Wednesday, December 06, 2006

திரு.பாபநாசம் சிவன் --தமிழ்த்தியாகய்யா--(2)

திரு. பாபநாசம் சிவன் பாடல்கள் எளிய தமிழில் இருந்ததால் எல்லா தரப்பு மக்களையும் சென்று அடைந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.தமிழ் சினிமா முதலில் பேசாத படமாக இருந்து பின்பு பேசும் படமாக ஆனாலும் அதை காது கொடுத்து கேட்கும் படமாக ஆக்கியவர் திரு.சிவன் அவர்கள்

அவரது பல பாடல்கள் மனதைக்கவர்ந்தாலும் குறிப்பாக இந்தப் பாடல் எல்லோருக்கும் பிடிக்கும்.கண்ணனை வளர்த்த யசோதை என்ன தவம் செய்து இருக்கவேண்டும் என்பதை கொஞ்சி விளையாடும் தமிழில் அவர் வயலின் வித்தகர் லால்குடி திரு.ஜெயராமனுக்கவே எழுதிய பாடல் என்றால் மிகையாகது.இந்தப்பாடல் நடனத்திற்கும் மிகவும் பொருந்தும்.பாடலைப் பற்றி திரு ஜெயராமன் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.பின்னர் அவருடைய வயலின் வாசிப்புக்கு இந்தப்பாடலை திருமதி. ச்ரிநிதி சிதம்பரம்(இப்போது ச்ரிநிதி கார்த்திக்)நடனத்தை அழகாக ஆடி இருப்பதையும் பார்க்கலாம்.

ராகம்:--காபி பல்லவி தாளம்:--ஆதி

என்ன தவம் செய்தனை-- யசோதா
எங்கும் நிறை பரபிரும்மம் அம்மா என்று அழைக்க.........என்ன)
அனுபல்லவி


ஈரேழு புவனங்கள் படைத்தவனைக் கையில்
ஏந்திச் சீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ...............(என்ன)

சரணம்

பிரமனும் இந்திர்னும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத் தாயே.............(என்ன)
சனாகதியர் தவயோகம் செய்து வருந்தி
சாதித்ததை புனிதமாதே எளிதில் பெற................(என்ன)

சரி இப்போது பாட்டை கண்டும் கேட்டும் அனுபவியுங்கள், நாளை அடுத்த பதிவில் சந்திக்கலாம்

Papanasam Sivan: The Tamil Tyagarajar (II)



16 comments:

EarthlyTraveler said...

அடடா!மளமளவென அடுத்தடுத்து அட்டகாசமா பாடல் போஸ்ட் போடுகிறீர்கள்.பாடலுடன் ஆடலும் சேரும் போது அதன் சுவை இரு மடங்கு.திரு.ஜெயராமன் வயலின்....இனிமை இனிமை. அருமையான பாடல்,இனிமையான இசையுடன்,அருமையான அடவுகளோடு எடுத்துரைப்பதை காணக் காண மெய்மறந்து போனது.நன்றி,நன்றி.

EarthlyTraveler said...

அடடா!மளமளவென அடுத்தடுத்து அட்டகாசமா பாடல் போஸ்ட் போடுகிறீர்கள்.பாடலுடன் ஆடலும் சேரும் போது அதன் சுவை இரு மடங்கு.திரு.ஜெயராமன் வயலின்....இனிமை இனிமை. அருமையான பாடல்,இனிமையான இசையுடன்,அருமையான அடவுகளோடு எடுத்துரைப்பதை காணக் காண மெய்மறந்து போனது.நன்றி,நன்றி.

Geetha Sambasivam said...

பாட்டுக்கேட்க முடியலை, நாளைக்கு மறுபடி முயற்சித்துப் பார்த்துட்டுச் சொல்றேன். அப்பாடி இப்போதான் வருது, அவ்வளவு வேகமா இருக்கு, இருங்க கேட்டுட்டு மிச்சம் எழுதறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஸ்.கே.எம். "ஆடலுடன் பாடலைக் கேட்பது சுகம்... சுகம்... சுகம்...".அந்த சந்தோஷத்தில் இரண்டு தடவை பதிலிட்டு விட்டீர்கள். நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

@வேதா தவறு என்னுடையதுதான் ஆங்கில ஈக்கும் தமிழ் "ஈ" வந்த கலக்கம். தவறைச் சுட்டிகாட்டியதற்கு நன்றி.ஈரேழு தான் சரி பெண் கவிதாயினியிடம் நம்ம ஜம்பம் பலிக்குமா என்ன?

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் மெதுவா படியுங்க.அவசரம் ஒன்னும் இல்லை. உடம்பை பாத்துக்கோங்க.அதான் முக்கியம்.நீங்க வந்ததே சந்தோஷம்.

இலவசக்கொத்தனார் said...

//அதை காது கொடுக்கும் கேட்கும் படமாக ஆக்கியவர் திரு.சிவன் அவர்கள்//

:)))

சிவன் அவர்களைப் பற்றியும் தகவல்கள் தாருங்கள்.

ambi said...

wow! this is one of my fvte songs. esp when maharajapuram santhanam sings, it's heaven. :)

will try to listen and see video in web cafe. :)

jeevagv said...

நல்ல தொடர், சிவன் பற்றி பல விஷயங்களை தெரிந்து கொள்ள உதவும்.
தமிழுக்கு இசையின் புத்துணர்வு ஏற்படுத்திய பெருமை பாபநாசம் சிவனைச் சாரும்!
சிவன் புகழ்பெற்ற கீர்த்தனைகள அப்படியே எடுத்து, தமிழ் வரிகளை போட்டு விட்டார் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறதே, அதுபற்றி ஏதேனும்..?
அப்படியே இருந்தாலும், அதுவே தமிழுக்கு பெரிய தொண்டாக நான் கருதுகிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திராச ஐயா

மிக அருமையான பதிவு; எங்களுக்காக நிறைய மெனக் கெட்டு இருக்கிறீர்கள்! மிக்க நன்றி.

முதலில் பாட்டை மட்டும் படித்தேன் - இயல்
பின்னர் இந்தப் பாட்டைப் ப்ளேயரில் கேட்டேன் - இசை
அப்புறம் உங்கள் பதிவு வீடியோவை பார்த்தேன் - நாடகம்

முத்தமிழைக் கொடுத்தீர்களே, மிக்க நன்றி!

தி. ரா. ச.(T.R.C.) said...

திரு.பாபநாசம்
சிவன்
--தமிழ்த்தியாகய்யா--(2)

Wonderful selection of theme, Excellent song, Lalgudi violin is amazing
and
as a whole super post!!

Viji said...

அற்புதமான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. அனுபல்லவியின் வரி "ஈரேழு" என்று இருக்க வேண்டுமென நினைக்கிறேன். பிடித்த மற்றொரு பாடல் "நீ இரங்கா எனில்".

EarthlyTraveler said...

Thank you.We enjoyed watching it over and again.--SKM

தி. ரா. ச.(T.R.C.) said...

@ விஜி. பாடல் பிடித்ததா நன்றி.தவறைச் சுட்டிக் காட்டியதற்கு மறுபடியும் நன்றி. திருத்தப்பட்டு விட்டது.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஜீவா நன்றி.நல்ல பல பாடல்களைத்தந்தவர்தான் பாபநாசம் சிவன்.ஆனால் அவை எல்லாம் ஒரிஜினல் அக்மார்க் கவிதைகள்.காண கண்கோடி வேண்டும் கபாலி என்பவனை காண.. படல் ஒன்றே சான்று.

Dr.N.Kannan said...

அற்புதமான பதிவு. ஸ்ரீநிதியின் பாவங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. சிவன் பற்றிய லால்குடி மற்றும் வேணுகோபாலனின் ஆவணம் கற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்தன. எவ்வளவு பெரிய பெரியவர்கள் வாழ்ந்த மண் அது! 'எம் தந்தையர் நாடு எனும் போதினிலே'....அடடா!