Wednesday, September 12, 2007

கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே

திருச்சூர் வந்த அலுவலக வேலைமுடிய இரவு மணி 11 ஆகிவிட்டது.சரி என்ன பண்ணலாம்என்றுயோஜித்தபோதுகுருவாயூருக்குப்போகப்போகிறீர்களா என்று வல்லியம்மா கேட்டது ஞாபகம் வந்தது. உடனே என்நண்பரான ஆடிட்டர் நாராயணனைக்கேட்டேன் அவரும் சரி என்று சொன்னார். சரி காலை 1.45 க்கு கிளம்பளாமா என்று கேட்டேன். அவர் என் குடும்ப நண்பர் என்றதால் என் உடல்நிலை பற்றித் தெரியும் ஆதலால் காலை 7 மணிக்கு போகலாமேஎன்றார். நான் சொன்னேன்இந்த மாதிரி சமயம் வருவது கஷ்டம் இன்னும் ரொம்ப நாளைக்கு கிடைக்காது இது எனக்கு என்று தெரியும் ஆதலால் 3.00 மணி நிர்மால்ய தரிசனமும் தைல வாகைசார்த்தும் பார்க்கவேண்டும் என்றேன்.

காலை 1 15 க்கு எழுந்து குளித்துவிட்டு வேஷ்டி மேல்வஸ்திரத்துடன் காரில் கிளம்பி நண்பரின் வீட்டிக்குச்சென்று அவரையும் அழைத்துக்கொண்டு குருவாயூரை 2.30 க்கு அடைந்தேன். அப்பொழுதே அங்கு நல்ல கூட்டம் நல்ல வேளை கல்யாண நாள்இல்லை. வரிசையில் நின்று கொண்டோம். சரியாக

3.00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கூட்டம் முண்டி அடித்துக் கொண்டு ஓடியது.

முதல் நாள் செய்த அலங்காரங்களையும் மல்ர்மாலைகளியும் 15 நிமிடம்தான் வைத்து இருப்பார்கள். இரவில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் வந்து அப்பனுக்கு பூஜை செய்துவிட்டு போவதாக ஐதீகம். அதனால்தான் ஒட்டம் அதைப் பார்பதற்கு.கிட்ட தட்ட திருப்பதிமாதிரிதான் கூட்டம்.நான் போகும் போது சந்தனத்தை கலைத்துகொண்டு இருந்தார்கள். நிர்மால்ய தரிசனம் முடிந்து தைல அபிஷேகம். குழந்தை கிருஷ்ணனுக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டுவார்கள் அதையும் கண்குளிர தரிசனம் செய்தேன்.மறுபடியும் குட்டி கண்ணனுக்கு கையில் ஒரு வழைப்பழத்தைக் கொடுத்து (எண்ணை தேய்க்கும்போது குழந்தை அழுமே அதை சமாதானப்ப்டுத்த வேண்டுமே அதான் வழைப்பழம்) வெறும் சிலா ரூபமாக ஒரு சிகப்பு கௌபீனத்தைமட்டும் கட்டி

இளமுறுவலுடன் தரிசனம். பார்க்கும் போது மனதில் ஓடிய வரிகள்"கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே கண்ணிமைத்து காண்பார்தம் கண் என்ன கண்ணே. " இளங்கோவடிகள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

கண்ணிமைக்கும் நேரம் கூட பார்ப்பதை குறைத்துக்கொள்ளக் கூடாத அழகு அவ்னுடைய தரிசனம். எனக்கு பிரசாதமாக கிருஷ்ணனுக்கு சாத்திய சந்தணம், அன்று சாத்திய சிகப்பு கௌபீனம் நிர்மால்ய மலர்கள் ஆகியவைகளை என் நண்பர் கஷ்டப்பட்டு வாங்கிக்கொடுத்தார். பிரிய மனமில்லாமல் திருச்சூருக்குக் கிளம்பினோம். வரும் வழியில் கோயிலுக்கு வெளியில் ஒரு ஆலமரம், அதற்கு மல்ர்கள் சாத்தி பூஜை செய்து இருந்தார்கள். அது என்ன என்று என் நண்பரைக் கேட்டேன் அவ்ர் சொன்னது அடுத்த பதிவில்





அதற்கு முன் அம்புஜம் கிருஷ்ணா அவ்ர்களால் குருவாயூரப்பன்மேல் பாடிப்பெற்ற பாடலை மும்பை ஜெயஸ்ரீ அவர்கள் குரலில்/<"இங்கே கேட்கவும்".


இதே பாடலை திருமதி. சௌமியாவின் குரலில்<"இங்கே கேட்கலாம்'>
குருவாயூர் சென்று வந்தால் என்ன வரும் என்று அம்பி கேட்கலாம் இந்தப்பாடலையும் கேட்டுப்பாருங்கள் /<"இங்கே">

6 comments:

Geetha Sambasivam said...

attendance, mattum, innum padikkalai, Guruvayur, prasadam ellaam enakkee enakku!

Geetha Sambasivam said...

அருமையான, கொடுத்து வைத்த தரிசனம், இதே போல் எங்களுக்கு உடுப்பியில் கிடைத்தது.

மெளலி (மதுரையம்பதி) said...

என்றோ பார்த்தது....கண்முன் நிருத்திவிட்டீர்கள் கண்ணனை....நன்றி சார்

குமரன் (Kumaran) said...

குருவாயூர் அப்பனே அப்பன். அடிக்கடி கேட்கும் பாடல் திராச. மீண்டும் இருவர் குரலில் கேட்டு மகிழ்ந்தேன்.

குருவாயூர் நிர்மால்ய தரிசனத்தை நாங்களும் காணும் படி செய்தீர்கள். மிக்க நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க குமரன் ரொம்ப நாளைக்கு அப்பறம் வரீங்க.வணக்கம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@@கீதா மேடம் ஆமாம் நல்ல தரிசனம். கஷ்டப்பட்டால் பலனுண்டு