



மராளி மந்த கமனா மஹாலாவண்ய சேவதி:!!
அம்பாளுடைய பாதமும் அவளுடைய நடை அழகயையும் வர்ணிக்கும் வரிகள்.அவள் மிகவும் மெதுவாக அன்னப்பட்சியைப் போல் நடந்து செல்கிறாள். அப்படி நட்ந்து செல்லும்போது பாதங்களில் இருக்கும் கொலுசுகளில் இருக்கும் மணிகள் கிணி கிணி என்று ஓசை எழுப்புகிறது.அந்தப் பாதங்களை வணங்குவோம்.
ஸ்ரீ சக்ரராஜ நிலயா ஸ்ரீ மத் திருபுரசுந்தரி!!
அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் கடைசியாக முடிவது அவள் யார் என்ற விளக்கத்துடன். அவள்தான் திருபுரசுந்தரி.இதையே"" அபிராமி பட்டரும் திரிபுரசுந்தரியாவது அறிந்தனமே" என்கிறார். எந்த திருபுர சுந்தரி பிரும்மத்தையும் இந்த ஜீவனையும் ஒன்றாக சேர்க்கக்கூடியவள். அவள் எங்கு இருப்பாள். ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் இருப்பவள் அப்படிபட்ட
லலிதாவை வணங்கி இப்பொழுது விடைபெறுவோம் பின்பு ஒரு சமயம் அம்பாளின் அருளோடு தொடருவோம்
இதுவரை வந்து படித்தவர்களுக்கு நன்றி.குறிப்பாக மின்னலுக்கு. இன்று ஸ்பெஷல் சுண்டல் இல்லை. அதற்கு பதில் சாப்பாடு
லலிதாவை வணங்கி இப்பொழுது விடைபெறுவோம் பின்பு ஒரு சமயம் அம்பாளின் அருளோடு தொடருவோம்
இதுவரை வந்து படித்தவர்களுக்கு நன்றி.குறிப்பாக மின்னலுக்கு. இன்று ஸ்பெஷல் சுண்டல் இல்லை. அதற்கு பதில் சாப்பாடு
4 comments:
இந்த வருட நவராத்ரியும் ரொம்பஜோர்.
பந்திக்கு முந்தி :))
அம்பிகையின் அருள்பூரணமாயிருக்கட்டும்.
நன்றி
ஹலோ சார்,
ஆஹா, என்னது இது? இன்னிக்கு ஸ்பெஷல் விருந்தா? ம்ம்ம்ம்..
ஒரு பிடி பிடிக்கறேன்.
இப்போதான் நவராத்திரி இடுகைகளைப் படித்தேன். அன்னையின் அழகைப் படிக்கப் படிக்க இனிக்கிறது. இப்படியே ஆயிரம் நாமங்கள் பற்றியும் விளக்கி விட்டீர்களானால் நன்றாக இருக்கும் :)
Annaiyin arul irunthaal mutiyum
Post a Comment