Sunday, July 02, 2006

அழைத்ததால் வந்த ஆறுதல் தந்த ஆறு விளையாட்டு

ஆறு விளையாட்டுக்கு இரண்டு பேர்கள் அழைத்திருக்கிறார்கள். இனிமேல் போடாமல் இருந்தால் மரியாதை இல்லை. வலைவுக்கு புதியவன். நெளிவு, சுளிவு,தொழில் நுட்பம் தெரியாதவன்.முயற்சியில் ஜெயித்தால் "கெரிடிட்"எனக்கு இல்லையென்றால் "ட்பிட்" ஆறு விளையாட்டுக்கு அழைத்த திருமதி.கீதா மற்றும் நாச்சியார் அவர்களுக்கு. வங்கியிலிருந்து ஓய்வு பெற்று ஒரு நாள்தானே ஆயிற்று டெபிட்,கெரிட் மறக்கமுடியவில்லை.

1) பிடித்த ஆறு
அ)ஆறுமுகன் (குலதெய்வம்)
ஆ)ஆறுதல்(எப்பவும் கசேஇல்லமேகொடுக்கலாம்)
இ)மூனாறு(சமீபத்தில் போய்வந்த இடம் மற்றபடி கொலையெல்லாம் எனக்கு பண்ணத்தெரியாது)
ஈ)பாலாறு( மணலாறுதான் எப்பவும் இருந்தலும் சொந்த ஊர் ஆறு அல்லவா)
உ)அடையாறு(50 வருடமாக அதன் அருகிலேயேதானே வாழ்கிறேன்)
ஊ)கூவம் ஆறு( சீக்கிரம் மணக்கப்போகிறது)

2)பிடித்த ஆறு படங்கள்
அ)தில்லானா மோகனாம்பாள்
ஆ)காசேதான் கடவுளடா
இ)திருவிளையாடல்
ஈ)சிந்துபைரவி
உ)காதலிக்க நேரமில்லை(கலேஜ்க்கு கட் அடித்து அண்ணனிடம் அடி வாங்கி பார்த்தது)
ஊ)திருட்டு பயலே(நண்பர் திரு.சுசி கணேசன் எடுத்தது)

3)பிடித்த ஆறு புத்தகங்கள்
அ)தியகபூமி(கல்கி)
ஆ)துப்பறியும் சாம்பு(தேவன்)
இ)அம்மா வந்தாள் (தி.ஜா.ரா /தி ரா ச இல்லை)
ஈ) அர்த்தமுள்ள இந்துமதம் (கண்ண தாசன்)
உ)அக்னிப்பரிக்ஷை) ஜெயகாந்தன்)
ஊ)சுந்தர காண்டம்(பால குமரன்)

4) பிடித்த ஆறு பாடகர்கள்
அ)திரு. ம்.டி. ராமனாதன்(நன்றி ஹரி)
ஆ)திருமதி.அருணா சாய்ராம்
இ)திரு. டி.கே. ஜெயராமன்
ஈ)திரு. விஜய் சிவா
உ)திரு.டி.ம்.கிருஷ்ணா
ஊ)திரு.ஜேசுதாஸ்

5) பிடித்த ஆறு ஹோட்டல்கள்
அ)வெங்கட்டா லாட்ஜ்(கும்பகோணம்0
ஆ)காளியாகுடி ஹோட்டல் (மாயவரம்)
இ)ராயர் கேப்(மைலப்பூர்)
ஈ)கணேஷ் மெஸ்(மதுரை)
உ)கோமள விலாஸ் (கொல்கத்தா)
ஊ)ம்.டி.ர்.(பெங்களூர்)

6)மிகவும் பிடித்த வலைப்பதிவாளர்கள்
அ)திரு.குமரன்(என்னை வலைக்குள் இழுத்தவர்)
ஆ)திரு.ஜி. ராகவன் (முருகனுடன் பேச்சு விளையாட்டு நமக்கெல்லாம் வார்த்தை விளையாட்டு)
இ)திரு.ஸ்.கே.(கவிதைக்கு கவிதையால் அழகு செய்பவர்)
ஈ) திரு.அம்மஞ்சி(சிரிக்கவைப்பதையே தொழிலாகக்கொண்டவர் எப்பொழுதும் அஸின்னுடன் கனவில் இருப்பவர்
உ)திருமதி.கீதா சாம்பசிவம்(மார்கண்டேயனி என்றும் பதினாறு)
ஊ)திருமதி.நாச்சியார்(சும்மாஇருந்த சங்கை ஊதிக்கெடுத்தவர்)

ஆறு விளையாடு விளையாடிச்சு.பூங்கொத்தோ கல்லோ எதுவாக இருந்தாலும் எனக்கில்லை.போற்றுவார் போற்றலும் தூற்றூவார் தூற்றலும் போகட்டும் திருமதி நாச்சியாருக்கே
அன்பன். தி ரா ச

25 comments:

சிவமுருகன் said...

//ஊதிக்கெடுத்தவர்//
ஒரு கால் குறைவது போல் தெரிகிறது.

ஊதிக்கொடுத்தவர்.

ஒவ்வொரு ஆறும் வித்யாசம்.

இன்னும் நிறைய எழுதுங்கள்.

Cogito said...

Welcome back to blogging. You seem to relish every word of what you have written !

Good to see a lot of commonalities between us ( Fav films : Thillana Mohanambal,Kase thaan Kaduvulada, Fav Singer : yesudas ). Keep the blog going !

குமரன் (Kumaran) said...

//You seem to relish every word of what you have written !
//

வழிமொழிகிறேன். எல்லா அறுகளும் அருமையாக இருக்கின்றன. பரமாச்சாரியருடனான உங்கள் அனுபவங்களையும் ஆதி சங்கரரின் அற்புத பாடல்களையும் விரைவில் எங்களுடன் பரிமாறிக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்; அதனையே விரும்புகிறேன்.

VSK said...

ஐயா!
உங்களைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன்!
என்னையும் சேர்த்து நன்மொழி சொன்ன
நின்னின் திறம் இன்று வியந்திங்கு போற்றுகின்றேன்!
நன்றி!.

மு.கார்த்திகேயன் said...

TRC sir, unga ella aaRum OK.. aana ambikku naan asinai vittu tharavE mudiyathu

Geetha Sambasivam said...

தி.ரா.ச. சார்,
உங்களுக்கு வலைப்பதிவு புதிது என்றால் நம்பமுடியவில்லை. என்க்குப் போட்டியாகஎன்றும் பதினாறா? போட்டி யாருமே இல்லைனு நினச்சேன். ஒரு இரண்டு, மூன்று வயசு குறைச்சுச் சொல்லி இருக்கலாம் போலிருக்கிறது. குறைச்சுடறேன்.

G.Ragavan said...

வாங்க தி.ரா.ச. உங்களை வலைப்பூவுலகில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாளை வந்து முறையான பின்னூட்டங்கள் இடுகிறேன்.

Viji said...

Thiru TRC, romba nalla irundhudhu. aahhaaa, venkata lodge, KMU?? kaadhil thaen vandhu paayudhu... ;)

And I love all the old movies in your list...!! (thillana topping it).

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச.
எல்லாமே அற்புதம்.
அதனால் தான் திருமதியும் தாயும் அன்பானவர்களாக அமைந்து இருக்கிறார்கள்.
பரமாச்சாரியாரோடு பழக்கம/!!
இது நான் அறியாத ஒன்று. நீங்கள் எழுத நிறைய வைத்து இருக்கிறீர்கள். பகிர்ந்தால் பல்கும் இல்லயா?நன்றி அழைப்பை ஏற்றதற்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி சிவமுருகன் வருகைக்கு. நீங்கள் சொல்வது சரி அவர் எனக்கு உயர்வைக்கொடுத்தவர். அவர் என்னை அழைத்திராவிட்டால் நான் இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கமாட்டேன். தி ரா ச

தி. ரா. ச.(T.R.C.) said...

Thank you very much cogito for u r visit.This an opportunity to know the unface of the person with u have moved

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி குமரன். இதில் உங்களுக்கும் பங்கு உண்டு. மேலும் தொடர்ந்து ஊக்கமளித்து நடத்திச்செல்லுங்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வந்து வாழ்த்தியதற்கு நன்றி. தனித்தமிழில் கொடி கட்டி பறக்கும் ஸ்.கே. மனச்சலனத்தை அகற்றுங்கள் முருகன் நல்லது செய்வான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வணக்கம் கார்த்திக் எனக்கு அளித்த நல்ல வார்த்தைகளுக்கு நன்றி. சீக்கிரம் முடிவு செய்து அம்பியுடன் ஒரு ஒப்பந்ததுக்கு வாருங்கள். வயாசுகுதில்லே.

தி. ரா. ச.(T.R.C.) said...

உங்களுக்கு போட்டியா? உங்கள் வயதை திருப்பிப்போட்டல் நான்.வயதை குறைக்க வேண்டாம். 16க்கு அப்புறம் 15,14, என்றுதனே போகும். உங்கள் பதிவின் ஒரு தாக்கம் தான் என் பதிவு. நன்றி கல்யாணம் 5 நாட்கள் வைத்துக்கொள்ளக்கூடாதோ கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்

பொன்ஸ்~~Poorna said...

//கல்யாணம் 5 நாட்கள் வைத்துக்கொள்ளக்கூடாதோ கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் //
:)))) தி.ரா.ச சார், உங்களுக்கா 61?? நம்ப முடியலை சார் :) :))))

பேசாம எங்க வ.வா.சல சேர்ந்துடுங்க.. தி.ரா.ச, வ.வா.ச இயைபு வேற வொர்க் அவுட் ஆகுது ;)

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க ராகவன் மெதுவாக வாங்க.என்னைத்தொடர்ந்து என்னைமாதிரியே கை துளியிலே ஆடவந்த என் நண்பரே.நான் காத்துகிட்டே இருக்கேன்.கையை பத்திரமாக வைத்துகொள்ளுகள்.இனிமேல் ரிஸ்க் எடுக்காதீர்கள்.வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி பட்டம் கிடைக்குமா? தி ரா ச

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க விஜி வணக்கம். வெங்கடா லாட்ஜ்மீது அவ்வளவு காதலா.நான் செ(சொ) ல்லும் அந்த ஹோட்டல் 30 வருடங்களுக்கு முன்னால்.இப்போது கைமாறிவிட்டது. என்கேள்விக்கு இன்னும் பதில் தரவில்லையே. கேட்கபயமாக இருக்கிறது. அம்பி வேறு பயமுறுத்தி இருக்கிறார் நீங்களே அல்லது ஆள்வைத்து அடிப்பீர்கள் என்று. நான் வரேன். உங்கள் பதிவின் ரசிகன் நான். நன்றி வந்து வாழ்தியதற்கு. தி ரா ச

தி. ரா. ச.(T.R.C.) said...

வாருங்கள் வல்லியம்மா(மனு) என்பதிவில் உங்கள் எழுத்தின் வாழ்க்கை நிகழ்ச்சியின் தாக்கம் இருக்குமே.இருந்தாலும் பெரியமனது பண்ணி வந்து வாழ்த்தியதற்கு. நன்றி
பெரியவாளுடன் பழக்கம்,அன்னை, மனைவி எல்லாம் ஆண்டவன் அளித்த பிச்சை. தி ரா ச

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க பொன் ஸ். இந்தகீதா மேடம் பன்னவேலை எல்லோரும் என் வயதைப் பற்றியே கவலைப்படுகிறார்கள். உமா நீ கவலைப்படாதே. இவர்கள் என்னைநேரில் பார்த்தது கிடையாது. ராகவன் நீங்கள் சொல்லுங்கள் என் தோற்றத்தைப்பற்றி.உங்கள் கழகத்தில் சேரலாம் ஆனால் என்னால் பேசாமல் இருக்கமுடியாதே. தி ரா ச

Geetha Sambasivam said...

என்ன சார் இது? என் பதிவில் வந்து புகழ்ந்து விட்டு இப்போ கல்யாணம் 5 நாள் வச்சுக்கக்கூடாதானு கேட்டிருக்கீங்க? ரொம்ப மோசம் சார் நீங்க! இப்போவே காதிலே இருந்து எல்லாம் புகை வருதே! சீக்கிரத்தில் 100 பதிவு போடப் போறேன் பாருங்க!

Geetha Sambasivam said...

அதெல்லாம் பொன்ஸ் பேச்சைக்கேட்டுச் சங்கத்துப் பக்கம் வந்துடாதீங்க! கஷ்டப்பட்டு "நமக்கு நாமே" திட்டத்தின் மூலம் தலைவி ஆகீருக்கேன். இந்தப் பொன்ஸ் வேறே போட்டிக்கு இருக்காங்க. நீங்க வேறேயா?

இலவசக்கொத்தனார் said...

ஆரம்பிச்சுட்டாரய்யா ஆரம்பிச்சுட்டார்.

சரியா படிங்க - 6ம் பிச்சுட்டார்.

இனிமே என்ன? நிதம் ஒரு பதிவா? வெறும் ஆன்மீகம் மட்டுமில்லாம கலவையா போடுங்க வாத்தியாரே.

G.Ragavan said...

// அ)ஆறுமுகன் (குலதெய்வம்) //
முருகா!

// ஆ)ஆறுதல்(எப்பவும் கசேஇல்லமேகொடுக்கலாம்) //

அன்பு இருந்தால் மட்டுமே குடுக்கலாம். சரியா?

// இ)மூனாறு(சமீபத்தில் போய்வந்த இடம் மற்றபடி கொலையெல்லாம் எனக்கு பண்ணத்தெரியாது)//

நல்லவேள. ஆனாலும் நீங்க இந்நேரம் பாத்துப் போயிருக்க வேண்டாம்.

// ஈ)பாலாறு( மணலாறுதான் எப்பவும் இருந்தலும் சொந்த ஊர் ஆறு அல்லவா) //

பாலாறு பத்திக் கச்சியப்பர் சொல்றதப் படிச்சா ஒங்களுக்கு வயிறு எரியும். நிச்சயமா எரியும். :-)

// உ)அடையாறு(50 வருடமாக அதன் அருகிலேயேதானே வாழ்கிறேன்) //

என்னது...அம்பது வருடமா அதே ஆறு அடைக்குப் பக்கத்துல வாழ்றீங்களா? ம்ம்ம்ம்ம்...என்னைக்கோ அவியலோடயும் வெல்லத்தோடையும் மோதவிட்டு அமுக்க வேண்டியத..அம்பது வருடமா...அடடா!

// ஊ)கூவம் ஆறு( சீக்கிரம் மணக்கப்போகிறது) //

இப்பவே மணக்குது...பக்கத்துல போனா மயக்குதுன்னுதான சொல்றாங்க.

G.Ragavan said...

// 2)பிடித்த ஆறு படங்கள்
அ)தில்லானா மோகனாம்பாள் //

மிகச்சிறந்த படங்களில் ஒன்று. நாவலில் இருந்து திரைப்படமான படங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு.

// ஆ)காசேதான் கடவுளடா //

தேங்காயப் பிரசித்திமா...இது போதும் இந்தப் படத்தப் பத்திச் சொல்ல. ever green comedy.

// இ)திருவிளையாடல் //

தமிழின் தன்மையைப் பெருமையைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட திரைப்படங்களில் தலையானது.

// ஈ)சிந்துபைரவி //

தேசிய விருது பெற்ற படமல்லவா.

// உ)காதலிக்க நேரமில்லை(கலேஜ்க்கு கட் அடித்து அண்ணனிடம் அடி வாங்கி பார்த்தது) //

இந்தப் படத்தில் பாடல்கள் எல்லாம் மிகச் சிறப்பு.

//ஊ)திருட்டு பயலே(நண்பர் திரு.சுசி கணேசன் எடுத்தது) //

இன்னும் பாக்கலையே!