நாளை தைப் பூசம். இது முருகனுக்கு உகந்த நாள் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் இன்று முப்பெரும் விழா எனபது நம்மில் பல பேருக்கு தெரியாது. என்ன அந்த மூன்று விழாக்கள் பார்க்கலாமா?
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
சிவனின் ஆனந்த நடத்தை நம்மால் நேரில் பார்க்க முடியாமா? அதனால்தான் நீலகண்ட சிவன் அவர்களின் பாடல் மூலமாக பார்க்கலாமா.நாம் எல்லோருக்கும் ஒரு ஆதங்கம் உண்டு கர்நாடக சங்கீதத்தை எதிர்காலத்தில் எப்படி இளம்தலைமுறையினர் காப்பாற்றப் போகிறார்கள் என்று.அந்தக் கவலையே வேண்டம் இந்த ஒன்பது வயது சிறுவன் என்ன போடு போடுகிறான் பாருங்கள். பக்க (பக்கா) வத்தியம் வாசிப்பவர்களும் சிறுவர்களே.
ராகம்:- பூர்விகல்யானி தாளம் :-ரூபகம்
பல்லவி
ஆனந்த நடமாடுவார் தில்லை
அம்பலம் தன்னில் அடிபணிபவருக்கு அபஜெயமில்லை....(ஆனந்த......)
அனுபல்லவி
தானந்தமில்லாதா ரூபன்
தஜ்ஜம் தகஜம் தகதிமி தளாங்கு தகதிமி என.. (ஆனந்த.....)
சரணம்
பாதி மதி ஜோதி பளீர் பளீரென
பாதச்சிலம்புகள் கலீர் கலீரென
ஆதிகரை உண்ட நீலகண்டம் மின்ன
ஹரபுர ஹரசிவ ஹரசங்கரா அருள்பர குருபரா என
அண்டமும் பிண்டமும் ஆடிட
எண்திசையும் புகழ் பாடிட..... (ஆனந்த...)
தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
தந்தைக்கு ஞானகுருவாக இருந்து பிரணவ உபதேசம் செய்த ஞானபண்டித தென்பழனிவளர் முருகன் தேர் பவனி வ்ரும் நாளும் தைப் பூசத்தன்றுதான்.நகரத்தார்களின் செல்லப்பிள்ளையான முருகனைப் பார்பதற்காக நடைப்பயணமாக் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் செட்டி நாட்டிலிருந்து கால் நடையாக காவடி எடுத்துக்கொண்டு ஆடல் பாடலுடன் வருவது கண்கொள்ளாக் காட்சி. பணி நிமித்தமாக 1972 களில் கரைக்குடியில் இருந்தபோது கண்டு அனுபவித்த காட்சி இன்னும் கண்ணில் நிற்கிறது.சிறுவர் சிறிமிகள் கூட
மகிழ்ச்சியுடன் கல்ந்து கொள்வார்கள்.காலில் செருப்புகூட இல்லாமல் பழனி வரை செல்வது எளிதான காரியமில்லை. நம்பிக்கைதான் வழ்வு. அது வந்துவிட்டால் பலம், சக்தி தானே வந்துவிடும்.
இனி மும்பை ஜெயஸ்ரீ பாடிய முருகனின் மறுபெயர் அழகு என்ற பெஹாஹ ராகப் பாடலை பார்க்கவும் கேட்கவும்
ராகம்:- பெஹாஹ் தாளம்:- ஆதி
பல்லவி
முருகனின் மறு பெயர் அழகு
அந்த முறுவலில் மயங்குது உலகு
அனுபல்லவி
குளுமைக்கு அவன் ஒரு நிலவு
குமரா என சொல்லி பழகு
சரணம்
வேதங்கள் போற்றிடும் ஒலியே
உயர் வேலோடு விளையாடும் எழிலே
துறவிக்கும் விரும்பிடும் துறவே
துறவியாய் நின்றிடும் துறவே
-
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் சமாதியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.. அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை வள்ளலாரின் ஜோதி தரிசனமான நாளும் இன்றுதான்.. வள்ளலாரின் "ஒருமையுடன் நினது திருமலரடி" என்ற பிலஹரி ராகப் பாடல்
கொஞ்சும் சலங்கை படத்தில் திருமதி. ஸ் ஜானகி குரலில் காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வரத்துடன் வெற்றி நடை போட்டு சாகாவரம் பெற்றது.இதோ அந்தப் பாடல்
-