Sunday, October 14, 2007

கொலுவுக்கு வாருங்கள்(3)

இன்று மூன்றாவது நாள்.ஸ்ரீராஜராஜேஸ்வரிக்கு உரிய நாள்

திருமஹாவைத்யநாதசிவனின் அருமையான பாடல் அன்னையின் பேரில்
ராகம்:- ஜனரஞ்ஜனி தாளம்:- ஆதி

பல்லவி
பாஹிமாம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கிருபாகரி சங்கரி
பாஹிமாம்
அனுபல்லவி
ஏஹி சுகம் தேஹி சிம்ஹவாகினி தயாபிராவாகினி மோஹினி
சரணம்
பண்ட சண்ட முண்ட கண்டனி மஹிஷ பஞ்ஜனி ரஞ்ஜனி நிரஞ்ஜனி
பண்டித ஸ்ரீகுஹதாஸ போஷிணி சுபாஷிணி ரிபு பீஷணி வர பூஷணி
பாட்டும் பரதமுமாக கீழே பாருங்கள்



ஸ்ரீசக்ராதிபதியாகவும் இருப்பவளுமவளே.


எல்லோருக்கும் தெரிந்த பிடித்த அகத்திய கீதமான "ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாஸனேஸ்வரி" பாடல் இதே

ராகம்: செஞ்சுருட்டி தாளம்:- ஆதி

ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகேபுவனேஸ்வரி
அனுபல்லவி:
ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோஹரிஞான வித்யேஸ்வரி ராஜ ராஜேஸ்வரிஸ்ரீ….)
சரணம்:1 ராகம்: புன்னாகவராளி
பலவிதமாய் உன்னை ஆடவும் பாடவும் பாடிக் கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும்
உலக முழுதும் உன்னை அகமுரக் காணவும் ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி (ஸ்ரீ….)
2. ராகம்: நாதநாமக்க்ரியா
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோர்கள் ஒன்றிடக் கூட்டிவைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன் ஊழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி (ஸ்ரீ….)
3. ராகம்: சிந்து பைரவி
துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய் தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய் அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி (ஸ்ரீ…)
இன்று பிரசாதம் மின்னலுக்காக அவல் புட்டு.நவராத்திரியில் ஒரு நாள் புட்டு படைப்பது என்பது சம்பிரதாயம். அதை எனக்கு நினைவூட்டிய மின்னலுக்கு நன்றி.அம்பி வருவதற்குள் வந்து விடு.அப்பறம் நான் கிராண்டி கிடையாது.

10 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இது என்ன மின்னலுக்கும் அம்பிக்கும் மட்டும் புட்டு புட்டு, புட்டு தரப்படும்-னு புட்டு புட்டு வைக்கறீங்க!
யாராங்கே! திராச வீட்டின் புட்டுக்கு பூட்டு போட்டு, புட்டை ஒரே எட்டாக என்னிடம் கொண்டு வந்து சேருங்கள்! :-))

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியைக் காணக் கொடுத்ததற்கு மிகவும்
நன்றி தி.ரா.ச.
கொலு ரொம்ப அழகா இருக்கிறது.

மாமிக்கும்
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Sumathi. said...

ஹலோ சார்,

பாட்டு எல்லாமே படு சூப்பர் போங்கோ.அதுவும் ஸ்ரீ சக்ர ராஜ எக்சலண்ட்.

//இன்று பிரசாதம் மின்னலுக்காக அவல் புட்டு.நவராத்திரியில் ஒரு நாள் புட்டு படைப்பது என்பது சம்பிரதாயம். அதை எனக்கு நினைவூட்டிய மின்னலுக்கு நன்றி.//

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல, சுண்டலுக்கு இந்த புட்டு எவ்வளவோ பெஷ்டு கண்ணா பெஷ்டு, அதன் ஹி ஹி ஹி ஹிஹி...

//அம்பி வருவதற்குள் வந்து விடு.அப்பறம் நான் கிராண்டி கிடையாது.//

அதான் இல்ல, சனிக்கிழமையே அம்பிக்கு புட்டு டிடி ஆத்துல குடுத்துட்டோம், அதனால இங்க என்னோட போட்டிக்கோ பங்குக்கோ வர மாட்டார்....புல்லா எனக்கு தன். ரொம்ப தேங்ஸ் புட்டுக்கு.

ambi said...

இதோ வந்தாச்சு! வந்தாச்சு! புட்டுனா எனக்கு ரொம்ப பிடிக்கும். பக்கத்து வீட்டு டிடி அக்கா வீட்டுல நேற்று புட்டு. ஹிஹி. :)))

"ஷ்ரி சக்ர ராஜ...."
அருமையான பாடல், ராக மாலிகை தெரியும், என்ன ராகம் எல்லாம் இருக்கு?னு இன்னிக்கு தெரிந்தது. :)

ambi said...

புட்டுகாக ஈசனே மண் சுமந்தான், பிரம்படி கூட பட்டான்.

அதானால நான் மண் சுமக்க ரெடி, கீதா மேடம் பிரம்படிக்கு ரெடியா? :p

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி நான்பாண்டியனாக ரெடி பிரம்பை கொஞ்சம் தங்கமணியை கடன்கொடுக்கச் சொல்லு பின்னி பிடறேன் பின்னி.

பாவம் டிடி அக்கா காசிக்கு போயும்.....கருமம் தீரவில்லை

தி. ரா. ச.(T.R.C.) said...

மின்னல் அம்பியை பத்தி உனக்குத்தெரியாது கீதாமேடத்துகிட்டே கேட்டுக்கோ.தினமும் வந்து சுண்டல் வாங்கிகோ.

தி. ரா. ச.(T.R.C.) said...

கேஆர்ஸ்.உங்களுக்கும்புட்டு உண்டு.ஆனா உங்க லெவலே தனி..
பாட்டுக்கு பாட்டு எழுதும் உங்களுக்கு
புட்டும் பூட்டும் எதுக்கு. வருகைக்கு நன்றி.அடிக்கடிவாங்க

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்கோ வல்லியம்மா. பெரியோர்கள் அடிக்கடி வரவேண்டும்.சுண்டல் எடுத்துக் கொண்டீர்களா.

இலவசக்கொத்தனார் said...

கேஆர்எஸ் வீட்டில் இந்தப் பாட்டுதான் கேட்டேன். இப்போ இங்கேயும். நல்லது. புட்டு நல்லா இருந்தது.