ஒரு கவியின் சகாப்தம் முடிந்த நாள் இன்று.உணர்ச்சிகளை தொட்டு சிலிர்த்து எழுப்பி கவிதை பாடியவன் கவிதையாகப் போனநாள் இன்று. வெறும் 11 பேர்கள்மட்டும் தன் சவ ஊர்வலத்தில் சங்கமித்து அக்னியோடு சங்கமித்தவன் சமூகத்திலும் நாட்டிலும் தனக்கு கிடைக்கவேண்டியமரியாதையை அளிக்காமல்போனவர்களைப் பற்றி கவலைப்படாதவன்
ஒரு பரலி நெல்லையப்பரையும்,வ ராமஸ்வாமி ஐயங்காரையும் மட்டும் பக்கத்தில் வைத்துக்கொண்டு
அவர்கள் ரசித்தது போதும் என்று எழுதிக்குவித்தவன்.தன் கவிதையை யார் ரஸிக்கிறார்கள் என்று தெரியமாலேயே அவன் பாடினான்.அதனால்தான் அவன் பாடல்கள் இறவாவரம் பெற்றது. கம்பனுக்கு பிறகு பாரதி ஒருவன்தான் அப்படி பாடினான். பின்னால் வந்த காவியங்கள் எதுவும் பரதிக்குப் பக்கத்தில்கூட நிற்கமுடியவில்லை.அந்த இடத்தை நிரப்ப ஒருவனும் வரவில்லை வரவும் முடியாது.இன்றைக்குச் சொல்லவேண்டிய பல விஷ்யங்களை பாரதி அன்றைக்கே சொன்னான்.அவனது சிந்தையில் அவ்வளவு தெளிவு.எவ்வளவு நம்பிக்கை.பாரதி ஒருஜாதி, ஒரு மதத்துக்கு சொந்தமானவன் அல்ல.அவன் சர்வசமயவாதி. அரசியல் சட்டத்தில் மதசார்பின்மை வருவதற்கு முன்பே அதை கடைபிடித்தவன்.அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு அவனுக்குத்தான் போயிருக்கும்
பாரதியைத் தமிழகம் விமரிசையாகக் கொண்டாட வேண்டும். பாரதியைக் கொண்டாடினால் பாரதத்தை கொண்டாடுகிறோம். தேசபக்தியைக் கொண்டாடுகிறோம். தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறோம்.
தமிழ் மொழியைக் கொண்டாடுகிறோம். பாரதியைக் கொண்டாடாதவனுக்கு
தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை கிடையாது
நன்றி: கவியரசு கண்ணதாஸன்
4 comments:
பாரதிக்குப் பின்னர் வந்த கவிஞர்களில் "கண்ணதாசன்" சிறந்தவர் என்பது என் எண்ணம். இரண்டு பேரையும் நினைவு கூற வச்சுட்டீங்க.
மீ ஃபர்ஸ்டு?
ஒரு மாபெறும் கவிஞனை பற்றி மற்றொரு மாபெறும் கவிஞனின் வரிகள்!!
பதிவிட்டதற்கு நன்றி!! :-)
கீதாமேடம் நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி. இருவரும் ஒரே சிந்தனை உடையவர்கள்
நன்றி CV இருவரும் கட்டுக்குள் வராதவர்கள்
Post a Comment