Saturday, October 18, 2008

.கடல் கடந்த முத்துஸ்வாமி தீக்ஷதர்

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதரின் கிருதிகள் எல்லாமே ஸ்ரீ வித்யா உபாசனை மந்திரங்கள்தான் . அவருடைய கிருதிகளை பாடம் செய்வது பாடுவதும் மிகக் கடினம். ஸ்ரீ ராகத்தில் அமைந்த இந்த நவாவர்ண கிருதிகளில் ஒன்பதாவது கிருதியான இது மிகவும் விசேஷம் வாய்ந்தது.நம்மவர்களையே ஒரு கை பார்த்துவிடும். கீழே காணும் இந்த அயல்நாட்டு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு அருமையாகப் பாடியுள்ளனர்.எடுத்த எடுப்பில் இரண்டு நிமிட ராக ஆலாபனையில் ஸ்ரீ ராகத்தின் லக்ஷ்ணத்தை பிழிந்து கொடுத்து விடுகிறாள் அந்தப் அமெரிக்கப் பெண்.என்ன கம்பீரமான குரல், சுருதி சுத்தம். அதேபோல் எல்லோரும் சேர்ந்து பாடும்போது ஒரேகுரலில் ஒலிப்பது, தாளக்கட்டுப்பாடு, ..அக்ஷரசுத்தம். அட! இங்குள்ள சங்கீத வித்வான்கள் குறித்துக்கொண்டு கவனம் செய்யவேண்டும். நீங்களும் கேட்டு விட்டு என்னுடன் அனுசரித்துப் போவீர்கள் இது சிறந்தது என்பதில்.
ராகம்: ஸ்ரீ தாளம்: கண்ட
ஸ்ரீ கமலாம்பிகே சிவே பாஹிமாம் லலிதே

ஸ்ரீ பதிவிநுதே ஸிதாஸிதே சிவஸஹிதே
சரணம்:
ராகா சந்த்ரமுகீ ரக்ஷித கோலமுகீ
ரமா வாணி ஸகி ராஜயோக ஸுகீ
ஸாகம்பரி ஸாதோதரி சந்த்ரகலாதரி
ஸங்கரி ஸங்கர குருகுஹ பக்தவஸங்கரி
ஏகாக்ஷரி புவனேஸ்வரி ஈஸப்ரியகரி s
ஸ்ரீ -சுககரி ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி!!
தமிழாக்கம்
திருவாரூர் எனும் கமலாலயத்தில் வாழும் கமலாம்பிகையே. லக்ஷ்மியின் கணவனான விஷ்ணுவினால் வணங்கப்படுபவளே. வெண்மை, கருமை ஆகிய இரண்டு நிறங்களுக்கு உரிய கௌரி துர்கையாய் காட்சித் தருபவளே. சிவபிரானோடு இரண்டறக் கலந்தவளே. லலிதா தேவியே.ஸ்ரீ கமலாம்பிகையே. மங்களங்களை அருள்பவளே. என்னைக் காப்பற்றுவாயாக.

பௌர்ணமி நிலவைப் போன்ற முகத்தை உடையவளே. வராஹ முகமுடைய திருமாலை ரக்ஷித்தவளே. லக்ஷிமியும் ஸரஸ்வதியும் உனக்கு தோழியிராக விளங்கும் பெருமை பெற்றவளே. ராஜ யோகம் எனும் உன்னத சுகத்தில் ஆழ்ந்து திளைப்பவளே. சாகம்பரீ என அழைக்கப்படும் வன துர்கைஅன்னையே. மெல்லிய இடையைக் கொண்டவளே. சந்திரனுடைய இளம் பிறையை ஆபரணமாகத் தரித்தவளே. சங்கரன், குழந்தை முருகன், மற்றும் உனது அடியார்களுக்கு வசப்படுபவளே. ஹ்ரீம் என்னும் ஓரெழுத்தில் உறைபவளே. உலகத்தின் ஒரே ஒப்பற்ற தலைவியே. கையிலைநாதனுக்கு பிரியமானவளே. சகல ஐஸ்வர்யங்களையும் மட்டில்லா சுகத்தையும் அருளும்படி செய்பவளே. ஸ்ரீ மஹாத்ரிபுரசுந்தரியே ஸ்ரீ கமலாம்பிகையே என்னைக் காப்பாற்று தாயே.

-

இதே பாடலை திரு டி கே ஜெயராமனின் சிஷ்யர்பாலாஜியின் கணீரென்ற குரலில் நன்றாகப் பாடியுள்ளார் . ஏன் என்று தெரியவில்லை இந்த இளம் கலைஞர் இளம் வயதில் நல்ல புகழ் உச்சியில் இருக்கும்போதே பாடுவதை நிறுத்திவிட்டார்.சங்கீத அரசியல்தான் காரணமோ?

திரு பாலாஜி சங்கர் அவர்கள் குரலில் இங்கே கேளுங்கள்">

20 comments:

Geetha Sambasivam said...

நவராத்திரியில் பொதிகைத் தொலைக்காட்சியில் போட்டாங்களே, சாயந்திரம், பராசக்தியின் பத்து பரிமாணங்கள் அதிலே கூட இந்தப் பாட்டுக் கேட்ட நினைவு இருக்கு!

jeevagv said...

ஆகா, அறியாச் செய்தியை அறியக் கொடுத்தமைக்கு நன்றிகள்!
ஒருவர் மட்டுமல்லாமல் ஒரு குழுவே பாடுகிறார்கள்!
அருமை!
சமீபத்தில் தான் தீக்ஷிதரின் ஹிரண்மயிம் லக்ஷிமிம் பஜாமி பாடலை இங்கு தந்திருந்தேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அபூர்வமான பாடல் திரச ஐயா.

17 வருடங்களுக்கு முன்பாக ரொம்ப கஷ்டப்பட்டு இந்த பாடலை பாடம் பண்ணினேன். அதெல்லாம் நினைவுபடுத்தும் பதிவு.நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அட,
வெஸ்லெயன் பல்கலைக்கழக மாணவர்களா? பக்கத்தில் இருக்குற கனெக்ட்டிகட்டில் தான்! கலக்குறாங்க திராச.

சிவே...ன்னு நிறுத்தி பாஹி...மாம் லலிதே-ன்னு ஸ்ரீராகம் இழையோட்டுகிறார்கள்! மிக அருமையான இசைக் கோப்பு! அறியத் தந்தமைக்கு நன்றி திராச!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முதல் பாடும் அயல் நாட்டுப் பெண்ணின் ஆலாபனை அப்படியே எந்தரோ மகானுபாவலு-வுக்கு இட்டுச் சென்றது!

மொழியாக்கமும் நல்லா வந்திருக்கு திராச!
ஒரே ஒரு திருத்தம்
ரக்ஷித கோலமுகீ = //வராஹ முகமுடைய திருமாலை ரக்ஷித்தவளே//

கோல "முகீ" என்பதால் இங்கு பெண்பாலான வராஹியைக் குறிக்கிறது! திருமாலை அல்ல!

வராஹி என்னும் தன் சக்தியைக் காத்தவளே என்று தான் வரும்-னு நினைக்கிறேன்!

கபீரன்பன் said...

இதெல்லாம் பூர்வ ஜென்ம கொடுப்பினைதான். வேறென்ன சொல்லமுடியும் !

தில்லியில் இருந்த போது சில ருஷ்ய மாணவிகள் வலைப்பக்கத்தின் மூலம் என் மனைவியை தொடர்பு கொண்டு பதினைந்து நாட்கள் வீடு தேடி வந்து சில ஹிந்தி பஜன்களை கற்று சென்றது நினைவுக்கு வந்ததது. நான் அவர்கள் உளவுத்துறையை சேர்ந்தவர்களாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டேன். ஆனால் ஏற்கன்வே அவர்களுக்கு ஹிந்துஸ்தானி இசையில் ஓரளவு நல்ல தேர்ச்சி இருந்தது. அவர்களின் ஈடுபாட்டை பார்த்தப் பிறகு உளமார்ந்த ஆர்வம்தான் என்று தோன்றியது. :)

தக்குடு said...

//ரக்ஷித கோலமுகீ //

வாராகியே! ரக்ஷிப்பாய் என்று இங்கு பொருள் கொள்ள வேண்டும். முகீ என்பது பெண்பாலையே குறிக்கும்.

தம்பி

தக்குடு said...

//ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதரின் கிருதிகள் எல்லாமே ஸ்ரீ வித்யா உபாசனை மந்திரங்கள்தான் //

- முற்றிலும் உண்மை, திருனெல்வேலி பக்கங்களில் இந்த கிருதிகளை படிக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் பாலா மந்திர உபதேசமாவது ஆகியிருக்க வேண்டும்.

தம்பி

ambi said...

சில விஷயங்களை ஆராயமல் அனுபவிக்க கத்து கொண்டால் ஈடுபாடு தானாவே வரும். இல்லையா?

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆமாம் அம்பி நீ சொல்வது சரி. சில விஷயங்களை சொன்னா அனுபவிக்கனும் ம்ம்ம்ம் ஆரய்ச்சி பண்ணக்கூடாது

தி. ரா. ச.(T.R.C.) said...

தம்பி சொன்னால் தம்பிரான் சொன்னா மாதிரி. தீக்ஷதர் எல்லா ஊருக்கும் எல்லா கோவில்களுக்கும் போய் பாடியுள்ளார். கல்லிடைக் குறுச்சிக்கும் வந்து ஆதிவராஹஸ்வாமிபேரில் ச்ரீ லக்ஷ்மி வராஹம் என்ற ஆபோஹி ராகத்தில் அருமையாகா பாடியுள்ளார்.வராஹி என்பதே சரியாக இருக்கலாம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம் வாங்க. நான் பொதிகை பார்க்கவில்லை. எப்படியிருந்தாலும் நல்ல பாடுகிறார்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம் வாங்க. நான் பொதிகை பார்க்கவில்லை. எப்படியிருந்தாலும் நல்ல பாடுகிறார்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஜீவா நன்றி எனக்கும் பிடித்த பாடல்தான் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் என்ற லலிதா ராக பாடல். போனதடவை நவராத்ரியில் அர்த்தம் எழுதியுள்ளேன். பாட்டும் போட்டேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாருங்கள். பாட்டு வேறு பாடுவீர்களா பேஷ் பேஷ். சென்னை வரும்போது பாடிடலாம்

தி. ரா. ச.(T.R.C.) said...

கேஆர்ஸ் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.மறுத்துச்சொல்லக்கூடாதுன்னு மௌளி வேறே பயமுருத்தறார். வராஹி சரிதான்.ஸ்ஷரத்தை இருந்தால் யாருக்கும் வேண்டுமானால் வரும் நல்ல சங்கீதம்

தி. ரா. ச.(T.R.C.) said...

கபீரன்பன் நீங்க சொன்னா மாதிரி பூர்வஜென்ம பந்தம்தான் வேறே என்ன/ உங்களது டெல்லி அனுபவம் தமஷாக இருக்கு.

ஹரன்பிரசன்னா said...

Good post. Pl attempt some more like this. You can translate the important songs of Thikshidar, Syama Sasthirigal, Thiyagarajar and Uththukkadu. It will be a good attempt to do.

தி. ரா. ச.(T.R.C.) said...

With blessings of Lord Muruka I will try to satisfy you in this regrad aran prasanna

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கேஆர்ஸ் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்//

வராஹி என்று வரும்-னு "நினைக்கிறேன்" என்று தான் சொன்னேன்! :))

//மறுத்துச்சொல்லக்கூடாதுன்னு மௌளி வேறே பயமுருத்தறார்//

ஹா ஹா ஹா
தாராளமா மறுத்துச் சொல்லலாம்! ஒட்டியும் மறுத்தும் பேசினால் தான் அதற்குப் பெயர் கலந்துரையாடல், கருத்துரையாடல்!

ஆனால் அப்படிப் பேசும் போதோ, எதிர்க்கும் போதோ, ஏன் மறுக்கிறேன் என்பதையும் சேர்த்தே சொல்லணும்! வெறுமனே எதிர்ப்பேன் எதிர்ப்பேன் என்ற கோஷம் மட்டுமே உதவாது! :)

//சில விஷயங்களை ஆராயமல் அனுபவிக்க கத்து கொண்டால்//

அம்பிக்குச் சாதகமான விஷயங்களை ஆராயமல் அனுபவிக்க-ன்னு இருக்கணும்-னு நினைக்கிறேன்! :))))