் உபமானம் சொன்னாலும்,இல்லை என்ற முறையில் சொன்னாலும் ராஜனையோ அல்லது ரஜகுமரனையொ பழித்துப்பேசிய ராஜ குற்றத்துக்கு ஆளாகவேண்டும்.அரசனிடமிருந்து நிச்சயம் தண்டனை கிடைக்கும்
காளிதாசன் முறை வந்தது. மஹாரஜாவும் காளிதாசனை பார்த்துக்கேட்டான் "என் இனிய நண்பரே என்குழந்தை எப்படி இருக்கிறது" என்று கூறி ஆசிவழங்கச்சொன்னான். காளிதேவியின் அருளால் சதியைஉணர்ந்த காளிதாசன் சொன்னான்.
"தீப இப ப்ரதீபாது" அரசே குழந்தை எப்படி இருக்கிறான் தெரியுமா ஒரு விளக்கிலிருந்து மற்றொரு விளக்கை ஏற்றிவைத்தால் ஒளி எப்படி ஒரே மாதிரி ப்ரகாசமாக இருக்குமோ அது போலத்தான் இருக்கிறான் என்றான். கவிங்ஞர்கள் வாயடைத்து நிற்க காளிதாசனுக்கு அரசன் நிறைய வெகுமதி அளித்தான்
கொசுறு
ஐயர்களுக்கும் நாயக்கர்களுக்கும் எப்போதும் எதாவது ஒரு கச்சேரியில் (கோர்ட்டில்)சண்டையும் வழக்கும் நடந்து கொண்டு இருக்கும் 1960 களில்.ஆனால் எனக்கு தெரிந்தவரை ஒரே ஒரு கச்சேரியில் மட்டும் இருவரும் சமாதானமாக சண்டையில்லாமல் .கணக்கு வழக்குகள் சரியாக இருந்து பரிமளிக்கச்செய்தனர். அது எந்த கச்சேரி தெரியுமா.?
இந்த சங்கீத கச்சேரிதான்.
மதுரை மணி ஐயர்---வாய்ப்பாட்டு
கோவிந்தசாமி நாயக்கர்---வயலின்
11 comments:
//ஒரு விளக்கிலிருந்து மற்றொரு விளக்கை ஏற்றிவைத்தால் ஒளி எப்படி ஒரே மாதிரி ப்ரகாசமாக இருக்குமோ அது போலத்தான் //
அருமையான விளக்கம். காளிதாசன் நம்ப இரண்டு பேர் மாதிரியும் ரொம்ப புத்திஷாலி!னு சொல்லுங்கோ. (இதுக்கு உங்கள் பதில் ஆமா? இல்லையா? ஹி. ஹி)
//ஒரு விளக்கிலிருந்து மற்றொரு விளக்கை ஏற்றிவைத்தால் ஒளி எப்படி ஒரே மாதிரி ப்ரகாசமாக இருக்குமோ அது போலத்தான் //
What a brilliant reply! Nice post. Birbal kadhailam kooda nalla irukkum. Edhavadhu therija podungo.
@ ambi: பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்! தி.ரா.ச புத்திசாலின்னு எல்லாருக்கும் தெரியும், நீர் அவருடன் பொருந்தாமல் சொன்னதை யாம் வன்மையாக கண்டிக்கிறோம்! எப்படி இருக்கு அவருக்காக என்னோட பதில் :)
@அம்பி இதுக்கு என் பதில் "இல்லை" தான் காரணம்
1) காளிதாசன் நம் இருவரையும் விட மிக புதிசாலி
2)ஆமாம் என்று சொல்லி என் நிலையை உன் நிலைக்கு கீழே இறக்க விரும்பவில்லை.
@ப்ரியா காளிதாசன் பார்ட் (2) முடித்துவிட்டு பிறகு அடுதவர்களுக்கு வருகிறேன். நன்றி
@ப்ரசன்னா எனக்காக வக்காலத்து வங்கினத்துக்கு நன்றி.இதுக்கே நீங்களெல்லாம் இப்படி துடிச்சிங்கன்ன எனக்கு 23 ,24 ஆம் தேதிய நினைச்சா பயமா இருக்கு. ஆனா என்ன சமாளிச்சுக்கலாம்...சுனாமியையே நேர்லே பார்த்தவன் அதுவும் எங்கே கடலூர் பீச்சிலே.
சரி வேதா ரொம்ப குளுருது. இப்படியெல்லாம் சொன்னலும் நான் விடமாட்டேன்.உன் பதிவில் போட மறந்தது.
குதிரைக்கு கிழே பாதாளம் குதிரைக்கு மேலே வேதாளம்.! அம்பி இப்பொ திருப்தியா?
அம்பிக்கு நீ சொல்லமல் சொன்ன பதில் தான் சரியானது.
ஐய்! நானும் சுனாமி நேர்ல பாத்தவ ;) (நீ போனதால தான் சுனாமியே வந்துதுனு யாரும் குத்த வேணாம் )
கதை சூப்பர்.. ஐயா 23,24- 2 நாளும் அம்பி அண்ணாவ 4 இடத்துக்கு கூட்டி போய் 8 நல்ல விஷயத்த தலைல ஏத்தி விடுங்க :)
grrrrrrrrrrrrrrrrr சுனாமி வந்தாச்சு தெரியும் இல்லை?
@வேதா ரொம்ப டாங்ஸு, தலைவினு அங்கீகரிச்சதுக்கு.
ஓ. இதிலிருந்து தான் ‘ப்ரதீப்’ என்று பெயர் வைக்கும் வழக்கம் வந்ததா? :-) ப்ரதீப் என்று பெயர் வைக்கும் பெற்றோர் எல்லாம் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறார்கள். இல்லையா? :-)
ஓ. இதிலிருந்து தான் ‘ப்ரதீப்’ என்று பெயர் வைக்கும் வழக்கம் வந்ததா? :-) ப்ரதீப் என்று பெயர் வைக்கும் பெற்றோர் எல்லாம் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறார்கள். இல்லையா? :-)
Post a Comment