Tuesday, October 07, 2008

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் 10







பத்மராக சிலா தர்ஸ பரிபாவி கபோலபூ! நவ வித்ரும பிம்ப ச்ரீ ந்யக்காரி ரதனச்சதா!!
மூக்கு வர்ணனைக்குப் பிறகு கன்னம். அம்பாளின் கன்னம் எப்படி இருக்கிறது.பத்மராகக் கல் என்று ஒன்று உண்டு. அதனுடைய குணம் எதிரில் உள்ள பொருளை அப்படியே பிர்திபலிக்கும். இபொழுது இருக்கும் கண்ணாடியைப் போல். ஆனால் அம்பாளின் கன்னம் அந்த பத்மராகக் கல்லை ஒன்னுமே இல்லாமல் செய்யக்கூடிய காந்தி படைத்தது.
அந்த இரண்டு உதடுகளும் மேலும் கீழும் சிகப்பாக இருக்கும். எதைப்போல என்றால்.ஒரு உதடு செங்காந்தாள்(பிம்ப)மலர் போல சிகப்பாக இருக்குமாம். மற்றொரு இதழோ புத்தம் புதிதாக உருவெடுத்த பவழத்தின் சிகப்பு நிறத்தை ஒத்து இருக்குமாம்.பாட்டுக்கோட்டை பாடினானே முகத்தில் முகம் பார்க்கலாம் அதரத்தில் பவளத்தின் நிறம் சேர்க்கலாம் அந்த மாதிரி.
பத்மராக சிலா தர்ஸ பரிபாவி கபோலபூ! நவ வித்ரும பிம்ப ச்ரீ ந்யக்காரி ரதனச்சதா!!

சரி இன்னிக்கி ஸ்பெஷல் சக்கரைப் பொங்கல். மொத்தமும் உனக்குதான்





2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

இதே பத்ம ராகக் கல்லை செளந்தர்ய லஹரியில் ஆச்சார்யாரும் சொல்லியிருக்கார்.

கேசரி படமே அருமையா இருக்கு...ஒரு பார்சேல்.......

Sumathi. said...

ஹலோ சார்,

ஆஹா, பாக்கறச்சேயே நாக்குல தண்ணி ஊறுதே, சரி சரி கொஞ்சம் லேட், ஆனாலும் என் பங்கு இருக்கா?இல்லை காலியா?

பூஜை நன்றாக முடிந்ததா?