Sunday, September 30, 2007

கந்தசாமி(2)


திரு.சுசி கணேசனுடையமுழுஈடுபாட்டையும் இந்த "டைடில்" விளம்பரத்தில் காணலாம். பஸ் டிக்கெட்டைப் பாருங்கள். படத்தின்
பெயரை அதில் காணலாம். மிகவும் சரியாக டிக்கெட்டில் பின் இருக்கும் இடத்தில் கோணல் மாணலாக கிழிந்திருக்கிறது."ஸ்டேஜ்' கிழிக்கப்பட்டிருக்கிறது.நெம்பரும் தலைகீழாகத் தெரிகிறது. இரண்டக மடிக்கப்பட்டு இருக்கிறது.இது போன்ற சிறிய விஷயங்களைக்கூட நேர்த்தியாக கவனித்து செய்து இருக்கிறார்.

நானும்தங்கமணியும்விழாவுக்கு5.30 மணிக்கேகிளம்பிவிட்டோம்.தேவி பராடைஸ் அரங்கமே அதிர்ந்து கொண்டு இருந்தது.கணேசனின் குடும்பத்தினரோடு எங்களுக்கு இருக்கை. அமர்ந்து கொண்டு வந்தவர்களை கணக்கெடுத்துக்கொண்டு இருந்தேன்.வந்தவர்கள் டைரெக்டர்கள் ஷங்கர்,ஸ் ஏ சந்திரசேகர்,கே ஸ் ரவிகுமார், ராமநாரயாண்,மற்றும் வைரமுத்து,ஒய் ஜி மஹேந்திரா,அப்பாஸ், அருண்விஜய்,திரையுலக பிரமுகர்கள் கூட்டம்தான்.சுசி. கணேசன் டென்ஷனோடு பரபரப்போடு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தார். சரியாக 6.30 மணிக்கு ஆனந்த கண்ணனும் சுப்பிரியாவும் சன் டி வி சார்பில் வணக்கம் சொன்னார்கள்.

கந்தசாமி என்று பலத்த சப்தத்துக்கு இடையில் வ்ந்தார் கதாநாயகன் விக்ரம் சூட்டும் கோட்டும் அணிந்து மிகவும் இளையவராக டெரைலர் பாட்டை பாடியவண்ணம். பின்பு ஷெரேயாவும் ஒருபாடலுக்கு ஆடினார்.டிஜிடல் பானரில் விக்ரம் வானத்துக்கும் பூமிக்குமாக பல வேடங்களில் தூள் கிளப்பினார்.


இந்த விழாவில் பேசும்போது சுசி. கணேசன் கூறினார். படத்தின் சிறப்பு அம்சமே ஏழை பணக்காரன் வித்தியாசத்தின் விளவுகளை புதிய பார்வையில் சொல்லுவதுதான்.இதில் சிறப்பாக நடிக்கவும் பாத்திரத்தோடு ஒன்றி இருப்பதாற்கும் மிகக்கடுமையாக கட்டுப்பாட்டுடன்இருந்து தனது எடையில் 15 கிலோவைக் குறைத்தாராம் விக்ரம்(Professional commitment). மற்றும்ஒரு பாரட்டுக்குரியவிஷயம் கந்தசாமி படப்பிடிப்புக் குழுவினர் உசலம்பட்டிக்கு பக்கத்தில் இருக்கும் சங்கம்பட்டி- காந்திநகர் ஆகிய கிராமங்களைத் தத்துஎடுத்துக்கொண்டுஅவர்களுக்கு நல்ல ரோடு, பள்ளிக்கு சமையல்கூடம்,வசதியான மயானம் ஆகியவற்றை செய்து கொடுத்தார்கள்.பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் கிராமத்தை மறந்து நகரத்துக்கு வந்த மனிதர்களை மறுபடியும் கிராமத்துக் கூட்டிக்கொண்டு போனார். ஆனால் எதயும் புதுமையாகச் செய்யும் சுசி கணேசனோஒரு கிரமத்து மக்களையே தேவி பரடைஸுக்கு கூட்டிக்கொண்டு வந்தார். ஆமாம் சங்கம்பட்டி-காந்திநகர் மக்களையே கொண்டு வந்துவிட்டார் நன்றி சொல்லுவதற்கு.கிரமசேவையைப்பற்றி எல்லோரும் பேசுவார்கள் ஆனால் சிலரே செய்வார்கள்.

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" ..........வள்ளுவன் சொன்னது.

விக்ரம்பலவேடங்களில்வந்தாலும் பெண்மணியாக நடித்த வேடம் மிகவும் பொருந்துகிறது.படத்தைப்பார்த்துவிட்டு சொல்லுங்கள்

இனி விக்ரம் பெண்களிடம் மாத்திரம் அல்ல ஆண்களிடமும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.மிகப் பிரபலமான டைரெக்டரான மணிரத்தினத்தின் மிகச் சிறந்த படைப்புக்களில் சில மௌனராகம்,நாயகன்,தளபதி,மற்றும் திரு. சுசி கணேசன் என்றெல்லாம் வந்தவர்கள் பேசினார்கள்ஆனால் ஆசானைக் காணவில்லை.

All that begins well must also end well.

படப்பிடிப்பு பூஜைக்கே இந்த பில்டப்ன்னா 100 ஆவது வாரம் பட விழாவுக்கு எப்படி இருக்குமோ?

Welldone Susi Ganesan Best of Luck

10 comments:

மதுரையம்பதி said...

அப்பாடி ஒரு மாதிரியா இந்த பதிவ போட்டுடீங்க.....

எனக்கென்னமோ விக்ரமின் பெண் வேடத்தை அவ்வளவு பொருத்தம்ன்னு சொல்ல முடியல்ல,ஆனா அதுக்கடுத்த படம் போட்டிருக்கீங்களே, ஒரு முதியவரின் வேடம், அது நல்லா பொருந்தியிருக்குற மாதிரி தெரியுது.

ambi said...

விழாவை நல்லா கவரேஜ் பண்ணி இருக்கீங்க. படம் எப்போ ரிலீஸ்..? இல்ல ரிலீஸ் ஆயாச்சா? இங்க ஒன்னும் தெரிய மாட்டேங்குது.

சரி, முக்யமான மேட்டருக்கு வரேன். ஹிஹி, எனக்கும், தங்கமணிக்கும் 2 டிக்கட் வாங்கி வைக்கவும். தீவாளிக்கு சென்னை வருவோம்,

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி பட்ம் இன்னும் தயரிப்பு நிலையிலேயேஇருக்கிறது.
14/04/2008 அன்று வெளியிடப்பட இருக்கிறது.

எப்படியோ தீபாவளிக்கு இப்பவே துண்டு போட்டு இடம் ரிசர்வ் பண்ணிட்டே கிண்டியில்.

உனக்கு இந்ததடவை அம்பத்தூரில் பயங்கர விருந்து மொய் எல்லாம் கொடுக்க ரெடியா யூ ஸ் லிருந்து வந்தூட்டாங்க.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌளி எனக்கு தெரியும் உங்களுக்கு ஏன் அந்தப்படம் பிடிக்கும் என்று.அதைப்பார்த்தால் திருவிளையாடல் சிவாஜிமாதிரி இருக்கா? அப்படியே கொஞ்சம் காஞ்சிபுரம் போனா மதிரிகூட இருக்குமே..

Sumathi. said...

ஹலோ சார்,

//கணேசனின் குடும்பத்தினரோடு எங்களுக்கு இருக்கை. .//

ஆஹா, அதான் ரொம்ப நல்லா கவர் பண்ணியிருக்கீங்க.
நன்றி.

அப்பறம் ஸ்டில்ஸ் லாம் கூட நல்லா இருக்கு, அந்த பெண் வேஷத்தில் விக்ரம் ம்ம் ரொம்பவே நல்லாயிருக்கார்.அசலாயிருக்கு.


//படப்பிடிப்பு பூஜைக்கே இந்த பில்டப்ன்னா 100 ஆவது வாரம் பட விழாவுக்கு எப்படி இருக்குமோ?//

அதையும் நாம பார்க்கத் தானே போகிறோம்.இதே மாதிரி நீங்களும் பதிவு போடத் தானே போறீங்க..ஹி ஹி ஹி ஹி ஹி....

G3 said...

ஒரு வழியா போஸ்டிட்டீங்க :))

எனக்கும் விக்ரமோட அந்த பெண் வேஷம் தான் புடிச்சிருந்துது. செம க்யூட் :))

தி. ரா. ச.(T.R.C.) said...

@sumathi tamil font problem. avar enakal familyil oruththar. ithukke ippati sollareye nethikki vikaramee avarutan enkal flattukku vawthu enkaLuta=n oru 10 nimizankal irunthaar. ampiyai keelu sariyaka solavan.
aanal atharkum en vimarisanthukkum samapantham kitaiyaathu. ullathu ullapatiyee uraithen

தி. ரா. ச.(T.R.C.) said...

g3 kamiravai enko vaithu vitten athan nethikki sundaya thedi etuthu poto pitiththu potten.October 2 maru oliparappu untu.innikki hotel ellaam muti irukkume eppati pochu pozuthu.

மதுரையம்பதி said...

//அப்படியே கொஞ்சம் காஞ்சிபுரம் போனா மதிரிகூட இருக்குமே..//

அதே, அதே....சபாபதே....

தி. ரா. ச.(T.R.C.) said...

@ mathuraiyampathi How chandramouli will forget chandrasekaran