Thursday, October 02, 2008

அம்பிகைக்குஆயிரம் நாமங்கள் ( 5 )




இன்று முதல் ஸ்லோகமான

ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ 1 "

சிதக்னி குண்ட ஸ்ம்பூதா தேவகார்ய சமுத்யதா !'

அம்மா! மகாராணி! உயர்ந்த ஸிம்ஹாசனத்தில் அமர்ந்திருப்பவளே !சித்தமான அக்னிகுண்டத்திலிருந்து தோன்றியவளே! தேவர்களின் கார்யசித்திக்காக எழுந்து அருளியவளே. உனக்கு நமஸ்காரம். இதில் ஒரு விசேஷம் பார்த்தீர்களா ! உலகத்தின் ஐந்தறிவு அல்லது ஆறறிவு பெற்ற எந்த உயிராக இருந்தாலும் எந்த மொழியில் பேசினாலும் அதனுடைய முதல் வார்த்தை""அம்மா"தான். ஆங்கிலத்தில்வரும் மதர் என்ற வார்த்தையே வடமொழியில் உள்ள மாதா என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.லலிதா ஸ்கரநாமத்தில் வரும் முதல் வார்த்தையே மாதா தான்.நம் எல்லோருக்கும் ஆதி மாதா அவள், நாம் எல்லோரும் அவள் குழந்தைகள். அம்மாவுக்கும் குழந்தைக்கும் எப்போதும் ஒரு பிரிக்க முடியாத பிணப்பு உண்டு.பிறந்த சிறு குழந்தை 6 மாதம் வரையில் தனக்கு எல்லாமே அம்மாதான் என்று நினைத்துக்கொள்ளும் மற்ற உறவுகள் தந்தை உள்பட பின்னால்தான்.இன்னும் சொல்லப்போனால் அம்மாவின் குரலை கர்ப்பகாலத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடுமாம். அதனால்தான் ஸ்ரீமாதா என்ற முதல் வார்த்தையோடு ஆரம்பிக்கிறது
ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ

எனக்கு தாயாராக இருந்தாலும் அவள் மஹாராணி, அதுமட்டுமல்ல அவள் இருப்பதோ சிம்ஹாசனத்தில். இந்த எளியவனுக்கு தாயாராக இருப்பதால் அவளை எளியவளாக எண்ணி விடாதீர்கள்.அவள் அகில உலகுக்கும் மஹாராணி.முத்து ஸ்வாமி தீக்க்ஷதர் ஸ்ரீ மாதா ஷிவவாமாங்கே என்ற பேகட கீர்த்தனையில் இவ்வாறு பாடுகிறார். " ஸ்ரீ மாதா சிவவாம மாங்கே ஸ்ரீ சக்ரரூப தாடங்கே மாமவ1ஸ்ரீ மஹாராஜ்ஞீ வதநஸ்-ஸசாங்கே சித்ப்ரதி பிம்பே மாமவ"என்று லலிதாஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் வைத்தே திருச்சி அகிலாண்டேஸ்வரியைப் பாடினார்.
சிதக்கினி குண்ட ஸ்ம்பூதா
சித் என்பது உள் மனதுக்குள் இருப்பது யோகிகளின் கடைசி நிலை சித் என்பது அந்த நிலை வந்து விட்டால் நாம் வேறு கடவுள் வேறு என்ற நிலை போய்விடும்.கடவுளை நம் சித்தத்திலேயே பார்க்கலாம். "சித்தத்துனுள்ளே சிவலிங்கம் காட்டி"என்ற நிலை. மனசு, புத்தி, அஹங்காரம்,அந்தகரணம் அடுத்தநிலை சித்தம்.இவையெல்லாம் சித்தத்தில் ஒடுங்கும். இதைத்தான் பாரதி "அந்த கரணமெல்லாம் சிந்தையிலே ஒடுங்கி"என்கிறார் அப்பேற்பட்ட சித்தமாகிய அக்னி குண்டத்திலிருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மாதா.
தேவ கார்ய சமுத்பவா
தேவர்களின் கார்யமான அசுரர்களை வதம் செய்யவேண்டும் என்பதற்காக சித் அக்னி குண்டத்திலிருந்து வேகமாக மிகுந்த ஆற்றலுடன் தோன்றியவள்.

நாளை பார்க்கலாமா





7 comments:

Geetha Sambasivam said...

.//கடவுளை நம் சித்தத்திலேயே பார்க்கலாம். "சித்தத்துனுள்ளே சிவலிங்கம் காட்டி"//
உவமை நல்லா இருக்கு. அம்பிகைக்கு நமஸ்காரங்கள். அடுத்துக் காத்திருக்கோம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

மன்னிக்கவும் பின்னுட்டத்துக்கு பதில் போட முடியவில்லை. நாளை முதல் 4 நாட்கள் கொச்சி ஆடிட்,கல்யாணவேலைகள், தினமும் பதிவு,அதுவும் இன்று 2 பதிவு ஆச்சாரய ஹிருதயம்,நவாரத்திரி. எல்லா பின்னுட்டங்களுக்கும் பதில் 7ஆம்தேதிக்கு பிறகுதான் எல்லோரும் மன்னித்துக்கொள்ளுங்கள். கீதா மேடத்துக்கு மட்டும் இப்போ நன்றி.அம்பத்தூர்லே அவுங்க கிர்ர்ர்ர்ர் ந்னு சொல்லரது எனக்கு கிண்டிலே கிர்ர்ர்ர்ர்ர்ன்னு தலை சுத்தின்டு வருது........
ஆமாம் இந்த அம்பி ஏன் சுண்டல் சாப்பிடகூட வரலை வீட்டு வேலை அவ்வளவு கஷ்டமா.
மின்னல் போனதடவை எல்லா நாளும் வந்தாங்க இப்போ எங்கே போனாங்கன்னு தெரியலை?
என் மனசு சொல்லரது ஆமாம் நீ ஏதாவது படிக்கும்படியா எழுதினாத்தானே வருவாங்க.ஒருத்தர் இரண்டு பேர் வருவதே ஜாஸ்தி.மதுரையம்பதியைகூடகானோம் இப்போதான் வெள்ளைகொடி ஏத்தியாச்சே வரலாமே.
நம்ப அத்யந்த சிஷ்யன் கேஆர்ஸ் இருந்தா இப்படி ஒரு நிலை வருமா? திருக்கடயூரிலிருந்து வரட்டும் அப்புறம் பாருங்கள்

மெளலி (மதுரையம்பதி) said...

//மதுரையம்பதியைகூடகானோம் //

தினம் வருகிறேனே திராச ஐயா...இன்று கொஞ்சம் லேட்...அம்புட்டுத்தான்...:)

இப்போதான் வெள்ளைகொடி ஏத்தியாச்சே வரலாமே.//

ஹிஹி...எனக்கு கலர் பிளைண்ட்னஸ்.. :)

மெளலி (மதுரையம்பதி) said...
This comment has been removed by the author.
ambi said...

இதோ வந்தேன்! வந்தேன். நீங்க சொன்னமாதிரி வீட்டில் ஜுனியர் ட்ரில் வாங்கறான். லீவு நாளில் இணையம் பக்கம் தலை வைத்து கூட படுப்பது கிடையாது. :)

விளக்கங்கள் ரொம்ப எளிமையா கோர்வையா இருக்கு.

பி.கு: சுண்டல் படத்தை விளக்கங்களுக்கு பிறகு போடவும். அப்ப தான் என்னை மாதிரி ஆட்கள் பதிவை முழுக்க படிப்பார்கள். :))

குமரன் (Kumaran) said...

முதல் சுலோகத்திற்குப் பொருளை அருமையாகச் சொன்னீர்கள் ஐயா. நன்றி.

Sumathi. said...

ஹலோ சார்,

//மின்னல் போனதடவை எல்லா நாளும் வந்தாங்க இப்போ எங்கே போனாங்கன்னு தெரியலை?//

ஆமாம் இந்த தடவை கொஞ்சம் லேட்ட் ஆச்சு. ஹி ஹி ஹி கடைக்கு லாம் கொஞ்சம் போக வேண்டியதாப் போச்சா அதான் லேட். சாரி, இப்ப தான் வந்துட்டேனே.5. நாள் கோலம் சுப்ப்ப்ப்பர்.
நான் என்னுடைய சுண்டலை எடுதுண்டுட்டேன்.