

வட இந்தியாவில் கங்கையைப் போன்று சரஸ்வதி என்ற நதிஒன்று ஓடியதாக வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. பின்பு அந்த நதி திசை மாறி எங்கோ மறைந்துவிட்டது.அந்த சரஸ்வதிஆறு எங்கே தோன்றியது? எங்கெல்லாம் ஓடி, எப்போது மறைந்தது என்பதைக் கண்டறிய நிபுணர்களைக் கொண்ட 'சரஸ்வதி ஆராய்ச்சிக் குழு' அமைக்கப்பட்டிருக்கிறது. திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் தலத்தில் கங்கை யமுனையோடு சரஸ்வதி ஊற்றுப்போன்று அந்தர் முகமாய் கலக்கின்றது என்றுநம்பப்படுகின்றது.
குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையின் முதற்பாடல்
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து, உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே
பொருள்
உலகு ஏழும் காத்து, அவற்றை உண்ட விஷ்ணுதுயில் கொண்டிருக்க, அவற்றைஅழிப்பவராகிய சிவன் பித்தனாகுமாறு, படைக்கும் ஆற்றல் கொண்ட பிரம்மன்சுவைக்கும்கரும்பான சகலகலாவல்லியே! உன்திருவடிகளைத்தாங்க, வெண்தாமரைக்கேஅல்லாமல், என்னுடைய தூய உள்ளமான, குளிர்ச்சி பொருந்திய தாமரைக்குத் தகுதிஇல்லையோ?
சங்கீத பாடம் ஆரம்பிக்கும் போது இந்தப்பாடலைத்தான் முதலில் கற்றுத்தருவார்கள்.ஆரபி ராகத்தில் அமைந்த முத்துஸ்வாமி தீக்ஷதரின் பாடல்
ராகம்:- ஆரபி தாளம்:- ரூபகம்
பல்லவி
ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே பரதேவதே அம்ப .....(ஸ்ரீ சரஸ்வதி..)
(அனனை சரஸ்வதியேநமஸ்காரம் சகலதேவதைகளும் வணங்கும்அம்பாளே)
அனுபல்லவி
ஸ்ரீபதி கௌரிபதி குருகுஹவினுதே விதியுவதே..(ஸ்ரீ சரஸ்வதி)
(லக்ஷ்மியின் பதியான திருமாலும், உமாவின் பதியான சந்திரசேகரனும்,முருகனும் வணங்கும் எப்பொழுதும் இளமையாய் இருப்பவளே)
சரணம்
வாஸனாத்திரய விவர்ஜிதே வரமுனிவரவித மூர்த்தே
(அறம் பொருள் இன்பம் அளிப்பவளே,நாரதமுனிவருக்கு தாயே)
வாஸவாத்ய கிலனீசர வரவிதரன பகுகீர்த்தே
(எல்லாவித வாத்யங்களுக்கும் ஆதாரமாக இருந்துகொண்டும், பல சிறப்புகளையும் கொண்டவளே )
தரஹாஸ்யயுதமுகாம்புருகே அத்புதசராணம்புருகே
(எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்தவளே,அதிசயிக்கும் சரணங்களை உடையவளே)
ஸ்மசாரவித்யாபகே ஸகலமந்த்ராக்ஷ்ர குஹே ...(ஸ்ரீ சரஸ்வதி..)
(உலக வாழ்க்கையில் கல்விக்கு அதிபதியே, எல்லாமந்திரங்களுக்கும் உட்பொருளாய் உறைபவளே ஸ்ரீ சரஸ்வதியே வணக்கம்)
<"மும்பைஜெயஸ்ரீ பாடுகிறார் இங்கே"> "
இன்று பிரசாதம் கடலை பருப்பு சுணடல்

8 comments:
ஹலோ சார்,
அட அட அடா கொலு என்ன அழகா இருக்கு சார்.நிஜமாவே ரொம்ப அழகாயிருக்கு.ஆமாம், நான் கூட கொஞ்ச நாள் வீனை கத்துக்கும் போது இதெல்லாம் வாசிச்சிருக்கேன்.நல்ல பாட்டு.
சுண்டலும் கொஞ்சமா எடுத்துகிட்டேன். நன்றி.
இன்னிக்கு நான் தான் கொலுவுக்கு (சுண்டலுக்கு) பஷ்ட்டா? :)
பிலஹரி ராகம்னு சொல்லிட்டு ஆரபில பாட்டு போட்டா என்ன அர்த்தம்..? ;))
எலுமிச்சை சாததுக்கு பதில் கடலைபருப்பு சுண்டலா? :p
ஹி..ஹி.. நேத்தே SKM எனக்கு கடலைப்பருப்பு சுண்டல் பண்ணி குடுத்தாங்களே.. :P
கமெண்டுக்குப் பதில் கூடக் கொடுக்க முடியாமல் சுண்டலில் பிசியா? :P
சுமதி வீணை வாசிக்கத் தெரியுமா.பேஷ்
அம்பி சுணடல்தான் ஈஸி சாப்பிட கொண்டுபோக
ராத்திரி10 மணிக்கு வந்து பதிவுபோடவே நேரம் சரியாஇருக்கு.
நிறைய பதிவுகளை மிஸ் பண்ணிவிட்டேன் போல....
நல்ல பாடலை தந்திருக்கிறீர்கள்....நன்றி.
Post a Comment