Monday, December 04, 2006

வாழு.....வாழவிடு....


உலகத்தில் மிக வேகமாக அழிந்துவரும் விலங்கினத்தில் புலிதான் முதலிடம் வகிக்கிறது.வெங்கண் சிவந்து வடிவால் முறுக்கி சீறிப்பாயும் இந்தப் புலி இனம் இப்படியே போயிக்கொண்டு இருந்தால் 2020யில் பார்க்கவே முடியாது என்று புலி இயல் வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.
1920களில் ஒரு லக்ஷ்மாக இருந்த இதன் எண்ணிக்கை இப்போது5000 முதல் 7000வரைதான் உள்ளது.முதலில் எட்டுவகை புலிகள் இருந்தது அதில் பாலி,கேப்சிகன்,ஜாவன் வ்கைகள் அறவே அழிந்த நிலையில் பெங்கால்,சைபீரியன்,இந்தோசைனா,சுமத்ரான்,தெற்குசைனா இந்த ஐந்து வகைகளும் வாழ்வதற்குப் போராடிக் கொண்டு இருக்கின்றன
இப்போது இந்தியாவில்600 முதல் 800வரைஎண்ணிக்கையில் புலிகள் இருந்து வருகின்றன.மனிதனின்சந்தோஷத்திற்காகவும்,விளையாட்டிற்காகவும் அதன் தோலுக்கவும் புலிகள் திருட்டுத்தனமாக வேட்டையாடப்படுகின்றன.புலிகளின் உணவுபெரும்பாலும் மான்,காட்டெருமை,மாடு,பன்றிதான்.ஆனால் வயதான வேட்டைக்குச் செல்ல முடியாத புலிகள்தான் மனிதனைத்தின்னும்.புலிகள் மனிதனைகண்டு அஞ்சி ஒடி ஓளிந்து கொள்ளும்.புலியினுடைய தோலை கள்ள மார்கெட்டில் USS$ 10000(Rs.4,50,00)க்கு விற்கப் படுகிறது.

வெள்ளைப் புலிகள் இந்தியாவில் மட்டும்தான் உருவக்கப்படுகின்றன.இயற்கையிலேயே கருப்பு வரிகளும் நீல நிறக்கண்களும் பார்க்க மிக அழகாகவும் அருகில் சென்றால் ஆபத்தை விளைவிக்கும் குணமும் கொண்டவை.தவிர்க்கப்பட்ட இனச்சேர்க்கையின் மூலமாகத்தான் இவைகள் உருவாகின்றன.
இந்த அரிய இனத்தை பாதுகாக்க வேண்டிய முயற்சிகளைச் செய்யுவோம்.இந்த அழகில் புலி இந்தியாவின் தேசிய மிருகம் வேறு.அதென்னவோ தெரியவில்லை நமக்கு தேசிய விலங்கு(புலி)தேசியப் பறவை(மயில்),தேசியத்தந்தை(மஹாத்மா காந்தி)இதெல்லாம் கொல்லுவதற்காத்தான் என்ற எண்ணம். அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு நாமும் வாழ்வோம் புலியையும் வாழவைப்போம்

10 comments:

Cogito said...

Tiger conservation is of utmost importance not just because Tiger is our national animal. Its critical in maintain the ecological balance.

Having traveled in person to several tiger sanctuaries in India , here are my 2 cents :

1.India lacks stringent laws for prosecutions in wildlife poaching.

2. They need to engage more closely with NGO's and International organizations to complement the existing security force.

3.The habitation loss in forests has created a conflict between tiger's territories and human habitats (For example in Sariska in Rajasthan, humans walk freely into the sanctuary because here is an ancient temple inside !).

4.Wildlife conservation has never been accorded the priority that it deserves. we have been more reactive than pro-active.

It would be a sheer tragedy and shame for humans if these magnificent animals are wiped out.

நன்மனம் said...

//It would be a sheer tragedy and shame for humans if these magnificent animals are wiped out. //

i second this.

Sandai-Kozhi said...

very informative.thats very true,our nation leaders are totally ignoring vital issues like this.When are we going to learn?--SKM

தி. ரா. ச.(T.R.C.) said...

@cogito i know that this is a favourite subject of yours.still i ventured with my little knowledge to atleast educate people in this matter. Thankyou for u r comments.

தி. ரா. ச.(T.R.C.) said...

@nanmanam poaching should be stopped by means of stingent punishment.Human beeings should not disturb tigers inthe forest as we donot want they come and disturb our peaceful life. Thanks for u r visit.

தி. ரா. ச.(T.R.C.) said...

@SKM thanks fot u r concern on this issue and support.If a tiger kills a man then the govt. issue a shooting order to kill it;whereas if man kills a tiger for sports,pleasure etc., similar order are not issued against such persons. Probably this should havebeen included as one of the condition in the world bank loan disbursements then our Govt would have accepted.The pity is we are more interested in regulated by others than to have a self regulation.

இலவசக்கொத்தனார் said...

நல்ல பதிவு திரச. இது போல் மேலும் மேலும் பல தகவல்களை சொல்லுங்கள்.

ஷைலஜா said...

அரிய செய்தி...சிந்திக்கவேண்டிய செய்தியும்கூட.
அளித்தமைக்கு நன்றி திராச
ஷைலஜா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அதென்னவோ தெரியவில்லை நமக்கு தேசிய விலங்கு(புலி)தேசியப் பறவை(மயில்),தேசியத்தந்தை(மஹாத்மா காந்தி)இதெல்லாம் கொல்லுவதற்காத்தான் என்ற எண்ணம். அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு நாமும் வாழ்வோம் புலியையும் வாழவைப்போம்//

அண்ணா!
நல்ல உச்சந்தலையடி!
அருமையான தகவல்கள்;அத்துடன் வருத்தமான செய்தியும் கூட ஏன்? இந்த மனிதன் இயற்கையை இயற்கையாக ரசிக்கத் தெரியாமல் இருக்கிறான்.
தொலைக்காட்சியில் இந்த விவரணச்சித்திரங்கள் பார்ப்பேன். தகவல்களும் புள்ளிவிபரங்களும் வேதனைதரும்

தி. ரா. ச.(T.R.C.) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன்,ஷைலஜா.