Friday, September 22, 2006

உயிர்கள் இடத்தில் அன்பு வேணும் இது வாழும் முறையடி பாப்பா

தோற்றம் 10/12/1995 மறைவு16/09/2004
அன்று மாலை எங்கள் வீட்டுக்கு அவள் புதிய வரவு.சிறிய கண்ணை சிமிட்டிக்கொண்டு பயத்துடன் எங்களை பரிதாபாமாக பார்த்தது.அன்றிலிருந்து அவள் எங்கள் குடும்பத்தில் ஒருவராகி விட்டாள்.என் மூன்று குழந்தைகளுக்கும் அவளோடு விளையாடுவதும்,போஷிப்பதும்தான் முக்கிய வேலையாகி விட்டது, அதிலும் என் மூத்த மகனுக்கு அதுவேதான் உலகம் என்று ஆகிவிட்டது. அவளுக்கு டெடி என்று பெயர்வைத்தோம்.அவளும் அவர்களுக்கு சமானமாக விளையாடும்.
ஒரு வருடத்தில் நன்றாக வளர்ந்து விட்டாள்,புதிய வரவுகளுக்கு சிம்ம சொப்பனமாகிவிட்டாள்.இருந்தாலும் எங்களுக்கு, காவல் காப்பாது,பேப்பர் கொண்டு தருவது போன்ற சிறுவேலைகளை செய்துவிட்டு பிஸ்கெட்டுக்காக எங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பாள்.தரவில்லையென்றால் அதிகாரத்தோடு கேட்டு வங்கிக்கொள்ளுவாள். சொந்தப் பெண் போலவே அதற்கும் பிரசவம் பார்த்து அதன் 9 குட்டிகளையும் காலேஜில் முக்கிய பரிக்ஷை இருந்தாலும் மிக நேர்த்தியாகப் பார்த்துக்கொண்டான் என் மகன்.அதன் குட்டிகளை பிரிய மனமில்லாமல் நல்ல ஆளாகப் பார்த்து தானம் செய்தான்.
வாடகை வீட்டில் இருந்ததால் சில சமயம் வீட்டு உரிமையாளருக்கும் எங்களுக்கும் சிக்கல் வந்தது.நாங்களும் வீடு மாறிக்கொண்டே இருந்தோம் அவளும் எங்களுடன் வந்து கொண்டே இருந்தாள் நாங்களும் அவளுக்காக சில தியாகங்களைச்செய்ய வேண்டியதாயிற்று. குடும்பத்தில் எல்லொரும் ஒரே சமயத்தில் வேளியே போகமாட்டோம்.அப்படியே போனாலும் மாலை சீக்கிரமெ வந்துவிடுவோம். ஆனால் இதுஎல்லாம் அவள் எங்களிடம் காட்டிய அன்பிற்கும் பாசத்திற்கும் ஈடுஇணை இல்லாதது. அலுவல் காரணமாக இரவு 3 மணிக்கும் 4 மணிக்கும் வீடு திரும்பினாலும் வாசலிலேயே காத்துக்கொண்டு இருப்பாள்.விடுமுறை வந்து விட்டால் டெல்லி,மும்பையிலிருந்து அவளுடன் விளையாட குழந்தைகள் கூடிவிடுவார்கள்.
இப்படி அவள் எங்களுடன் ஒருமித்து இருந்தபோது திடீரென்று ஒரு நாள் மாலை எனக்கு வீட்டிலிருந்து போன் "அப்பா டெடிக்கு உடம்பு சரியில்லை என்னமோ பன்னறது சீக்கிரம் வா".மிகமுக்கிய மீட்டிங்கில் இருந்த நான் 8 மணிக்குதான் போக முடிந்தது அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.நீண்ட நாள்களுக்கு பிறகு நான் வாய் விட்டு ஓ என்று கதறினேன்.,என் குடும்பத்தாரும் அழுதனர்.அவளூடைய இறுதியாத்திரையை முடித்துவிட்டு கனத்த மனத்துடன் வீடு திரும்பினோம். சிங்கபூரிலிருந்த என் மகனை தேற்ற முடியவில்லை.
எனக்கு அன்பு ,பாசம்,விஸ்வாசம் இவைகள் என்னவென்று போதிப்பதாவதற்க்காவே என்னுடன் 8 வருடங்கள் இருந்து விட்டுச் சென்றதோ?இரண்டு வருடங்கள் ஆனாலும் மறக்க முடியவில்லை.டெடி ஆன்மா சாந்தி அடையட்டும்.

29 comments:

மு.கார்த்திகேயன் said...

TRC sir, enakku en tommyai gyabakappadutheetteeenga.. unmayile intha pirannikalai vittu piriyarathu romba kashtamaa irukkum.. innamum en manachula athukkunnu oru thani seat irukku..

indianangel said...

உருக்கமான பதிவு! எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்கிறத அழகாகவும் ஆழமாகவும் எடுத்து சொல்லியிருக்கீங்க!

தி. ரா. ச.(T.R.C.) said...

ICE sends the following message

Though i never had a pet when i read ur post i can und
the invaluable affection towards each other!! I admire
ur writing style..
ICE

ambi said...

nice writing sir. dogs are always spl and far better than some human.
remembering a TMS song now,"ore oru orile"
my eyes were filled up. we(mybrother) used to feed dinner evryday to our street dog. paavam athunga. i wonder how they withstand rain/snow in all seasons. :(

Sasiprabha said...

Naan kutti pullaiya irundhappo oru karuppu Doggie onnu irundhadhu. Adhu en kitta romba chellam konjum. En kooda oru poonai vilaanduchunnu adha kadichirichu. Naan oru kili valathen.. Adhaium kadichirichu.. But adha yaaro adichu konnutaanga..

Appuram paati veetla oru sevalai doggi irundhudhu.. Leave appo anga pogumpodhu vaala aatite first adhudhaan vandhu ennai welcome pannum.. Ethanai naal kalichu ponaalum ennai paatha odane konjittu varum.. Adhu saagumbodhu naan mattum pakkathula irundhen.. mogatha paathutte mellama kathikitte sethuduchu.. Appuram adha podhachu angana oru thennai maram vechom..

Ippo naan irukkura theruvila oru vellai doggie irukku.. Adhu naan dhoorathula vandhuttu irundhaale odi vandhu enkoodave nadakka aarambikkum.. veedu varaikkum kooda vandhu naan gate moodina appuram thaan andha edatha vitte nagarum.. Theruvila ellarum sirippaanga.. Eppavaavadhu en kooda varumbodhu thittinaa mogatha oru maadhiri vechikittu thirumbi poidum..

Cogito said...

Nice post.

Some minor corrections.Teddy was born on 12/12/95 (Superstar B'day) and it came to our house 2 weeks later (I think in between Christmas & New yr). Needless to say, I miss her even today.

Priya said...

Really touching sir...நம்ம family ல ஒருத்தர நிரந்தரமா பிரியரது ரொம்ப கஷ்டம் இல்ல? அது family member ஆனாலும் Pet ஆனாலும்.

வேதா said...

வளர்ப்பு பிராணிகளில் எனக்கு இஷ்டம் இல்லையென்றாலும் உங்கள் துக்கத்தைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.

தி. ரா. ச.(T.R.C.) said...

@வேதா
ஏதோ கேதாரிநாத்தில் குதிரை கொஞ்சம் மக்கர் பண்ணதால் பிராணிகளிடத்தில் வெறுப்பு கூடாது.அந்த வளர்ப்பு பிராணி மட்டும் இல்லாது இருந்தால் பகவான் தரிசனம் கிடைத்து இருக்குமா?

@பிரியா பெட் என்றால் இன்னும் அதிகம் இருக்கும் காலம் கொஞ்சம்.
@அருண் குறைகளை சுட்டி காட்டியதற்கு நன்றி.
@சசி அந்த நாய்க்கு ஒரு நாள் கொஞ்சம் பிஸ்கட் கொடுத்துப்பாருங்கள் உங்கள் நண்பன்,மற்றும் காவல்காரன் ஆகிவிடும்
@அம்பி ஆமாம் நீ சொல்வது சரிதான். ஆனால் நீ எப்பவுமே உள்குத்து இல்லாமல் சொல்லமாட்டியெ யாரோ அந்த மனிதன்.நானாக இருக்கக்கூடாது இப்போதான் சசி கிட்டே உள்குத்து வங்கின்டேன் சொல்லாறுன்னு.ஆமாம் நீ பாலாறுன்னா அடுத்தவன் என்ன ஆறு.
@கார்திக் அமெரிக்காவில் பெட் பிராணிகளை ஒரு நாள் அலுவலகத்துக்கூட கொண்டு செல்லலாமாமே நன்றி வருகைக்கு.
@இந்தியன் ஏஞ்சில் அன்பு என்பது விலைக்கு வாங்க முடியாது இன்னும் பண்டமாற்றுமுறைதான்
@ஐஸ் இப்போதுகூட ஒரு பிராணியை வளர்க்கலாமே

ambi said...

//ஏதோ கேதாரிநாத்தில் குதிரை கொஞ்சம் மக்கர் பண்ணதால் பிராணிகளிடத்தில் வெறுப்பு கூடாது.//
LOL. apdi podunga aruvaala! :D

ullkuthu ellam onnum illai. peel pani thaan sonnen!(with paavamana looku) :D

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி குதிரைமேலே தப்பே கிடையாது.அந்த குதிரைக்காரன் பன்ன தப்பு இரண்டு.குதிரைக்கு பாதாளத்துக்கு மேலே பயப்படாம போக கத்துக்கொடுத்தவன் வேதாளத்துக்கு மேலே பயப்படாமா போக கத்துகொடுக்கலை

வேதா said...

@அம்பி,
apdi podunga aruvaala! :D
ஏதோ கூட்டத்துக்கு நான் வரலைன்னா இவ்ளோ தைரியமா? அருவா கடைசியில் உங்க கழுத்து மேல போட்ற போறார் ஜாக்கிரதை:)

@திராச,
எனக்கு பிராணிகளிடம் வெறுப்பெல்லாம் இல்லை ஆனா வீட்டுல வளர்க்க பிடிக்காது அவ்ளோ தான். விட்டா பிராணிகள் நல சங்கத்துல சொல்லி என்னை உள்ள தள்ளிடுவீங்க போல.
ஏன் சார் இந்த சும்மா கிடக்கற ஊதி கெடுக்கற மாதிரி கீதா மேடம் இல்லாத குறையை நீங்க தீர்த்து வைக்கறீங்களா?:)

ambi said...

//எனக்கு பிராணிகளிடம் வெறுப்பெல்லாம் இல்லை ஆனா வீட்டுல வளர்க்க பிடிக்காது //
yeeh, yeeh, paavam, avanga veetula already vedava saapadu pottu valakaraanga illa! :) enna TRC sir, correcttaa?

வேதா said...

@அம்பி,
ஏன் உங்க வீட்டுலேயும் உங்களுக்கு சாப்பாடு போட்டு தான வளர்த்தாங்க? ஆனாலும் அம்பி இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்டேன் ஏதோ போனா போறதுன்னு பாத்தா ரொம்ப எகிறீங்க, இதுக்கெல்லாம் என் தலைவி வந்து பதில் சொல்வாங்க:)(அப்ப அப்டியே அடக்கி வாசிச்சு சமத்து மாதிரி சீன் போட கூடாது, தைரியம் இருந்தா பேசி பாருங்க தலைவிக்கு எதிரா:)

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி இப்படியெல்லாம்சொல்லி என்னை சரின்னு சொல்லவெக்ககூடாது.நான்பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன்.ஆமாம் குதிரைக்காரன் பண்ண இரண்டாவது தப்பு என்னன்னு கேட்கவேயில்லையே.நாரயணா

பொற்கொடி said...

enaku mela irundha veetla kuda johny nu oru pet irundhudhu.. black a romba perisa irukum.. enaku ada pathale kolai nadungum :( apram na valarndu bayam pogardukulla adhu sethu pochu..

anda veetla irundavanga dint have a child.. adnala ida kuzhandai vida jaastiya pasam kamichanga :(

தி. ரா. ச.(T.R.C.) said...

கரெக்ட்தான் வேதா நீங்க சொல்லரது.தலைவி வந்தாதான் இந்த அம்பி அடங்குவான்.இருந்தாலும் தலைவி இந்த மாதிரி பண்ணக்கூடாது. மொத்தபதிலையும் கட்டி டெல்லிக்கி எடுத்துண்டு போயிட்டா பாவம் நீங்கள்ளாம் எப்படி பதில் போடுவது. அம்பி ஸைலெண்ட்டா இருக்கும் போதே தெரியலே அவன் தப்பை ஒத்துகிறான்னு.அம்பி உங்களுக்கு பயந்தே கொஞ்சம் அடங்கிட்டான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

கரெக்ட் பொற்கொடி நீங்க சொல்லறது.மனிதர்கள் மறைவைவிட அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவது வளர்ப்பு பிராணிகள் மறைவுதான்.உங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவுங்க.மேல் வீட்டில் குழந்தை இல்லாததால் நாய் வளர்த்தாங்க கீழ் வீட்டில் நாய் இல்லாததால் .........
மாடி வீட்டுக்காரங்களுக்கு உன்னைப் பார்த்தால் குலை நடுக்கமாமே.

வேதா said...

குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலும் ஆட்டி விடறது பத்தி கேள்விப்பட்டுருக்கீங்களா? அது என்னமோ எனக்கும் அம்பிக்கும் நீங்க கொடுக்கற பின்னூட்டங்கள்(அதாவது கொளுத்திப் போட்றது)பார்த்தா அதான் தோன்றது, அம்பி நான் புத்திஷாலி அதைப் எப்பவோ புரிஞ்சுண்டேன்,நீ எப்படின்னு நீயே முடிவு பண்ணிக்கோ:)

பொற்கொடி said...

நாயாவது பரவாயில்ல நன்றியுள்ளது.. ஆனா நரி ?? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குடும்பத்தில் எல்லொரும் ஒரே சமயத்தில் வேளியே போகமாட்டோம்.அப்படியே போனாலும் மாலை சீக்கிரமெ வந்துவிடுவோம்//

மிக மிக உண்மை. பல இல்லங்களில் நான் பார்த்ததுண்டு. கல்யாணத்துக்கு வந்து விட்டு அவசர அவசரமாய் கிளம்பிய பக்கத்து வீட்டு அம்மாவை என் சித்தி ஏன் என்று கேட்க, நீங்கள் சொன்னதே தான் அந்தம்மாவும் சொன்னார்கள். அவர்கள் சென்றவுடன் என் சித்தி அவர்களைக் கேலி செய்ய, நான் சித்தியை விட்ட டோஸ் இன்னும் ஞாபகம் இருக்குது.

உருக்கமான பதிவு திராச!

golmaalgopal said...

nice post....my first time here....me too had a dog...illa frnd...illa family memberne sollalaam....i was reminded of her when i read ur post....it stayed with us for 12 yrs...even now i miss her...hmmmm i could understand how u feel....

பொற்கொடி said...

appuram, unga thangamani konjam rest eduthangala illiya? ambi kilambitaru illa adan..

கீதா சாம்பசிவம் said...

எங்க வீட்டிலேயும் இதே மாதிரி ஒரு கதை உண்டு. மோதினு பேரு அவனுக்கு. பின்னாலே நேரம் இருந்தா எழுதறேன். ஆனால் இன்னிக்கு வரை அவனை என்னாலே மறக்க முடியலை. எங்க வீட்டில் யாருமே எனக்கு முன்னால் அவனைப் பத்திப் பேசறது இல்லை.

Syam said...

அண்ணே உங்கள் பதிவுக்கு வரனும்னு ரொம்ப நாள் ஆசை இன்னைக்கு தான் விசா கிடச்சுது...இதே சோகத்தை நானும் நிறைய தடவை அனுபவித்து இருக்கிறேன்...டாமி,ஜிம்மி,ராஜா,டாமி (2 வது)...அப்போல்லாம் ரொம்ப கஷ்டமா இருந்தது....

துளசி கோபால் said...

அடக் கடவுளே(-:

இன்னிக்குத்தான் உங்க வீட்டுக்கு வந்தேன் நம்ம KRS வீட்டு வழியா.

அய்யோ, வளர்த்தது பிரியும்போது ஏற்படற துக்கம் இருக்கே, சொல்லி மாளாது.

ரொம்பப் பட்டுட்டேன்.

இப்ப இருக்கறவனுக்கு ச்க்கரை வியாதி. முத்திப்போச்சு. எங்கே 'கோமா' லே
விழுந்துருவானோன்னு ஒரே நடுக்கம். அசையாமப் படுத்துத் தூங்குனா பயம் வந்துரும்(-:

rnateshan. said...

anaiththu அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு !!இதுதான் எத்தனை உய்ர்வு!!ஒரு கிளி ஒன்றினை வளர்த்து அது மறைந்ததும் இப்படித்தான் நீண்ட நாட்களுக்கு அழுதுக் கொண்டிருந்தோம்!!
கடலூரில் ஒரு முரண்பாடு!!திருவஹீந்திபுரம் போகும் வழியில் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட கசாப்பு கடைகள் உள்ளன.அவ்வாயில்லா ஜீவன்களை வெட்டி திங்கவிடும் ,தொங்கவிடும் காட்சியை பார்த்துக் கொண்டுதான் பெருமாளை தரிசிக்க செல்லவேண்டும்.
கேட்டா நம்மளை வெட்ட வரான்!!

rnateshan. said...

anaiththu அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு !!இதுதான் எத்தனை உய்ர்வு!!ஒரு கிளி ஒன்றினை வளர்த்து அது மறைந்ததும் இப்படித்தான் நீண்ட நாட்களுக்கு அழுதுக் கொண்டிருந்தோம்!!
கடலூரில் ஒரு முரண்பாடு!!திருவஹீந்திபுரம் போகும் வழியில் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட கசாப்பு கடைகள் உள்ளன.அவ்வாயில்லா ஜீவன்களை வெட்டி திங்கவிடும் ,தொங்கவிடும் காட்சியை பார்த்துக் கொண்டுதான் பெருமாளை தரிசிக்க செல்லவேண்டும்.
கேட்டா நம்மளை வெட்ட வரான்!!

rnateshan. said...

anaiththu அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு !!இதுதான் எத்தனை உய்ர்வு!!ஒரு கிளி ஒன்றினை வளர்த்து அது மறைந்ததும் இப்படித்தான் நீண்ட நாட்களுக்கு அழுதுக் கொண்டிருந்தோம்!!
கடலூரில் ஒரு முரண்பாடு!!திருவஹீந்திபுரம் போகும் வழியில் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட கசாப்பு கடைகள் உள்ளன.அவ்வாயில்லா ஜீவன்களை வெட்டி திங்கவிடும் ,தொங்கவிடும் காட்சியை பார்த்துக் கொண்டுதான் பெருமாளை தரிசிக்க செல்லவேண்டும்.
கேட்டா நம்மளை வெட்ட வரான்!!