சிலசமயம் பாடல்கள் பாடியவர்களால் பெருமை பெறும். சில சமயம் படியவர்கள் பாட்டினால் பெருமை பெறுவார்கள்.பாடியவர்களாலும் பாட்டை எழுதியவர்களாலும் பாடல் பெருமை பெறும். அந்த மூன்றாம்வகையைச் சேர்ந்ததுதான் இந்தப் பாடல்.பசுக்களையும்(விலங்கினத்தையும்) குழந்தைகளையும் மயங்கச்செய்யும் கீதம்.மீரா படத்திற்காக திரு பாபநாசம் சிவன் எழுதி,எம்.ஸ் அம்மா அவர்கள் தன் இனிய குரலால் எல்லோரையும் கவர்ந்த பாடல்.இதற்கு இசை அமைத்தவர் திரு ஸ்.வி.வெங்கடராமன் என்று நினைக்கிறேன்.கல்லையும் கனிய வைக்கும் கீதம் உங்களையும் நிச்சியமாக கனியவைக்கும்.எம்.ஸ் அம்மாவின் பிறந்த நாள் அன்று போடவேண்டும் என்று நினைத்திருந்தேன் அன்று வெளியூர் சென்று இருந்த காரணத்தால் முடியவில்லை. காற்றினிலே வரும் கீதம்
18 comments:
Beautiful!Wonderful!Thanks for sharing.__SKM
@ஸ்.கே.எம் பதிவுகளை தொடர்ந்து படித்து கருத்துக்களை சொல்வதற்கு நன்றி.
It is my pleasure TRC Sir.arumaiya pathivu podugireergal.vilakkam tharugireergal.Padikka ketka sandhaoshamaga uLLadhu.--SKM
I cannot hear the music. I have to wait till I get my computer. Please try to visit my blog, as I wrote something about Ramayana.
Thank you for taking risk. :D
தி.ரா.ச.
மிக மிக அருமையான பாடல் தி.ரா.ச. இது. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் பரவசம் ஊட்டும் கீதம் இது.
குமரன் ஒரு விஷயத்தைச் சொல்லாமல் விட்டுவிட்டார். இப்போதான் அவரும் இந்த பாடலை அவரோட பதிவு ஒன்றில் போட்டார். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். அதனால் எத்தனை முறை வேண்டுமானாலும் வலையேற்றலாம் இல்லையா!
@குமரன் நான் இந்தப் பாடல் சிவன் எழுதியது என்று நினைத்திருந்தேன் .கல்கி எழுதியது என்று சுட்டிக் காட்டியதற்கு நன்றி குமரன்.
@கீதா மேடம் நன்றி.எழுதரது ராமாயணம் உடைக்கிறது கம்ப்யுடர்ன்னு இருக்ககூடாது.): ஆமாம் உங்க அம்பியை எங்கே காணோம்.நவம்பர்14 குழந்தைகள்தினம் ஆனால் அதற்கு ஆறு மாதம் முன்பே அவருக்கு அவருடைய குழந்தை நினைவுகளை மறந்துவிடுவாரா?
@இலவசம். என்னுடைய பதிவு 13ஆம் தேதி குமரனுடையது 14ஆம் தேதி.இது ஒருமித்த கருத்துடைய இரு நபர்களின் சிந்தனையில் எழுந்த தாக்கம்தான் இது.இரண்டு பேரும் அளித்ததால் பயனடைவோர் எண்ணிக்கை அதிகம் ஆனது நல்லதுதானே!
வணக்கம் சார்...ரொம்ப நாள் ஆச்சு உங்க வீட்டு பக்கம் வந்து...அதுதான் ஒரு கும்பிடு போட்டுட்டு போறேன் :-)
நாட்டாமைஅதுக்காக நீங்க கவலைப்படவேண்டாம் உங்களுக்குப் பதிலா நம்ப ஆள்தான் அடிக்கடி வந்தூட்டு போறாரே.ஆளு ரொம்ப அமுக்கமா இருக்கார்.என்னா ஏதுன்னு கேளுங்க
@வேதா. என்ன அதிசயமா இருக்கு இந்தப்பக்கம் வந்து இருக்கீங்க! வில்லிவாக்கமும் அம்பத்தூரும்தான் பக்கம்.எங்க வீடெல்லாம் Flatதான் இங்கே முருக்க மரமெல்லாம் கிடையாது. அதான் நம்மளை கவனிக்கவே மாட்டேங்கறீங்க.மூன்று பேரிலே இரண்டு பேர் மாட்டிக்கிட்டாங்க ஒருத்தர்தான் பாக்கி.ஜாக்கிரதை.
திராச. கொத்ஸ். உண்மையைச் சொன்னா இந்தப் பதிவைப் பாத்துட்டுத் தான் 'கண்ணன் பாட்டு' பதிவுல இந்தப் பாடலை இட்டேன். ஏற்கனவே இந்தப் பாடலை என்னோட 'கேட்டதில் பிடித்தது' பதிவுல இட்டிருந்தாலும் இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாததால் இன்னொரு முறை இட்டேன். :-)
'கண்ணன் பாட்டு' வலைப்பூவிலும் இந்தப் பாடலை இடத் தூண்டியதற்கு நன்றிகள் திராச.
//ஆளு ரொம்ப அமுக்கமா இருக்கார்//
அதுதான் சார் எனக்கும் ரொம்ப டவுட்டு உங்க கிட்ட கேட்டா ஏதாவது க்ளூ கிடைக்குமானு நானும் யோசிச்சிட்டு இருந்தேன்...நீங்க இப்படி சொல்றீங்க :-)
Beautiful song. My eyes get moist whenever I listen to this Song. Appadi oru bhakthi bhavam...
@ குமரன் வருகைக்கு நன்றி.என் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் அதற்கு காரணமும் நீங்கள்தான். என்னை எழுதத்தூண்டியதே நீங்களும் உங்கள் எழுத்தின் தாக்கமும்தான்
@ஸ்யாம் கவலையேப் படாதீங்க. நம்ப ஆள் மாட்டியாச்சு.ஆப்பு இப்போ "ஆப்பு அதனை அசைத்து விட்ட .... மாட்டிக் கொண்டான். இன்னும் ஆறு மாதத்தில் கல்யாண சாப்பாடு கட்டாயம் உண்டு.
@ cogito சரியாகச் சொன்னே.மனதை மயக்கும் கீதம் மட்டும் அல்ல இந்தப் பாடல் மனதைவிட்டகலாத கீதமும்தான்
Post a Comment