Wednesday, December 20, 2006

திரு. பாபநாசம் சிவன் தமிழ்த் தியாகய்யா...(4)

சிறுவயது முதல் எனக்கு பிடித்த பாடல் இந்தப்பதிவில் உள்ளது.இரும்புத்திரை என்ற படத்திற்காக எழுதப்பட்ட பாடல்.கரஹரப்ப்ரியா ராகத்தில் அமைந்த பாடல் இது.(அம்பி சொல்வது :- என்ன சார் நீங்க எதோ ராகம்னு சொல்லறீங்க ஆனால் பாதிதான் புரியரது பிரியாங்கறது கேட்டா பெயரா இருக்கு ஆனா கரஹரா புரியலைஎதோ சாப்பிட்ட பேர் மாதிரி இருக்கு)மாதவிப் பெண்மயிலாள் தோகை விரித்தாள் நல்ல மையிட்ட கண்களுக்கு.... என்ற பாடல் இருமலர்கள் படத்தில் வரும் இதுவும் கரகஹரப்ரியா ராகம்தான்.
மயிலை கற்பகவல்லியின் முன்பு நிற்கும்போதெல்லாம் இந்தப் பாட்டின் முதல் இரண்டு வரிகளை என் வாய் முனுமுனுக்கும்."என்ன செய்தாலும் எந்தன் துணை நீயேஎன் அன்னையே உமையே-- நீ என்ன செய்தாலும்..."திருமணத்திற்கு பிறகும் இந்தப்பாட்டுதான் பிடித்தமான பாட்டு. என்ன மூன்றாவது அடியையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்"என்ன செய்தாலும் எந்தன் துணை நீயேசினந்தென்னை அடித்தாலும், பரிந்தென்னை அணைத்தாலும்என் அன்னையே உமாவே... நீ என்ன செய்தாலும் "


படத்தில் இந்தப் பாடலை பாடியவர்கள் தாயும் மகளும். மகள் திருமதி. வைஜயந்திமாலா அவர்கள்.வைஜயந்தியின் தாயாக நடித்தவர் யார் என்று கூறுங்கள் பார்க்கலாம். விடையை பிறகு பின்னுட்டத்தில் தருகிறேன்.இனி பாட்டைப் பார்ப்போம்

ராகம்:-கரஹரப்பிரியா தாளம்: ஆதி
பல்லவி

என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே உமையே-- என்னை நீ
அனு பல்லவி
சின்ன வயது முதல் உன்னையே நம்பினேன்
சினந்து என்னை அடித்தாலும் பரிந்து என்னை அணைத்தாலும்....(என்ன) சரணம்
முன்வினையால் இன்ப துன்பங்கள் விளைந்திட
மூடமதி கொண்டுன்னை நோவது என் பேதமை
என் விதியால் இடராயிரம் சூழினும்
எல்லாம் உன் திருவிளையாடல் என்று எண்ணி இனி...(என்ன) Papanasam Sivan: The Tamil Tyagarajar (4)

39 comments:

Sandai-Kozhi said...

//என்ன சார் நீங்க எதோ ராகம்னு சொல்லறீங்க ஆனால் பாதிதான் புரியரது பிரியாங்கறது கேட்டா பெயரா இருக்கு ஆனா கரஹரா புரியலை//
Too good! aarambamae super.:D--SKM

Sandai-Kozhi said...

//என்ன செய்தாலும் எந்தன் துணை நீயேசினந்தென்னை அடித்தாலும், பரிந்தென்னை அணைத்தாலும்என் அன்னையே உமாவே...//
so indha nakkalukku than ungalai Ambi guru nu sollrar.

Rasithen.Thank you.--SKM

Me too said...

எத்தனை எளிமை/இனிமை!! பொதிகை தான் மற்ற channel-கள் போட்டியில் விழாமல் இத்தகைய எளிய/அறிய நிகழ்ச்சிகள் இன்னமும் அளித்து கொண்டிருக்கிறது!

Mathuraiampathi said...

ஆம் அதுவும் ஒரு அருமையான பாடல்தான்....நன்றி தி.ரா.ச அவர்களே.

பாலராஜன்கீதா said...

//மகள் திருமதி. வைஜயந்திமாலா அவர்கள்.வைஜயந்தியின் தாயாக நடித்தவர் யார் என்று கூறுங்கள் பார்க்கலாம்//
பண்டரிபாய் (இல்லை சரோஜாதேவியா ? )

தி. ரா. ச.(T.R.C.) said...

குமரன் (Kumaran) has left a new comment on your post "திரு. பாபநாசம் சிவன்.... தமிழ்த்தியாகைய்யா..(4)":

திருமணத்திற்கு முன்னும் பின்னும் பாடுவதற்கு ஏற்ற பாடலைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஸ். கே.எம்.நன்றி. ஆமாம் நீங்கள் எந்த அம்பியை எனது சிஷ்யன் என்று சொல்லுகிறீர்கள்.டிஸெம்பர் 10ஆம் தேதி வரை அப்படி ஒரு சிஷ்யன் உண்டு அவர் அப்பறம் என் குருவாக ஆகி விட்டாரே அவரா?

தி. ரா. ச.(T.R.C.) said...

@ metoo உன்மைதான் பொதிகை நல்ல நிகழ்ச்சிகளை அளித்துக்கொண்டுதான் இருக்கிறது.வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மதுரையம்பதி.புது வரவுக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@பாலராஜன்கீதா. உங்கள் விடை சரியில்லை. க்ளு அதிலேயே இருக்கிறது. முயற்சி செய்யுங்கள்

Ms.Congeniality said...

//என்ன செய்தாலும் எந்தன் துணை நீயேஎன் அன்னையே உமையே-- நீ என்ன செய்தாலும்..."திருமணத்திற்கு பிறகும் இந்தப்பாட்டுதான் பிடித்தமான பாட்டு//

Thirumanathirku piragu thaan indha paadal migavum pidika vendum :-p

//என்ன செய்தாலும் எந்தன் துணை நீயேசினந்தென்னை அடித்தாலும், பரிந்தென்னை அணைத்தாலும்என் அன்னையே உமாவே... நீ என்ன செய்தாலும் //

hee hee hee!!Onga thangamani enna sollraanga nu naan kekaren :-p

Lyrics are really nice :-)

கீதா சாம்பசிவம் said...

பண்டரி பாய் சரோஜா தேவி எல்லாம் இல்லை, வைஜயந்தி மாலா அம்மாவா நடிச்சது அவங்க உண்மையான அம்மா வசுந்தரா தேவியோன்னு நினைக்கிறேன். ஆனால் நான் இந்தப் படம் பார்த்தது இல்லை. ஒரு ஊகம் தான்.

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்ம், குருவுக்கு மிஞ்சிய சிஷ்யர்கள் எப்பவுமே உண்டு.

ambi said...

//சின்ன வயது முதல் உன்னையே நம்பினேன்
சினந்து என்னை அடித்தாலும் பரிந்து என்னை அணைத்தாலும்....(என்ன) சரணம்//

nice lines. *ahem* daily unga veetula nadakarathu ellam postaa podaringa polirukku! :)

//ஆனால் பாதிதான் புரியரது பிரியாங்கறது கேட்டா பெயரா இருக்கு ஆனா கரஹரா புரியலை//
LOL :) kuthunga ejamaan kuthunga! :)

mother name is vaijayanthi maala barley..? (apdi thaan kelvipatten)

ambi said...

//டிஸெம்பர் 10ஆம் தேதி வரை அப்படி ஒரு சிஷ்யன் உண்டு அவர் அப்பறம் என் குருவாக ஆகி விட்டாரே அவரா?
//
is it..? in what area? (innocently asking)

ambi said...

//வைஜயந்தி மாலா அம்மாவா நடிச்சது அவங்க உண்மையான அம்மா வசுந்தரா தேவியோன்னு நினைக்கிறேன். //

@TRC sir, இதுக்கு தான் அந்த காலத்து 16 வயசு பெரியவங்க எல்லாம் வேணும்!னு சொல்றது. :)

தி. ரா. ச.(T.R.C.) said...

@Ms. congeniality இந்த தங்கமணி ரங்கமணி விஷயத்தைத்தான் இப்போ நாங்க நேரிலே பாக்கறோமே.ரங்கமணி குரலை கேட்டே ரொம்ப நாள் ஆச்சு.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் முதல் பரிசு உங்களுக்குத்தான்.சரிதான் நீங்கள் சொன்னது மாதிரியே அதி வைஜெயந்தி மாலாவின் தாயாரான வசுந்தரா தேவிதான்.சின்னப்பொண்ணாக இருந்தாலும் கரெக்டாக சொல்லிட்டிங்க.அம்பி இந்த நக்கல்தானே வேண்டாங்கறது.இனிமே உனக்கு நாங்க யாரும் ஆப்பு வைக்கவே வேண்டாம்.தானா வரும்.ஆயிரம் இருந்தாலும் தலைவி தலைவிதான்.என் பேரை அவுங்க மறந்துட்டாலும் அவுங்கதான் என் தலைவி

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி நம்பளுடையதாவது போஸ்ட் போட்டா போரும்.அவ்விடத்திலே விடியோவே போடனும்
அப்பறம் எந்த ஏரியாவான்னு கேக்கிறே? எல்லா ஏரியாவும்தான் பங்களூர் மற்றும் சென்னை.நாந்தான் சொல்லிட்டேனே "கரண்டியில் அகப்பட்ட கறிவேப்பலை மாதிரி" நான் என்று.ஆமாம் அது என்ன பார்லி புழுங்கல் அரிசின்னு.இந்த அழகிலே மேடத்தைவேறு கிண்டல்.எல்லாம் நேரம்தான்

ஜீவா (Jeeva Venkataraman) said...

செவ்வியில் வரும் 'ஸ்ரீ வாசுதேவா..' பாடலும் எனக்கு பிடித்த ஒன்று!

பொதிகையை காணக் கிடைக்காத எங்களுக்கு தொகுத்து வழங்குவதற்கு மிக்க நன்றி!

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஜீவா.பொதிகை நீங்கள் கூறிய மாதிரி நல்ல நிகழ்ச்சிகளைத்தான் அளித்துவருகிறது.என்னால் முடிந்த வரை உங்களுக்குத் தருகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பொற்கொடி said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா! :)

குடும்பம் சௌக்கியமா?

தி. ரா. ச.(T.R.C.) said...

@பொற்கொடி தங்கள் வருகைக்கும் நன்றி.குடும்பம் நல்லா இருக்கு.புதுக்குடும்பம் எப்படி இருக்கு

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மயிலை கற்பகவல்லியின் முன்பு நிற்கும்போதெல்லாம் இந்தப் பாட்டின் முதல் இரண்டு வரிகளை என் வாய் முனுமுனுக்கும்."என்ன செய்தாலும் எந்தன் துணை நீயேஎன் அன்னையே உமையே//

ஆகா
ஏது பிழை செய்தாலும்
ஏழையேனுக்கு இரங்கி
தீது புரியாத தெய்வமே
என்ற பாட்டும் நினைவுக்கு வருகிறது திராச ஐயா!

அது என்ன திருமணத்துக்குப் பின் என்று போட்டு, "உமையே" என்று சிலேடை ரேஞ்சுக்கு கலக்குறீங்க! :-))))))

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி. ரவி. சும்மா ஒரு தமாஷ்தான்

இலவசக்கொத்தனார் said...

நல்ல பக்திதான் போங்கள்!! :-D

இதுவரை நான் இந்த பாடலைக் கேட்டது இல்லை. தமிழ்த் தியாகய்யரின் எளிமையான வரிகள் பற்றிச் சொல்லத்தான் வேண்டுமோ. அவர் பாடல்களை தொடர்ந்து அளித்து வரும் நீர் வாழ்க!

எனக்கு கற்பகாம்பிகை பற்றி நினைத்தால் உடன் முணுமுணுப்பது பெஹாக்கில் கற்பகாம்பிகை நீயல்லவோதான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@இலவசம் 1930_40 வருடங்களிலேயே தமிழிசையை பாரதிக்கு பிறகு எளிமையாக தமிழ் மூலம் தமிழ்மணத்தை பரப்பச்செய்தவர் சிவன் அவர்கள்.

கீதா சாம்பசிவம் said...

@அம்பி, காந்தியைப் பத்தியும், அவருக்கு முன்னாலே இருந்த தலைவர்களைப் பத்தியும் கூட உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதனாலே உங்க வயசு ஒரு நூற்றாண்டுக்கு மேல்னு வச்சுக்கலாமா?

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் அப்படி போடுங்க அரிவாளை.அம்பி இனி நீ வாயே திறக்க முடியாது
இன்னும் சின்னப்பையன் இல்லே. இனிமேவாது கொஞ்சம் பொறுப்பாஇருக்க பழகனும்.ஏதோ வந்தமா பதிவ பாத்தமா பதில்போட்டமான்னு இருக்கணும்.எல்லாரையும் கலாய்க்கக்கூடாது(வடிவேலு ஸ்டைல்):)

ambi said...

//காந்தியைப் பத்தியும், அவருக்கு முன்னாலே இருந்த தலைவர்களைப் பத்தியும் கூட உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதனாலே உங்க வயசு ஒரு நூற்றாண்டுக்கு மேல்னு வச்சுக்கலாமா?
//
வாஸ்தவம் தான்! ஆனா யாரு இன்னமும் 16 வயசு சின்னபொண்ணு!னு சொல்லிட்டு இருக்காங்களாம்? :p


// இனிமேவாது கொஞ்சம் பொறுப்பாஇருக்க பழகனும்.ஏதோ வந்தமா பதிவ பாத்தமா பதில்போட்டமான்னு இருக்கணும்.எல்லாரையும் கலாய்க்கக்கூடாது(வடிவேலு ஸ்டைல்):) //
@TRC sir, ஆஹா! எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்க யா! :D

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆமாம் அம்பி. ஆனா இந்த கூட்டத்துக்கு புதுத் தலைவி யார் தெரியுமா.உனக்கு ரொம்ப வேணுங்கபட்டவங்கதான்.

Sandai-Kozhi said...

புது வருட வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.--SKM

கீதா சாம்பசிவம் said...

உங்களோடப் புதுப் பதிவு எங்கே இருக்குன்னு தெரியலை. என்னோட கணினி தப்பா? இல்லை ப்ளாக்கர் கோளாறா புரியலை, அதனால் படிக்க முடியலை மன்னிக்கவும். எத்தனை தரம் முயற்சி செய்தாலும் இது மட்டும் தான் வருது. நாளை மறுபடி பார்க்கிறேன். மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள், உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் உங்கள் கண்ணியை ஒரு முறை சரி பாருங்கள். அதற்கு பிறகு 3 பதிவுகள் போட்டுவிட்டேன்.பலபேருடைய பதிலும் வந்துவிட்டது.உங்கள் வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கீதா சாம்பசிவம் said...

I cannot view your posts. Please give me the link, if possible. Sorry for the disturbance.

தி. ரா. ச.(T.R.C.) said...

Madame
MY link http://trc108umablogspotcom.blogspot.com

SK said...

அதெல்லாம் இருக்கட்டும்; திருமணத்துக்குப் பின்னும் இப்பாடலை விரும்பிப் படுவதின் காரணம்...... வீட்டுல பேரு 'திருமதி. உமாவா?"
:))

நல்ல பாடலைத் தந்தமைக்கு நன்றி ஐயா!

வெற்றி said...

தி.ரா.ச,
இதுவரை நான் கேட்டிராத ஒரு அருமையான பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ வெற்றி மிகவும் நன்றி வருகைக்கும் பதிலுக்கும்.