Sunday, October 05, 2008

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள்(10)



































































நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!
கண்ணை விவரித்து விட்டு மூக்கை விட முடியுமா? நாஸாதண்டம் என்பது மூக்கினுடைய நடு தண்டு பாகமும் மூக்கும் சேர்ந்தது. அது எப்படி இருக்கிறது என்றால் அப்பொழுதுதான் பாதி மலர்ந்தும் பாதி மலராத செண்கப்பூப் போல இருக்கிறதாம்.அதுவும் இளம் சிவப்பு நிறம்தான். அப்படிப் பட்ட மூக்கில் அம்பாள் மூக்குத்தி அணிந்திருக்கிறாள். அதை வர்ணிக்க என்னால் முடியாது. இருந்தாலும் முயன்று பார்க்கிறேன்.வானத்தில் இருக்கும் எல்லா நக்ஷ்த்திரங்களின் ஒளியையும் அப்படியே திரட்டிஒரு சிறு மூக்குத்தியாக அணிந்திருக்கிறாளாம்.மூக்குத்தியின் மகிமை தெரியவேண்டுமானால் கன்யா குமாரிக்குப் போய் அவளுடைய மூக்குத்தி எவ்வாறு ஜ்வளிக்கிறது என்று பார்த்தால் புரியும்.கலங்கரை விளக்கம் போன்று ஒரு காலத்தில் கப்பல்களை ஆகர்ஷிக்குமாம்.முத்துமூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன தங்கத்தினால் முடிந்திட்ட தாலியழகும் அடியானாற் சொல்ல திறமோ அழகான காஞ்சியில் புகழாக விளக்க விளங்கிடும் அம்மை காமாக்ஷி உமையே ஞாபகம்தான் வருகிறது. மறுமுறை படியுங்கள் நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!
தேவியின் முகம் தெரியும்
சுண்டல் ஆறிக்கொண்டு இருக்கிறது சாபிடுங்கள் நாளை மற்றுமொரு நாமாவளியைப் பார்க்கலாம்



1 comment:

Sumathi. said...

ஹலோ சாரி,

//மூக்குத்தியின் மகிமை தெரியவேண்டுமானால் கன்யா குமாரிக்குப் போய் அவளுடைய மூக்குத்தி எவ்வாறு ஜ்வளிக்கிறது என்று பார்த்தால் புரியும்.//
ஆமாம் நான் கூட பார்த்திருக்கிறேன், ரசிச்சிருக்கிறேன்.

//சுண்டல் ஆறிக்கொண்டு இருக்கிறது சாபிடுங்கள் //

இதெல்லாம் நீங்க சொல்லனுமா? நாங்க அதையெல்லாம் சொல்லமலே செய்துடுவோம்.