மேலே உள்ள மூன்று படங்களும்தான் என்வீட்டு சுடாத கொலு
மேலே உள்ளது என்னை வளர்த்த இந்தியன் வங்கியின் கொலு.
நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளோடு முடியவில்லை. 10ம் நாளான விஜயதசமியுடன் தான் விழா நிறைவு பெறுகிறது. எனவேஇ அது "தசரா' எனப்படுகிறது. விஜயதசமி என்றால் "வெற்றி தரும் 10ம் நாள்' என தமிழில் கூறலாம். போருக்கு புறப்பட்ட ராமன் ஒன்பது நாட்கள் சக்தி பூஜை செய்துஇ 10ம் நாளான விஜயதசமியன்று போர் துவங்கியதாக கூறப்படுகிறது.
எருமை உருவம் கொண்ட அசுரன் மகிஷன். அவனது தொல்லை தேவலோகத்தையும் விட்டு வைக்கவில்லை. அவனது மிருகத்தன்மை கண்டு மும்மூர்த்திகளும் அஞ்சினர். தேவலோக தலைமைப் பதவிக்கு குறி வைத்து அசுரகுல அரசன் மகிஷன் போரிட்டான். மிருகபல சேனையிடம் தேவர்படை தோல்வியுற்றது. தோல்வியடைந்த இந்திரனும்இ தேவாதி தேவர்களும் பிரம்மனிடம் முறையிட்டனர். அவர் திருமாலிடம் கூட்டிச் சென்றார். அனைவரும் சிவபெருமானை சந்தித்தனர்.மகிஷனின் கொடுமைகளை மும்மூர்த்திகளிடம் விளக்கினர். தேவர்கள் கொடுமைகளை பற்றி கேட்ட சிவபெருமானுக்கு கோபம் பொங்கியது. சாந்த ஸ்வரூபியான மாலவனுக்கும் மகிஷனின் கொடுமைகள் கோபத்தை ஏற்படுத்தியது. கண்கள் சிவந்து கோபாவேசமாக காணப்பட்ட இரு மூர்த்திகளுடன் பிரம்மனும் சேர்ந்து நின்றார். அந்த கோபக் கனல்களும் சாதுக்களின் வயிற்றிலிருந்து புறப்பட்ட தீபமும் ஜோதிவடிவாய் இணைந்து ஒன்றுபட்டது. அனைத்துமாக தேவியாக உருவம் பெற்றது.
சிவபெருமான் சூலமும்இ திருமாள் சக்கரமும் தேவேந்திரன் வஜ்ராயுதமும்இ யமதர்மன் தண்டாயுதமும்இ வருணன் போர் சங்கும்இ அக்னி தேவனின் சத்தாயுதமும்இ வாயு பகவான் காற்றினும் விரைவாக அம்பு வீசும் ஆயுதமும் அளித்தனர். ஆயுதம் தரித்த தேவிக்கு பிரம்மன் ஜபமாலையும்இ பாற்கடல் துõய ஆடைகளும்இ தெய்வசிற்பி அணிகலன்களும்இ சமுத்திர ராஜா பூமாலைகளும் இமயமலை சிம்மவாகனமும் தந்தனர்.
சர்வாலங்கரியாக அன்னை போருக்கு சித்தமானாள். அதையறிந்த மகிஷன் வெறிகொண்ட எருமையாய் தேவியை முட்டித் தள்ள முயன்றான். ஆனால்இ தேவியின் சக்தி முன்பு அவனது பலம் செல்லுபடியாகவில்லை. எருமை முகத்திலிருந்து பாதி வெளிவந்த நிலையில் மகிஷனை தேவி வதம் செய்துஇ "மகிஷாசுரமர்த்தினியாக' மாறினாள். மகிஷனை அழித்த தேவி விரதம் இருந்த காலம் நவராத்திரி. ஒன்பதாவது நாள் மகாநவமி. வெற்றி அளிக்கப் போகும் ஆயுதங்களை வைத்து தேவி பூஜை செய்த நாள் அது. எனவேஇ அதை ஆயுத பூஜை என்கிறோம். அசுரனை வெற்றிக் கொண்ட நாள் விஜயதசமி.
மகிஷாசுரன் போன்ற அசுர கணங்கள்இ இன்னும் உலகில் லஞ்சம்இ ஊழல் போன்ற வடிவங்களில் உள்ளன. அவற்றை அகற்றி அமைதியான வாழ்வு தர நவராத்திரி காலத்தில் தேவியை துதிப்போம்!
விஜயதசமி பண்டிகையன்று பல சுப நிகழ்சிகளும் தொடங்கப்படும். பல நிறுவனங்களில் புது கணக்கு துவங்குப்படும். பல புது நிறுவனங்களும் புதிதாக தொடங்கப்படும்.சரஸ்வதி பூஜை தினத்தன்று பூஜையில் வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை எடுத்து அம்மனை பிரார்த்தித்து வெற்றி பெற வேண்டும் என்று மாணவ, மாணவிகள் பூஜை செய்வார்கள்.
ராகம்:- ஆரபி தாளம்:-ஆதி
பல்லவி
துர்கா லக்ஷ்மி சரஸ்வதி துணையடி பணிவாயே மனமே..(.துர்கா)
அனுபல்லவி
ஸ்வர்காபவர்க இன்பம் தருவாய் சுருதி புகழ்
பொருள் நவராத்ரியில் உள்ளன்போடு....(துர்கா0
சரணம்
முற்பிறப்புகளின் செய்வினை அழியவும்
மோகமும் கல்மனபேய்களும் அழியவும்
பொற்புயர் மங்கல தீபமும் விளங்கும்
புகழ்வுடன் மகிழ்வும் வாழ்வினில் துலங்கும்...(துர்கா)
சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.
இந்த பத்துநாட்களும் ஒரு விரதமாக எடுத்துக்கொண்டு பலவேலைகளுக்கு இடையில் பத்துநாட்களும் தேவியின் மீது பதிவு அமைந்ததற்கு அவளது ஆசியைத்தவிர என்செயல் ஒன்றுமில்லை.
தவறாமல் வந்து அன்னையின் ஆசியைப் பெற்ற அனைவருக்கும் (குறிப்பாக மின்னலுக்கு தினமும்வந்து என்னைஊக்குவித்தற்கு) ) நன்றி.
நாமும் ஆரத்தியுடன்(நன்றி டி டி) முடிப்போம்
நாமும் ஆரத்தியுடன்(நன்றி டி டி) முடிப்போம்
30 comments:
நானும் தினமும் வந்தேன், சுண்டல் தான் கொடுக்கலைன்னா, என்னோட பேரைக் கூட போடலை! :(
சுடாமல் போனது தப்போனு தோணுது! :P
மேடம் அவசரம் போன பின்னுட்டட்த்தில் உங்களை சொல்லியாச்சு.அதை பாக்காம பின்னி எடுக்கறீங்களே.நானும் நேரிலே வாங்கோன்ன்னு கூப்பிட்டாச்சு.வரலே. நாங்க ஏழுகடல் எழுமலை தாண்டி வரலை.கூப்பிட்டவுடன் சமத்தா சசி வரலே.க்ர்ர்ர்ர்ர்ர்
பத்து நாட்களும் அழகான படங்களும், பாடல்களும், சுண்டலும் தருவித்தமைக்கு நன்றிகள் தி.ரா.ச சார்!
முடிவில் சுடாத படமும் கிடைத்தாயிற்று!
சுட்ட சுடாத படங்கள் நன்றாகவே இருக்கின்றன. மகராஜபுரம் டாப்:)
விஜயதசமி வாழ்த்துகள்.
Thanks for posting the golu fotos at home and for the Navarathiri songs !
arumaiyana kolu.Koopdathaan marandhu poiteenga.Adutha varusham koopdamalae varuvom sundal vanga.
yen veetu kolu kuttiyondu kolu. so suthi irundha naalu per mattum vandhanga (g3 yum serthu):).
next year grand pannvom nu oru nambikkai.Appo neenga thambadhi sametham varanum.
ஹலோ சார்,
அட, இத்தனை பிள்ளையாரா? வாவ...
பாக்க அழகாயிருக்கு உங்க சுடாத கொலுவும் ஆபீஸ் கொலுவும்.
அட நீங்களும் இந்தியன் பாங்க் தானா ? என் அண்ணாவும் அதுல தான் இருக்கான்.
தினமும் உங்க வீட்டு சுண்டலும் பாட்டும் நிஜமாவே ரொம்ப நல்லாயிருந்தது. நன்றி.
ஹலோ சார்,
//(குறிப்பாக மின்னலுக்கு தினமும்வந்து என்னைஊக்குவித்தற்கு) ) நன்றி//
அடடா, என்ன சார் என்னை போயி ..
எனக்கு ரொம்ப புகழ்ச்சி லாம் பிடிக்காது சார், அதுவும் இல்லாம நீங்க இவ்ளோ அழகா தினமும் கொலு போட்டு போதாத குறைய்க்கு சுண்டலும் போட்டு பின்ன வராமயா இருக்க முடியும்.
இதுக்கு அம்பி கிட்ட இருந்தும் பலமான ஆட்சேபங்கள் வரப் போறது.
@வேதா நம்ம கொலு கடைசி ஸஸ்பென்ஸ் வெச்சோம்லே.போனஅக்டோபர் மாதம் நினைவிருக்கா சமோசா....
@ஜீவா நன்றி எல்லா பதிவுகளையும் பார்த்து கருத்து சொன்னதற்கு.
@ஜீவா நன்றி எல்லா பதிவுகளையும் பார்த்து கருத்து சொன்னதற்கு.
வல்லியம்மா நன்றி நேரில் வாழ்த்து சொன்னதற்கு.பாடல் செலெக்ட் செய்வற்குத்தான் சிரமப்பட்டேன்.பாடலை கேட்டு எழுதாவும் கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் அன்னை அருளால் முடிந்தது.நன்றி
@cogito Thanks for your comment.Tendays time hectic for me.
some days even forget to talk to you.
@ஸ்கேஎம். கொலு வெச்சி போன்ல கூட பேசினேன் ஆனாலும் என்னைக் கூப்பிடலே.இது ஞாயம் இல்லை.அதுவும் பாவம் எங்க G3வந்ததை வேறே 4 பேர் வ்ந்தாங்கன்னு கிண்டல் வேறே.பொறுத்தது போறும் G3 பொங்கி எழு(முடிந்தால்)
இருந்தாலும் உரிமையுடன் வந்து திட்டினதுக்கு நன்றீ.
@மின்னல் உங்க அண்ணன் கூட இ. பாங்க்கா. என்னைத்தெரியுமான்ன்னு கேளூ.அப்பறம் அம்பிக்கு பயப்படவேண்டாம்.பூரிகட்டைகிட்டே சொன்னாப்போதும்.பாதி பிள்ளையார்தான் கொலுவில் மீதி ஷோகேசில்.10நாள் வந்து சுண்டல் எடுத்தாமாதிரி கொஞ்சம் வீணையும் வாசிச்சுஇருக்கலாம்.
ஹலோ சார்,
என் அண்ணன் இப்போ இருக்கறது ஊட்டி கிட்ட ஏதோ ஒரு கிராமம் னு சொன்னான். ஆனா முன்னாடி அவன் மாம்பலத்துல ஆரிய கெளடா ரோடு னு தான் நினைக்கிறேன். அவன் பேரு பார்த்த சாரதி,நெத்தியில திருமன் இருக்கும்.
ஊட்டி கிட்டே நடுவட்டமா?முன்னாலே
முன்னாலே மேற்கு மாம்பலம் பிராஞ்சு.அப்போ என்னை இருக்கனும் என்னோட ஹோம் லோன் அங்கேதான் இருந்தது My name is T R Chandrasekaran Dy. General Manager Accounts
என்னை உங்க வீட்டுக் கொலுவுக்குக் கூப்பிடவே இல்லையே? எல்லாரையும் கூப்பிட்டிருக்கீங்க! :P
ஊர்லேந்து வந்தவுடனே போன்போட்டு நீங்ககூட யார்ன்னு தெரியலைசொல்லி,அப்பவே நான் வீட்டுக்கு வாங்கன்னு சொல்லியாச்சு.
Nice pictures n explanation :)
Nice pictures n explanation :)
@raji Thank you very much for your visit and comment
ஊர்லே இருந்து வந்தவுடன் கூப்பிட்டது கொலுவுக்கு ஒண்ணும் இல்லை!:P உங்களுக்கு வயசாயிடுச்சா, எல்லாம் தட்டுக்கெட்டுப் போகுது!:))))) போகட்டும், நாங்களும் இந்தப் பதிவுலகிலே இருக்கோம். நினைவு வச்சுட்டு வந்து பாருங்க நேரம் இருக்கும்போது!
வலைப்பதிவர் மீட்டிங்கிலே என்ன சார் ஸ்பெஷல்? என்னைக் கூப்பிடவே இல்லை, இதுக்கும்! :P கொட்டற மழையிலே எல்லாரும் கடமை உணர்ச்சி தவறாம எங்கே மீட் பண்ணினீங்க?
ரொம்ப நாள் கழித்துக் கேட்க கிடைத்த பாடல், அன்னை மீனாக்ஷியின் ரிஷப வாகனமும் பார்த்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மிக்க நன்றி தலைவா.
@mமேடம் யாருக்கு வயசாச்சு. போன்லே நாங்க ஞாபகமா போன்பண்ணா யாருன்னு தெரியாதுன்னு சொன்னது யாரு.
புயலின்காரணமாகா சூனாமீ(G3) வரவில்லை
மௌளிசார் எப்போ டைம் கிடைக்குதோ அப்போ வந்து பாருங்கள் கேளுங்கள்
//மௌளிசார் எப்போ டைம் கிடைக்குதோ அப்போ வந்து பாருங்கள் //
ராம..ராமா!, நீங்க என்ன இப்படி சார்ன்னு எல்லாம் சொல்லாதீங்க...
உங்களைவிட் ரொம்பச் சின்னவன் நான்.
சார் என்பது மரியாதையைக் குறிக்கும் வார்த்தை. உங்கள் M D க்கு 25வயது என்றால் எப்பிடிஅழைப்பீர்கள். பொதுத்துறையில் பணியாற்றியதின் விளைவினால் வந்த நல்ல பழக்கம் விடமுடியவில்லை.
//சார் என்பது மரியாதையைக் குறிக்கும் வார்த்தை. உங்கள் M D க்கு 25வயது என்றால் எப்பிடிஅழைப்பீர்கள். //
எனது முந்தைய MD ரிட்டையர்ட் IAS, ஆனா அவரையும் நாங்க வினித் அப்படின்னு பெயர் சொல்லித்தான் கூப்பிடுவோம். ஏதோ அமரிக்க கலாச்சாரம் ஒட்டிக்கிட்டது.....
Post a Comment