வலையுலக நண்பர்களுக்கு பொலிக... பொலிக... புத்தாண்டு 2007
வாழ்க...வாழ்க... வளமுடன்
குடும்பத்தில் நல்லவை நடந்து மகிழ்ச்சிப் பொங்கட்டும்.
என்றும் அன்புடன் தி.ரா.ச.(TRC)
புத்தாண்டுக்கு என்ன எழுதலாம் என்று தேடியபோது
கண்ணில் பட்டு கருத்தைக் கவர்ந்தது
அவள் விகடனில் வந்த ஒரு கவிதை.:-
தண்ணீர் பஞ்சம் தொலைய வேண்டும்
தங்கம் விலை குறைய வேண்டும்
அழுகை இல்லா சீரியல் வேண்டும்
அழாமல் பிள்ளை சாப்பிட வேண்டும்
வாரா வாரம் அவுட்டிங் வேண்டும்
வஞ்சனை இல்லா ஷாப்பிங் வேண்டும்
சண்டை போடாத சர்வன்ட் வேண்டும்
சமையலில் உதவும் ஹஸ்பண்ட் வேண்டும்
வாக்கிங் இன்றி மெலிய வேண்டும்
வல்கர் சினிமா ஒழிய வேண்டும்
தொடர்பு விட்ட தோழிகள் வேண்டும்
தொல்லை தராத சொந்தங்கள் வேண்டும்
மயக்கம் இல்லாத மசக்கை வேண்டும்
மதியம் குட்டித் தூக்கம் வேண்டும்
மளிகைச் செலவு குறைய வேண்டும்
மாசக் கடைசியிலும் மகிழ்ச்சி வேண்டும்
வேண்டும் வேண்டும் இறைவா--என்
ஏக்கங்கள் எல்லாம் தீர்ப்பாயா
புன்னகை ததும்பும் வாழ்வை--நீ
புத்தாண்டு வரமாய் சேர்ப்பாயா!
நன்றி:- அவள் விகடன் எழுதியவர்:- மிஸஸ்.எக்ஸ்.
இது முற்றுப்பெறவில்லை நீங்களும் உங்கள் பங்குக்கு புதிய வருடத்தில் உங்கள் விருப்பங்களைச் எதிர்பார்ப்புக்களைச் சேர்க்கலாம்.
இதோ என் பங்குக்கு:-
குப்பை இல்லாத சென்னை வேண்டும்
தொப்பை இல்லாத போலீஸ் வேண்டும்
23 comments:
வைகுண்ட ஏகாதசி என் ஊருல ரொம்ப ஸ்பெஷல் :) அப்புறம் சென்னைல கிருஷ்ணப்ப்ரவாஹம்னு எனக்கு பிடிச்ச செய்திகளா போட்டு ஃபீல் பண்ண வெச்சிடீங்க! கவிதயும் சூப்பரு, புத்தாண்டு வாழ்த்துக்கள்!
@பொற்கொடி. புத்தாண்டு வாழ்த்துக்கள் ரங்கமணிக்கும் சொல்லுங்கள். திருமண வாழ்க்கை வளமாக அமைய எங்கள் குடும்பத்தின் ஆசிகள்.சௌமியா உன்னை மிகவும் விசாரித்தாள்.
WOW!arumai.idhellam nadandha!aahaaa!Let us hope for the better.
Thanks for your wishes.
thangalukkum puthandu vazhththukkal TRC Sir.--SKM
தூசியில்லாத தெருக்கள் வேண்டும்
மாசு இல்லாத மனங்கள் வேண்டும்.
பாசமுள்ள உறவு வேண்டும்
ஆபாசமில்லாத சினிமா வேண்டும்
மொக்கை இல்லாத பதிவுகள் வேண்டும்!
(அச்சோ! கீதா மேடம், நான் பொதுவா தான் சொன்னேன்! உங்களை இல்ல!) :p
@TRC sir, குருவே! நீங்க சொன்ன மாதிரியே கமண்ட் போட்டாச்சு! :)
@ஸ்.கே, ஸ்.கே.எம். என்ன இது அபூர்வ ராகங்கள் கடைசி சீன் மாதிரி இல்லே இருக்கு. தாயும் மகளும் சேர்ந்தே பாடுவார்களே. ஆசைப்படுவதில் தவறு இல்லயே."ஆரார் ஆசைப்படார்" என்ற குறும் படம் "சஞ்சய் சுப்பிரமணீயன்" மியுசிகல் வாழ்க்கையைப் பற்றி வந்து இருக்கிறது.மீண்டும் வாழ்த்துக்கள் நன்றி.
@வல்லி அம்மா நீங்கள் சொன்னதில் 3 வது குறைந்துகொண்டே வருகிறது.4 வது ஜாஸ்தியாகிக்கொண்டே வருகிறது.இந்த இரண்டும் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலே போரும் நாம் நல்லா இருப்போம்.
"புத்தாண்டு வாழ்த்துக்கள்" sir
@அம்பி மொக்கையிலாத பதிவு இருக்கட்டம் ஒருபுறம்,முதல்லே பதிவே இல்லாத மொக்கையை என்ன பன்னறது சொல்லு.நாங்களாவது கல்யாணம் ஆகி இவ்வள்வு நாளைக்கு அப்பறமும் பதிவு போடுகிறொம். அவனவன் கல்யாணப்பேச்சை எடுத்தவுடனேயே பதிவை நிறுத்திவிட்டு துணியக்காணோம் துண்டைக்காணோம்னு ஓடிப்போய்ட்டாங்களே. என்ன கீதாமேடம் புது வருஷ கொண்டாடத்தின் நடுவே கொஞ்சம் ஸ்ப்போர்ட்டுக்கு வரக்கூடாதா.பொற்கொடியே தேவலாம்.அம்பி உன்னை ஒன்னும் சொல்லலே ஏன்னா நீதான் என் சிஷ்யன் சொல்லிக்கிறயே.
@சச்சின் வருகைக்கு நன்றி. எனது புத்தாண்டு வாத்துக்கள்
//நாங்களாவது கல்யாணம் ஆகி இவ்வள்வு நாளைக்கு அப்பறமும் பதிவு போடுகிறொம். அவனவன் கல்யாணப்பேச்சை எடுத்தவுடனேயே பதிவை நிறுத்திவிட்டு துணியக்காணோம் துண்டைக் காணோம்னு ஓடிப்போய்ட்டாங்களே.//
adhudhanae.sariya sonneenga TRC Sir.ippovae "Donot Disturb"board matti aachu.yennatha solla?---SKM
@ஸ்.கே.எம் கவலையே வேண்டாம். இன்னும் மூன்று மாதத்துக்கு அம்பி நல்ல பதிவுகள் போடுவான்.இப்போ நல்ல free time.
புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்...
மெளலி...
@ஐய்யா மதுரையம்பதி மௌளி நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்துக்கும்.ஆமாம் பதிவை இப்படி திண்டுக்கல் பூட்டைப்போட்டு பூட்டி வைத்தால் எப்படி.கதவைத்திறவுங்கள் காற்று வரட்டும்.
மனதில் நிம்மதி, மகிழ்வு வேண்டும்
மகேசன் அதற்கு வழிவிட வேண்டும்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
அப்பாடா, ஒரு வழியா உங்க archives-ஐத் தோண்டி இந்தப் பதிவைத் தேடிக் கண்டு பிடித்து வந்தேன். என்னத்தைச் சொல்ல? லிங்க் கொடுங்க சார்னு கேட்டேன். உங்களுக்கு அனுமதி கொடுக்கலியா உங்க சிஷ்யப் பிள்ளை? ஆஃபீஸ் வேலைன்னு அலட்டுவாரே? இப்போ அதெல்லாம் இல்லை போலிருக்கு?:D
@SP.VR.சுப்பையா வாருங்கள். புத்தாண்டு வாழ்துக்கள். நன்கு சொன்னீர்கள் ஆனால் மன அமைதி மகேசன் அருள் இல்லாமல் கிட்டாது.
@நன்மனம் நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்கள் குடும்பத்துக்கும் தங்களுக்கும்
@வேதா சுற்றுப்பயணம் முடிந்ததா.புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@கீதா மேடம்.வாங்க ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருக்கீங்க. நன்றி.கஷ்டமே வேண்டாம் கீழே பதிவில் உங்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள் தானாக வரும் என் பதிவு.
romba nalla iruku
//குப்பை இல்லாத சென்னை வேண்டும்
தொப்பை இல்லாத போலீஸ் வேண்டும்//
hee hee hee!! Nadandha romba nalla irukum :-)
இனிய புத்தாண்டு வாழ்த்துகள். தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்கவும். விடுப்பு எடுத்துக் கொண்டு இரண்டு வாரங்களுக்கு ஊர் சுற்றப் போய் விட்டதால் நேரத்தில் வாழ்த்த முடியவில்லை.
Post a Comment