நக தீதிதி ஸ்ஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா !
பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா !!
இன்னும் இரண்டு நாள்தான் உள்ளது எனவே நேராக பாதத்துக்கு வந்து விடலாம்.அம்பாளுடைய பாதத்தில் எல்லோரும் வந்து வணங்குகிறார்கள். யார் யார் வந்து வணங்கினார்கள்?தேவேந்திரன்,மும்மூர்த்திகள்,தேவாதி தேவர்கள், முனிவர்கள் இவர்கள் எல்லாம் வந்து வணங்கினார்கள்.அப்படி வண்ங்கியவர்களில் சிலருக்கு தமோ குணம் இருந்ததாம்.அந்த குணங்கள் எல்லாம் அம்பாளின் கால்களில் உள்ள பத்து விரல் நகங்களிலிருந்து வந்த பிரகாசமான ஒளியின் தன்மையால் நீக்கப் பட்டு விட்டன.இதைத்தான் அபிராமி பட்டரும்""மனிதரும் தேவரும், மாயா முனிவரும், வந்து சென்னி குனிதரும் கோமளமே "" கமலாலயனும் மதியுறுவேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் என்கிறார்.
அப்படிப்பட்ட பாதங்களை தாமரை மலருக்கு ஒப்பிடுவார்கள்.எனினும் அது பொருந்தாது.ஏனெனில் தாமரையின் குணம் பகலில் மலர்ந்து இரவிலோ அல்லது பனிமிகுதியாலோ கூம்பி விடும்.ஆனால் உனக்கு பிறந்த வீடோ ஹிமவான் புத்ரி இமயமலை. புகுந்த இடமோ கைலாச மலை. இரண்டும் சதா சர்வகாலமும் பனியிலேயே உறைந்துகிடக்கும் இடம். அப்படியிருந்தும் உன்பாதத் தாமரைகள் கூம்புவதே இல்லை.வாடுவதும் இல்லை."நின் புது மலர்த்தாள் பகலும் தொழுவார்க்கே""என்கிறார் அபிராமி பட்டர்.
1 comment:
உள்ளேனய்யா போட்டுக்கறேன்.
Post a Comment