சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
Friday, December 29, 2006
வைகுண்ட ஏகாதசி
நாளை வைகுண்ட ஏகாதசி. சீரி ரங்கத்தில் கூட்டம் உளுந்து போட்டால் உளுந்து விழாது. அரங்கனைக்காண பக்தர்கள் அலை மோதுவார்கள். அரங்கன் சொர்கவாசல் தரிசனமும் பரமபத சேவையும் காண ஆயிரம் கண்போதாது. அதைவிட முக்கியம் தாயார் ரங்கநாயகி படிதாண்டா பத்தினி வெளியே வந்து அரங்கனை காணும் காட்சி இருக்கிறதே அதை வார்த்தைகளால் வர்ணிப்பது கடினம். நம்மால் அந்த கூட்டத்தில் போய் பார்க்க முடியுமா? அதனால் இங்கேயே பார்த்துவிடுங்கள்.
ஆமாம் அரங்கன் ஏன் பள்ளிகொண்ட நிலையிலேயே இருக்கிறான். காரணம் தெரியவேண்டுமா அருனாசல கவிராயரைக் கேளுங்கள். " ஏன் பள்ளீ கொண்டீர் ஐய்யா ச்ரீ ரங்கநாதா" என்ற பாட்டில் விவரமாகக் கூறுகிறார். அதை திருமதி.அருணா சாய்ராம் இசையின் மூலமாக கேட்கலாமா? பாட்டைக் கேட்க இங்கே
'><"a >
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
அரங்கனின் தரிசன சௌபாக்கியத்திற்கு நன்றி தி.ரா.ச.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் - சுதா ரகுநாதன் பாடிக் கேட்டு இருக்கிறேன். முதல் பாதியில் ராம அவதாரமும், பின் பாதியில் கிருஷ்ண அவதாரமும் படம் பிடித்து காட்டி இருப்பார் அருணாசலக் கவியார்!
நன்றி தி.ரா.ச,
ஸ்ரீரங்கத்தை விட்டு மனம் அகலவில்லை. நீங்கள் கொண்டு வந்து விட்டீர்கள்.
ஏகாதசி தமிழ்க் கானம் தந்த திராச ஐயா, நன்றி!
தரிசன மகா பாக்யம்!
முக்கோடி ஏகாதசி அன்று!
நாராயணதே நமோ நமோ!
நாரத சந்நுத நமோ நமோ!
அரங்கனைக் கண்குளிர இங்கும் காணுங்கள்!
http://madhavipanthal.blogspot.com/2006/12/3_29.html
குமரன் இன்னும் கொஞ்சம் விரிவாகப் போட்டு இருக்கலாம்.கச்சேரிக்கு சென்று திரும்பும்போதெ மணி 10 ஆகி விடுகிறது.நல்ல நாளில் அரங்கனை நினைக்காமல் இருக்கலாமா அதான்.
ஜீவா இந்தப் பாடலை மிகவும் நன்றகப் பாடியவர் காலம்சென்றதிருமதி.வசந்தகோகிலம் அவர்கள்.குரல் கணீரென்று இருக்கும்.அந்தச் சுட்டி கிடைக்கவில்லை.அருமையாகச்சொன்னீர்கள் இராமனையும் கிருஷ்ணனையும் அவர்தம் லீலைகளையும் அழகாக விவரிக்கும் பாட்டு.
வல்லி அம்மா நீங்கள் மட்டும் என்ன சோலைமலை கும்மியை மிகவும் நேர்த்தியாகப் பாடியுள்ளீர்கள்.அரங்கனை நாம் எல்லோரும் கொண்டாடுவது இந்த நாளிலில் சிறந்தது.
ரவிசங்கர் அரங்கனுக்கெ இன்று தமிழ் வேதம்தானே முதன்மையாக இருக்கும்.மற்ற வேதத்தின் மதிப்பை நான் குறைத்ததாக கொள்ளக்கூடாது.பாரதியைவிடவா நாம் பற்று மிக்கவர்கள். அவரே வேதத்தைப் பற்றி தன் பாடல்களில் மிக உய்ர்வாகச் சொல்லியுள்ளார்.
நன்றி தி.ரா.ச.
குழந்தை விளையாட்டுப் போல நானும் பாடி விட்டேன்.
இன்னோரு குழந்தை கேட்டதால்:-)
பாடலை இணையத்தில் வெளியிட்டமைக்கு ரொம்ப நன்றி ஐயா! கேட்டு மிகவும் ரசித்தேன். பாடலை எனது கணினியில் இறக்குமதி செய்ய நினைக்கிறேன். தாங்கள் இந்தப்பாடலை எனக்கு இமெயில் செய்தால் உதவியாய் இருக்கும்.
allwantpeace@yahoo.com
@வல்லி அம்மா நீங்கள் விளையாட்டாக பாடியது யார்மேலே? அவனும் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை அல்லவா.
@பாரத புதிய ராஜகுமாரரே புது வரவுக்கும் பதிலுக்கும் நன்றி.இந்தப் படால் மட்டும் அல்ல எல்லாப் படல்களையும் கேட்கமட்டும் இங்கே செல்லுங்கள்
www. musicindiaonline.com---click canatic music vocal-- clicklisting----click artists-- arunasairam---sheththira kiitham
இந்த ஊரில் இருந்தும் காண முடியாமல் போய் விட்டது. :-(
@naakai siva It reminds me the following proverb"nearer the temple but far away from the God" Happy New Year2007
ஆகா.. ரங்கனாதன் தரிசனம் அருமை;பாடல் அருமை.
நல்லதொரு பதிவைத் தந்தமைக்கு நன்றி ஐயா.
@செல்லி நான் சொல்லி வந்ததற்கு மிகவும் நன்றி.தயங்காமல் தவறுகளைச் சுட்டுக்காட்டுங்கள்.புத்தாண்டு வாழ்த்துக்கள்
@வேதா ஆஹா 108 திருப்பதிகளில் ஒன்றான திரு அனந்த பத்மந்நாபனை கண்டீர்களா. கொடுத்துவைத்தவர்தான் நீங்கள். சொர்கவாசல் முறை தமிழ்நாட்டில் மத்திரம் மட்டும்தானுள்ளது.
Post a Comment