வெள்ளைக் கமலத் திலே-அவள்
வீற்றிருப் பாள்,புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான்-நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,
கள்ளைக் கடலமு தை-நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத் திலே-எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள்.
வேதத் திருவிழி யாள்,-அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே-நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்க மெனுஞ்-செவி
வாய்ந்ததற் றுணிவெனுந் தோடணிந் தாள்,
போதமென் நாசியி னாள்,-நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடை யாள்.
கற்பனைத் தேனித ழாள்-சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,
சிற்ப முதற்கலை கள்-பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,சொற்படு நயமறி வார்-இசைதோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்தமேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்.
வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள்;-நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,
பூணியல் மார்பகத் தாள்-ஐவர்
பூவை,திரௌபதி புகழ்க் கதையைமாணியல்
தமிழ்ப்பாட்டால்-நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே!
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள், கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)
வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் பாட்டை நித்யஸ்ரீயின் குரலில் கேட்க செல்லவும் இங்கே
இன்று கொண்டகடலை சுண்டல்.
8 comments:
ஹலோ சார்.
ஆஹ ஒருவழியா கொலு முடிவுக்கு வந்துடுத்து. பாட்டும் கொலுவும் போட்டு நீங்க தினமும் சுண்டலும் குடுத்து, (டிடிஅக்கா மாதிரி ஏமாத்தாம) எங்களை நன்னாவே கவனிச்சீங்க.ரொம்ப்ப நன்றி.
இந்த வெள்ளை கமலத்திலே பாட்டு கூட ஒருபடத்தில எஸ்.வரலக்ஷ்மி கூட அழகா பாடியிருப்பாங்க..
சுண்டல் போடலையா? பரவாயில்லை, ஒண்ணையும் சுடவும் இல்லை, வந்து பார்த்துட்டுப் போயிட்டேன். :P
ஹி..ஹி.. நேத்தே SKM எனக்கு கடலைப்பருப்பு சுண்டல் பண்ணி குடுத்தாங்களே
G3
மின்னல் நான் 10 நாள் போஸ்டு போட்டது பெரிய விஷயமில்லை. நீ 10 நாளும்வந்து மின்னின பாரு அதான்பெரிய விஷயம்.அம்பத்தூர் இடிக்கேகலங்காதவன் நான்.நன்றி.
அந்தப்பாட்டு பாடியது சூலமங்கலம்
க்ர்ர்ர்ர்ர்ர், நாங்க எல்லாம் கத்தினது காதிலே விழாது! எல்லாம் நேரம்! மின்னல் ஒளிதான் பெரிசா இருக்கு! :P :P
நாங்க எல்லாம் கத்தினது காதிலே விழாது! மின்னல் ஒளி தான் பெரிசா இருக்கு! :P :P
மேடம் நீங்களும் சுடரத்துக்கோ சுண்டலுக்கோ தினம் வந்தீங்க நன்றி
G3 சுணடல் ஒரு டிபந்தான் சாப்பாடூ இல்லை. பாத்து.
Post a Comment