ஆலமரத்துக்கு வருவோமா . மஞ்சுளா என்ற ஒரு பெண் தன் வாழ்ககையில் தலையாகிய கடமையாக தினமும் கண்ணனுக்கு மலர்மாலை கட்டி கொண்டு போய் அர்ச்சகரிடம் கொடுத்து அணிவித்து அழகுபார்க்கும் வேலை செய்து வந்தாள். அதற்கு அப்புறம்தான் சாப்பாடு மற்றவை எல்லாம். ஒரு நாள் மலர்களை பறித்து கட்டி மாலை செய்வதற்கு சிறிது நேரமாகிவிட்டது.
கொண்டுபோய் அர்ச்சகரிடம் கொடுத்தால் நடை சாத்தும் நேரமாகி விட்டது இன்று சாத்தமுடியாது என்று கூறி கோயிலை பூட்டிவிட்டார்கள். மனமுடைந்த மஞ்சுளாவும் மிகவும் வருத்தத்துடன் மாலையை எடுத்துக்கொண்டுகண்ணனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டே மாலையை என்ன செய்வது என்று யோஜித்துக்கொண்டே வந்தாள். வழியில் இருந்த ஆலமரத்தின் இருந்த கிருஷ்ணன் படத்தை பார்த்து கண்ணனாக பாவித்து மாலையை அதற்கு சாத்திவிட்டு கண்ணனை நினைத்த வண்ணம் உருகி கண்ணீர்மல்க மரத்தடியிலேயே உறங்கிவிட்டாள்.
மறுநாள் காலை3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனம் காண கூட்டம் வாயிலில
காத்து நின்றது. மஞ்சுளாவும் கண்ணனைப் பார்ப்பதற்கு வந்து காத்து நின்றாள். மேல்சாந்தியும் பழைய மலர்களை களைவதற்கு கதவைத் திறந்தார். அவர் கண்ட காட்சி அவரை வியப்பில் ஆழ்த்தியது. ஆமாம் முதல்நாள்அவரால் நிராகரிக்கப்பட்ட மஞ்சுளாவின் மல்ர்மாலை கண்ணனின் கழுத்தில்கம்பீரமாக காட்சிஅளித்தது. ஆமாம்உண்மையான் பக்திக்கு கட்டுப் பட்ட கண்ணன் ஆலமரத்தடியில் தனக்கு ஹிருதயபூர்வஅன்போடு மஞ்சுளா சாத்தியமாலையை அங்கிகரித்துக் கொண்டுவிட்டான். அதன் நினைவாக இன்றும் ஆலமரத்தினடியிலுள்ள கண்ணனுக்கு மல்ர் மலை சாத்துகிறர்கள்
கடைசியாக ஒரு போட்டி. சமீபகாலத்தில் குருவாயூருக்கு மிகப் பெரிய அளவில் ஒரு முக்கியத்வம் கொடுத்து மக்களுக்கு தெரிய வைத்தவர்கள் மூன்று பேர்கள். அவர்கள்யார் என்பதை கீழே இருக்கும் சுட்டியின் கிளிக் மூலம் குரலை வைத்துக் கண்டு பிடியுங்கள்.
இவர் நாராயணீய உபன்யாசம் சிறப்பு வாய்ந்தது.
இவருடைய சிஷ்யன் மிகப் பிரபல பின்னனிப் பாடகர். கண்ணனிடம் அபரிமிதமான பக்தியுடைய இவர் கடைசியாக கிருஷ்ணன் கோவிலில் பாடிகொண்டு இருக்கும்போதே தன் சரீரத்தை நீத்தார்.
இவர் மேலே சொன்னவரின் சிஷ்யர். திரைஇசையிலும் கர்நாடக இசையிலும் கொடிகட்டிப் பறப்பவர். இன்னும்குருவாயூர் கோவிலுக்குள் நுழையாதவர்
குருவாயூருக்கு கோவிலுக்குபோனால் என்ன செய்யவேண்டும் என்பதை
9 comments:
ஹலோ சார்,
ரொம்ம்ப அழகா போட்டு இருக்கீங்க.
இவ்ளோ நாளா நான் உங்க ப்திவு எல்லாம் படிச்சுட்டு தான் போவேன். ஆனா இதுக்கு நிஜமாவே உங்களை பாராட்டத் தோனித்து.
அந்த முதல் குரலை நான் செம்பை வைத்தியநாதர் னு நினைச்சேன்.
ரொம்ம்ம்ம்ப நல்லாயிருக்கு சார்.
வாம்மா மின்னல்.மின்னல் மாதிரி வந்து பளிச்சின்னு சொல்லிட்டியே
@vetha Thanks for the visit and comments
கண்ணன் அழகாக கண் சிமிட்டுகிறான்!
:-)
வணக்கம் ஜீவா.கண்சிமிட்டும் நேரம் நம்மைப் பார்த்தாலே போதும் நாம் எங்கேயோ போய்விடுவோம்.
நான் வரலை ஆட்டைக்கு, வேலை இருக்கு! :P
@கீதா மேடம் அது என்ன "ஆட்டைக்கு". கொஞ்சம் சொல்லுங்களேன்
1.அனத்தராம தீக்ஷதர்
2.செம்பை வைத்யனாத பாகவதர்
3.ஜேசுதாஸ்
முதல் இரண்டும் குரலை கேட்பதற்க்கு முன்பே பெயர் கன் முன் தெரிந்து விட்டது. மூன்றாவது படித்தவுடனே புரிந்துவிட்டது.
நிஜமாவே மணிப்பயல்தான்.என் தவறும்தெரிந்தது
Post a Comment