Saturday, October 13, 2007

கொலுவுக்கு வாருங்கள்(2)

இன்று இரண்டாம் நாள் நவராத்திரி பண்டிகை.இன்றும் துர்கா மாதாவான
ஈஸ்வரிதான் பிரதானம்.இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியை மூன்று
மூன்று நாட்களாக பிரித்து முறையே துர்கா, லக்ஷ்மி,சரஸ்வதியாக வழிபாடு.
ஈஸ்வரி என்றாலே ஜகதீஸ்வரி,அகிலாண்டேஸ்வரிதான் ஞாபகத்துக்கு வரும். திருச்சிக்கு அருகில் இருக்கும் திருவானைக்காவல் கோவிலில் குடிகொண்டு இருப்பவள்.அம்பாள் மிக அழகு! அதுவும், அர்த்த ஜாம பூஜைக்கு அலங்கரிக்கப்பட்ட அகிலாண்டேசுவரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு களை, அழகு, கம்பீரம். அகிலாண்டேசுவரி மிக உக்ரமான அம்பாள் என்றே கூறுவார்கள். நடு இரவில், சலங்கை ஒலி 'ஜல் ஜல்' என ஒலிக்க, அவள் கோவில் பிரகாரங்களை வலம் வருவதாக ஐதீகம்; இரு காதுகளிலும் ஆதி சங்கரர் அணிவித்த ஸ்ரீசக்ரத்தை தாடங்கம்என்கிற காதணிகளைஅணிந்து எதிரில்அமர்ந்து இருக்கும் ஆனை முகத்தோனுக்கும்,அடியவருக்கும் அருள்பாலிப்பவள். பார்க்கப் பார்க்க திகட்டாத ஜ்வலாமுகி அவள். ஸ்ரீ வித்யா உபாஸகரானதிரு.முத்துஸ்வாமிதீக்ஷ்தர்அவர்கள்திருவானைக்காவல்

உறைஅகிலாண்டேஸ்வரியின் மீது த்விஜாவந்திராகத்தில்அருமையானகீர்த்தனையைவழங்கியுள்ளார்.
இந்தப்பாட்டைக் கேட்டாலேஅம்மனை நேரில் பார்த்தஉணர்வு வரும். அதுவும் மும்பை ஜெயஸ்ரீ குரலில் கேட்டால் . கேட்டுப் பார்த்துதான் சொல்லுங்களேன்

<"அகிலாண்டேஸ்வரீம் ரக்ஷமாம் "> ">(மும்பை ஜெயஸ்ரீ)
<"திரு.சேஷகோபாலன் பாட்டை இங்கே கேட்கவும்">">

சரி பட்டைக் கேட்டாச்சா சுண்டல் பிரசாதம் வாங்கிச் செல்லுங்கள் .
சுண்டலைப் பற்றிய ஒரு வெண்பா

விருப்புடன் உண்ணவே வெந்த பருப்பில்
துருவிக் கலந்திட்ட தேங்காய் மிளகாயும்
உப்பும் கடுகுமிட்ட சுண்டலில் உண்டாம்
உடலுக் குற்ற புரதம்



5 comments:

Geetha Sambasivam said...

ரெண்டு நாள் கொலுவுக்கும் போஸ்ட் போட்டாச்சா? ஆனால் என்னைக் கூப்பிடலை! க்ர்ர்ர்ர்ர்ர்., நானே வந்துட்டேன், என்ன செய்யப் போறீங்க? சுண்டலையும் பாட்டுக் கேட்காமலேயே எடுத்துக்கிட்டேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ கீதாமேடம் நீங்க வந்தாலேபோதும்.ஒன்னும் சுடலையே
9 நாளூமுண்டு தினமும்சுண்டலும் உண்டு வாங்க

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இது என்ன சுண்டல் கண்டிஷன்?
டூ மச்!
சந்தானம் பாட்டைக் கேட்க முடியவில்லை, திராச...என்னன்னு பாருங்கள்!

அகிலாண்டேஸ்வரி...பாடல் அழகு! த்விஜாவந்தி ராகமும் அழகோ அழகு! இசை இன்பம் வலைப்பூவில் இது பற்றி எல்லாம் நீங்க ஒவ்வொண்ணா எழுதுங்க திராச!

தி. ரா. ச.(T.R.C.) said...

@கேஆர் ஸ் சும்மா condition apply
அவ்வளவுதான்.ச்ந்தானத்துக்கு பதிலா சேஷகோபலனைபோட்டாச்சு கேளுங்கள் இப்போ

இலவசக்கொத்தனார் said...

இன்னிக்கு சுண்டல் வேண்டாம். இப்படி ஒரு சூப்பர் பாட்டைக் கேட்டாச்சே. இனிமே என்ன. இந்த பாட்டோட வரிகள் தரக்கூடாதா?