Tuesday, December 11, 2007

மஹாகவியின் பிறந்தநாள்.

.அவதாரம்:- 11/12/1882 மறைவு;- நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் நான் புதுவையில் பாரதியுடன் இருக்கும்போது, ""மகான்கள் தீர்க்காயுசா யில்லாமல் போய்விடுகிறார்கள்? பாரதியாரே, அதற்குக் காரணம் என்ன?"" என்று கேட்டேன்.""மகான்கள் பூலோகத்திற்குத் தேவ தூதர்கள். ஜனோபகாரார்த்தமாக அவர்கள் உதிக்கிறார்கள். பூலோகத்தில் அவர்கள் வந்த காரியம் ஆனதும் அவர்கள் இவ்வுலகத்தில் நிற்க மாட்டார்கள். மறைந்துவிடுவார்கள்"" என்றார். அவர் வாக்கையும் அனுபவத்தையும் கவனித்தால், அது சரியென்றே தோன்றுகிறது.ஏனென்றால், ஸ்ரீ விவேகானந்தர் நாற்பதாவது வயதில் காலமானார். அவருடைய சிஷ்யையும் வேத புத்திரியுமான சகோதரி நிவேதிதா தேவி, தமது நாற்பதாவது வயதில் காலமானார். நிவேதிதாவுக்குச் சிஷ்யரான பாரதியும் நாற்பதாவது வயதில் காலமானார். இவ்விதம் குரு பரம்பரை காலமான விஷயம் அதிசயமாக இருக்கிறது.புதுவையில் அவர் எங்கேனும் நடந்து செல்லும்போது, பாரதியாருடன் நானும் போக விரும்பி நடந்தால், அவருக்குச் சரியாக என்னால் நடக்க முடியாது. அவருக்கு வீதிகளில் மெதுவாக நடக்கத் தெரியாது; எனக்கு அவசரமாக நடக்க முடியாது. எனவே, என் ஓட்டம் அவர் நடைக்குச் சரியாக இருக்கும்.புதுவையில் அவர் எழுதிய "பாஞ்சாலி சபத"த்தின் முதல் பாகத்தை ஒரு ஜமீன்தாரிடம் படித்துக் காட்டினேன். அவர் அதிசயமாக கேட்டுக்கொண்டிருக்கையில், அவருடன் இருந்த அவரது காரியதரிசி, என்னை, ""இந்தப் புத்தகம் யார் எழுதியது?"" என்று கேட்டார். அதற்கு நான், ""பாரதியார் பாடியது"" என்று சொன்னேன்.அவர், ""பாரதி எந்த ஊர்?"" என்றார்.""அவர் எட்டையபுரம்"" என்றேன்.""இப்படிப்பட்ட பாடல் எழுதியவர் எட்டையபுரம் அல்ல"" என்று அவர் சொன்னார்.காரியதரிசி அப்படிச் சொன்னதற்கு, நான் ""இல்லை ஐயா, அவரே பல தடவைகளில் தாம் எட்டையபுரம் என்று சொல்லி யிருக்கிறாரே?"" என்றேன்.""கிடையாது; அவர் எட்டையரும் இல்லை. வேண்டுமானால் நீர் நேராகப் போய் இந்தத் தர்க்க சந்தர்ப்பத்தைச் சொல்லி, இன்னொருதரம் கேளும்; என்ன சொல்கிறார், பாரும். இருந்தாலும் நான் சொல்லுகிறேன், கேளும். இப்படிப்பட்ட பாட்டு எழுதியவரின் ஊர், பாஞ்சாலங் குறிச்சியாகத்தான் இருக்க வேண்டும். பாஞ்சாலங் குறிச்சி தவிர, மற்ற ஊர்களில் பிறந்தவர்களால் இப்படிப்பட்ட வீரப் பாட்டு எழுத முடியாது"" என்றார்.அந்தக் காரியதரிசியின் சொல்லில் கொஞ்சம் சந்தேகப்பட்டு நான் பாரதியாரிடம் சென்று, ""ஐயா, தாங்கள் எந்த ஊர்?"" என்று கேட்டேன்.""என்ன கிருஷ்ணா, அடிக்கடி எந்த ஊர் என்று கேட்கிறாய்? எட்டையபுரம், எட்டையபுரம் என்று எத்தனை தடவை சொல்லுவது!"" என்றார். அதன் பேரில் நான் மேற்படி ஜமீன்தார் வீட்டில் நடந்த சம்பவங்களைச் சொன்னேன். பிறகு புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டே, ""அந்த ஓரந்தான்"" என்றார் பாரதியார். எட்டையபுரம் ஓரந்தானாம் பாஞ்சாலங்குறிச்சி.ஒரு நாள் பாரதியாரை, ""ஐயா, இந்த ஊரில் நல்ல மடு ஒன்று கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. தாங்கள் தினம் அங்கு ஸ்நானத்திற்கு வர முடியுமா?"" என்று கேட்டேன்.""எங்கே? எங்கே?"" என்று அவர் பரபரப்புடன் கேட்டார்.""நமது வீட்டிற்கு மேற்கே சுமார் இரண்டு மைல் தூரத்தில், அந்த மடுவிற்கு விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் சென்றால்தான், நிம்மதியாகக் கும்பலில்லாமல் ஸ்நானம் செய்யலாம்"" என்றேன்.""விடியற்காலம் நீ எப்பொழுது வந்து எழுப்பினாலும், உன்னுடன் வருகிறேன். தப்பாமல் விடியற்காலையில் வீட்டில் வந்து என்னை எழுப்பு"" என்றார் பாரதி.அவர் சொன்னபடி மறுநாட் காலையில் நாலு மணிக்கு அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன்.""யார்?"" என்றார் பாரதியார். ""ஏன்?"" என்றேன். உடனே சந்தோஷமாக எழுந்து வந்து கதவைத் திறந்து என் கூடவே மடுவுக்குக் கிளம்பினார். போகும் மார்க்கத்தில், இவர் வீட்டிற்கும் மடுவிற்கும் இடையில் ரஸ்தாவிற்கு இரு புறத்திலும் நஞ்சை வயல்களும் தென்னந் தோப்புகளும் இருந்தன. இவற்றின் செழுமையையும், பிரகிருதீய அழகு ஆனந்தங்களையும் ---பிறப்பிலேயே வரகவியாதலால் எனக்குத் தெரியாமலேயே தாம் கவனித்து கவனித்து, குயில் பாட்டுக்கு அடிப்படை தேடிக்கொண்டார்.அன்று அவரும் நானும் ஒரு மடுவில் ஸ்நானம் செய்தோம். இவ்வாறு இரண்டு நாள் ஆயிற்று. மூன்றாம் நாள், நான் அவர் வீட்டிற்குப் போகாமையால் அவர் என் வீட்டிற்கு விடியற்காலையில் நடந்துவந்து கதவைத் தட்டி எழுப்பினார். உடனே நான் விழித்து, குரலிலிருந்து பாரதி என்று தெரிந்து, என் தாயாரிடம் அம்மா, ""இவர்தானம்மா பாரதி"" என்றேன்.என் தாயார் உடனே கதவைத் திறந்து, பாரதியை உள்ளே அழைத்து உட்காரச் சொன்னாள். பிறகு, ""பையா! பாரதி, பாரதி என்றாயே, அவரைச் சுப்பிரபாதம் சொல்லச் சொல்லு, பார்ப்போம்"" என்றாள்.அதற்குப் பாரதியார், ""சுப்பிரபாதம் என்றால் என்ன?"" என்று கேட்டார்.உடனே என் தாயார், ""சுப்பிரபாதம் என்றால் என்ன என்கிறாரே! இவ்வளவுதானா உன் பாரதி!"" என்றாள்.இதனிடையே நேரமாகவே, நாங்களிருவரும் மடுவுக்குப் புறப்பட்டோம். பாரதியாருக்கு மனதில் நிம்மதியில்லாமல் "சுப்பிரபாதத்திற்கு" என்னை அர்த்தம் கேட்டார்.""சமஸ்கிருத சுப்பிரபாதம், தமிழில் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி"" என்றேன். திருப்பள்ளியெழுச்சியில் ஒரு பாட்டுச் சொல்லச் சொன்னார். நான் சொன்னேன். அதைக் கேட்டு, அதே மாதிரியாகப் "பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி"யை எழுதி, என் தாயாரிடம், அந்தப் பாடல்களை நேராக முதல் முதலில் பாடிக் காட்டினார்.பாதியார் வீட்டில் நான் நாலாயிரப் பிரபந்தம் பாராயணம் செய்வதுண்டு. அவர் மெ?5;மாக ஆழ்ந்த கவனத்துடன் பத்திரிகைகளுக்கு வியாசங்கள் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு சமயம், என்னை மெ?5;மாகப் பாராயணம் செய்து கொள்ளும்படியாகச் சொன்னார்.அதற்கு நான், ""ஐயா, எழுதும் காரியம் தங்களுடையது. படிக்கும் காரியம் என்னுடையது. அவாளவாள் காரியத்தை அவாளவாள் ஏககாலத்தில் கவனத்துடன் செய்துவந்தால், யாருக்கு என்ன நஷ்டம்?"" என்றேன்.அதற்கு அவர், ""நீ சத்தம் போட்டுப் படிப்பதால், நான் எழுதும் காரியத்துக்குத் தடையாக இருக்கிறது"" என்றார்.அதற்கு நான், ""ஐயா, நீங்கள் மற்ற மனிதர்கள் மாதிரி சாதாரண மனிதராக என் புத்தியில் படவில்லை. ஆகையால்தான், தாங்கள் எழுதும் போது நானும் கூசாமல் பாராயணம் செய்து வருகிறேன். ஏககாலத்தில் ஒரு காரியத்திற்கு மேல் காரியங்கள் செய்யவல்ல சக்தி தங்களிடம் இருப்பதாக எண்ணி நான் படித்து வருகிறேன்"" என்றேன்.உடனே அவர், ""நான் உன் வழிக்கு வருவதில்லை. நீ எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்"" என்றார்.ஒரு நாள் பாரதியார், ""கிருஷ்ணா, இந்த நாலாயிரம் எத்தனை ஆழ்வார்கள் சேர்ந்து பாடியது?"" என்று கேட்டார்.""பத்து ஆழ்வார்களின் பாடல்களெல்லாம் சேர்ந்து ஒரு நாலாயிரப் பிரபந்தம்"" என்றேன்.""பத்து ஆழ்வார்கள் சேர்ந்து நாலாயிரம் பாடினார்களே! நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன், பார்!"" என்றார்.""உங்கள் ஒருத்தரால் ஆறாயிரம் பாட முடியாது. ஏனெனில், கலி முற்ற முற்ற மனிதனுக்கு ஆயுசு குறைவு. கலி முற்றிய காலத்துச் சிறிய மனிதர்கள் நாம். ஆகையினால் முடியாது"" என்று நான் சொன்னேன்.""நல்லது பார்"" என்ற அவர், பாரதி ஆறாயிரம் என்று ஒரு நூல் எழுத ஆரம்பித்தார். இதனிடையில் குடும்பக் கவலை, சள்ளை, வறுமை, வியாதி, முடிவில் மரணம். ஆறாயிரம் பாடல்கள் பூர்த்தியாகவில்லை. அறுபத்தாறுதான் பாடி முடிந்தன. அவர் காலத்திற்குப் பின் இதை அச்சிட்டவர்கள் பாடல்களைக் கணக்கிட்டு இந்த நூலுக்கு "பாரதி அறுபத்தாறு" என்று பெயரிட்டு அச்சிட்டார்கள் போலும்.""ஐயா, பாரதியாரே! உங்கள் கொள்கைகள், கருத்துக்கள் எல்லாம் எனக்குத் திருப்திகரமாக இருக்கின்றன. தாங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்வதும், நான் சொல்வதைத் தாங்கள் ஒப்புக்கொள்வதும் நமக்குள் இயல்பாக இருக்கிறது. ஜனங்களில் பலர் நாம் தப்பிதமான கொள்கைகளை வைத்திருப்பதாகச் சொல்லுகிறார்களே. அதற்கென்ன சொல்லுகிறீர்கள்?"" என்று நான் ஒரு சமயம் கேட்டேன்.""நாம் இப்போது சொல்லுபவற்றையெல்லாம் நானூறு வருஷங்கள் கழித்து உலகம் ஒப்புக்கொள்ளும். நாம் இன்னும் நானூறு வருஷங்களுக்குப் பின்னாலே தோன்றவேண்டியவர் முன்னாலேயே தோன்றிவிட்டோம். அதற்கென்ன செய்வது?"" என்று பதிலளித்தார் பாரதியார். அவர் இவ்வாறு சொல்லி 25 வருஷந்தான் ஆகிறது!(பாரதியாரின் ஆப்த நண்பர் குவளைக் கிருஷ்ணமாச்சாரியார், "ஹிந்துஸ்தான்" வாரப்பதிப்பின் 1938ஆம் ஆண்டு பாரதி மலரில் எழுதிய சில குறிப்புகள்.)




16 comments:

jeevagv said...

ஆகா, பாரதி திரைப்படத்தில் அவரின் தந்தை அவரிடம் - 'காலத்தை மீறி கனவு காணாதே...' என்று சொல்வதாக வசனம் வரும். அதுதான் இதைப்படித்தவுடன் நினைவுக்கு வருகிறது.

காலத்தை மீறி எக்காலத்திலும் வாழும் பாரதி - அவதாரமே - சந்தேகமில்லாமல்!

மெளலி (மதுரையம்பதி) said...

நிறைய விஷயங்கள் தெரிந்தது....பதிவுக்கு நன்றி சார்.

ambi said...

அடடா! நேரில் பாரதி படம் பாக்கற மாதிரி இருந்தது.

முதலில் நீங்கள் தான் பாரதியுடன் சேர்ந்து காலையில் வாக்கிங்க பின் குளியல் என கிளம்பி விட்டீர்களோ?னு நினைத்து விட்டேன். :p

ambi said...

ஆமா! அது என்ன புதுசா ஒரு TRC LOGO? Looks Good. :)

யாரு செஞ்சு தந்தாங்க? உங்கள பாத்து இப்ப கீதா மேடம் தனக்கும் அதே மாதிரி வேணும்!னு அடம் பிடிக்க போறாங்க பாருங்க. :p

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி ஜீவா நீங்கள் சொன்னவுடதான்தெரிந்தது. பாரதி படம் போட்டாச்சு

குமரன் (Kumaran) said...

ஆகா. பாரதியாரின் பிறந்த நாளன்று இதனைப் படிக்க மிகவும் ஆனந்தமாக இருந்தது திராச. பகிர்ந்து கொண்டதற்கு மிக மிக நன்றி.

Geetha Sambasivam said...

mmmகுவளைக்கண்ணனின் இந்தக் கட்டுரையை ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மீண்டும் நினைவு கூர்ந்ததற்கு நன்றி. உங்களோட அனுபவம் தானாக்கும்னு நானும் முதலில் நினைச்சேன், அப்புறம் சுப்ரபாதத்தைப் பத்திக் கேட்டதும் தான் நீங்க இல்லைனு புரிஞ்சது, அது சரி, லோகோ அம்பியோட வேலையாக்கும்? அதான் ஒரே பெருமை தாங்கலை!, நாங்க கரெக்டா எல்லாப் பதிவுக்கும் வந்துடறோம். :P

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி இந்தக்க்குசும்புதானே வேணாங்கிறது.அவசரகுடுக்கை. முழுக்கப்படிக்கனும்.

லோகோ நானேதயார் பண்ணது.எனக்கு பாட்டியோட, பேரனோட உதவி தேவையில்லை.
ஊஅக்கு இன்னும்வீட்டு வேலையை அதிக்கப்படுத்னும்

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி வேதா. வருகைக்கும் கருத்துக்கும்

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌளி நான் ஒரு பாரதி பைத்தியம். அவரைப் பற்றிய செய்திகளை தேடித் தருவதில் மிக்க மகிழ்ச்சி.உங்கள் அனுசரனைக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் உங்களுக்கு அம்பி மேலே இவ்வளவு மதிப்பா? இருக்கட்டும் ஆனா எம்மேலே ஏன் அவ்வளவு மதிப்பு இல்லை. அம்பிக்கும் லோகோவுக்கும் சம்பந்தமே கிடையாது. என்னுடைய முயற்ச்சிதான். இன்னும் இதுபோல நான்கு லோகோ இருக்கு அப்பறம் போடுகிறேன்.
அப்பறம் உங்களுக்கு தெரியாத விஷயம் கூகிலில்கூட கிடையாது,அதுமாதிரி படிக்காத விஷயமும் கிடையாது என்று ஏற்கனவே அம்பி சொல்லியிருக்கான் உங்கள் பதிவுகளீலும் அது புலப்படுகிறது .ஆனால் நான் தான் இப்போதான் முதல் தடைவையா படிச்சேன் அதனால் பகிர்ந்துகொள்ள நினைத்தேன்.
நீங்கள் சொன்ன மாதிரி பாரதியைப் பற்றி எத்தனை தடவை படித்தாலும் அலுப்பதில்லை.

தி. ரா. ச.(T.R.C.) said...

@குமரன் தாங்கள் விடுமுறையில் இருந்தபோதும் வந்து கருத்தை அளித்ததற்கு மிகவும் நன்றி. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று பாடியவன் பாரதி அவனைப் பற்றி பாடினாலும் படித்தாலும் இன்பம் நிச்சியம் உண்டு

Geetha Sambasivam said...

"அப்பறம் உங்களுக்கு தெரியாத விஷயம் கூகிலில்கூட கிடையாது,அதுமாதிரி படிக்காத விஷயமும் கிடையாது என்று ஏற்கனவே அம்பி சொல்லியிருக்கான் உங்கள் பதிவுகளீலும் அது புலப்படுகிறது .ஆனால் நான் தான் இப்போதான் முதல் தடைவையா படிச்சேன் அதனால் பகிர்ந்துகொள்ள நினைத்தேன்."

என்ன சார் இது உள்குத்து மாதிரித் தெரியுது? கொஞ்சமாப் புகை வாசனை கூட வருதே? :)

Mahesh said...

Bharadiyar endrume thannigar atra kavignanaga vilangugirar endral idhu pondra achamatra pokke karanam!

Thamizh vaazhga!

தி. ரா. ச.(T.R.C.) said...

@மஹேஷ் வாருங்கள்..நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதாமேடம் புகையா அப்படீனா
நெருப்பு இருக்கனுமே