Wednesday, November 01, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா... (3)

வீட்டிற்கு சென்று நல்ல சாப்பாடு அதுவும் திருநெல்வேலிச் சமையல் ருசிக்கு கேட்கவேண்டுமா?ஒரு பிடி பிடித்தேன்.அம்பியின் பெற்றோர்களின் உபசரிப்பு அபாரம்.பிறகு என்ன உண்ட களைப்பு உறக்கம்தான்.நான்கு மணிக்கு எழுந்தவுடன் " சார் தமிரபரணி ஆற்றுக்குப் போலாமா" என்றான் கணேஷ். சரி என்று கையில் துண்டை எடுதுக்கொண்டு கிளம்பி ஆற்றுக்குப் போனோம். மாலை வெய்யிலில் தமிரபரணி தங்க பரணியாக ஜொலித்துக்கொண்டு இருந்தது.என்ன ஒரு ரம்யமான காட்சி.ஆற்றுக்கு இரு புறமும் வயல்வெளிகள். இந்தப்பக்கம் கல்லிடைக்குறிச்சி(கொத்ஸ் திருப்தியா) அந்தப்பக்கம் அம்பாசமுத்ரம். ஆற்றின் நடுவே இருந்த பாறைகளில் முட்டி மோதிக்கொண்டு நிர்மலமான தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது.ஒரு பக்கெட் உப்புத்தண்ணீரில் அவசர அவசரமாக குளியலை முடிதுக்கொள்ளும் எனக்கு இது அதிசயமாக இருந்தது. "சார் பார்த்து இறங்குங்கோ பாறை இருக்கும்" என்று எச்சரிக்கை கொடுத்தானே தவிர மற்றொன்றைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை ஜிலு ஜிலு என்ற தண்ணீரில் "பார்த்து' இறங்கி சுகமான குளியல்.உடம்புக்கு எதமாக இருந்தது.முங்கி குளித்தபோது கணேஷ் சொல்லாதவர் வந்து கால்களில் கொத்த ஆரம்பித்தார்.சிறு சிறு மீன்கள் அங்கும் இங்கும் பாய்ந்து பாய்ந்து கொத்தி உடம்பில் சிலிர்ப்பை ஏற்படித்தன.இருந்தாலும் குளியல் ஆனாந்தமாகத்தான் இருந்தது.இருட்டாகிவிட்டது என்று அரைகுறை மனத்துடன் குளியலை முடித்துக்கொண்டு கரை ஏறி போகும் வழியில் இருந்த சங்கரமடத்தில் ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டு(நேரமின்மை காரணமாக கணேஷின் மற்ற மண்டகபடிகளை விவரிக்காமல்) வீட்டிற்க்ச் சென்று இரவு கருட சேவைக்கு ஆயுத்தமானோம். இரவு 11 மணிக்குத்தான் மாடவீதிக்குள் பெருமாள் அருள்வார் என்ற செய்தியும் கிடைதது.

இரவு 11.00 மணிக்கு மாடவீதிக்கு வந்தோம். நல்ல கூட்டமாக இருந்தது.சுற்றி இருக்கும் இடங்களில் இருந்து கருடசேவையைப் பார்ப்பதற்காக வந்த கூட்டம்.எல்லார் கைகளிலும் தேங்காய், பழம், பூ இவைகளைத் தட்டில் வைத்துக் கொண்டு காத்திருந்தனர்.தெருவின் மூலையில் சலசலப்பு.பார்த்தால் நாதஸ்வர கோஷ்டியினர் வசித்துக்கொண்டு வந்து கொண்டு இருந்தனர்.அதுவும் "மல்லாரி'வெளுத்துவாங்கிக்கொண்டு இருந்தார்கள்.மல்லாரி ஸ்வாமி புறப்பாட்டுக்காகவே ஏற்பட்ட ராகம்.அதுவும் இரவு நேரத்தில் நிசப்த்தமான சுழ்நிலையில் கேட்கவேண்டும்.சொர்க்கலோகமே இங்கே வந்துவிடும். திடீரென்று ஒரு வெளிச்சம் தெரு மூலையில் ஆதி வராஹஸ்வாமி கருட வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். பார்க்க வேண்டுமா .. நாளைவரை காத்திருங்கள் ......

12 comments:

Priya said...

அம்பி உங்க வீட்ல வந்து சாப்டதுக்கு அவர் வீட்ல போய் சாப்டாச்சா? பேஷ்.

தாமிரபரணி குளியல், கருட சேவை தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?

பாவம், கணேஷ அப்டி வாரியிருக்க வேண்டாம். அண்ணன் மேல இருக்கர கோபத்த தம்பி மேல காட்டலாமா?

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச,
தாமிரபரணியா.
அச்சோ அச்சோ.

அது ஆழ்வாரோட அச்சோ.
கொடுத்தவைத்தவர் நீங்கள்.
அப்படியே பெருமாளிடம் சொல்லுங்கள்.

பழைய விகடன் கல்கி படிக்கிற ஞாபகம் வந்துவிட்டது. நன்றி.

ambi said...

//மல்லாரி ஸ்வாமி புறப்பாட்டுக்காகவே ஏற்பட்ட ராகம்.அதுவும் இரவு நேரத்தில் நிசப்த்தமான சுழ்நிலையில் கேட்கவேண்டும்.சொர்க்கலோகமே இங்கே வந்துவிடும். //

200% true. If U have any such stuff(in WAV format), could U pls send it to me as mail..?

Geetha Sambasivam said...

நல்லா அனுபவிச்சிருக்கீங்க. ஸ்வாமி புறப்பாட்டுக்கு அங்கே நீங்க காத்திருந்தா இங்கே எங்களை ஒரு நாள் காக்க வச்சுட்டீங்க. நாளைக்கு வரேன். படம் போடுவீங்கன்னு நினைக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@பிரியா கோபமா எனக்கா அம்பிமேலா கிடையவே கிடையாது. அம்பி எவ்வளவு நல்ல பையன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@வல்லி அம்மா கட்டாயம் நாளைக்கு வாருங்கள் கருடசேவைக்கு தரிசனம் செய்ய.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ அம்பி மல்லாரி நாதஸ்வரத்தில் மட்டும் தான் இருந்தது. இப்பொழுது திரு சஞ்சய் சுப்பிரமணியம் பாடியிருப்பதாகக் கேள்வி முடிந்தால் போடுகிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ வேதா இதை படிப்பதைக் காட்டிலும் நேராக பார்க்கவேண்டும். ஏதோ என்னால் முடிந்தவரை விவரிக்க முயல்கிறேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

@கோபு மாமி சந்தோஷம் தமிழில் பதிவு போட்டதற்கு.தாமிர பரணி அல்ல அது தங்க பரணி

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் பொறுமையாகப் படியுங்கள். நாளைக்கு நிச்சியம் படம் போடப்படும். கத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி. இது கடவுளுக்கும் பொருந்தும்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திராச ஐயா,
பெருமாளைப் பாக்க ஓடோடி வந்தேன்; சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்களே; பரவாயில்லை; அடியார்களைக் காட்டினீர்களே சந்தோஷம் தான்.
//எல்லார் கைகளிலும் தேங்காய், பழம், பூ இவைகளைத் தட்டில் வைத்துக் கொண்டு காத்திருந்தனர்//
......நாங்களும் தான்.

பொருநை நதி என்ற பெயரும் தாமிரபரணிக்கு உண்டு! "குள்ளக் குளிர குடைந்து நீராடாதே" என்ற ஆண்டாள் வாக்கின் படி, நதிக் குளியல் சூப்பரா முடிச்சிட்டீங்க!

Maayaa said...

ada..
amba samuthiram enga ooru.. shame ennanaa naan ponadhee illa