Monday, October 15, 2007

கொலுவுக்கு வாருங்கள்(4)

இன்று நான்காவது நாள். மஹாலக்ஷ்மி அன்னையைப் போற்றும் நாள்.
எனது முன்பதிவுகளிலிருந்து எடுத்தது ஆனால் இதற்கும் பொருந்துகிறது.
ஸகல ஸம்பத்துகளையும் அளிக்கும் அன்னை அவள்.ஒரு ஏழை அளித்த நெல்லிக்கனிக்காக ஆதிசங்கரர் கனகமழை பொழியவைத்தார்.அந்த கனதாதராஸ்தவத்தில் இப்படி ஆரம்பிக்கிறார்


அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ

ப்ருங்காங்கனேவ முகலாபரணம் தமாலம்

அங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா

மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா

மலர்களாலாலும் மலர்மொட்டுக்களாலும் அலங்கரிகப்பட்ட மரத்தை எப்படி வண்டுகள் சுற்றிக் கொண்டு மொய்த்துக்கொண்டு இருக்குமோ அதுபோல மஹாவிஷ்ணுவின் மார்பெனும் மணிப்பீடமதில் அமர்ந்துகொண்டு அவரையே எப்பொழுதும் அகண்ட கண்களால் பருகிக்கொண்டு இருக்கும் மஹாலக்ஷ்மிதாயே, நீ முழுக்கண்ணாலும் பார்க்கவேண்டாம்,கொஞ்சம் கடைக்கண்ணால் ஏழை மக்களையும் பார்த்து எல்லா செல்வங்களையும் வழங்குவாய் அம்மா என்று சொல்கிறவர் யார் தெரியுமா முற்றும் துறந்த மஹான் ஆதி சங்கரர். தன் பக்தர்களுக்காக லக்ஷ்மியிடம் கையேந்தி நிற்கிறார்.

சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரும் சிறந்த ஸ்ரீவித்யா உபசகருமான திரு. முத்துஸ்வாமி தீக்ஷ்தரும் லக்ஷ்மியின் மீது லலிதா ராகத்தில் "ஹிரண்மயிம்" என்ற கீர்த்தனத்தை இயற்றியுள்ளார்.லலிதா ராகமும் வசந்தா ராகமும் இரட்டைபிறவி சகோதரிகள் ஒரே ஒரு ஸ்வரம்தான் ப என்கிற பஞ்சமம்தான் கிடையாது லலிதாவில். அதைப்பற்றி பின்னால் விரிவாகப் பார்க்கலாம். ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர் மறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்


ராகம்: லலிதா தாளம்: ரூபகம்

பல்லவி

ஹிரண்மயிம் லக்ஷ்மீம் சதா பஜாமி

ஹீன மானவ ஆஸ்ரியம் த்வஜாமி-----(ஹிரண்மயீம்)

அனுபல்லவி

கிரதர சம்பிரதாயம் க்ஷிராம்புதி தனயாம்

ஹரிவத்ஸ்தலாலயாம் ஹரிணீம் கரனகிஸலயாம்

கரகமலத்ருத குவலயாம் மரகத மணிமய நிலயாம்------(ஹிரண்மயீம்)
சரணம்
ஸ்வேத தீபவாஸிணீம் ஸ்ரீகமலாம்பிகாம் பராம்
பூதபவ்ய விலாசணீம் பூசுர பூஜிதாம் வராம்
மாதராம் அப்ஜமாலினீம்
மாணிக்ய ஆபரணாதராம்
சங்கீத வாத்ய விநோதினீம்
கிரிஜாம் தாம் இந்திராம்
சீதகிரண நிபவதனாம்
ஸ்ருதசிந்தாமணி சதனாம் பீடவஸனாம்
குருகுஹ மாதுலகாந்தாம் லலிதாம்---- (ஹிரண்மயீம்)


ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று தொடங்கும் ஸ்ரீசூக்தத்திலிருந்து முதல் அடியை எடுத்து தொடங்குகிறார்.
பல்லவி
தங்கமயமான வண்ணத்துடன் ஜொலிக்கும் லக்ஷ்மியைத்தான் நான் பாடுவேன் மற்றபடி ஒருபொழுதும் நான் மனிதர்களை பாடமாட்டேன்
அனுபல்லவி
அழிவில்லாத செல்வத்தைத் தருபவளும்
பாற்கடல் பெற்று எடுத்தவளும்
மஹாவிஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும்
கோவில் கொண்டு இருப்பவளும்
இளம் தளிரைப் போன்ற தனது செம்பஞ்சு சரணங்களை உடையவளும்
தனது கையினில் எப்பொழுதும் இருக்கும் தாமரையினால் அந்த பூவுக்கு அழகு சேர்ப்பவளும் இடுப்பில் மரகத மணி பச்சை ஒட்யாணத்தால் அலங்கரித்துக்கொண்டுஇருப்பவளுமானலக்ஷ்மியை மட்டும் தான்
நான் எப்பொழுதும் பாடுவேன்
சரணம்
வெண்மை ஓளிவிடும் தீபத்தில் வசிப்பவளும்
பூலோகத்தில் ஸ்ரீகமலாம்பிகையாக உருவெடுத்தவளும்
சகலபூதங்களும் அமைதியாக அவளிடத்தில் உறைபவளாகவும்
தேவர்களாலும் மனிதர்களாலும் பூஜிக்கப் பெற்று வரம் தருபவளாகவும்
உலகுக்கே தாயாக விளங்குபவளாகவும் தாமரைப் பூவில் அமர்ந்தவளும்
மாணிக்கம்,வைரம், முதலான நவரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பவளும்
சங்கீதத்தையும் வேறு வேறு வத்யங்களயும் கேட்டு சந்தோஷிப்பவளாகவும்
சந்திரனனின் குளிர்ந்த கிரணங்களைப் போன்ற முகமுடையவளும்
அழகிய சிந்தாமணி மண்டபத்தில் இருக்கும் ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவளும்
குருகுஹனான முருகனுக்கு மாமனான மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு உரியவளும் லலிதாதேவியுமான மஹாலக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் பாடமாட்டேன்
என்ன ஒரு வார்த்தை ஜாலம். இதை எனக்கு தெரிந்தவரை மொழிபெயர்த்துள்ளேன். ஆஹா எப்படிப்பட்ட வர்ணனை. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஓம் என்ற பிரணவகார மந்திரத்திலிருந்து "ம்" (சங்கீதத்தில் முக்கியமான) மத்யம ஸ்வரமான (ம) என்ற அம்பாளுக்கு உகந்த பீஜாக்ஷ்ர மந்திரத்தை " ஹிரண்மயீம், ஹரிணீம்,தீபவாஸிணீம்,என்று எல்லாவார்த்தைகளும் "ம்" என்று முடிவு பெறும் வண்ணம் அமைத்துள்ளது மிக விசேஷமாகும்.ஸ்ரீ சூக்தத்திலும் இதே மாதிரி "ம்" என்ற ஸ்வரம் எல்லா இடத்திலும் வரும்
லலிதா ராகத்திற்கே உரிய சுத்த தைவதத்தை முக்கியமாக வைத்து விளையாடி இருக்கிறார்.பாட்டைக்கேட்டாலே லலிதா சஹஸ்ரநாமம் கேட்டால் போல் இருக்கும்
முருகனின்பக்தரான தீக்ஷதர் இதில்முருகனின் மாமனான விஷ்ணு என்று முத்திரை வைத்துள்ளார். மற்றும் கீர்த்தனையின் ராகமான லலிதாவையும் கடைசியில் கொண்டுவ்ந்து வைத்து முத்தாய்ப்பு வைத்துள்ளார்



இனி பாடலை திருமதிகள் ராதா ஜெயலெட்சுமி அவர்களின் குரலின் மூலமாக <" இங்கே கேட்டு ரசியுங்கள்>"
சரி இனி முக்கிய வேலைக்கு வருவோம். இன்றைய சுண்டல் வெள்ளை கொத்துக் கடலை.பாட்டுக்கு வாயைத் திறப்பவர்கள் மட்டும் சுண்டலுக்கு வாயைத் திறக்கலாம் என்று சொன்னால் அம்பியும் மேடமும் சண்டைபோடுவார்கள் அல்லது சண்டைக்கு வருவார்கள்,ஆனால் என்ன மின்னல் மின்னினால் இவர்கள் எங்கேயோ போய் விடுவார்கள்

9 comments:

Sumathi. said...

ஹலோ சார்,

ஆஹா, இது உங்காத்து கொலுவா? அடா அடா கண்ண எடுக்கவே முடியல.நிஜமாவே ரொம்ம்ம்ம்ம்ப அழகாயிருக்கு. இத இத்தன அழகா செட் பண்ண கைக்கு என் அக்கவுண்டுல ஒரு தங்க மோதிரம் வாங்கி குடுத்துடுங்கோ.

அப்பறம் கொலுவுக்கு வந்துட்டு சுண்டல் வேண்டாம்னு சொன்னா வயிறு வலிக்குமாம், அதனால "ஒரு பிடி மட்டும்" எடுத்துக்கறேன்.

அப்பறம் தங்க காசுகளா அள்ளி குடுக்கற லக்ஷ்மி அழகாயிருக்கு.

sury siva said...

அற்புதமான தெய்வீகப்பணி உங்கள் வலைப்பதிவு.
இது மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன்
உங்களை என்றும் ஆசிர்வதிப்பார்.

உங்களது வலைப்பதிவிறகான் தொடர்பு ஒன்றை என்னுடைய‌
வலைப்பதிவு மூலமாக ஏற்படுத்த உங்கள் அனுமதி வேண்டுகிறேன்.

http://pureaanmeekam.blogspot.com
http://vazhvuneri.blogspot.com
http://movieraghas.blogspot.com

சிவ. சூரிய நாராயணன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மின்னல். நான் தங்கம் அணிவதில்லை. இருந்தாலும் a/c No. கொடு அம்பிக்கு கொடுக்கறேன்ன்.ஒரு பிடி என்ன ஒரு படியே எடுத்துக்கோ.வயிற்று வலி வராமல் எப்ப்டி வயிறு புடைக்க சுண்டல் சாப்பிடுவது என்று அம்பியிடம் போன வாரம் கத்துக்கலயா!
நாளைக்கு த்ங்க காசுகளா கொட்டப்போகிறாள் லக்ஷ்மி ரெடியா இரும்மா.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ சூரி ஐய்யாவின் வருகைக்கு நன்றி. தன்யனானேன்.அன்பர் பணி செய்யாஎன்னை ஆக்கிவிட்டான் ஒருவன்.பதிவு நல்லா இருந்தா அது என் தாயார் தந்தையார் செய்த புண்ணியமும் ஆசியும்.தங்கள் பதிவுகளைப் பார்த்தால் இது ஒன்றுமில்லை. பைரவி ராகத்தில் தாங்கள் உணர்ச்சி பூர்வமாக லயித்திருப்பதைப்பார்த்து மகிழ்ந்தேன்.
தங்கள் ஆசி வேண்டி பணிகின்றேன்

இலவசக்கொத்தனார் said...

தங்கக்காசு பற்றிய பாட்டு தந்த கையோட அந்த கலரில் சுண்டலா!! நல்லாவே இருக்கு.

ambi said...

அதானே! ஏற்கனவே இந்த பதிவை படிச்சு இருக்கோமே!னு பார்த்தேன். :)


//இருந்தாலும் a/c No. கொடு அம்பிக்கு கொடுக்கறேன்ன்.//

ஆஹா! என்ன ஒரு தயாள குணம். தங்கமணிக்கும் சேர்த்து ரென்டா குடுக்கவும், :p

Geetha Sambasivam said...

என்ன ஒரு ஓரவஞ்சனை சார் உங்களுக்கு? நவராத்திரியில் பெண்களுக்குத் தான் கொடுப்பாங்க. அம்பி என்ன புடவை கட்டிட்டு வந்து தங்கக்காசு வாங்கப் போறாரா? தங்கமணிக்காகவா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன இருந்தாலும் எனக்குக் கொடுக்காமல் ஒதுக்கிட்டீங்களே? மின்னல் என்ன, இடியே இடிச்சாலும் வாங்காமல் விட மாட்ட்டேன். :P

Geetha Sambasivam said...

புட்டுக்காக நான் போட்ட கமெண்ட் எங்கே சார்? அதையும் அம்பிக்காகப் புட்டுப் புட்டு வச்சுட்டீங்க போலிருக்கு? :P

Geetha Sambasivam said...

5-வது நாள் கொலு பதிவுக்கு இல்லை அந்த கமெண்ட் போட்டேன்? அந்தப் பதிவே காணோமே? என்ன ஆச்சரியம்? :P