Sunday, September 16, 2007

வராதுவந்த நண்பன்

உயிர்கள் இடத்தில் அன்பு வேணும் இது வாழும் முறையடி பாப்பா
தோற்றம் 12/12/1995 மறைவு16/09/2004அன்று மாலை எங்கள் வீட்டுக்கு அவள் புதிய வரவு.சிறிய கண்ணை சிமிட்டிக்கொண்டு பயத்துடன் எங்களை பரிதாபாமாக பார்த்தது.அன்றிலிருந்து அவள் எங்கள் குடும்பத்தில் ஒருவராகி விட்டாள்.என் மூன்று குழந்தைகளுக்கும் அவளோடு விளையாடுவதும்,போஷிப்பதும்தான் முக்கிய வேலையாகி விட்டது, அதிலும் என் மூத்த மகனுக்கு அதுவேதான் உலகம் என்று ஆகிவிட்டது. அவளுக்கு டெடி என்று பெயர்வைத்தோம்.அவளும் அவர்களுக்கு சமானமாக விளையாடும்.ஒரு வருடத்தில் நன்றாக வளர்ந்து விட்டாள்,புதிய வரவுகளுக்கு சிம்ம சொப்பனமாகிவிட்டாள்.இருந்தாலும் எங்களுக்கு, காவல் காப்பாது,பேப்பர் கொண்டு தருவது போன்ற சிறுவேலைகளை செய்துவிட்டு பிஸ்கெட்டுக்காக எங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பாள்.தரவில்லையென்றால் அதிகாரத்தோடு கேட்டு வங்கிக்கொள்ளுவாள். சொந்தப் பெண் போலவே அதற்கும் பிரசவம் பார்த்து அதன் 9 குட்டிகளையும் காலேஜில் முக்கிய பரிக்ஷை இருந்தாலும் மிக நேர்த்தியாகப் பார்த்துக்கொண்டான் என் மகன்.அதன் குட்டிகளை பிரிய மனமில்லாமல் நல்ல ஆளாகப் பார்த்து தானம் செய்தான்.வாடகை வீட்டில் இருந்ததால் சில சமயம் வீட்டு உரிமையாளருக்கும் எங்களுக்கும் சிக்கல் வந்தது.நாங்களும் வீடு மாறிக்கொண்டே இருந்தோம் அவளும் எங்களுடன் வந்து கொண்டே இருந்தாள் நாங்களும் அவளுக்காக சில தியாகங்களைச்செய்ய வேண்டியதாயிற்று. குடும்பத்தில் எல்லொரும் ஒரே சமயத்தில் வேளியே போகமாட்டோம்.அப்படியே போனாலும் மாலை சீக்கிரமெ வந்துவிடுவோம். ஆனால் இதுஎல்லாம் அவள் எங்களிடம் காட்டிய அன்பிற்கும் பாசத்திற்கும் ஈடுஇணை இல்லாதது. அலுவல் காரணமாக இரவு 3 மணிக்கும் 4 மணிக்கும் வீடு திரும்பினாலும் வாசலிலேயே காத்துக்கொண்டு இருப்பாள்.விடுமுறை வந்து விட்டால் டெல்லி,மும்பையிலிருந்து அவளுடன் விளையாட குழந்தைகள் கூடிவிடுவார்கள்.இப்படி அவள் எங்களுடன் ஒருமித்து இருந்தபோது திடீரென்று ஒரு நாள் மாலை எனக்கு வீட்டிலிருந்து போன் "அப்பா டெடிக்கு உடம்பு சரியில்லை என்னமோ பன்னறது சீக்கிரம் வா".மிகமுக்கிய மீட்டிங்கில் இருந்த நான் 8 மணிக்குதான் போக முடிந்தது அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.நீண்ட நாள்களுக்கு பிறகு நான் வாய் விட்டு ஓ என்று கதறினேன்.,என் குடும்பத்தாரும் அழுதனர்.அவளூடைய இறுதியாத்திரையை முடித்துவிட்டு கனத்த மனத்துடன் வீடு திரும்பினோம். சிங்கபூரிலிருந்த என் மகனை தேற்ற முடியவில்லை.எனக்கு அன்பு ,பாசம்,விஸ்வாசம் இவைகள் என்னவென்று போதிப்பதாவதற்க்காவே என்னுடன் 8 வருடங்கள் இருந்து விட்டுச் சென்றதோ?இரண்டு வருடங்கள் ஆனாலும் மறக்க முடியவில்லை.டெடி ஆன்மா சாந்தி அடையட்டும்.இது ஒரு மறு ஓளிபரப்பு இன்று டெடி மறைந்த தினம். மூன்று வருடங்கள் ஓடி விட்டன. ஆனாலும் டெடி மனத்தை விட்டு ஓடவில்லை

14 comments:

கீதா சாம்பசிவம் said...

எங்கள் மோதியைக் கண்ணீருடன் நினைவு கூர்கிறேன்.

ambi said...

போன வருடம் இதே பதிவை நான் படித்த நினைவு இருந்தாலும் புதிதாக படிப்பது போன்ற ஒரு தாக்கம்.

உங்கள் வீட்டில் இருக்கும் அந்த போட்டோவை போட்டு இருக்கலாமே!

Balaji S Rajan said...

First time to your blog from Veda's blog. I have read your comments written in Veda's and Ambi's post. Only today I had time to browse your blog. I do not know whether it was just a coincidence, or to let me know about another human who loves dogs. I could imagine each and every line. Your post brought me a small visual film. As a dog lover and having had pets for years, I know what you mean. They are lovely. It is very difficult to digest their separation. I am going to read your post to my family tonight and I am sure there will be few more tears at my house tonight.

தி. ரா. ச.(T.R.C.) said...

@Balaji Rajan Thank you very much for your visit. Thank you also for sharing your concern for pets.Only correction TEDDY is Not a dog in our home it was part of our family.
Inform me the reaction of your family.

தி. ரா. ச.(T.R.C.) said...

2கீதாமேடம் மனிதர்களின் பிரிவைத்தாங்கிய எனக்கு டெடியின் பிரிவைத் தாங்கும் சக்தி இல்லை.

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி டெடீயின் படம் சிஸ்டத்தில் இருந்து டெடி மாதிரி மாயமாய் மறைந்து விட்டது.நன்றி

Balaji S Rajan said...

I understand your love towards teddy. Sorry for differentiating him as a dog. We too had two lovely ones like teddy in our family. Sorry again.

தி. ரா. ச.(T.R.C.) said...

@balaji s rajan. No sorry please.I am thankful to you and your family for sharing our concern for TEDDY

மதுரையம்பதி said...

இன்றுதான் படித்தேன் இந்த பதிவினை....

என்ன சொல்வதென்று தெரியவில்லை......

SKM said...

I understand your loss. We too had a dog "Qujo" with us for 12 years. thanks for sharing .

தி. ரா. ச.(T.R.C.) said...

Thank you very much SKM for sharring the concern for dogs

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி மௌளி..என் வாழ்வில் மறக்க முடியுமா?

manipayal said...

மனது கனத்தது - கண்கள் குளமாயின -கைக்குட்டை ஈரமாயிற்று

தி. ரா. ச.(T.R.C.) said...

@மணீப்பயல் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்