கணேஷ பஞ்ச ரத்னம்
முதா கராத்த மோகம் ஸதா விமுக்தி சாதகம்
(சந்தோஷத்துடன் கையினில் மோதகத்தை வைத்திருப்பவரும் தன்னை அண்டியவருக்கு எப்பொழுதும் மோக்ஷத்தை கொடுப்பவரும்)
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
( பாலசந்திரனை விரும்பி அணிந்துகொண்டவரும்,அன்புள்ளம் கொண்டோரை காத்து ரக்ஷிப்பவரும்)
அநாய்கைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
(ஆதரவுஅற்றவர்களுக்கு நாயகனாய் இருப்பவரும் அடியவர்களின் குறைகளைத் தீர்ப்பவரும்)
நதாஸுபா பாசுரம் நாமாமிதம் விநாயகம்
(கஜமுகாஸுரனை கொன்றவருமான விநாயகனை நான் வணங்குகிறேன்)
நதேத்ராதி பீகரம் நவோதி துர்க்க பாஸ்வரம்
(வணங்காதவருக்கு பீதியைக் கொடுப்பவரும்,உதய சூரியனுக்கு ஒப்பானவரும்)
நம்த் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம்
(தேவர்களால் வணங்கப்படுபவரும், வணங்கியவர்களின் துக்கத்தைப்போக்குபவரும்)
ஸுரேஸ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம்
(தேவர்களுக்கு தலைவரும்,அஷ்டநிதிகளை தருபவரும்,கஜமுகாசுரனுக்கும் தேவகணங்களுக்கும் தலைவராகவும்))
மஹேஸ்வரம் ஸ்மாஸ்ரயே பராத்பரம் நிரந்தரம்
(பரம்பொருளுக்கு நிகரானவரும், சாஸ்வதமாக வீடுபேறு அளிக்கவல்லவருமான விநாயகரை வணங்குகிறேன்)
ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்சரம்(கஜமுகாஸுரனை அழித்து உலகுக்கு நன்மை செய்தவரும்)
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்
(அழகிய யானை முகமும் பெருத்ததொந்தியும் உடையவரும்)
கிருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஷ்கரம்
(கருணை நிறைந்தவரும், குற்றங்களை மன்னிப்பவராகவும், மகிழ்ச்சியையும் புகழையும் அளிப்பவராகவும்)
மனஸ்கரம் நமஸ்கிருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்
(தன்னை மனதால் வணங்குபவர்க்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவரை வணங்குகிறேன்)
அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
(வறியவர்களின் துன்பத்தை களைபவரும்,உபநிஷதங்களில் உயர்வாகச்சொல்லப்பட்டவரும்)
புராரி பூர்வபுரா நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்(சிவனின் தலைமகனாய் அஸுரர்களின் கர்வத்தை அடக்கியவரும்)
ப்ரஞ்சநாச பீஷணம் தன்ஞ்ஜயாதி பூஷணம்
(உலகத்தைக் காப்பவரும் நன்கு அலங்கரிக்கப்பட்டவரும்)நிதந்த காந்த தந்த காந்தி மந்தகாந்த காத்மஜம்
(முகத்திலிருக்கும் தந்தத்தின் ஒளியினால் முகமெல்லாம் பிரகாசிப்பவரும்)
அசிந்த்ய ரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
(எண்ணத்தில் பதிக்கவொண்ணா உருவம் கொண்டவரும் யமனை அடக்கிய சிவனின் புதல்வரும்)
ஹிருதந்த்ரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம்
(முனிவர்களின் மனதை ஆனந்தநிலயமாக கொண்டவரும்)
தமேக தந்த மேவதம் விசிந்தாயாமி ஸ்ந்ததம்
(ஒற்றைக் கொம்பனான கணபதியை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்)
மஹா கணேச பஞ்ச ரத்ன மாதரேயோன் வஹம்
(இப்படிப்பட்ட மஹா கணேச ஐந்து ரதனங்கள் போன்ற ஸோஸ்த்திரத்தை)
(எவனொருவன் பக்தியுடன் காலைவேளையில் கணபதியை நினைத்து
ஸ்மாஹிதாயுரஷ்ஸ்ட பூதி மப்யுபைதி ஸோசிராத்
இப்போது வீடியோவில் எம் ஸ் அம்மாவின் குரலில் காண்டும் கேட்டும் ரஸியுங்கள். பாட்டைக் கேட்டுக்கொண்டே படங்களையும் ரஸியுங்கள்.
கொசுறு: இதே ராகத்தில் ஒரு சினிமா பாட்டு உண்டு. எஸ்.பி.பாலு பாடியது. சொல்லுங்கள் பார்க்கலாம்
செகண்டுக்குள் ஷட்சமத்தை நோக்கி விர்ர்ர்ர் என்று இறங்கும் வண்ணத்தைக் காணலாம்.ஹார்மோனியத்தில் கைவண்ணம் பார்க்கவேண்டுமே விரல்களில் அனல் பறக்கும் போட்டி போட்டு குரலும் கையும் நம்மை அப்படியே தூக்கிச்செல்லும்.இதோ அவருடைய கணேசே கானங்களை கேட்டுவிட்டு சொல்லுங்கள். சொல்ல மறந்து விட்டேனே இவ்வளவு இருந்தும் பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர்.கூடப் பாடுபவர்களும் மிகப் பெரிய பதவிகளில் இருப்பவர்கள்.
கணபதி பூஜை என்றால் மஹாரஷ்ட்ராதான் நினைவுக்கு வரும். அதுவும் மும்பை சித்தி விநாயக் மந்திர் அழகே அழகு.வாருங்கள் பிரபாதேவிக்கு போய் மந்திரில் இருக்கும் விநாயகரை தரிசனம் செய்து கொண்டே
பாடல்களை பார்த்து கேட்டு அனுபவியுங்கள்.
விநாயாகர் பதிவுபோட்டவுடன் ஒரு அற்புதம்நிகழ்ந்தது..பக்கத்துவீட்டில் இருக்கும் ஆன்டி கொழுக்க்கட்டை கொண்டுவந்து கொடுத்தார்கள்.இதில் என்ன அற்புதம் என்கிறீர்களா! ஆமாம் அவ்ர்கள் மதத்தால் ஏசுவை வணங்குபவர்கள் ஆனால் மனத்தால் மனிதர்களை நேசிக்கும் பண்புடையவர்கள்.இன்று எனக்கு கொழுக்கட்டை இல்லைஎன்று நினைத்தேன்உண்டு என்றுஆக்கிவிட்டா விநாயகர்
16 comments:
ஏதோ தவறு என் பிளாக்க்கில்.சரியாகத்தெரிவதில்லை
எனக்கு சரியாகத் தெரிகிறது. கேட்கிறது. என்னளவில் எம்.எஸ். அம்மா பாட்டுதான் நன்றாக இருக்கிறது.
எல்லாருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு...நன்றி தி ரா ச சார்.
பாட்டுக் கேட்க முடியலை, போகட்டும், "அபங்க்" சார் அது, அபகம் இல்லை, மன்னிச்சுக்குங்க, சொல்லாமல் இருக்க முடியலை. பங்கம் இல்லாத ஒன்று என்ற அர்த்தம் வரும்னும் புரிஞ்சிருக்கும்.
சரி, பாட்டுத் தான் கேட்க முடியலை, கொழுக்கட்டையும் நீங்களே சாப்பிட்டு முடிச்சாச்சு, படத்தையாவது சுட்டுக்கறேன். :P
எம்.எஸ் அம்மாவோட பாட்டுத் தான் அருமை. ரொம்ப நாளாக்கேட்டது இல்லையா:))
எங்க வீட்டுக்குப் பிள்ளையார் வந்ததுதான் அருமை.
வண்டி இல்லை, ரிப்பேர்.
யார் பிள்ளையாரை வாங்கி வரதுனு விவாதம். எல்லாம் படத்துக்குப் பூஜை போடலாம். முன்னாலே அதான் வழக்கம்னு ஒரு சொல்.
எனக்கோ களிமாண் பிள்ளையார் பார்க்காவிட்டால் சதுர்த்தி கொண்டாடினமாதிரியே இருக்காது.
வந்துட்டாரே அவரே.
வண்டியில் பிள்ளையார் (விற்கப் பட்டு) வந்துவிட்டார்.!!!
அதுதான் செல்லப் பிள்ளையார உட்கார்ந்து இருக்கார்.
கொழுக்கட்டை பிடிக்கற மகத்தான பணியை தங்கு என் தலையில் கட்டியதால் from my side நோ பதிவு. :p
//பக்கத்துவீட்டில் இருக்கும் ஆன்டி கொழுக்க்கட்டை கொண்டுவந்து கொடுத்தார்கள்.//
அதானே! இல்லாட்டி இருக்கவே இருக்கார் சுசி கனேசன். :p
பாட்டு இன்னிக்குக் கேட்க முடிஞ்சது. ஆனால் கூடவே பின்னால் வரும் இன்னொரு குரல் எதிரொலியா? அல்லது பாட்டின் ஒலிப்பதிவே அப்படியா? புரியலை! அதனால் இன்னொரு பாட்டைக் கேட்கலை. கணினியில் கோளாறோன்னு பயம் வந்துடுச்சு! :(
@இலவசம் நன்றி கணேஷ் குமார் ஹரியின் நண்பர். நல்லா பாடுவார்
@வல்லியம்மா அவ்ர் வரனும் என்று நினத்துவிட்டால் எப்படியும் வ்ந்து விடுவார்.எம் ஸின் பாட்டு கண்கள் பனிக்கும் கீதம்.பட்ட மரங்கள் துளிர்க்கும் கீதம்
@அம்பி சுசி கணேசன் இந்தியாவில் இல்லை. பட்ம் எடுக்க அயல்நாடு போயிருக்கிறார்
@கீதா மேடம் எதிரொலி கிடையாதே.2 கிளிக் செய்து இருப்பீர்கள்
@வாங்க மௌளீ. சார் மோர் எல்லாம் வேண்டாம்
The Songs and Photos are super I could feel at Mylapore by staying in London Thanks TRC sir
The songs and Photos are super Thanks TRC sir
Hello Revathi even after going to london you still rember indian bank and people.While in london enjoy the stay with your daughter and SIL till such time your next promotion(Grandmaa). Thnaks for your comments and viewing my blog
Hello Revathi even after going to london you still rember indian bank and people.While in london enjoy the stay with your daughter and SIL till such time your next promotion(Grandmaa). Thnaks for your comments and viewing my blog
Post a Comment