Saturday, September 22, 2007

கந்தசாமி (1)


எனது அடுத்த வீட்டுக்காரரும் அருமை நண்பருமான திரு. சுசி. கணேசன் அவர்கள் தனது நான்காவது படத்தை டைரெக்ட் செய்து "கந்தசாமி" என்ற பெயரில் வெளியிடுகிறார்.இதுவரை மூன்று வெற்றிப்படங்களை "விரும்புகிறேன், 5 ஸ்டார் மற்றும் திருட்டு பயலே" எடுத்தவர். இந்த மூன்று படங்களுமே தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது பெற்றவை.ஒவ்வொரு படத்திலும் ஒரு கருத்தை மையப்படுத்தி அதை சொல்லும் விஷயத்தில் புதுமையைப் புகுத்தி மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டவர்.
புதுமைகள் செய்வதில் வல்லவர். இந்த முறை பட வெளியீட்டு விழாவின் வரவேற்பு மடலில் புதிய உத்தியைக் கையாண்டுள்ளார். மடலையே இ மடலாக ஒரு சிறிய கணிப்பொறி மடலாக தன்னுடைய மெட்ராஸ் இன்ஸ்டியுட் ஆF டெக்னாலஜியின் படிப்பை நிலைநிறுத்தும் வண்ணம் படைத்தது இவருடைய இளமை இனிமை புதுமை முயற்சியை காட்டுகிறது.ஒரு மடலின் விலையே பதினெட்டாயிரம் ரூபாய்களாம்.எனக்கு அந்த வரவேற்பு மடலை அனுப்பி விழாவிற்கு வருமாறு அழைத்திருக்கிறார்.நல்ல வேளை பரிசு வரியை எடுத்துவிட்டார்கள் இல்லை என்றால் மடல் அனுப்பியவர்களுக்கு எல்லாம் வருமானவரித்துறையினர் மடல் அனுப்பியிருப்பார்கள் தங்கள் அலுவலகத்திற்கும் வந்து போகும்படி.

விக்ரம் அவர்களை புதியகோண்த்திலும் அவருடைய விஸ்வரூபத்தையும் காட்டப்போகும் படமாக இருக்கும். மேலே உள்ள "கந்தசாமி" படத்தின் "டிரைலர்" அறிமுகபடத்தைப் பார்த்துக்கொண்டு இருங்கள் அதற்குள் நான் நாளை விழாவிற்கு சென்று படத்தைப் பற்றி மற்ற செய்திளை அடுத்த பதிவில் அளிக்கிறேன்

14 comments:

manipayal said...

நீங்கள் குறிப்பிட்ட மாதிரி 3 படங்களுமே வித்தியாசமான படங்கள். கந்தசாமியையும் புதிய கோணத்தில் பார்க்க காத்திருக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மணிப்பயல் விழா மடல் வந்து விட்டது. சூபர் கின்னிஸ் ரிக்கர்டுக்க்கு ஏற்பாடு.

தி. ரா. ச.(T.R.C.) said...
This comment has been removed by the author.
G3 said...

நாங்க எல்லாம் இன்விடேஷன் இல்லாமன்லே பாக்க போறோமே.. சன் டீ.வி.ல இன்னிக்கு சாயந்திரம் லைவ் ரிலேவாமில்ல :))

தி. ரா. ச.(T.R.C.) said...

G3 பாவம் இன்னிக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் ஸ்ட்ரைக்.எப்பிடி பாக்கப் போறீங்க?

Sumathi. said...

ஹலோ சார்,

//G3 பாவம் இன்னிக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் ஸ்ட்ரைக்.எப்பிடி பாக்கப் போறீங்க?//

ஆனா நாங்க போப்போம்ல,எங்க ஊருல இப்போதைக்கு ஒன்னும் இல்ல..(நான் இருப்பது பெங்களூருல)ஹா..ஹா..ஹா..

தி. ரா. ச.(T.R.C.) said...

வாம்மா சுமதி.G3 கூட பாத்தாங்க.என்னை விழாவை பாக்கவிடாம மெயில்வேறே அப்ப அப்போ..

G3 said...

//என்னை விழாவை பாக்கவிடாம மெயில்வேறே அப்ப அப்போ..//

அங்க ஒக்காந்து போன வெச்சு சீன் போடறேன்னு எல்லா மெசேஜுக்கும் பதில் போட்டுட்டு இங்க என்னமோ நான் தொல்லை பண்ண மாதிரி சொல்றீங்க :(

மதுரையம்பதி said...

ஹலோ, விழா முடிஞ்சு 24 மணிநேரம் ஆச்சு இன்னும் பதிவக் காணோம்.

கீதா சாம்பசிவம் said...

அது சரி சார், ச்ச்ச்சும்ம்ம்ம்ம்மாஆ பதினெட்டாயிரம் ரூ. அழைப்பு மடல் மட்டுமா? நல்ல விளம்பரம் கொடுத்திருக்கீங்க, வேறே ஏதானும் கேட்டு வாங்குங்க! :P

தங்கமணி இல்லைனா எப்படி எல்லாம் பொழுதைக் கழிக்கிறீங்க? சிங்கப்பூரா? அவங்க போயிருக்கிறது? ஒரு மெயில் தட்டி விடறேன்! :P

தி. ரா. ச.(T.R.C.) said...

@G3 எல்லா மெசேஜுக்கும் பதில் போட்டுட்டு

அப்போஒத்துகிறீங்களா நீங்கதான் Mஸ்G
குடுத்தது தான்னு

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதாமேடம் நானும் தங்கமணீயும்தான்
விழாவுக்கு போனோம்.உங்க சிண்டும்முடியும் வேலை நாடக்காது.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மதுரை மௌளி கொஞ்சம்பொறுங்கள்.போட்டோவோடுவருது

Cogito said...

Susi defies the normal conventional image of a film director. A perfect gentleman , he carries the stardon very lightly on his shoulders. Look fwd to this film. So how was the puja function?